Saturday, March 30, 2013

கடவுள் என்ன சுயநலவாதியா?சின்ன வயசு அதாவது வெவரம் தெரியாத வயசு கூடச் சொல்லலாம் எனக்கு. வீட்டில் எல்லாரும் சீரடி பாபாவை கும்பிடுவார்கள். எனக்கும் அப்போது அவரை பிடிக்கும். அதே சமயம் புட்டபர்த்தியில் இன்னொரு பாபா இருந்தார். அவர் புட்டபர்த்தி பாபா கேள்வி பட்டிருப்பீங்க. அந்த வயதில் அவரை கூட உண்மையான கடவுள் சீரடி பாபாவுக்கு இணையாக சிலர் வணங்குவதை பார்த்திருக்கிறேன். ஆனா அது எனக்கு அந்த வயதில் சுத்தமா பிடிக்கல. நான் அவரை ’திருட்டுபாபா’ அப்படின்னு சொல்லிகிட்டு இருப்பேனாம். காரணம் அந்த வயதில் நான் யோசித்தது 'கடவுள் உயிரோட எப்படி இருக்க முடியும்’ என்பதுதான். சாமிகள் எல்லாம் சிலையாகவே இருக்க முடியும்ன்னு நினைத்துக்கொண்டிருந்தேன்.

சீரடி பாபாவை சிலையாக பார்த்ததால் அவர் அந்த காலத்தில் இருந்திருப்பாரென நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனா சமீபத்தில்தான் தெரிந்தது அவரும் இந்த காலத்து சாமியார் போல இருபதாம் நூற்றாண்டில் துவக்கத்தில் வந்தவருன்னு. ஆனால் அவர் ஒரு நல்ல ஆன்மீகவாதின்னு நான் நம்புறேன். அதுவும் இந்த காலத்தில் இருந்தார்னா தெரியல. மற்றபடி அவரைப் பற்றி மேலும் விவரம் எதுவும் தெரியாது.

அப்பரம் 8, 9 வகுப்புகள் வந்த பிறகு புட்ட பத்தி பாபா சாய் டிவோடிஸ் நிறைய பேரை பார்க்க முடிஞ்சது. சிறுவயதில் நான் திட்டிய ஒருத்தருக்கு ஏன் இவ்வளவு பேர் கும்பிடணும்? அவரது பேரை சொல்லிகிட்டு இருக்குறாங்க? அந்தச் சமயம் அதனை என்னால் புரிஞ்சுக்க முடியல. இது ஒரு புறம் இருக்க, எனக்கு +2 வரை கடவுள் மீது நம்பிக்கை இருக்கத்தான் செய்தது. ஆனா அதன் பிறகு சிறிது சிறிதாக குறைந்துவிட்டது. என்னிடம் யாராவது இப்போது ’கடவுள் இருக்கிறாரா?’ கேட்டா சொல்லுற பதில் ஒண்ணுதான். ’நமக்கு புலப்படாத ஒரு சக்தி இருக்கு. அதுதான் கடவுள். அவ்வளவு தான்’

’திருப்பதியில இருக்க, எத்தனை முறை கோவிலுக்கு போயிட்டு வருவ? வாரத்துல ஒரு நாளா...? இல்லை மாசத்துல ஒரு நாளா...?' என்னிடம் நண்பர்கள் பேசும்போது அடிக்கடி கேட்பதுண்டு. கல்லூரி சேர்ந்த பிறகு கடவுள் பக்தி சுத்தமா குறைந்த பிறகு வருடத்தில் ஒரு முறை போறதே பெரிய விஷயம்ன்னு சொல்லுவேன். ஆமா அப்படி அங்கே போய் என்னதான் நமக்கு கிடைக்கும்னு தெரியல. 3, 4 மணி நேரம் கூட்ட நெரிசலில் நின்றுக்கொண்டு "ஜரகண்டி ஜரகண்டி", "கோவிந்தா கோவிந்தா" சப்தத்திற்கு இடையே. கடைசியில் சாமியை பார்க்க ஒரு நிமிஷம் கூட இல்லாம எதோ அவசர அவசரமா பார்த்துட்டு வர்றதுக்கா போகணும்? சரி அதுகூட இல்லைன்னா சாமிய தரிசனம் செய்து அப்படி என்னதான் வேண்டுவாங்கன்னு தான் தெரியல!

ப்ளஸ் டு வரை கடவுளிடம் நான் வேண்டும்போது ’எல்லாம் பரிட்சையிலும் நல்லா எழுதணும், வீடும் நாடும் நல்லா இருக்கணும்’ன்னுதான் வேண்டுவேன். அடுத்து எங்க வீட்டுலயே எனக்கு டோட்டல் ஆப்போஸிட் எங்க அம்மா இந்த ஒரு விஷயத்தில்!. திங்கள் முதல் சனி வரை நோ கேப். ஒன்லி சண்டே மட்டும்தான் ஹாலிடே. பேசாம அன்னைக்கு எதாவது கடவுளை எண்ட்ரி பண்ண வைக்கலாமான்னு தோணுது. அவ்வளவு பக்தி!!!
’அம்மா நீ தினமும் சாமிய கும்பிடுற, தேங்கா எல்லாம் உடைக்குற. அதுனால என்னமா வரும்? சரி நீ என்னதான் வேண்டுற சொல்லேன்.. தெரிஞ்சுக்கலாம்ன்னு ஒரு ஆர்வம்தான்’ அப்படின்னு ஒரு நாள் அம்மாவிடம் நேரடியா கேட்டுட்டேன்! என் அம்மாவும் எங்களுக்காகதான் ‘நீ கடவுள் கிட்ட வேண்ட மாட்ட உனக்கும் சேர்த்துதான் வேண்டிகிறேன்'னு சொன்னாங்க. அப்போது எனக்கு தோணியது. நாம நல்லா இருக்கணும். அடுத்து கஷ்டம் இல்லாம வாழ்க்கை நல்ல படியா இருக்கணும்ன்னு கடவுளிடம் வேண்டினால் எப்படி கிடைக்கும்ன்னு தெரியல! என்னைப் பொருத்தவரையில் சாமியைக் கும்பிடுறதும் ஒண்ணுதான் கும்பிடாம இருப்பதும் ஒண்ணுதான். நல்லவனும் வேண்டுறான். கெட்டவனும் வேண்டுறான். சாமி யாரு வேண்டுதலை ஏத்துக்குவார்...? வேண்டுனாதான், அவரை பற்றி பேசுனாதான் நமக்கு நல்லது நடக்கும்ன்னு சொல்லுராறா...? தெரியல! சரி நாம வேண்டுனா தான் கடவுள் கொடுப்பாரா...? "கடவுள் என்ன... மனிதர்கள் போல சுயநலவாதியா...?" எந்த ஒரு விசயத்தையும் நாம முயற்சி எடுத்து நம்பிக்கையோடு செய்தாலே போதும்! அது நடக்கணும் என்றெல்லாம் வேண்டுறது சுத்த முட்டாள்தனம்! எது நடக்கணுமோ அது நடந்தே தீரும். அதுனால வீணா கடவுளை எல்லாம் நம்புறது சுத்த முட்டாள்தனம்ன்னு நா நினைக்குறேன். மேலே சொன்னது போல கடவுள் ஒருத்தர் இருந்தால் அது ஒரு சக்தி அதை எந்த ஒரு மதத்திலோ அல்லது மனிதரிலோ திணிக்கக் கூடாது என்பது எனது கருத்து!

விவேகானந்தர் சொல்வது போல் "மக்களுக்கு சேவை செய்யும் தொண்டே மகேசனுக்குச் செய்யும் தொண்டு" மனிதனுக்கு செய்யும் சேவை கடவுளுக்கும் செய்யும் சேவை. கொஞ்சம் இதை யோசிச்சு பாருங்கள். உங்களால் முடிந்தவரை பிறருக்கு உதவி செய்து பாருங்க. அவர்களுக்கு நீங்களே கடவுளாக தெரிவீர்கள்...!
தொடர்புடைய பதிவுகள் :


7 comments:

 1. முற்றிலும் உண்மைதாங்க... சக மனிதர்க்லை, உயிரினங்கலை நேசிக்கலாமே. அன்னை தெரசா அவர்களைப்பாருங்களேன்.. அவர்கள் போதிக்கவில்லை...பேசவில்லை....அவர்கள்யின் முழு பலத்தையும், சக்தியையும் பிறருக்காக செலவிட்டார் வாழ்ந்தார்.. நாம் மற்றவர்களூக்காக உதவ் வேண்டுமனல் முனைவோம், எத்தனைஅயோ மனைதரிகள் ப்ளாட்பாரத்தில் அழுக்காக, சிலர் புண்களோடு, இயற்க்கை உபாதைகளோடு இருப்பதைப் பார்ப்போம் ஆனால் யாரையும் தொடுவோமா...உண்மையான இற நம்பிக்கை இருந்தால், உயிரினங்களை நேசியுங்கள்...வேண்டியவர்களுக்கும், நோயுற்றவர்களுக்கும் உதவுங்கள்...இந்த இயற்க்கை சக்தி...

  ReplyDelete
 2. please visit http://eerammagi.blogspot.in/2013/03/blog-post_30.html..

  you will understand.... very few are there like mr. mahendran....they are......great

  ReplyDelete
 3. ஷீரடி காரன், புட்டபர்த்திக்காரன் இவனுங்க எல்லாம் மனுஷனுங்கம்மா கடவுள் இல்லை. இந்த மாதிரி பிராடுகளைப் பாத்த்துப் பார்த்து இருக்கும் பக்தியும் போயிடும்.


  யார் மேலும் திணிப்பு வேணாம்னு சொல்லிட்டு விவேகானந்தன்

  \\"மக்களுக்கு சேவை செய்யும் தொண்டே மகேசனுக்குச் செய்யும் தொண்டு"\\

  என்கிற கருத்தை திணிச்சிட்டு போயிட்டான். இது தான் பித்தலாட்டம் என்பது. Don't get cheated.

  ReplyDelete
 4. Nanum 100 percentage unga katchidhan.same feelings of me.

  ReplyDelete
 5. உங்க ஊர் கோயிலுக்கு வந்தப்ப எனக்கும் கோபம்தான் வந்தது. 3, 4 மணி நேரம் காத்திருந்துட்டு, ரெண்டு நிமிஷம் கூட முழுசா பாக்க முடியாம விரட்டறானுங்க, என்ன சாமி வேண்டிக்கிடக்குன்னு தோணிடுச்சு. பொதுவாவே நான் உங்க அலைவரிசைதான். மனம்தான் கடவுள்னு நம்பறவன். அதை தூய்மையாக, பிறருக்கு உதவும்படி வைத்துக் கொண்டால் அந்த மனம்தான் என்வரைல கடவுள் மஹேஷ்!

  ReplyDelete
 6. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை ஆராய்ச்சி செய்வதை விடுத்து உணக்கு பிடித்த கடவுளின்மேல் நம்பிக்கை வையுங்கள் வாழ்க்கையில் பிடிப்பற்றுபோகும் தருனங்களில் உதவினாலும் உதாவாவிட்டாலும் கடவுள் இருக்கிறார் என்ற ஒரு பிடிப்பாவது மிஞ்சும் அது நம்பிக்கையை தரும். சினிமா மெட்டுகளற்ற பக்தி பாடல்களை கேளுங்கள் மனதில் ஒரு அதிர்வு வெறுமையை போக்கும்.

  ReplyDelete