Thursday, April 11, 2013

சென்னையில் ஒருநாள் -விமர்சனம்


ரு நாள்!யோசிச்சுப் பார்த்தா நம்ம எல்லோரது வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு நாள் மிக முக்கியமான ஒரு நாளா அமைஞ்சிடும். பலவிதமான அனுபவங்கள், சந்தோஷங்கள், வருத்தங்கள், வெற்றிகள், தோல்விகள்னு யாருக்கு எது எப்போ நடக்கும்னு எதுவும் சொல்ல முடியாது. ஆனால் ஒவ்வொரு காலைப் பொழுதும் இந்த மாற்றங்களின் சுவடே தெரியாமல்தான் அழகா, அமைதியாத் தொடங்குகிறோம். அறியாமை, விளையாட்டுத்தனம், கவனக்குறைவு, இப்படி யாரோ செய்யும் சிறு தவறு.. அதுல தொடங்கும் ஒரு பிரச்சனை பல பேரோட வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கிடுது. அப்படியான ஒரு நாளில் நடக்கும் சம்பவங்கள் தான் இந்த ‘சென்னையில் ஒரு நாள்’ படத்துல காட்டி இருக்காங்க..


---

கேரளாவில் வெற்றி பெற்ற ‘டிராபிக்’ என்ற மலையாளப் படமே தமிழில், ‘சென்னையில் ஒரு நாள்’ ஆகியிருக்கிறது.

சில வருடங்களுக்கு முன் ஹிதேந்திரன் என்ற சிறுவனின் இதயத்தை வேறொரு பெண்ணுக்குப் பொருத்துவதற்காகக் கொண்டு சென்ற உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவான கதையே இது...!

ஜர்னலிஸ்டாக வேலை தேடும் இளைஞன் கார்த்திக், அவனுடைய அம்மா (லஷ்மி ராமகிருஷ்ணா) அப்பா (ஜெயபிரகாஷ்), அவனுடைய காதலி (பார்வதி) இவர்கள் ஒருபக்கம், தன்னை உச்ச நட்சத்திரமாகவே எல்லா நேரமும் உணரும் நடிகர் (பிரகாஷ்ராஜ்), அவருடைய மனைவி (ராதிகா), உடல்நலமில்லாத அவர்களுடைய குழந்தை, தங்கைக்காக லஞ்சம் வாங்கி சஸ்பெண்ட் ஆகி வேலையைத் திரும்பப் பெறப் போராடும் கான்ஸ்டபிள் (சேரன்), தன் காதல் மனைவி(இனியா)க்காக கார் வாங்கி பரிசளிக்க ஆசைப்படும் டாக்டர் கணவன் (பிரசன்னா).

ஆரம்பத்தில் நிதானமாக எல்லாக் கேரக்டர்களையும் சொல்லிவிட்டு, கதையைத் தொடங்குகிறார்கள்.

---

செப்டம்பர் 16ஆம் நாள் கா‌லை கார்த்திக் ஜர்னலிஸ்ட் வேலையில் முதல் நாள் வேலைக்குப் போகும் போது எதிர்பாராதவிதமாக பைக் விபத்தில் சிக்குகிறான். பிறகு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் அவனுக்கு மூளைச்சாவு எற்பட்டதாகவும் உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பதாகவும் காட்டுகிறார்கள். இதே சமயத்தில் பிரகாஷ்ராஜ் –ராதிகாவின் ஒரே மகள் இதய நோய் காரணமாக ஆபத்தான நிலையில் வேலூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகிறாள். யாராவது இதய தானம் செய்தால், அவள் பிழைத்துக் கொள்வாள் என்கிற நிலை.

இச்சமயத்தில் கார்த்திக்கின் மூளைச்சாவைப் பற்றிய தகவல் பிரகாஷ்ராஜ்க்கு தெரிந்ததும் கார்த்திக்கின் அப்பாவை இதய தானத்திற்கு ஒத்துக் கொள்ளக் கேட்கிறார்கள் ஆரம்பத்தில் ஒத்துக் கொள்ளாத அவர் இறுதியாக தங்கள் மகனின் இதயத்தைத் தானம் செய்ய முன் வருகிறார். தானமாகப் பெற்ற இதயத்தை சென்னையில் இருந்து வேலூருக்குக் கொண்டு செல்லணும் - அதுவும் குறுகிய நேரத்தில் அதனால் ஹெலிகாஃப்ட்டரில் கொண்டு செல்ல திட்டம் இட்டாலும் வானிலை சரியில்லாத காரனத்தால் தரை வழியே போகணும். இது மட்டுமே இருக்கும் ஒரே ஒரு மார்க்கம்

இதயம் வெளியே எடுத்து ஒண்ணரை மணி நேரத்துல சென்னையில இருந்து வேலூருக்குக் கொண்டு போய்ச் சேர்க்கணும். 150 கிலோ மீட்டர் ஒண்ணரை மணி நேரத்துல போய்ச் சேரணும். ஆனால் இது தனி மனிதனால சாத்தியம் இல்லாததுனால போலீஸ் கமிஷனர் ஆன சரத்குமார் இடம் உதவுமாறு கேட்கிறார்கள். அதற்கு அவர் ஒண்ணரை மணி நேரத்துல ச்சென்னை டூ வேலூர் ட்ராவல் பண்ணனும் அந்த இதயம் ச்சென்னை க்ளோபல் ஹாஸ்பிடல்ல இருந்து வேலூருக்கு - 150 கிலோமீட்டர் - அதுவும் ஒண்ணரை மணி நேரம் சாத்தியமே இல்லேன்னு சொல்லிடுறாரு...

சென்னை டூ வேலூர் 150 கிலோமீட்டர் குறைஞ்சது 130 கிலோமீட்டர் வேகத்துல போகணும். nh4, nh46, ரெண்டு ஹைவேஸ் இருக்கு. இது பரவால்ல... ஆனா சிட்டிக்குள்ள இருக்குற omr road, கிண்டி கத்திப்பாரா, போருர், பூந்தமல்லி இங்க எய்ட்டியத் தாண்ட முடியாதுன்னு சொல்லுறார். அது மட்டும் இல்லாம சிட்டியத் தாண்டியதும் அடுத்து ஸ்ரீ பெரும்நுபுதூர், ராணிப்பேட், ஆற்காடு இப்படி பல பிசி டவுன்ஸ் இருக்கு! இங்க எல்லாம் 100ஐத் தாண்ட முடியாது! அதைவிட முக்கியம்... அன்றைய நாள் ஒரு வேலை தினம். பப்ளிக்கைக் கண்ட்ரோல் பண்ணுறது கஷ்டம்! ஜஸ்ட் அஞ்சு நிமிஷம் ட்ராஃபிக் ஜாம் ஆனா ப்ளான் கொலாப்ஸ் ஆகிடும். அதனால ப்ராக்டிகலா பார்த்தா its purely impossible அப்படினு சொல்லிடுறார்....

ஃபைனலா செய்யமுடியாது என்று தயங்கும் காவல்துறை அதிகாரி, விஜயகுமார் சொன்னதும் ஓகே முயற்சிக்கலாம் என்கிறார். அவர் பின்னர் சம்மதிப்பதற்கும் வலுவான காட்சியாக இருந்தது விஜயகுமாரின் பேச்சு. ‘‘இதயத்தைக் குடுக்குறவுங்களும் ரெடியா இருக்காங்க. அதை வாங்குறவுங்களும் தயாரா இருக்குறாங்க. நீங்க சரின்னு சொன்னா சர்ஜரிக்கு டாக்டர்ஸும் ரெடி ஆயிடுவாங்க’’ அப்படின்னு சொல்ல, அதற்கு சரத்குமார், ‘‘ஆனா சார்! அது கடவுளாலும் முடியாது!’’ன்னு சொல்லிடுறார்.

ஆனால் ஒரு மனுஷன் கடவுளாத் தெரியுறதே இப்படிப்பட்ட இக்கட்டாண தருணங்கள்லதான்! வரப்போற இளைஞர்களுக்கு ‘முடியும்’ என்ற நம்பிக்கையையும், தைரியத்தையும் கொடுக்கும்! முடியாதுன்னு சொல்லிட்டா வழக்கமான நாளா இதுவும் ஆகிடும்.முடியும்னு சொல்லி முயற்சி செஞ்சா இந்த நாள் வரலாறா மாறும். நீங்க சரின்னு சொன்னா நாங்க ஆப்ரேஷனுக்கு தயார் ஆவோம். இல்லாட்டி எல்லா நாள் போல அமைதியா இந்த நாளும் முடிஞ்சிடும்னு சொல்லுறார்..இதைக் கேட்டதுமே ஒத்துக்கொள்கிறார்.

--

ஹாஸ்பிடல்ல இருந்து சரியா இதயம் எடுத்துக் கொண்டு இரண்டரை மணிக்குப் புறப்படணும். சரியா 4 மணிக்கு வேலூர் ரீச் ஆகணும் என்பது ப்ளான். சேரன் துணிச்சலாக முன்வருகிறார். பயணம் ஆரம்பித்த முதல் 12 நிமிடத்தில் திட்டமிட்டது போல 25 கிலோ மீட்டர் கடந்து விடுகிறார். நல்லாத்தான் போய்க்கிட்டு இருக்கும்போது... சென்னைக்கும், காஞ்சிபுரத்துக்கும் நடுவுல பதற்றமான சூழலில் கார் காணாமல் போய் விடுகிறது. உடனே படம் பார்க்கும் அனைவருக்கும் ஒரு பதற்றம் ஏற்படுகிறது!

இறுதியில் சொன்ன நேரத்தில், காரில் வேலூர் போக முடிந்ததா? தானமாக பெற்ற இதயம் அந்த பெண்ணுக்கு பொருத்தப்பட்டதா? அவர் உயிர் பிழைத்தாரா? என்பதுதான் மீதிக் கதை

---

பின்னால் வரும் இசையும் சரி, வசனங்கள் அனைத்தும் நச்!

---

சம்மதம் சொன்னா சாதனைகள் செய்யலாம்

நாம இறந்த பின்னாடியும் இந்த உலகத்துல வாழலாம். (உடல் உறுப்பு தானம்)

எப்படியோ நாம வாழ்ந்து முடிஞ்ச பின்னாடி இந்த மண்ணுக்கும் நெருப்புக்கும் கொடுக்குற உறுப்புக்களை மனிதர்களுக்குக் கொடுத்தா அவர்கள் வாழும் நாள் வரை அவர்கள் மனதிலும், உடலிலும் நாம வாழலாம்

ஆன்மாக்கள் ஆண்டவர் இடம் போகட்டும்; உறுப்புகள் உலகத்திலே வாழட்டும்!

கரம் கொடுப்போம் அறம் செய்ய!

ப்படி ஒரு உடல் உறுப்பு தானம் பற்றி விழிப்புணர்வு கொடுக்கும் ஒரு படம்.. விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்ட கதை.. ஆனாலும் படத்துல லாஜிக் ஓட்டைகள் நிறையவே இருக்கு. பரவாயில்லே... நிச்சயமா ஒரு முறை பார்க்கலாம்...!

நன்றி..!

தொடர்புடைய பதிவுகள் :


3 comments:

  1. நல்லதொரு விமர்சனம்... நன்றி...

    ReplyDelete
  2. ஒரு வாரமாக முயற்சிக்கிறேன்.படம் பார்க்க முடியவில்லை .எளிமையான விமர்சனம்.அழகான விமர்சனம்.

    ReplyDelete
  3. vow! இத நான் இன்னைக்குத்தானே பார்த்தேன்! எப்படி இந்த போஸ்ட மிஸ் பண்ணினேனு தெரியல! ஆனா, ரொம்ப effective விமர்சனம்! எழுத்து நடை சூப்பரோ சூப்பர்!

    ReplyDelete