Wednesday, April 24, 2013

எனக்கு பிடித்த நடிகரும், அவரைப் பற்றிய சில தகவல்களும்!

by Mahesh
 வணக்கம் மக்கள்ஸ்!

 எனக்கு பிடித்த முதல் நடிகர்னு பாத்தா, அது அன்றும் இன்றும் என்றும் தலை ரஜினிகாந்த் அவர்கள்தான்!சின்ன வயசுலயே எனக்கு அவரை ரொம்பப் பிடிக்கும்!  அவர் நடிச்ச பாட்ஷா, அருணாச்சலம், முத்து,  படையப்பா, சிவாஜி, சந்திரமுகி, எந்திரன் படங்கள் எல்லாம் தமிழ், தெலுங்கு 2 மொழிகளிலும் சளைக்காம பார்த்து இருக்கேன்! இப்பவும் போரடிச்சா தலைவர் படத்த போட்டுப் பாத்துடுவேன்!

தலைவர எனக்கு மட்டும் இல்லாம எங்க  வீட்ல எங்க  தம்பிங்களுக்கும் பிடிக்கும்!  தமிழ் அவர்களுக்குப் புரியாட்டியும் தலைவர் படம் போட்டா பார்ப்பாங்க! அவ்வளவு பற்று அவர்களுக்கு தலைவர் மீது!

அவர எனக்கு சின்ன வயசுல பிடிக்க காரணம் அவரோட ஸ்டைலாகவோ இல்ல டயலாக் பேசும் விதமாகவோ அல்லது எதாக வேண்டுமானாலும் இருக்கலாம்!  ஆனால் பிறகு ஒரு நல்ல மணிதராக பிடிக்க ஆறம்பித்தது!

அவருக்கு அடுத்த இடத்தில் தெலுங்கு, தமிழ் என 2 மொழிகளிலுமே பாகுபாடு இல்லாமல் எனக்கு நிறைய நடிகர்கள்  பிடிக்கும்!

ஆனாலும், அதுல குறிப்பிட்ட ஒருத்தரை மட்டும் வெச்சு இந்த பதிவை நான் எழுத காரணம், 2 நாள் முன்னாடி டீ.வி  பார்த்துட்டு இருக்கும் போது இவரைப் பத்தின சில தகவல்கள் தெரிஞ்சுக்க முடிஞ்சது! அப்போதான் உறைச்சது, நாம இன்னும் சினிமா ஜி.கேவுல அடி மட்டத்துல இருக்கோம்னு!  உடனே கூகுள்ல சர்ச் செய்து அவரைப் பற்றிய முழு விவரமும் தெரிந்து கொண்டேன்! அவற்றை இங்கே பகிர்ந்து இருக்கேன்! வாங்க பதிவுக்குள்ள போகலாம்!

--

நான் சொல்லப் போகும் நடிகர் சூரிய நாராயண்! வெயிட் வெயிட்! யாரும் பேர வச்சு இவர அந்த காலத்து நடிகர்னு முடிவு கட்டிடாதீங்க. சூரிய நாராயண் என்று அழைக்கப்படுவது இயக்குனர் ஷங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’ படத்தின் மூலமா தமிழ்த் திரை உலகத்திற்கு அறிமுகமான சித்தார்த் அவர்கள்தான்!

இவர், ஏப்ரல் 17 1979 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் பிறந்தார்! பிறப்பால் இவர் ஒரு தமிழன் என்பதே நான் இப்பதிவை எழுதத் தூண்டிய காரணம்! சித்தார்த் என்று அழைக்கப்பட்ட இவர், சிறந்த நடிகர் மட்டுமல்ல, சிறந்த பின்ணணிப் பாடகரும் திரைக்கதை எழுத்தாளரும் கூட!  சென்னை DAV ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் டெல்லி  சர்தார் படேல் வித்யாலயாவிலும்   பள்ளிப் படிப்பை முடித்தார்! B.com (Honors) டெல்லியிலுள்ள கிரோரி மால் கல்லூரியில் படித்தார்! கல்லூரியில் இயங்கிக் கொண்டிருந்த நாடகக் குழுவில் இவரும் இடம் பெற்றிருந்தார்! கல்லூரி பட்டிமன்றக் குழுவின் பிரசிடண்டாகவும் திகழ்ந்து, உலக அளவிலான பட்டிமன்றங்களில் பங்கேற்றார்! மும்பையில் உள்ள S. P. Jain Institute of Management and Research-ல் வர்த்தக மேலாண்மையில் முதுகலையும் [MBA]  முடித்தார்! இவருடைய அபார பேச்சுத் திறமையால் CNBC Manager of the year award, 1999ல் வென்றார்!

படித்து முடித்த பின்னர் திரைப்படம்  இயக்குவதே தனது லட்சியம் என்று முடிவு செய்து இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ திரைப்படத்தில் உதவி இயக்குனராகப் பணி புரிந்தார்! பின்னர் திரைக்கதை எழுத்தாளர் சுஜாதா அவர்கள் சித்தார்த்தை இயக்குனர் ஷங்கரிடம் ஆடிஷன்ஸ் போகும்படி வலியுறுத்தினார்! மணிரத்னத்திடம் கலந்து பேசிய பின்னர் ஆடிஷன்ஸிலும்
கலந்து கொண்டார்! பிறகே தமிழில் ‘பாய்ஸ்’ படத்தில் முன்னாவாக அறிமுகமானார்! தன் முதல் படமான ‘பாய்ஸ்’ படத்தில் கதாநாயகனாக நடித்ததோடு மட்டுமல்லாமல் உதவி இயக்குனராகவும் பணியாற்றினார்!  தமிழில் இத்திரைப்படம் ஓரளவு வெற்றி பெற்றது எனவே சொல்லலாம்!  இதே திரைப்படத்தின் ரீமேக்  மூலம் தெலுங்கு திரையுலகிலும் நுழைந்தார்!

தமிழில் மீண்டும் 2004-ல் மணிரத்னத்தின் ‘ஆய்த எழுத்து’ படத்திலும் நடித்தார்! அதன்பின் முழு மூச்சாய் தெலுங்கு திரைப்படங்களிலேயே அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்தன! இவரது நேரடி முதல் தெலுங்கு படம் (நுவ்வஸ்தானன்டே நேனொத்தன்டானா) 2005 ஆம் ஆண்டு ரிலீஸானது! இப்படத்தில் சந்தோஷாக நடித்த சித்தார்த்துக்கு சிறந்த தெலுங்கு நடிகருக்கான  ஃபிலிம்ஃபேர் அவார்டும் கிடைத்தது! இத்திரைப்படமே தமிழில் something something-ஆக ரீமேக்கானது! படமும் மிகப் பெரிய வெற்றி பெற்றது! Chukkallo Chandrudu என்ற தெலுங்கு படத்திற்கு  திரைக்கதையும் எழுதினார்! இவருக்கு Karan Singhania என்ற வேடத்தில் Rang De Basanti   என்ற ஹிந்தி  படத்தில் நடித்ததற்காக  Star Screen Debut Award கிடைத்தது!

2006ல் வெளியான ‘பொம்மரில்லு’ என்ற  தெலுங்குப் படம், தந்தை-மகனின் உறவின் ஆழத்தை எடுத்துரைத்து மிகப் பெரிய வெற்றி பெற்றது!  இதுவே தமிழில் ‘சந்தோஷ் சுப்ரமணிய’மாக வெளியானது!!  2007ல் இவர் நடித்த ‘ப்ளட் ப்ரதர்ஸ்’ என்ற குறும்படம் டொராண்டோவில் நடைபெற்ற சர்வதேச திரைப்படத் திருவிழாவில் எய்ட்ஸ் விழிப்புணர்வுப் படமாகத் திரையிடப்பட்டது! ‘பொம்மரில்லு’ திரைப்படத்திற்கு பின்னர் 20 மாத ஓய்வுக்கு அடுத்து 2009ல் தெலுங்கு படமான ‘கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்ட்டம்’ படம் வெளிவந்தது! ‘ஒய்’ என்ற தெலுங்குப் படத்தில் சித்தார்த்தின் கதாபாத்திரம் பல விமர்சனங்களுடன் நல்ல வெற்றியும் பெற்றது.

2010ல் இவர் நடித்து வெளிவந்த முதல் படம் striker என்ற ஹிந்தி படம்! இது இவருடைய இரண்டாவது ஹிந்தி திரைப்படம்! ஒரு கேரம் விளையாட்டு வீரரின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் திரைப்படம்! மேலும் இதுவே திரையரங்குகளிலும் யூடியூப் தளத்திலும் ஓரே நாளில் வெளியிடப்பட்ட முதல் இந்திய திரைப்படம் என்ற சிறப்பும் இத்திரைப்படத்திற்கு உண்டு!! அதே வருடம் பாவா என்ற தெலுங்கு திரைப்படமும் இவர் நடிப்பில் வெளிவந்தது! இது ஒரு கிராமிய காதலை சித்தரிக்கும் திரைப்படம்! ராஜ்முந்திரி, ஹைதராபாத், பாலக்கொல்லூ ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது!

Anaganaga O Dheerudu என்ற தெலுங்கு படமே 2011ல் இவரது முதல் ரிலீஸ்! 180 என்ற தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான படம் ஃப்ளாப்பானது! அதே ஆண்டில் 3வதாக வேணு ஸ்ரீராம் அவரது இயக்கத்தில் வெளியான தெலுங்கு படமான ‘ஓ மை ஃப்ரெண்ட்’ பல விமர்சனங்களையும் தாண்டி நல்ல வெற்றியும் பெற்றது எனலாம்! 2012ல் தமிழ்ப் படமான ‘காதலில் சொதப்புவது எப்படி’ தமிழிலும் தெலுங்கிலும் வெளியானது!

எடக்கி எண்டர்டெய்ன்மெண்ட் என்ற தனது திரைப்படம் தயாரிக்கும் நிறுவனத்தை 2012ல் துவங்கினார் சித்தார்த்! தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தானே கதாநாயகனாக நடித்து ப்ரொட்யூஸ் செய்த முதல் திரைப்படம் முறையே ‘காதலில் சொதப்புவது எப்படி’ ‘லவ் ஃபெய்லியர்’ என்ற பெயர்களில் வெளியானது!  இது தவிர சந்தோஷ் சுப்ரமணியம், காதலில் சொதப்புவது எப்படி என்ற தமிழ் படங்களிலும், Oh My Friend, Baava, Oy, Aata, Bommarillu, Chukkallo Chandrudu என்ற தெலுங்கு படங்களிலும் striker என்ற ஹிந்தி படத்திலும் பின்னணிப் பாடல்களும் பாடியுள்ளார்!

இவர் ஒரு தமிழர்தான்! பெரும்பாலும் இந்த விஷயம் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை! நானும் இவரைத் தெலுங்குப் படங்களிலேயே அதிகம் பார்த்திருந்ததால், இவர் ஆந்திரா  அல்லது மஹாராஷ்டிராவை சேர்ந்தவர் என்றே நினைத்திருந்தேன்!  அதே நேரத்தில் இவர் தெலுங்கில்தான் அதிக படங்கள் நடித்துள்ளார்! தமிழில் கடந்த வெள்ளி அன்று வெளியான nh4 உதயம் எப்படியோ நல்லா ஓடி தாய்மொழியிலயே இவருக்கு நல்ல பேரு கெடச்சா நமக்கும் சந்தோசம்தானே!

கே மக்கள்ஸ் ஏதோ எனக்கு தெரிஞ்சத இவரப்பத்தி சொல்லி இருக்கேன்! உங்களுக்கு ஏதாவது மேற்படி விஷயங்கள் தெரிஞ்சா நீங்களும் பகிர்ந்துக்கங்க!

தொடர்புடைய பதிவுகள் :


9 comments:

 1. சித்தார்த் என்ற சூரிய நாராயண் பற்றி இன்று தான் இவ்வளவு தெரியும்...

  ReplyDelete
 2. நிறைய விசயம்...சித்தார்த் பற்றி....

  ReplyDelete
 3. தங்களின் இந்த பதிப்பு மிகவும் அருமை. இந்த பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர எங்களின் http://www.tamilkalanchiyam.com வலைபதிவில் பகிரும் மாறு வேண்டுகிறோம்.
  இப்படிக்கு
  தமிழ் களஞ்சியம்

  ReplyDelete
 4. @திண்டுக்கல் தனபாலன்
  @கோவை நேரம்

  தங்களின் வருகைக்கும் கருத்திர்க்கும் மிக்க நன்றி!

  ReplyDelete
 5. எல்லாமே புதிய தகவல்கள்..சித்தார்த் ஒரு பாடகர் என்பதும் தமிழர் என்பதும் அறியாத தகவல்..நன்றி நண்பா...

  ReplyDelete
 6. சித்தார்த் என்ற நடிகர் மணிரத்னத்திடம் அசிஸ்டண்டாய் இருந்தவர் என்பதை நான் அறிவேன். ஆனால் அவர் தமிழர் என்பதும், நன்றாகப் பாடக் கூடிய திறமை படைத்தவர் என்பதும் புதிய தகவல்கள் எனக்கு! சுவாரஸ்யமான படைப்பு!

  ReplyDelete
 7. நல்ல முயற்சி, தொடருங்கள், தொடர்கிறேன்.

  ReplyDelete
 8. @kaliaperumalpuducherry,
  @பால கணேஷ்
  @கும்மாச்சி

  தங்களின் வருகைக்கும் கருத்திர்க்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 9. மிக்க நல்ல பதிவு.. இதை போல் உங்களுக்கு தெரிந்த பல விசயங்களையும், அது நடிகரைப்பற்றியோ, சினிமாவோ, அரசியலோ பொது விசயமோ நிறைய பதியுங்கள்.. வாழ்த்துக்கள் :-)

  ReplyDelete