Saturday, October 05, 2013

லவ் பண்ணனும்னு தோணுதா? அப்போ நீங்க அதுக்காகத்தானே லவ் பன்ணுறது?:-)வணக்கம் ப்லாக்கர்ஸ் அண்ட் வாசகர்ஸ்!
நேற்று எழுதிய பதிவில் காதல் அப்படிங்குறது திருமணதிற்கு பிறகுதான் கணவன் மனைவி இடையே வரனும் என்று சொல்லி இருந்தேன்! இன்றைய பதிவில் திருமனத்திற்கு முன்னர் லவ் பண்ணுரவங்களோட நோக்கம் எதுவாக இருக்கிறது என்று பார்ப்போம்!:-)


இரண்டு நாட்கள் முன்னாடி ஃபேஸ்புக் ல நம்ப நண்பர் ஒருத்தருக்கு லவ் பண்ணனும் ஆசை வந்து இருக்கு போல, ’’நா லவ் பண்ணலாம்னு இருக்கேன் நண்பா நீ என்ன நினைக்கற’’னு என்னவோ நமக்கு முன்னும் பின்னும் ஸைடுலயும் காதல் அனுபவம் இருந்த மாதிரி போயும் போயும் நம்ப கிட்ட கேட்டு தொலைச்சார்!:-)
சரி நாமளும் அந்த அனுபவம் எல்லாம் எனக்கு இல்லையப்பா சொல்லி சும்மா விடுவோமா!‘’நண்பா’’ ‘’நீ ஏன் சடனா லவ் பண்ணுறனு’’ நா கேட்டேன்! ‘’அது வா நண்பா ‘’ ‘’ எல்லாம் mater காகத்தான் நண்பா’’ என்று அவர் சொன்னார்!
அதை கேட்டதும் ஒரு செக்கண்ட் எனக்கு ஒரே அதிர்ச்சி! எண்ண ஆளு ரொம்ப நல்லவரு ஆச்சே, ஃபேஸ்புக்லதான் பழக்கம்னாலும் நல்லா பேசுவார் இப்படி வெளிப்படையா சொல்லுராறேனு ஒரு செக்கண்ட் நா ஷாக்காயிட்டேன்!

’’ஆமா நீ மேட்டருக்காகதானே லவ் பண்ணுற‘’ அப்போ எதுக்கு நீ லவ் பண்ணனும் அதுக்குனு இருக்கும் சில இடங்கள் இருக்குல’’’ அங்க போக வேண்டியதுதானே நண்பா’’ னு
சொன்னேன்! ‘’அப்பரம் நீ மேட்டர் முடிச்சிட்டா அந்த பொண்ணுக்கு யாரு பொறுப்புனு’’ நா கேட்டேன்!
‘’இல்ல mater முடிச்சிட்டா’’ ‘’ அந்த பொண்ணையே கல்யானம் பண்ணிக்க வேண்டியதுதான் நண்பா’னு சொன்னார்!

அப்போதான் எனக்கு ஒரு விசயம் தோண ஆரம்பிச்சது! அந்த நண்பர் மட்டும் என்னிடம் லவ் பண்னுறத பத்தி கேக்கல அவருக்கு முன்னாடியும் பலர் என்னிடம் கேட்டு இருந்தனர்! (எப்படி ஒரு பொண்ணை தனது காதல் வலையில் சிக்க வைப்பது என்று)

இந்த காலத்துல ஒரு பைய்யனும் பொண்ணும் கொஞ்சம் ஃப்ரியா பேசி பழக ஆரம்பிச்சா போதும் லவ் பண்ணுறோம் பேருல கிழம்பிடுறது! பாவம் அவர்களை ஒன்ணும் சொல்ல முடியாது!
‘’சரி நண்பா பொண்ணு எங்க தேட போற’’ அங்கயா இல்ல நம்ம நாட்டுலயா கேட்டேன்! ‘’தெரியல’’ னு சொன்னார்!
‘’சரி நீ பொண்ணு தேடி லவ் பண்ணி matter முடிக்குறதுக்குள்ள உலகமே அழிஞ்சு போயிடும், பேசாம ஊருல இருக்கும் உங்க அப்பா அம்மா கிட்ட சீக்கிரம் ஒரு பொண்ண பார்க்க சொல்லி’’ கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானேனு சொன்னேன்!
‘’ அதுவா இன்ணும் 3 வருஷாம் ஆகலாம்’’ சொன்னார்!
எண்ணது 3 வருஷமா’’ அவர் சொண்னதும் வாய் பிழந்தேன்’’ அவரு மேல இருக்கும் பரிதாபத்துல!:-)
***
 நண்பர் சிங்கப்பூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் ட்ரைவராக இருக்கிறார், வயசு கூடிகிட்டே வரதால என்னவோ ரொம்ப ஃபீல் பண்ணி இருப்பார் போல! அதே போல சரியான நேரத்துல கல்யாணம் பண்ணி வெச்சிட்டா அவரு இப்படியான ஒரு தேடல்ல இறங்கி இருப்பாரா?:-)))
***

சம்பவம் இரண்டு:
போன வாரம் எங்க வீட்டு பக்கத்துல +2 படிக்குற ஒரு பையன் இருக்கான், அவன் ஃபேஸ்புக்குல போட்ட ஸ்டேடஸ் கீழே போட்டு இருக்கேன் படிச்சு பாருங்க
my dear friends don't belive girl friends..... waste of money and time.... நு ஸ்டேடஸ் போட்டான்...
அவன் என்னத்த கண்டானோ தெரியல.பிஹெச்டி முடிச்சவன் மாதிரி +2 லயே பொண்ணுங்க மேல ஒரு வெறுப்பு.. இது ஒரு உதாரணம் தான்..
***

வயசுக்கு வந்த ஒரு பையனுக்கும் பொன்னுக்கும் எதிர் பாலினத்தோட பழகணும் பேசணும்னு தோணுறது இயற்கையான ஒரு விசயம்தான்! ஆனா அதையே நம்ம ஆளுங்க தப்பு அப்படி எல்லாம் கூடாதுனு முதலிலே ஒரு முட்டுக்கட்டைய போட்டு அந்த சாதாரண ஒரு ஆசைய மூட வெச்சிடுராய்ங்க! (இங்க ஒருத்தனுக்கும் தெளிவான பாலியல் கல்வி அறிவில்ல போல) அடுத்து இதனால வெக்ஸ் ஆன நம்ப ஆழுங்க வாய்ப்பு கிடைக்குறப்போ திருட்டுத்தனமா பேச ட்ரை பண்ணுறதுமா இருக்கு! அப்போ போய் யாராவது பெருசுங்க கவனிச்சிட்டா போச்சு கதை! இப்படி எங்க ஊருலயோ இல்ல உங்க ஊருலயோ மட்டும் நடக்கல நம்ம நாடு முழுக்க இப்படிதான் நடக்குது!

நம்ம நாட்டுல பெரும்பாலும் பெண்கலளின் மீது நடக்கும் தாக்குதலுக்கு காதல் மீதான ஒரு மரியாதை தான் காரணம் அப்படிங்குற விசயத்தை நீங்க தெரிஞ்சுக்கணும்!

இங்க ஒருத்தனுக்கும் லவ் அப்படிங்குறதுக்கு சரியான விளக்கம் தெரியலப்பா! ஒரு பைய்யன் கிட்ட பொண்ணு கொஞ்சம் சகஜமா சிரிச்சு பேசுனா போச்சு! அவன் யாரோட வலையிலயும் சிக்காம இருந்தா அவனும் அன்று முதல் காதல விளுந்துடுறது! அப்போ பொண்ணுங்க மட்டும் இல்லையா கேட்காதீங்க, அவுங்க சப்ஜட்டே தனி மொதல்ல பசங்க சைட் முடிச்சிடுவோம்:-)

நண்பர்களே இனி யாராச்சும் நா உயிருக்கு உயிரா காதலிக்குறேன் எவனாச்சும் புலம்புனா மொதல்ல அவன சொல்லுங்க (டேய் mater காக அலய்ரவனேனு) நீங்க! அது கூட பரவால பொண்ணு அவன விட்டு போய் புள்ள குட்டியோட எல்லாம் சந்தோசமா இருக்கும்போதும், அப்போ கூட அவள நினைச்சுகிட்டு சோகமா திரியுரது, வீட்டுல கல்யாணம் எல்லாம் பண்ணிக்கோ சொன்னாலும் பண்ணிக்குறதே இல்ல. கேட்டா ட்ரூவ் லவ்வாம்! டேய் உன்மையான எந்த ஒரு காதலனும் பொண்ணு கிடைக்கலையேனு வெறுப்புல எல்லாம் பேச மாட்டான்! அவள் போனா அவனும் வேற ஒரு ஃபிகரோட போயிடணும்!

இலைஞர்களே நாம மாத்தலாம் வாங்க! லவ் பண்ணுறது வேற கல்யாணம் பண்ணிக்குறது வேற! அதுனால நாம எப்படி லவ் பண்னனும், எது உன்மையான காதல் அப்படீங்குறத நாளைக்கு பார்க்கலாம், தொடர்ந்து படியுங்க நான் என்ண சொல்லவறேனு புரியும்:-)
***

எதாவது பதிவ பத்தி விமர்சனங்கள் நீங்க சொல்லணும்னு இருந்தா தாராளமா சொல்லிட்டு போங்க:-)))

Friday, October 04, 2013

ராஜா-ராணி கல்யாணம் பிறகுதான் காதல்!:-)

நம்ப ஊருல காதலுக்கு கொடுக்கும் பில்டப் இருக்கே அதுக்கும் முன்னுக்கும் பின்னுக்கும் எவ்வளவு உன்மைகள் புதைந்து இருக்கிறது என்று யாராவது தெளிவாக எடுத்துச்சொன்னால்  ஒரு பயலும் சின்சியர் லவ் பண்ணுறேன்னு கிளம்ப மாட்டான்!
பெரும்பாலும் நம்ம ஊருல கற்பழிப்பு, லவ் பண்ணலைனா ஆசிட் ஊத்துவேன்னு மிரட்டுறதும், ஊத்துரதும், பொண்ணுங்களல ப்ளாக்மெயில் பண்ணுறது எல்லாத்துக்கும் காரனம் நம்ம ஊரு காதல்தான்யா காரணம்! டேய் உனக்கென்ன லூசா காதலுக்கும் காமத்துக்கும் வித்யாசம் தெரியாம பேசுறியேனு நீங்க என்னைய திட்டலாம்! நான் தெளிவாத்தான் இருக்கேன்! நீங்கத்தான் எது காதல் எது காமம் தெரியாம இருக்குறீர்கள்!:)


ஐரோப்பா அமேரிக்கா போன்ற நாடுகள பாருங்க நம்ம ஊரு போல எவனாச்சும் பொண்ணுங்கள லவ் பண்ண சொல்லி துரத்துவானா இல்ல ஒன் சைட் லவ்வுனால உட்காந்துட்டு அழுவானா,? பொண்ணுங்க கிடைக்கலங்குற வெறியில, தாடி வளர்த்து தண்ணி அடிச்சே சாவானா?  இங்க ஒருத்தனுக்கும் லவ் அப்படிங்குறதுக்கு சரியான விளக்கமே தெரியலப்பா!


நம்ம ஊருல ஆயிரத்தி எட்டு கட்டுப்பாடு போடுறதாலத்தான் நம் ஆளுங்க லவ் பண்ணுனா  கட்டாயம் கல்யாணம் பண்ணிக்கணும் அப்படிங்குற ஒரு முடிவுக்கு வந்துடுறான்! அங்கதான் ஆரம்பிக்குறது எல்லா பிரச்சனைகளும்!:)

முதல்ல எல்லாரும் எல்லாரிடமும் சகஜமா பேசலாம் சுற்றலாம்னு சொல்லி பாருங்க எத்தனை பேர் லவ் பண்ணுர ஆசையில இருந்து பின் வாங்குவாங்கனு தெரியும்! (இதுக்கு எந்த
வயதும் வரம்பும் இல்லை):)


நண்பர்களே நாம் எது காதல் என்று முட்டாள்தனமாக நம்புறோமோ அது கிடையாது காதல்! உலகத்துல காதல் அப்படிங்குர ஒரு புனிதமான விசயமே கிடையாது! காமம் அப்படிங்குற ஒரு
உணர்வோட வெளிப்படையான நாடகம்தான் காதல் என்ற உண்மையை நாம் புரிந்து கொண்டு திருமணதிற்கு பிறகு காமத்துடன் சேர்ந்த காதலை அனுபவித்து மகிழுங்கள்!:)))


***

 டேய் பன்னாட அட்லி  இதை எல்லாம் படத்துல எங்கடா சொல்ல வந்தார்னு என் மேல நீங்க கோவப்படலாம்! பாஸ் அவரோட வேலை படம் எடுக்குறது, நாலு காசு சம்பாதிக்குறது,
தன்னோட புள்ளைங்களோட வாழ்க்கைய பார்த்துக்குறது தான்! நாமதான் பார்த்த படத்துல என்ன தெரிஞ்சுகிட்டோமுனு வரணும்!


சரி அப்போ இந்த படத்துல என்ன அப்படி நல்ல விசயங்கள் இருக்கு? நீங்க கேக்குறீங்களா? அப்போ வாங்க சொல்லுறேன்!


ஆண்களும் பெண்களும் இரண்டு பேருக்கும் கண்டிப்பா திருமணதிற்கு முன்னாடி (அது லவ் மேரேஜா இருந்தாலும்) அதுக்கும் முன்னாடி ஒரு காதல் வரும்! லவ் என்றாலே போய் அதுலையும்
அந்த லவ் கிடைக்காததுனால தன்னோட வாழ்க்கைய ஸ்பாயில் பண்ணிக்காம இருக்க இந்த காலத்து இளைஞர்களுக்கு டைரக்டர் எடுத்த படம் தான் இந்த ராஜா ராணி!


இது போல ஒவ்வொரு படத்திற்கும் பின்னாலும் எதோ ஒரு நல்ல விசயம் இருக்கும் அதை பார்த்து தேவைப்படுபவர்கள் எடுத்துகிட்டு தங்களை மாற்றிக்கொள்ள ஒரு வாய்ப்பாக சினிமா
இருப்பதாக நான் நம்புகிரேன் !நீங்க என்ன சொல்லுறீங்க???


***


நீண்ட ஒரு இடைவெளிக்கு பிறகு நான் ரசிச்சு, சிரிச்சு பார்த்த படங்களில் ஒன்றுதான் ராஜா ராணி. இந்த படத்தின் மூலம் நிறைய விசயத்தை சொல்ல முயற்சி எடுத்து இருக்கார்
டைரக்டர் அட்லி அவர்கள். காதல் தோல்விக்கு பிறகு மீண்டும் ஒர் அழகான ஒரு வாழ்க்கை இருக்கிறது என்று ஆரம்பத்திலே போட்டு படம் எப்படி இருக்க போகிறது என்று நம்மை
முன் கூட்டியே யூகிக்க வெச்சு படம் காட்டிய டைரக்டரை பாராட்டியே ஆகணும். பொதுவா படத்தோட எண்டிங்குலதான் இப்படி எல்லாம் சொல்லுவாங்க, ஆரம்பத்துலயே படத்தோட நோக்கத்தை
சொல்லிட்டு கதை நகர்த்திய விதம் நல்லா இருக்கு. கட்டாயம் அனைவரும் ஒரு முறை பார்க்க வேண்டிய ஒரு படம் .:)))

Wednesday, September 25, 2013

திருப்பதிக்கு போன எல்லாம் தீர்ந்துவிடுமா பிரச்சனைகள்!:-)இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தை இரண்டாகப் பிரித்து இந்தியாவின் 29ஆவது மாநிலமாக தெலுங்கானா என்ற புதிய மாநிலம் உருவாதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த
 56 நாட்களாக
 தொடர் போராட்டங்கள் இங்கே நடை பெற்று வருகிறது.


இதற்கு மத்தியில் பலர் நண்பர்கள் என்னை தொலைபேசியில் அழைச்சு, திருப்பதிக்கு வரலாம்னு இருக்கோம் அங்க நிலவரம் எப்படி இருக்குனு கேட்க்குறாங்க.
என் கிட்ட அப்படி கேக்குறவுங்கள நா ஒன்னும் சொல்லல. எல்லாம் அவர் அவரோட தனி பட்ட நம்பிக்கை..
ஆனா கடந்த 56 நாட்க்களாக நாங்க படும் அவஸ்தைகள் இருக்கே அதைய பார்த்துகிட்டு சும்மாவா இருக்குராரு அந்த பெருமாளு?:-)

நண்பர்களை உங்களுக்கு தெரியாது, கடந்த 55 நாட்களாக ஒரு அரசு பேருந்தும் ஓடல இங்க. ஒரு ஊர விட்டு இன்னொரு ஊரு போகனும்னா அது நெடு தூரம் இருந்தால் ட்ரைன நம்பித்தான் போக வேண்டி இருக்கு. எத்தனை பேருக்கு ட்ரைன்ல சரியா பயம் இல்லாம பயனிக்க முடியும்னு தெரியல:-)

பக்கத்துல ஒரு 50 கிமிக்குல இருந்தா ஆட்டோவுலதான் போக வேண்டி இருக்கு. அதுவும் பேருந்து கட்டணத்தை விடவும் 3, 4 மடங்கு அதிகமா கொடுத்து போக வேண்டி இருக்கு. ஆனா எத்தனை பேரால அப்படி போக முடியும்:-)

நான் ஆகஸ்ட் 1 அன்று M.A. join பண்ண வேண்டி இருந்தது, ஆனால் இன்னும் கல்லூரி திறக்காததால் பாவம் சில நாட்க்களாக பதிவு எழுதி உங்கள எல்லாம் போர் அடிக்க வெச்சு இருப்பேன். அதை எல்லாம் பார்த்துகிட்டு சும்மாவ இருக்குறார் அந்த பெருமாளு?

அரசு ஊழியர்கள் போராட்டத்தில் இருப்பதால் சம்பளம் கிடையாதுன்னு சொல்லுறாங்க.
இங்க என்ன வீட்டுக்கு ஒருத்தர் அரசு வேலையில இருக்குறாங்க?

இப்படி எவ்வளவோ இருக்கு.. சொல்லிக்கொண்டே போகலாம்...
சும்மா எதோ சொல்லனும்னு தோனுச்சு அதுதான் சிலது சொன்னேன்...

நம்மலோட பிரச்சனைகள அந்த கடவுள் ஒன்னும் வந்து தீர்த்து வைக்க போறது இல்ல என்பதை மட்டும் புரிந்து கொண்டு
அவரு மேல இருகும் நம்பிக்கைய கொஞ்சம் குறைச்சு கிட்டு
சக மனிதரை மனிதராக மதிக்க கத்துக்குவோம்:-)))

***
பெருமாளுக்கே ஆப்பு அடிச்சுட்டாய்ங்கயா

இன்று கால் நடை பாதையும், சாலை வழி தடமும் மூடப்பட்டது..

Wednesday, September 18, 2013

மாத்தியோசிக்கலாம் வாங்க இலைஞர்களே!ஒரு செயலைச் செய்யும்போது ஏன் செய்கிறோம், எதற்கு செய்கிறோம் என்று தெரியாமலே மூடத்தனமாக நாமும் பல காரியங்கள் செய்து வருகிறோம்!

Monday, September 16, 2013

ஆடு வெட்டி, கோழி வெட்டி, குழந்தைகளுக்கு மொட்டை அடித்தல் அவசியம்தானா?


வணக்கம் நண்பர்களே, அனைவரும் நலம்தானே!

எங்க வீட்டு பக்கத்துல ஒரு அக்கா இருக்காங்க, அவுங்களுக்கு ஒரு வயசுல குழந்தை ஒண்ணு இருக்கு! அந்த குழந்தைக்கு நேத்து மொட்டை அடிச்சாங்க! சரி அடிச்சது அவுங்களோட தனிப்பட்ட விஷயம்னு விட்டு விடலாம்! ஆனா எங்களை மதியம் சாப்பாட்டுக்கு வரச்சொல்லி  2 மணிநேரம் காக்க வெச்சதுதான்  தப்போ தப்பு!:-) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். எப்பவும் 1 மணிக்கெல்லாம் சாப்பிடும் நல்ல பழக்கம் கொண்ட எனக்கு மூன்று மனிக்கு சாப்பிட்டதுதான் ஒரு வருத்தமான, கோவமான விஷயம்! அந்த ரெண்டு மணி நேர கேப்புல நான் பட்ட அவஸ்தை இருக்கே, அதை இங்க கொட்டி தீர்த்தாலும் எனக்குள் இருக்கும் கோவம் போகாதப்பா!


டேய் உனக்கு கோவம் எது மேல அந்த குழந்தைக்கு மொட்டை அடிச்சதுல இருக்கா, இல்ல உன்னை ரெண்டு மணிநேரம் காக்க வெச்சதுல இருக்கா ஒண்ணுமே புரியலனு புலம்பும் அன்பர்களே, நண்பர்களே! ஒரு குழந்தை பிறந்து 9 அல்லது 11ஆம் மாதத்தில் கட்டாயம் முதன்முறையாக மொட்டை அடிக்கணுமாம்! முதல் மொட்டை தங்களின் குலதெய்வத்திற்கு அடிச்சிட்டு, அதைத் தொடர்ந்து இருக்கிற மத்த சாமிக்கு அடிக்கனுமாம்! அதில பெருமாள் திருப்பதியாம், முருகன் ஆறுபடை வீடுகளில் எங்கேயாச்சுமாம், இப்படி பட்டியல் போய்கிட்டே இருக்கு! இது ஏரியாவுக்கு ஏரியா மாறுபடலாம்!:-)))

முதல் மொட்டை அடிக்கும்போது ஒரு விழாவைப்போல ஆடு வெட்டி, கோழி அறுத்து நாலு சொந்தங்களைக் கூப்பிட்டு, சோறு போட்டு அனுப்பனுமாம்! கொய்யால இப்படி தேவை இல்லாத ஒரு செயலை செய்யணும்னா குறைந்த பட்சம் பத்தாயிரம் ரூபாய் இல்லாம பண்ண முடியாது. இதே  சதுரம் கொஞ்சம் பெருசா இருந்தா போதும் செலவு இருபதாயிரம் கூட ஆகலாம்! பணம் இருக்குறவன் கொண்டாடுறான், பணம் இல்லாதவன் திண்டாடுறான்! இப்படி கொண்டாடினால்தான் அந்தக் குழந்தை பிற்காலத்தில் ஆரோக்கியமாகவும் எந்த நோய் நொடி தாக்காமலும் இருக்குமாம்! எந்த முட்டாள் சொல்லிட்டு போயிட்டான் தெரியலை, கம்ப்யூட்டர் காலத்திலும் எல்லாம் இப்படி கொண்டாடுறது! போங்கடா டேய், போங்க! மொதல நீங்க உங்க புள்ளைக்கு என்ன தேவைன்னு பாருங்க! அந்த வயசுல கொடுக்க வேண்டிய சத்தான உணவை கொடுங்க, அப்புறம் அடுத்தவனுக்கு சோறு போட்டு கொண்டாடலாம்!

சரி நானும் இப்படி எல்லாம் ஏன் நீங்க கொண்டாடணும், சீக்கிரம் சோறுபோட்டு அனுப்பிட்டேனு கெஞ்சாத குறையா அந்த அக்காவைக் கேட்டேன்! அது எல்லாம் தெரியாதுடா கொண்டாடணும் அப்படின்னு சொன்னாங்க! சரி நமக்கு தெரிஞ்ச அக்காவாச்சே சண்டை வேணாம்னு  மூணு மணிக்கு சாப்பிட்டு வந்திட்டேன்! இப்படி நம்ம வீட்டில் இருக்கும் பெருசுங்க இளைஞர்களாகிய நமக்கு எல்லாம் தப்புத்தப்பாதான் சொல்லித்தர்றாங்க! சரி நான் வீட்டுக்கு வந்து உண்மையான காரணம் கண்டுபிடிக்க கூகுல் ஆத்தா கிட்டே கேட்டேன்! ஆத்தா தந்த பதிலை நீங்களும் படிச்சுக்கோங்க!
***

மொட்டை அடித்தல்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மொட்டை அடிப்பது எதற்கு?
ஆன்மீகம் - தலையான பொருள் முடி. எனவே அதைத் தருகிறோம்.
அறிவியல் - வெட்டப்படும் முடிகளே அதிகம் வளரும். வியர்வை மற்றும் அழுக்கு காரணமாக மயிர்க்கால்கள் இடையில் அழுக்கு சேரும். மொட்டை அடிக்கும் போது இதை பெரும்பாலும் கண்டிருக்கலாம். தொடர்ச்சியாக இதை நீக்குவதால் தலை சார்ந்த வியாதிகள் வரும் வாய்ப்பு குறையும்..
***

பின் குறிப்பு:

1. எடுத்த அந்த தகவல் எந்த தளம் முதலில் பதிவிட்டது தெரியல ஒரே தகவலை 3 தளத்திலும் பார்த்தேன் யார் முதலில் எழுதியது தெர்யாது என்பதால் குறிப்பிடவில்லை!

2. வீட்டுக்கு வந்த பிறகு அம்மா சொன்ன விஷயம் அந்த கோயில் பட்டியல் எல்ளாம்!

3. ஒரு செயல செய்றோம்னா அதுக்கு சரியான காரணத்தோடு செய்யணும், அவன் பண்றான், இவன் பண்றான்னு நாம முட்டாள்தனமாக செய்யக்கூடாது:-)))

Saturday, September 14, 2013

3. கண்களை விடவும், காதுகள்தான் அதற்கு பெஸ்ட் தெரியுமா!வணக்கம் நண்பர்களே, பதிவுலக மகிழ்ச்சி தொடர் தொடர்கிறது.
 நான் பதிவுலகில் படிக்க ஆரம்பித்த முதல் பதிவர், ஐடியா மணி அவர்கள்தான். 2012 ஜனவரி மாதம் பொங்கல் முன்பு இருக்கும், அவரது tamilaathi.com முகநூலில் திசைகாட்டி என்னும் குருப்பின் முலம் படிக்க ஆரம்பித்தேன். ஆளு ரொம்ப நாளா லிங்க் ஷேர் பண்ணிகிட்டு இருந்து இருப்பார் போல, நான் தான் கவனிக்கல. படித்த முதல் பதிவு தலைப்பு கொஞ்சம் மங்களகரமாக இருந்ததால் மட்டுமே கிளிக் செஞ்சேன், அது வரை நான் தட்ஸ் தமிழ் செய்தி தளம் மட்டுமே படிப்பவன்!
படித்த முதல் பதிவே அவரது பக்கம் என்னை ஈர்த்தது. நான் விரும்பி படிக்க ஆரம்பித்த சில மாதங்களில், ஐடியா மணி மாத்தியோசி மணியாக மாற வேண்டிய சூழ்நிலை வந்தது. பிறகு சில பல மொக்கையான பதிவுகள் எழுதினார், சமீபத்தில் வேஷம் கலைத்த பிறகு முகநூலில் கலக்குகிறார்! நீ கலக்கு அண்ணே! ப்ளாக்கை விடவும் நாளுக்கு நாள் அங்கே பாப்புலர் ஆகிறே. இப்போ எல்லாம் நோ ஃபீலிங்க்ஸ் நீ ப்ளாக்ல எழுதலனு:-)))
ஐடியா மணிக்கு அடுத்து அவரைப் போன்று ஆணித்தரமாக அழகாக எழுதும் பதிவர்கள் இது வரை நான் பார்த்ததில்லை! அவரின் எழுத்துக்கு அப்படி ஒரு அடிமை நான்! என்னடா இவன் ரொம்ப அசிங்கமா எழுதும் ஐடியாமணியை புகழுறானே என உங்களில் அவரைப் பிடிக்காதவர்கள் நினைக்கலாம். அசிங்கம் அப்படிங்குறது எல்லாம், அவரவர் மனதில் இருக்கும் அழுக்கைப் பொறுத்தது!
அவரைப்பற்றி சொல்லவேண்டும் என்றால் தனியாக ஒரு பதிவு போட்டு சொல்லும் அளவுக்கு எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும்! ரசனை மிக்க ஒரு மனிதர்! அவர் பதிவின் துவக்கத்தில் சொல்லும் (வணக்கம் நண்பர்களே! அனைவருக்கும் இனிய --- க்கிழமை வாழ்த்துக்கள்! கும்புடுறேனுங்கோ!) அச்சச்சோ அதை நான் காதுகளால் கேட்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி இருக்கே அதற்காகவே நான் அவரது வாசகர் சொல்லிவிடலாம்! அதிலும் சில குறிகளை வைத்து அவர் எழுதுவது இருக்கே அவருக்கு அவரே அழகு!:-)))
 ஆமாம், என்னதான் நீங்க பதிவுகளை கண்களால் படிப்பதைக் காட்டிலும், நான் காதுகளால் படிப்பது அப்படி ஒரு சுகம் எனக்கு!
2012 ஃபெப்ரவரி மாதத்தில் அவரை முகநூலில் இணைத்து பேச ஆரம்பித்தேன், பிறகு நாற்று குழுமத்தில் அவர் என்னை இணைத்ததால் நண்பர்கள் ராஜ் அண்ணா, தமிழ் நாற்று நிரூபன் அண்ணா மற்றும் குட்டிஸ்வர்க்கம் ஆமினா அக்கா இவர்களது வலைப்பூக்களை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது! ஒவ்வொரு பதிவரும் ஒரு வித எழுத்து நடை! அவர்களது பதிவுகள் படிக்கப் படிக்க இன்னும் எதிர்பார்ப்பு என்னுள் தூண்டியது! ஆனால் நமது அபிமான பதிவர்களால் தொடர்ந்து எழுத முடியாமல் போவதுதான் என்னைப்போன்ற தீவிரமான வாசகருக்கு மிகப்பெரிய ஏமாற்றம்!:-)))
ரசனை என்பது மனிதருக்கு மனிதர் மாறுபடலாம், ஆனால் ஐடியா மணி போன்ற கில்மா எழுத்து பதிவர் மட்டும் நான் ரசிப்பதாக யாராவது முடிவு பண்ணிட்டா ஐயாம் வெரி சாரி. ஆரம்பத்தில் நண்பர்கள் ராஜ் அண்ணாவின் எழுத்தும் எனக்கு பிடிக்கும்! அவரது எழுத்தை படித்ததால் என்னவோ எனக்கும் எழுதணும் என்ற ஒரு சின்ன தாக்கம் மனதில் தோன்றியது! 2012 ஏப்ரல் பிறகு சில பிரச்சனைகள் நாற்று குழுமத்தில் வந்ததால், நாற்று குழுமமே அமைதியாக மாறியது! அதன் பிறகு பதிவர்களுக்கும் எனக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டது! அடுத்து நான் எப்படி இன்னும் பல வலைப்பூக்களைத் தேடிச்சென்று படித்தேன் என்றும், இங்கு எப்படி எழுத வந்தேன் என்ற கதையும் நீங்க அடுத்த பகுதியில் எதிர்பார்க்கலாம்!
பின்னூட்டம் என்பது புதிய பதிவர்களுக்கு ஒரு ஊக்க மாத்திரை. அதை தவறாமல் இந்த தொடர் ஆரம்பம் முதல் கொடுத்து என்னை உச்சாகப்படுத்தி மேலும் நான் தொடர்ந்து எழுத ஊக்குவித்த அனைத்து சக பதிவர்களுக்கும் நன்றிகள்.
 பதிவுலகம் அப்படிங்குறது ரொம்ப அதிசயமான ஒன்று, அதிலும் வெறும் பின்னோட்டத்தாலும் பதிவர்களின் பதிவுகள் படிப்பதாலும் அவர்களின் மீது நமது கவனம் செல்கிறது என்றால் எழுத்தின் உயிர் ஓட்டத்தை உணருங்களேன்!
பின் குறிப்பு:
நான் கணினியில் திரையை வாசித்துக்காட்டும் சிறப்பு மென்பொருள் நிறுவி இருப்பதால், திரையில் தோன்றும் அனைத்தையும் அது வாசித்து காட்டுவதால் நான் படிக்க வேண்டிய அனைத்தையும் காதுகள் வழியாகத்தான் கேட்பது.
 ***
 கண்களால் பதிவுகளைப் படிப்பதைக் காட்டிலும் எனக்கு செவிகளால் பதிவுகள் படிப்பதுதான் சுகம்!
--
தொடரும்.

Thursday, September 12, 2013

2. அதெல்லாம் சொன்னா புரியாதப்பா, அனுபவிச்சாத்தான் தெரியும்:-)வணக்கம் நண்பர்களே, பதிவுலக மகிழ்ச்சி தொடர் தொடர்கிறது.

 நேற்று நான் எழுதிய பதிவில், நமக்கு மட்டும்தான் அது போன்ற ஆசை எல்லாம் இருக்குமோனு நினைத்து கொஞ்சம் பயத்தோடு எழுதியது, பரவால நம்ம டவுட்டு க்ளியர் ஆயிடுச்சு:-))) சரி டைம் வேஸ்ட் பண்ணாம, இன்றைய பதிவுக்கு போகலாம் வாங்க!

பிறவியிலேயே எனக்கு பார்வை குறைபாடு இருப்பதால் என்னால் சுயமாக புத்தகம், செய்திதாள், எதையுமே கண்களால் பார்த்து படிக்க முடியாது, எழுதவும் முடியாது. இன்றளவிலும் யாராவது படித்து காட்டினால்தான் சரி. ஐயோ நாம இப்படி பிறந்திட்டோமேன்னு ஆரம்பத்தில் வீட்டிலும் எனக்கும் வருத்தமாகத்தான் இருந்தது. அந்த குறை ரொம்ப வருத்தத்தை ஏற்படுத்தியது. ஆனால் போகப்போக எல்லாம் சரி ஆயிடுச்சு. (எந்த ஒரு பிரச்சனைக்கும் சரியான முடிவு இருக்கும். ஆனால் அதை நாம் அடையும் வரை சரியாக போராடனும்) அப்படீங்கிறத நான் நம்புறவன்!

குறைகள் இல்லாத மனுஷன் இங்கே யாரடா,
 சிலருக்கு உடலில் குறை.
 சிலருக்கு மனதில் குறை!
 மொத்தத்தில் எல்லாரும் இங்கே குறைகளுடனே வாழ்கிறோமடா!
நம் எல்லாருக்குள்ளும் எதோ ஒரு குறை இருக்கத்தான் செய்யும். அதை எல்லாம் நாம் பெருசு படுத்திக்கிட்டே இருந்தா லைஃப்ல முன்னுக்கே வர முடியாது என்பதை நான் புரிந்து கொண்ட பிறகு வாழ்க்கையை எனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டு வாழ்க்கையை சந்தோஷமா வாழ்ந்துகிட்டு வர்றேன்.:-)))

2012 ஜனவரி மாதம். ஒரு பதிவரின் மூலம் கிடைத்தது பதிவுலக அறிமுகம். அதைத் தொடர்ந்து பல பதிவர்களின் பதிவுகளை தேடிச் சென்று படிக்க ஆரம்பித்தேன். ஆனால் என்னை பதிவுகள் எழுதுற அளவுக்கு அது கொண்டு வரும் என்று சத்தியமா நான் ஆரம்பத்துல எதிர்ப்பார்க்கல:-)))

 அந்த பதிவரிடம் இருந்து ஒரு நாளைக்கு ஒரு பதிவை எதிர்பார்க்குறதே பெரிய விசயம். அதனால அவரோட பழைய பதிவுகள் எல்லாம் படிக்க ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில் அவர் எழுதிய மொத்த பதிவுகளும் படித்து முடித்த பிறகு அவரது எழுத்தின் மீது இன்னும் எதிர்பார்ப்பு அதிகரித்தது.
அதன் பிறகு அறிமுகம் ஆன மற்ற பதிவர்களது பதிவுகள் படிக்க ஆரம்பித்தேன். படிக்க படிக்க எல்லோரது பதிவுகளுமே எனக்குப் பிடித்துப் போனது. ஒவ்வொரு பதிவருக்கும் ஒரு எழுத்து நடை,

சிலர் எமோஷனலாக எழுதுவார்கள்,
 சிலர் புத்திசாலியாக எழுதுவார்கள்!
 சிலர் காமடியாக எழுதுவார்கள்,
 சிலர் எப்பவும் கவிதையாகவே எழுதுவார்கள்!

 இப்படி பலர் பல விதத்தில் எழுதினாலும் ரசிக்கும் ரசனை ஒவ்வொருத்தருக்கும் வேறுபட்டது என்பதால் எனக்கு பிடித்த பதிவர்களைப் பற்றி நான் எழுத ஆரம்பித்தால், ஒவ்வொரு பதிவரும் தனக்கென ஒர் தனி எழுத்து நடை. அதை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். அதெல்லாம் அடுத்தடுத்த பதிவில் விரைவில்.

 எனது அபிமான பதிவர்களின் பதிவுகளை படிக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி இருக்கே அதை என்னால் இங்கே சொல்லிப் புரிய வைக்க முடியாது. அவ்வளவு மகிழ்ச்சி எனக்குள், உண்மையில் என்னை போன்று தீவிரமான வாசகர்களை ஒரு பதிவர் பெற்றுவிட்டால் அவர்தான் பதிவுலக சூப்பர் ஸ்டார் சொல்லிவிடலாம்:-)))

என்னிடம் யாராவது ’நீ பதிவராக இருக்க ஆசை படுகிறாயா அல்லது, வாசகராக இருக்க விரும்புகிறாயா’ என்று கேட்டால் நிச்சயமாக வாசகராகவே இருக்க விரும்புவேன்! பதிவுகளைப் படிப்பதில் அப்படி ஒரு சுகம் இருக்கிறது!

***

 கண்களால் பதிவுகளைப் படிப்பதைக் காட்டிலும்,
 எனக்கு செவிகளால் பதிவுகள் படிப்பதுதான் சுகம்!
 ---
 தொடரும்.

Tuesday, September 10, 2013

1. பதிவுலக மகிழ்ச்சி, மொக்கை கவிதை:-)


பதிவுகள் எழுதி,
பப்லிஷ் செய்து,
பின்னோட்டம் வந்திருக்கிறதா என்று
அடிக்கடி எட்டி பார்ப்பதும் மகிழ்ச்சிதான்!

Monday, August 26, 2013

மனித உறவுகள், மொக்கை கவிதை:-)

இது வரை,  நாம் வாழ்ந்த வாழ்க்கையில்
பலர்  நம்முடன் நேரடியாகவோ பழகி இருக்கலாம்,
சிலர்  மறைமுகமாகவோ நம்முடன்  பழகி இருக்கலாம்!

Thursday, August 22, 2013

மொக்கை மிரட்டலும், மொக்கை வாழ்த்தும்!


மொக்கை மிரட்டலும், மொக்கை வாழ்த்தும்!

இன்று தனது --- ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும்,
அன்பு அண்ணன் முன்னால் இலியானாவின் இடுப்பு ரசிகன்,
இந்நாள் ஹன்சிகாவின் ஜொல்லன்,
பிரபல மொக்கை பதிவர்,
மாத்தி யோசி மணி
அவரை
வாழ்த்தவே
இந்த
ஸ்பெஷல்
மொக்கை பதிவு:-)

Friday, April 26, 2013

ஒரு பெண் வயதிற்கு வந்துவிட்டால்...

by Mahesh
ணக்கம் பதிவுலக நண்பர்களே! வாசக மக்களே! அனைவருக்கும் இனிதான வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்!

Wednesday, April 24, 2013

எனக்கு பிடித்த நடிகரும், அவரைப் பற்றிய சில தகவல்களும்!

by Mahesh
 வணக்கம் மக்கள்ஸ்!

 எனக்கு பிடித்த முதல் நடிகர்னு பாத்தா, அது அன்றும் இன்றும் என்றும் தலை ரஜினிகாந்த் அவர்கள்தான்!

Saturday, April 20, 2013

சிபியின் ரசிகனும் ஒரு நண்பணின் கடிதமும்!by Mahesh
வணக்கம் பதிவுலக நண்பர்களே! வாசக மக்களே!அனைவருக்கும் இனிதான சனிக்கிழமை வாழ்த்துக்கள்!இரண்டு நாளுக்கு முன்னாடி நம்ம ஃப்ரெண்ட் ஒருத்தனக் கலாய்ச்சி பதிவு போட்டு இருந்தேன்! ஆக்சுவலி... நான் எழுதிய கதையப் படிச்சு
பயபுள்ள நான் நெஜமாலுமே ஒரு பொண்ணுகிட்ட மொக்கை வாங்கியதா முடிவு கட்டிட்டான்!

நான் கற்பனையும் சில அனுபவமும் வெச்சு எழுதியதை சொன்னாலும் கேட்டானா... சரி, பையன் மேல ஒரு ‘லவ் ஸ்ட்டோரி’ எழுதிப் பார்க்கலாம்னுட்டு ஆரம்பித்து பாதி அளவு எழுதிப் பார்த்தேன்! ம்ம்... கதை ஸ்வாரஸ்யமா இருந்திச்சு!

நம்மள  விட்டுட்டு ஹீரோவா அவனப் போட்டா எப்பூடி? அதனாலையே அவன அந்தக் கதையில இருந்து டிஸ்மிஸ் பன்னிட்டேன்! ஹி ஹி ஹி..! ஒரு பொண்ணு கிட்டப் பேசுறதே இங்க கஷ்ட்டமா இருக்கும்போது அதுலயும் கதையில ஒரு பெண்ணே தேடி வர்ற மாதிரியான ஒரு பாத்திரம்! விடுவோமா...!  அதுதான் சுத்தமா விட்டுட்டேன்- கதைய! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

நம்மளோட ஃபார்ம் காட்ட ஒரு மொக்கையான கதையே சரின்னு முடிவு கட்டினேன்! அதன்படி அவன் பேரான வினோத்தும், அப்பா பேர் ஆன சுப்ரமண்யம். வெச்சு பதிவ எழுதினேன்!  பதிவ எழுதி முடிச்சுப் பார்த்தா ஒரு அப்பாவிய ஓவரா ஓட்டிட்ட்டோமோன்னு ஒரு ஃபீல் இருந்திச்சு! ஆனாலும் நம்ம ஃப்ரெண்ட் ஆச்சே! எதுவும் எடுத்துக்க மாட்டான்ங்கற தைரியத்துல பப்ளிஷ் பண்ணிட்டேன்!

அந்த பதிவப் படிச்சு அவன் எனக்கு மெயில் அனுப்பி இருந்தான். அதைக் கீழே கொடுத்து இருக்கேன்!

--

பதிவுலகமும் வினோத்தும்!

சமீபத்துலதான் வலைப்பதிவுகளைப் படிக்க ஆரம்பித்து இருக்கான்! அவனுக்குப் பிடிச்ச வலைப்பதிவரர்‘அட்ராசக்க’ சிபி செந்தில்குமார் சார் தான்! அவரது விமர்சனம்னா அவனுக்கு ரொம்ப பிடிக்கும்! அவன் அனுப்பிய பதிலும் அவரப் போலவே ட்ரை பண்ணியிருக்கான்!

நண்பனை கலாய்த்து எழுதிய பதிவை படிக்காதவர்கள்...
இங்கே கிளிக் செய்து படிச்சிட்டு வரவும்!

அப்போதான் அவனோட பதில்  புரியும்! இனி  அவனோட பதில்..

---

 முதலில் எல்லோருக்கும் வணக்கமுங்க.

அந்த வினோத் வேற யாருமில்லைங்க... நாந்தான்! மஹேஷ் அவர்களே... என்ன வெச்சு ஒரு பதிவு எழுதுனதுக்கு மிக்க நன்றி. இத நீ ஒரு கமெண்ட்டா எடுத்துப்பியா இல்ல விமர்சனமா எடுத்துப்பியான்னெல்லாம் எனக்கு தெரியாது. இந்த பதிவ நான் படிக்கும்போது நேரம் பதினொன்று மணி. படிச்ச உடனே நீ ஃபோன் பண்ணுவ அப்படின்னு நீ என்கிட்ட சொன்ன அதனாலதான் பண்ணல!

பிளாகில நேரடியா கமெண்ட் குடுத்துக்கலாமின்னு விட்டுட்டேன். சத்தியமா சொல்லுறேன்... இந்தப் பதிவில காமெடிக்குப் பஞ்சமில்ல.  என்னை வர்ணிச்சு நீ எழுதின வார்த்தைங்க எல்லாம் சூப்பரோ சூப்பர். அதுவும் அந்த பத்துருபா ரீசார்ஜு மேட்டருதான் highlight! இது எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருந்திருக்கும் ஏன்னா இது என்னோட சம்பந்த பட்ட பதிவு என்பதால்.

ஆனால் ஒரு சராசரி வாசகனா, seriously saying ஓப்பனிங் சூப்பர். ஆனா போக போக சொதப்பிட்டியே திரு.ராம்குமார் சார் சொன்னாமாதிரி கதைல கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். ரொம்ப மேலோட்டமா இருக்கு. “உனக்கெல்லாம் இதுவே ஓவர்” அப்படினு நீ நினைக்கிறது எனக்கு கேட்குது. இருந்தாலும் இது உனக்கான ரிப்ளை ஆர் ரிவ்யு இல்லை. ஏன்னா இது உன்னுடைய கதைக்கான கமெண்ட்.

அப்புறம் என்னப்பா... கல்பனா கொஞ்சம் ஓக்கே! ஆனா அது என்ன சாதிக்கா? நல்லா இல்ல. கொஞ்சம் ஸ்டைலிஷ்ஷா மோனிக்கா இல்ல தீபிகான்னு வெச்சு இருக்கலாம். கதையைச் சுருக்க வேண்டிய அவசியம் இல்லையே... கொஞ்சம் பெருசா போட்டு இருக்கலாம்
உங்க கதைன்னா மட்டும் மூணு பதிவு! எனக்கு மட்டும் ஒண்ணே ஒண்ணா? வர்ணனைல சொதப்பி இருந்தாலும் டயலாக் டெலிவரி எல்லாம் டாப். எனக்கு பிடிச்ச வசனங்கள் (வசனமே இல்லங்கிறியா) சரி வாக்கியங்கள்....

1 அப்புறம் ஆறடிக்கு மேலே அவன் வளரவே இல்லே! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
2 பையன் மேலே அந்த படம் ஒரு தாகத்தையும், அவனுள் ஒரு தாகத்தையும் தூண்டிவிட்டது...!
3 ஒரு பக்கி சிக்கிட்டா...! அவ சிக்கிட்டாளா இல்லே... இவனே போய் வலையில சிக்கிட்டானா
4 கம்பியூட்டர் கிளாசுக்கு போய் கம்பியூட்டர் கத்துகிட்டு வர சொன்னா... கம்னாட்டி கல்பனாவை கரெக்ட் பண்ண ஆரம்பித்தான்...!
5 இதுதான் கிடைச்ச சாக்குனு அங்க இங்க படிச்ச தத்துவங்களை எல்லாம் எடுத்து விட்டேன்...! எதுவும் பயபுள்ளே கேட்குற மாதிரி இல்லே...!
6 கருணை இல்லா கடவுள் கிட்டே கதறிக் கதறி வேண்ட
7 ஒரு வாரம் லவ் என்பதால் ஒரே வாரத்தில் மறந்து விட்டான்...! இதுக்கு நூரு மார்க் போடலாம்.
8 பொறுப்பான அப்பா, பொறுமையான அம்மா...! (மிக்க நன்றி)
9 எல்லாமே அப்பாவோட செலக்ஷன் தான் (நிச்சயமா இல்ல கற்பனை கதை என்பதால் ஓக்கே)
10 குறை ஒன்னும் வைக்கலை பெத்தவுங்க... ஆனா இந்த கம்னாடிக்கு காதல்தான் பெருசா தெரிஞ்சது...! (விழுந்து விழுந்து சிரிச்சேன்)
11 பத்து ரூபாய் ரிசார்ஜ் பண்ணிகிட்டு பத்து மாசம் வெச்சி ஓட்டும் கப்பாசிட்டி கொண்டவன்...  ஒரு நாளைக்கு பத்துமுறை ஆச்சும் பத்துரூபாய் ரிசார்ஜ் பண்ணி மனச விட்டு நல்லா பேசினானாம்...! (இதுக்கு ஊரே சிரிச்சிருக்கும்)

ஓவரால் சேயிங்.... உன்னுடைய மத்த பதிவுகள வெச்சுப் பார்க்கும்போது இது கொஞ்சம் உப்பு, காரம் கம்மிதான். உனக்கு ஃபுல் ஃப்ரீடம் தரேன்... அடுத்த தடவ என்ன பத்தி எழுதும்போது கொஞ்சம் நல்லா கூடுதல் சுவாரசியமா எழுது.

Thursday, April 18, 2013

எனக்கொரு கேர்ள்ஃப்ரெண்ட் வேணுமடா...by Mahesh
 வணக்கம் பதிவுலக நண்பர்களே! வாசக மக்களே!அனைவருக்கும் வளமான வியாழக்கிழமை வாழ்த்துக்கள்!

எனது நண்பனின் கதையை
வாங்கோ அனைவரும் படிக்க...!முதலில் நண்பனை பற்றி... ஒரு சிறிய அறிமுகம்...!

அவன் பெயர் வினோத்...! வினோத் என்றால் வினோத் தான்
மத்த படி வினோத் குமாரா, வினோத் பெஞ்சமினா, இல்லே வினோத் பாண்டியனா எல்லாம் கேட்கப்பட கூடாது...!
நானே சொல்லிடுறேன்...!
அவன் பேரு வினோத்
பிறந்தது ஹாஸ்பிடல்ல...
வளர்ந்தது...
வீட்டுல, ஸ்கூல்ல,

அப்புறம் ஆறடிக்கு மேலே அவன் வளரவே இல்லே! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

வினோத்தை நாங்க எல்லாம்
வினோத் சுப்ரமண்யம் என்றே அழைப்போம்...!
அப்பா பேரு சுப்ரமண்யம்... பையன் பேரு வினோத்...
இரண்டையும் சேர்த்து
வினோத் சுப்ரமண்யம் அப்படின்னு செல்லமாக அழைப்போம்...!
நீங்க எல்லாம் சந்தோஷ் சுப்ரமண்யம் ஓட தாக்கம் அப்படின்னு நினைச்சா...
உங்களுக்கு படம் பார்க்குறதுலே நல்ல "ஜீ.கே." இருக்குன்னு அர்த்தம்...!

2008 ஆம் ஆண்டு
 வெளி வந்த சந்தோஷ் சுப்ரமண்யம் படத்தை பார்த்துட்டு
பையன் மேலே அந்த படம் ஒரு தாகத்தையும், அவனுள் ஒரு தாகத்தையும் தூண்டிவிட்டது...!
ஹிஹிஹி... அது தாகமா இல்லை தாக்கமா நீங்கதான் சொல்லனும்...!
---
அது 2010 ஆம் ஆண்டு மே மாதம் இருக்கும்...!
அடிச்ச வெயிலுக்கு
பையன் ரொம்ப காஞ்சி போய் கிடந்தான்...!
பதினெட்டு வயசு ஆச்சு
பருவபெண் பக்கத்துல இல்லையே - பையனுக்கு ஒரே ஏக்கம்...!
பின்னே என்னங்க பண்ணுறது ?
18 வயசுல
எனக்கோரு "கேர்ள்ஃப்ரெண்ட் வேணுமடா" பாடாம
81 வயசுலையா பாட முடியும்...!

எப்படியோ தவமாய் தவம் இருந்தததற்கு பையனுக்கு
ஒரு பக்கி சிக்கிட்டா...!
அவ சிக்கிட்டாளா இல்லே...
இவனே போய் வலையில சிக்கிட்டானா
படிக்குற உங்களுக்கு போக போக தெரியும்...!
---
கம்பியூட்டர் கிளாசுக்கு போய் கம்பியூட்டர் கத்துகிட்டு வர சொன்னா...
கம்னாட்டி கல்பனாவை கரெக்ட் பண்ண ஆரம்பித்தான்...!

காஞ்சி போன தன்னோட லைஃப்ல
இந்த கல்பனா வந்து கலகலப்பை ஏற்படுத்துவான்னு
கான்ஃபிடெண்ட்டா இருந்தான்...!

அதுக்காகவே காலையும் மாலையும் கம்பியூட்டர் கிளாசுக்கு கரெக்டா போவான்...!
கல்பனா தான்
உயிரு மத்தது எல்லாம் ... ... ... வேஸ்ட்...
அந்த ரேன்சுக்கு போயிட்டான்...!
சின்சியர் ஒன்ஸைட் லவ்வாம்...!

ஒரு நாள் மாலை
கம்பியூட்டர் கிளாசு முடிஞ்சதுமே கல்பனாவை தேடி போனான்...!
அன்று எப்படியாச்சும் ஆவலுடன் பேச முடிவு பண்ணினான்...!

ஹலோ கல்பனா..
நான் உன் கிட்டே கொஞ்சம் பேசணும்... என்னோட காபி ஷாப் வரியான்னு கேட்டுட்டான்...!
எதுக்கு வினோத்
கொஞ்ச நாளா உன்னை கவனிச்சிட்டு தான் வந்தேன்...!
கிளாசுலே அத்தனை பொண்ணுங்க இருந்தாலும் நீ
என்னையை மட்டும் அடிக்கடி பார்க்குறத நான் கண்டு பிடிச்சிட்டேன்...!
ஆனாலும் நான் கண்டுக்கல...!
கடைசியா
இன்னைக்கு காபி ஷாப் சொல்லுவே... நாளைக்கு காதல் கடிதத்தை நீட்டுவே...!
இதெல்லாம் வேண்டாம் வினோத்...
ஆள்ரெடி நானும் ஒரு பையனை லவ் பண்ணிகிட்டு இருக்கேன்...!
பெட்டர் நீ வேறே யாரையாச்சும் ட்ரை பண்ணு 'பெஸ்ட் ஆஃப் லக்'ன் னு சொல்லிட்டு போயிட்டா...!
கொஞ்சம் கூட கல்பனாவின் பதில்
எதிர்ப்பாக்காதவன்...
அது வரை இருந்த கான்ஃபிடெண்ட் எல்லாம் காணாம போச்சு...!

வீட்டுக்கு வந்ததுமே போன் போட்டு
மொக்கை போட ஆரம்பிச்சான்...!
நடந்தது எல்லாம் கூறினான்
நண்பன் கிட்ட எல்லாம் நடந்து முடிந்த பிறகு...!

இதுதான் கிடைச்ச சாக்குனு
அங்க இங்க படிச்ச தத்துவங்களை எல்லாம் எடுத்து விட்டேன்...!
எதுவும் பைய புள்ளே கேட்குற மாதிரி இல்லே...!

அடுத்த நாளே கம்பியூட்டர் கிளாசுக்கு
போகிறதை நிறுத்திட்டு
இனி வர போற காதல் ஆச்சும் ஜெயிக்க சொல்லி
கருணை இல்லா கடவுள் கிட்டே
கதறிக் கதறி வேண்ட
கோயில் கோவிலா சுத்தினான்...!

முதல் காதலையும் காதலியையும்
மறக்க ஆரம்பிச்சான்...!
ஒரு வாரம் லவ் என்பதால்
ஒரே வாரத்தில் மறந்து விட்டான்...!
--
வினோத் அப்பா ஒரு
பில்டிங் காண்ட்டிரக்ட்டர்...!
பொறுப்பான அப்பா, பொறுமையான அம்மா...!
எல்லாம் அப்பாவே நாலு கடையில ஏறி எது பெஸ்ட்டோ அதையே தன்னோட பையனுக்கு வாங்கி கொடுப்பார்...!
எல்லாமே அப்பாவோட செலக்‌ஷன் தான்
தனக்கு வரப் போகிற லைஃப் பாட்னரும்
அப்பா செலக்ட் பண்ணிட்டா...
நான் எங்க போவேன்னு என் கிட்டே நிறைய முறை புழம்பி தள்ளி இருக்கான்...!
எல்லாத்திலும் பெஸ்ட் கொடுக்கும் அப்பா
அவருக்கு எது பெஸ்ட்டா தோணுதோ
அவளை என்னோட தலையில கட்டுவார்...!
அது என்னால ஏத்துக்க முடியாது...!
அதுனால லைஃப்ல
1 விசயம் மட்டும் அவனோட விருப்பத்தில் நடக்கனும்ன்னு முடிவு பன்னினான்...!

தான் ஒரு பெண்ணை காதலிச்சுதான் கல்யாணம் பண்ணனும்ன்னு ஒத்தக்கால்லே நின்னான்...!
குறை ஒன்னும் வைக்கலை பெத்தவுங்க...
ஆனா இந்த கம்னாடிக்கு காதல்தான் பெருசா தெரிஞ்சது...!

கல்பனா போன பிறகு...
காவியா இல்ல கவிதா யாராச்சும்
வருவாங்கன்னு கான்ஃபிடெண்ட்டா இருந்தான்...!

நல்ல வேலை கல்பனா
நல்லவளா இருந்தாளா
தான் இன்னொருத்தற காதலிச்சுட்டு இருப்பதை சொல்லிட்டு விலகி போயிட்டா...!
இனி அடுத்து என்ன நடந்தது எல்லாம் சுருக்கமா..


எவளவோ சாதிகாவாம் நாலு நாள் நல்லா பழகினாளாம்...
பழகியதில் இவனை பிடித்து விட்டதாம்
கல்பனாவின் கதைக்கு பிறகு அது வரை வாழ்க்கையே ரொம்ப மெதுவா போகுது... ஒரு ஸ்வாரஸ்யமும் இல்ல... அப்படின்னு புழம்பிகிட்டே இருந்தவன்
இந்த சாதிகாவின் தொடர்புக்கு அப்புறம் திடீர்னு ரொம்ப activeவா மாறிட்டான்...!
அது வரை அப்பாவியா இருந்தவன்
அன்னியனா மாறிட்டான்...!

பத்து ரூபாய் ரிசார்ஜ் பண்ணிகிட்டு பத்து மாசம் வெச்சி ஓட்டும் கப்பாசிட்டி கொண்டவன்...
ஒரு நாளைக்கு பத்துமுறை ஆச்சும் பத்துரூபாய் ரிசார்ஜ் பண்ணி மனச விட்டு நல்லா பேசினானாம்...!

இப்படி பத்து மாசம் போக...
பக்காவா ஒரு நாள் ப்லான் பண்ணி...
சாதிகா சாதிக்க இனி அசத்த
சாதிச்சிட்டு போயிட்டா...!

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
---

சரி பாவம் இதுக்கு மேலே மொக்கை போட விரும்பலை...
அவனோட நிஜ பேர் வினோத்...
அப்பா பேரு சுப்ரமண்யம்...

12 வருசம் ஒன்றாக படிச்சோம்...
பள்ளி படிப்பு முடிஞ்சதும்...
வெவ்வேறு திசையில
போயிட்டோம்..

கிட்ட தட்ட
2 பேரும் ஒரே மாதிரி யோசிப்போம்...
ஆனா இப்போ நான் மாறி விட்டதாவும் நினைச்சிட்டான்...

நான் எழுதிய
இந்த
முட்டாளாக இருந்த வாலிபன் புத்திசாலி ஆன கதை!
படிச்சிட்டு
நண்பன் அந்த கதை முழுக்க முழுக்க எனக்கு நடந்ததா நம்பிட்டான்...!

ஃபைனல் டச்:
நான் கற்பனையும் சில அனுபவமும் வெச்சு எழுதியதை சொன்னாலும் கேட்டானா...
ஹி ஹி ஹி
அதனால் ஃப்ரெண்டோட பேருலே இந்த கதைய கற்பனையா எழுதி இருக்கென்...!

அப்போ  எல்லாம் கற்பனையா???   அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
--ஒகே  பதிவு     சிலருக்கு பிடிச்சும் இருக்கும் பலருக்கு பிடிக்காமலும் இருக்கலாம்...
பதிவை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க...? கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன... நன்றி...

Saturday, March 30, 2013

கடவுள் என்ன சுயநலவாதியா?சின்ன வயசு அதாவது வெவரம் தெரியாத வயசு கூடச் சொல்லலாம் எனக்கு. வீட்டில் எல்லாரும் சீரடி பாபாவை கும்பிடுவார்கள். எனக்கும் அப்போது அவரை பிடிக்கும். அதே சமயம் புட்டபர்த்தியில் இன்னொரு பாபா இருந்தார். அவர் புட்டபர்த்தி பாபா கேள்வி பட்டிருப்பீங்க. அந்த வயதில் அவரை கூட உண்மையான கடவுள் சீரடி பாபாவுக்கு இணையாக சிலர் வணங்குவதை பார்த்திருக்கிறேன். ஆனா அது எனக்கு அந்த வயதில் சுத்தமா பிடிக்கல. நான் அவரை ’திருட்டுபாபா’ அப்படின்னு சொல்லிகிட்டு இருப்பேனாம். காரணம் அந்த வயதில் நான் யோசித்தது 'கடவுள் உயிரோட எப்படி இருக்க முடியும்’ என்பதுதான். சாமிகள் எல்லாம் சிலையாகவே இருக்க முடியும்ன்னு நினைத்துக்கொண்டிருந்தேன்.

சீரடி பாபாவை சிலையாக பார்த்ததால் அவர் அந்த காலத்தில் இருந்திருப்பாரென நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனா சமீபத்தில்தான் தெரிந்தது அவரும் இந்த காலத்து சாமியார் போல இருபதாம் நூற்றாண்டில் துவக்கத்தில் வந்தவருன்னு. ஆனால் அவர் ஒரு நல்ல ஆன்மீகவாதின்னு நான் நம்புறேன். அதுவும் இந்த காலத்தில் இருந்தார்னா தெரியல. மற்றபடி அவரைப் பற்றி மேலும் விவரம் எதுவும் தெரியாது.

அப்பரம் 8, 9 வகுப்புகள் வந்த பிறகு புட்ட பத்தி பாபா சாய் டிவோடிஸ் நிறைய பேரை பார்க்க முடிஞ்சது. சிறுவயதில் நான் திட்டிய ஒருத்தருக்கு ஏன் இவ்வளவு பேர் கும்பிடணும்? அவரது பேரை சொல்லிகிட்டு இருக்குறாங்க? அந்தச் சமயம் அதனை என்னால் புரிஞ்சுக்க முடியல. இது ஒரு புறம் இருக்க, எனக்கு +2 வரை கடவுள் மீது நம்பிக்கை இருக்கத்தான் செய்தது. ஆனா அதன் பிறகு சிறிது சிறிதாக குறைந்துவிட்டது. என்னிடம் யாராவது இப்போது ’கடவுள் இருக்கிறாரா?’ கேட்டா சொல்லுற பதில் ஒண்ணுதான். ’நமக்கு புலப்படாத ஒரு சக்தி இருக்கு. அதுதான் கடவுள். அவ்வளவு தான்’

’திருப்பதியில இருக்க, எத்தனை முறை கோவிலுக்கு போயிட்டு வருவ? வாரத்துல ஒரு நாளா...? இல்லை மாசத்துல ஒரு நாளா...?' என்னிடம் நண்பர்கள் பேசும்போது அடிக்கடி கேட்பதுண்டு. கல்லூரி சேர்ந்த பிறகு கடவுள் பக்தி சுத்தமா குறைந்த பிறகு வருடத்தில் ஒரு முறை போறதே பெரிய விஷயம்ன்னு சொல்லுவேன். ஆமா அப்படி அங்கே போய் என்னதான் நமக்கு கிடைக்கும்னு தெரியல. 3, 4 மணி நேரம் கூட்ட நெரிசலில் நின்றுக்கொண்டு "ஜரகண்டி ஜரகண்டி", "கோவிந்தா கோவிந்தா" சப்தத்திற்கு இடையே. கடைசியில் சாமியை பார்க்க ஒரு நிமிஷம் கூட இல்லாம எதோ அவசர அவசரமா பார்த்துட்டு வர்றதுக்கா போகணும்? சரி அதுகூட இல்லைன்னா சாமிய தரிசனம் செய்து அப்படி என்னதான் வேண்டுவாங்கன்னு தான் தெரியல!

ப்ளஸ் டு வரை கடவுளிடம் நான் வேண்டும்போது ’எல்லாம் பரிட்சையிலும் நல்லா எழுதணும், வீடும் நாடும் நல்லா இருக்கணும்’ன்னுதான் வேண்டுவேன். அடுத்து எங்க வீட்டுலயே எனக்கு டோட்டல் ஆப்போஸிட் எங்க அம்மா இந்த ஒரு விஷயத்தில்!. திங்கள் முதல் சனி வரை நோ கேப். ஒன்லி சண்டே மட்டும்தான் ஹாலிடே. பேசாம அன்னைக்கு எதாவது கடவுளை எண்ட்ரி பண்ண வைக்கலாமான்னு தோணுது. அவ்வளவு பக்தி!!!
’அம்மா நீ தினமும் சாமிய கும்பிடுற, தேங்கா எல்லாம் உடைக்குற. அதுனால என்னமா வரும்? சரி நீ என்னதான் வேண்டுற சொல்லேன்.. தெரிஞ்சுக்கலாம்ன்னு ஒரு ஆர்வம்தான்’ அப்படின்னு ஒரு நாள் அம்மாவிடம் நேரடியா கேட்டுட்டேன்! என் அம்மாவும் எங்களுக்காகதான் ‘நீ கடவுள் கிட்ட வேண்ட மாட்ட உனக்கும் சேர்த்துதான் வேண்டிகிறேன்'னு சொன்னாங்க. அப்போது எனக்கு தோணியது. நாம நல்லா இருக்கணும். அடுத்து கஷ்டம் இல்லாம வாழ்க்கை நல்ல படியா இருக்கணும்ன்னு கடவுளிடம் வேண்டினால் எப்படி கிடைக்கும்ன்னு தெரியல! என்னைப் பொருத்தவரையில் சாமியைக் கும்பிடுறதும் ஒண்ணுதான் கும்பிடாம இருப்பதும் ஒண்ணுதான். நல்லவனும் வேண்டுறான். கெட்டவனும் வேண்டுறான். சாமி யாரு வேண்டுதலை ஏத்துக்குவார்...? வேண்டுனாதான், அவரை பற்றி பேசுனாதான் நமக்கு நல்லது நடக்கும்ன்னு சொல்லுராறா...? தெரியல! சரி நாம வேண்டுனா தான் கடவுள் கொடுப்பாரா...? "கடவுள் என்ன... மனிதர்கள் போல சுயநலவாதியா...?" எந்த ஒரு விசயத்தையும் நாம முயற்சி எடுத்து நம்பிக்கையோடு செய்தாலே போதும்! அது நடக்கணும் என்றெல்லாம் வேண்டுறது சுத்த முட்டாள்தனம்! எது நடக்கணுமோ அது நடந்தே தீரும். அதுனால வீணா கடவுளை எல்லாம் நம்புறது சுத்த முட்டாள்தனம்ன்னு நா நினைக்குறேன். மேலே சொன்னது போல கடவுள் ஒருத்தர் இருந்தால் அது ஒரு சக்தி அதை எந்த ஒரு மதத்திலோ அல்லது மனிதரிலோ திணிக்கக் கூடாது என்பது எனது கருத்து!

விவேகானந்தர் சொல்வது போல் "மக்களுக்கு சேவை செய்யும் தொண்டே மகேசனுக்குச் செய்யும் தொண்டு" மனிதனுக்கு செய்யும் சேவை கடவுளுக்கும் செய்யும் சேவை. கொஞ்சம் இதை யோசிச்சு பாருங்கள். உங்களால் முடிந்தவரை பிறருக்கு உதவி செய்து பாருங்க. அவர்களுக்கு நீங்களே கடவுளாக தெரிவீர்கள்...!