Friday, April 26, 2013

ஒரு பெண் வயதிற்கு வந்துவிட்டால்...

by Mahesh
ணக்கம் பதிவுலக நண்பர்களே! வாசக மக்களே! அனைவருக்கும் இனிதான வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்!


இரண்டு நாள்  முன்னாடி  அம்மாவோட  ஃப்ரெண்ட் கீதா ஆண்ட்டி  வீட்டுக்கு வந்திருந்தனர்! அந்த நேரத்துல அம்மா காய்கறி வாங்கக் கடைக்குச் சென்று இருந்ததால நான் அவர்களை சோஃபாவில் உட்க்காருமாறும் அம்மா வரும்வரை வெயிட் பண்ணுமாறும் சொல்லி இருந்தேன்! ஆண்ட்டி வெயிலில் வந்து இருப்பதால் ஃப்ரிட்ஜில் இருந்து தண்ணீர் எடுத்துவந்து குடிக்கக் கொடுத்தேன்! அம்மா வருவதற்க்குக்  கொஞ்சம் லேட் ஆகும் என்பதால ஆண்ட்டிக்கு போர் அடிக்குமேன்னு பேச ஆரம்பித்தேன்!

கீதா ஆண்ட்டிக்கு ஒரு பொண்ணு ஒரு பையன்! பொண்ணு ஆறாம் க்ளாஸ் முடிஞ்சு ஏழாம் க்ளாஸ் போறா. பையன் மூணாம் க்ளாஸ் முடிஞ்சு  நாலாம் க்ளாஸ் போறான்! எனக்கு இருவரும் தெரியும் என்பதால் ‘‘ஆண்ட்டி லக்ஷ்மியும் கணேஷும் எப்படி படிக்குறாங்க’’ன்னு”   கேட்டேன்! அவர்கள் நன்றாய் படிக்குறதாகவும் ஒரு விஷயம் அம்மாகிட்ட சொல்ல வந்ததாகவும் சொன்னாங்க! உடனே எனக்கே உரித்தான ஆர்வக்கோளாறுல ‘‘என்ன விஷயம் ஆண்ட்டி! சொல்லுங்க’’ன்னு கேட்டேன்! ”இல்லப்பா... அம்மா வரட்டும், சொல்லுறேன்’’ன்னு    சொன்னாங்க!

ஒரு பத்து நிமிடம் நானும் கீதா ஆண்ட்டியும் பேசியிருப்போம். அம்மா வரும் சத்தம் கேட்டது! உடனே நான் அம்மா வந்ததும் இனி நமக்கு இங்க வேலை இல்லைன்னு அங்கருந்து கிளம்பி கம்ப்யூட்டர்ல வந்து உட்கார்ந்திட்டேன்! இனி இரண்டு தோழிகளும் பேசிக்குறது காதுல விழுந்ததை வெச்சு சுருக்கமா சொல்லுறேன்!

லக்ஷ்மி வயசுக்கு வந்ததாகவும், கீதா ஆண்ட்டி குடும்பத்தார் ஏழாவது நாள் ஒரு ஃபங்ஷன்போல ஊரை எல்லாம் கூப்பிட்டுக் கொண்டாடுவதாகவும் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சொல்லிட்டுப் போலாமுன்னு வந்தாங்களாம்! தொடர்ந்து கீதா ஆண்ட்டி அந்தப்  பொண்ணு எங்கயும் உட்காராம சுத்திக்கிட்டே இருக்கா, அழுதுக்கிட்டே இருக்காள்ன்னு பேசிக்கிட்டு  இருந்தனர்! அதற்கு மேல என்னால  அவர்கள் பேசுறதைக்  கேட்க விருப்பமில்லாததுனால காதுல ஹெட்போன் போட்டுக்கிட்டேன்!

***

ரு பெண் வயதிற்கு வந்துவிட்டால்,  அவளுக்கு மஞ்சள் நீராட்டி, புது உடைகள் அணியக் கொடுத்து, பிட்டு சுற்றி, ஒரு வைபவமாய் அதை கொண்டாடுவதுதான் பாரம்பரியமாய் நம்மூர் கலாச்சாரமாக இருந்து வந்தது! கம்ப்யூட்டர் யுகம்னு சொல்லுற  இந்தக் காலத்தில் வாழ்க்கைச் சக்கரத்தில் பெண்ணுக்கு ஏற்படும் சாதாரண விஷயத்தை எல்லாம் பெருசுபடுத்தி இதுபோன்ற ஒரு விழா மண்டபத்தில் வைத்துக் கொண்டாடுவது எல்லாம் தேவைதானா  என்கிற ஒரு கேள்வி மனதில் எழுகிறது!

இதுபோன்ற விழாக்கள் கொண்டாடப்படுவதால் ஏதாவது பலன் இருக்குதா என்று பார்த்தால் ஒரு பிரயோஜனமும் இருக்காது! அந்தக் காலத்தில் ஏதோ தன்னோட பொண்ணு  வயசுக்கு வந்திட்டா அவள் திருமணத்துக்குத் தயார் அல்லது தாயாகும் தகுதி அவளுடைய உடலுக்கு உண்டு என்று  சொல்வதே இந்த  விழாவின்  நோக்கமாக இருந்தது! ஆனால் இன்றோ பெரிய விழா எடுத்து பல  ஆயிரம் ரூபாய் செலவு செய்து பண்ணுவது எல்லாம் கேவலமாக இருக்கு! எல்லாப் பெண்களும் தான் வயசுக்கு வர்றாங்க அதை எல்லாம் விழா வெச்சு கொண்டாடணும்னா  அப்போ ஆண்கள‌ை யாருப்பா கண்டுக்குறது! இதைத் தட்டிக் கேட்க யாரும் பதிவுலகில் இல்லையா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

இப்படி ஒரு பெண் வயதிற்கு வரும் இந்த சம்பவத்தை நம்மூரில்  பூப்பெய்தல், ருதுவாகுதல், வயதிற்கு வருதல் என்றெல்லாம் பல பெயர்களால் அழைக்கிறோம். மருத்துவத்திலும் இதற்கு ஒரு தனிப்பெயர் உண்டு. மெனார்கீ, (Menarche) பெண்ணின் மகப்பேற்று உறுப்புக்கள் முதன்முதலாய் இயங்க ஆரம்பித்து விட்டன என்பதன் அறிகுறியாய், அப்பெண்ணின் ஜனனக் குழாயிலிருந்து உதிரப்போக்கு ஏற்பட ஆரம்பிப்பதை தான் மெனார்கீ என்கின்றனர்!

10 வயதில் ஒரு  பெண் வயதுக்கு வந்துவிட்டால் மாதம்தோறும் அப்பெண்ணின் ஜனனக் குழாயிலிருந்து உதிரப்போக்கு வருவது ஆரம்பிக்கப்பட்டால் அது  பெண்ணின் பாலினப் பண்பிற்குக் காரணமான எஸ்ட்ரோஜன் எனும் நொதி சுரப்பது நிற்கும் வரை தொடர்கிறது இது பெரும்பாலும் 40 வயதுக்கு மேலே நிகழும். ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் நாட்களில் மாதவிலக்கு உதிரம் எனப்படும் கெட்ட உதிரம் வெளிப்படுவது என்பது உடலில் மாதந்தோறும் சுழற்சி முறையில் நிகழும் ஒரு உடலியங்கியல் செயல்தான் அது!

அந்த  சமயத்தில் உடல்ரீதியாவும்  மனரீதியாகவும் பல மாற்றங்க்ளை ஒரு பெண் சந்திக்க நேரிடும்! வயிற்றுப்பகுதியின் கீழ்ப்பகுதியில் தசைப்பிடிப்பு எற்படலாம், இதைத் தவிர மார்பக வலி, மார்பக வீக்கம், தலைவலி, தோள்மூட்டு வலி, மனச்சோர்வு, எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த சமயத்தில்தான் அவர்களைத்  தீண்டத்தகாதவள் என்றும், மாதவிலக்கு உதிரம் தூய்மையற்றது அதனால் விலக்கப்பட வேண்டியவள் என்றும், அதனால்  வீட்டுக்கு தூரமாதான் இருக்கணும், பூஜை அறைக்குப் போகக்கூடாது, சாமியை  கும்பிடக் கூடாது, அவர்கள் தொட்டதை மற்றவர்  யாரும்  தொடக்கூடாது அப்படின்னு ஆயிரத்தெட்டு கட்டுப்பாடுகள்! சாமிதானே எல்லாம்  படைச்சான் அப்படின்னு பேசுறவுங்கதான் எல்லாம் இப்படி மெண்டலி அவர்களை டார்ச்சர்படுத்துறது!

சாமி அறைக்குதான் போகக்கூடாதுன்னு சொல்லுறீங்களே... அப்போ அந்தப் பெண் மனசுக்குள்ள சாமியக் கும்பிட்டா சாமி என்ன சாபமா  விடும்?  உண்மையில் அந்தச் சமயத்தில் அந்தப்  பெண்ணைப் புரிந்து கொண்டு நடப்பதே ஒரு உண்மையான மனிதாபிமானச் செயலாகக்  கருதுகிறேன்! மாதவிலக்கு உதிரம் தூய்மையற்றது என்பதில் மாற்றுக்கருத்து எனக்கும் இல்லை. இந்த இடத்தில் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம்...

நம்  உடலில் இருந்து வெளியாகும் அனைத்து கழிவுகளுமே தூய்மையற்றது தான்! அது சிறுநீர், மலம், வியர்வை,சீழ், மூக்குச்சளி அந்த  வரிசையில் பருவமடைந்த பெண்ணின் மாதவிலக்கு இரத்தமும் கழிவுப்பொருள் தான், அதனைத் தடுத்து வைக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ கூடாது. அது மூன்று-ஐந்து நாள் வரை மாதம்தோறும் கசியும் என்ற ஒரு விஷயத்தை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்! ஒரு பெண்ணாகப் பிறந்துவிட்டால் இதுபோன்ற விஷயஙக்ளை எல்லாம் மாதம்தோறும் சகித்துக்கொண்டு போகணும்னுட்டு நினைக்கும்போது மனசுக்கு வருத்தமா இருக்கு!

---

பொண்ணப்  பெத்தவுங்களே..! உங்க எல்லாருக்கும் நா ஒண்ணு மட்டும் சொல்லிக்குறேன். விழா எடுத்து அன்று ஒருநாள் மட்டும் ஊருக்கு தன் பொண்ணு வயசுக்கு வந்துட்டாள்ன்னு சொல்லுறத விட்டுட்டு உங்க மகளுக்கு நீங்க அனுபவிச்ச கஷ்டம் எல்லாம் இல்லாம இந்த  விஷயங்க்ளைப்  பற்றிப் பக்குவமா எடுத்துரைக்கவும்! அந்த இளமை வயதில் நீங்க உங்கள் மகளிடம் ஒரு தோழியாக நடக்க முயற்சி எடுங்கள். அப்போதான் அவளது பிரச்சனை உங்களுக்குப் புரியும்! மத்தபடி இந்த விஷயம் பத்தி எல்லாம் பேச எனக்கு அவ்வளவு  ஜீ.கே எல்லாம் இல்லைங்க. ஏதோ மனசுல பட்டதைச் சொன்னேன். தவறு இருந்தால் சொல்லுங்க...

நன்றி..!

தொடர்புடைய பதிவுகள் :


9 comments:

 1. /// அப்போ அந்தப் பெண் மனசுக்குள்ள சாமியக் கும்பிட்டா சாமி என்ன சாபமா விடும்? ///

  நல்ல கருத்துக்கள் மகேஷ்... வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 2. ஒரு பெண் பூப்படைந்தவுடன் செய்யும் சடங்குகள் உண்மையில் அறிவியல் பூர்வமானவை..உளுந்துவடை உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும்,.பிட்டு இடுப்பு வலியை நீக்கி உடலுக்கு தெம்பைக் கொடுக்கும்..ஆனால் அதைத் தொடாதே இதைத் தொடாதே என்பதெல்லாம் டூமச் தான்.. என் மனைவியை நான் இது போன்ற கொடுமையெல்லாம் செய்ததில்லை..ஆனால் இன்று பலர் மஞ்சள் நீராட்டு விழாவிற்குக் கூட மத்திய மந்திரிகளை அழைப்பதுதான் கொடுமையிலும் கொடுமை..நான் உன்னை வழிமொழிகிறேன் நண்பா...

  ReplyDelete
  Replies

  1. ஒரு பெண் பூப்படைந்தவுடன் செய்யும் சடங்குகள் உண்மையில் அறிவியல் பூர்வமானவை..உளுந்துவடை உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும்,.பிட்டு இடுப்பு வலியை நீக்கி
   உடலுக்கு தெம்பைக் கொடுக்கும்..////

   தெரியாத தகவல் சார் நன்றி.

   ஆனால் இன்று
   பலர் மஞ்சள் நீராட்டு விழாவிற்குக் கூட மத்திய மந்திரிகளை அழைப்பதுதான் கொடுமையிலும் கொடுமை..நான் உன்னை வழிமொழிகிறேன் நண்பா... ///

   கருத்துக்கு மிக்க நன்றி சார்!

   Delete
 3. இந்த பதிவுடன் 100% நான் ஒத்துப்போகிறேன்! சிறப்போ சிறப்பு! வாழ்க மஹேஷ், வளர்க உன் புரட்சி!

  ReplyDelete
  Replies
  1. இந்த பதிவுடன் 100% நான் ஒத்துப்போகிறேன்!///

   அப்போ இதுக்கு முண்னாடி எழுதியதுக்கு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


   சிறப்போ சிறப்பு! வாழ்க மஹேஷ், வளர்க உன் புரட்சி! ///

   கருத்துக்கு நன்றி அக்கா!

   Delete
 4. ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது அவளுக்கு மாதவிலக்கு வருவதில்லை. அந்த அழுக்குகள் எல்லாம் மொத்தமாக சேர்ந்து தான் ஒரு உயிரை உருவாக்குகின்றன..உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நாம் எல்லோருமே அந்த அசிங்கத்தில் இருந்து பிறந்தவர்கள்.. அப்படிப்பார்க்கும் போது நாம் யாருமே கோயிலுக்குள் செல்லக்கூடாது.. இன்னும் பூப்புனித நீராட்டு, சடங்கு என்று கொண்டாடுவதை சட்டம் போட்டாவது நிறுத்த வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. மிகவும் ஆச்சர்ய்அமாக இருக்கு!
   தெரியாத தகவல் அண்ணா

   நன்றி...

   Delete
  2. //இந்த சமயத்தில்தான் அவர்களைத் தீண்டத்தகாதவள் என்றும், மாதவிலக்கு உதிரம் தூய்மையற்றது அதனால் விலக்கப்பட வேண்டியவள் என்றும், ........ எல்லாம் இப்படி மெண்டலி அவர்களை டார்ச்சர்படுத்துறது!//

   சிந்தனையை தூண்டியது இந்த பதிவு !!,
   இந்த பதிவை வாசிக்கும் போது ரொம்ப நாளுக்கு முன்னாடி நான் படிச்ச கவிதை ஒன்னு நினைவுக்கு வருது "என்ன செய்வாள்,விலக்கான அந்த நாட்களில் கோவிலுக்குள் அம்மன் " :(, இந்த காலத்துக்கு இந்த விழா தேவையில்லைனு தான் எனக்கும் தோணுது,இந்த மாதிரி வெட்டியா விழா எடுக்காம பொண்ணுங்களுக்கு சில பல நல்ல விசயங்களையும்,மனப்பக்குவம் பெற யோசனைகளையும் கற்றுக்கொடுக்கலாம் !!,ஒரு வேலை இந்த விழாக்கள் வயது வந்த பெண்களுக்கு அனுபவ பெண்கள் வழிமுறை சொல்லிக்கொடுக்கவும்,க்ரூப் டிஸ்கசன் செய்யவும் ஏற்பாடு செஞ்சிருப்பாங்களோ !,என் வீட்டில் வயது வந்த பெண் வந்துவிட்டாள் மாப்பிள்ளை சந்தையில் அவளை வீடு கடத்த யாராவது வாங்க என்று சொல்லும் விளம்பர நிகழ்வா!! ரொம்ப யோசிக்க வச்சுடீங்க! நானும் இந்த டாப்பிக்கில் ஒரு போஸ்ட் போடலாம்னு இருக்கேன் சீக்க்ரமே :)

   Delete