Monday, April 29, 2013

ஆத்திரத்த அடக்கிடலாம்... ஆனா..

by Mahesh


ஃபெப்ரவரி மாசம் இண்டென்ஷிப் ப்ரோகிரம்க்காக க்ளாஸ்ல இருக்குற எல்லாத்தையும் ஒரு பத்து ஸ்கூல்ஸ்ல குரூப்பு குரூப்பாப் பிரிச்சுப் போட்டாங்க... அதுல எங்க குரூப்புல மொத்தம் எட்டு பேர்  என்னையும் சேர்த்து..  நானும் இன்னொரு பையன் மட்டுமே.. மத்த  எல்லாரும் பொண்ணுங்கதான்...

ஃபெப்ரவரி நாலாம் தேதி அந்த ஸ்கூலுக்குப் போனோம்... ரிப்போர்ட் கொடுக்க.. இந்த மாதிரி இந்த காலேஜ்ல  படிக்குற P.E.T. பசங்க   ஒரு மாசத்துக்கு இந்த ஸ்கூல்ல  இண்டென்ஷிப் ப்ரோகிரம்க்காக வருவாங்கன்னு ஒரு லெட்டர் ப்ரின்ஸ்பால் இடம் கொடுத்திட்டு அன்னைக்கு நாங்க எல்லாரும் வீட்டுக்குப் போயிட்டோம்...

டுத்த நாள் காலை..

 நா  வகுப்புக்கு  போய் க்ளாஸ்  எடுக்க  ஆரம்பிக்கணும்.. அதுனல கைட் டீச்சரப் போய்ப் பார்த்தேன்.. எந்தக் க்ளாசுக்கு நான் பாடம் நடத்தணும்னு எல்லாம் கேக்கப்  போயிருந்தேன். கைட் டீச்சர் இடம் இருந்து இந்த பாடத்துல இருந்து இது வரை நடத்தி முடிக்கணும்னுட்டு சிலபஸ் வாங்குறதுக்குள்ளவே அரை நாள் ஓடிடுச்சு..

லஞ்ச் பெல் அடிச்சது. வீட்டுல இருந்து எல்லாரும் லஞ்ச் பாக்ஸ் கொண்டு வந்து இருந்தோம்.  ஸ்கூல் பெல் அடிச்சதும் பசி வயித்துல எங்களுக்கும் மணி அடிச்சது.. உடனே டப்பாவத் திறந்து சாப்பிட ஆரம்பிச்சோம்.. நான் சொன்னேன்ல...  எங்க பேட்ச்ல 2 பசங்கன்னு! நான்,  இன்னொன்னு இன்னொரு பையன் அந்தப் பையனோட வீடு பக்கத்துல இருப்பதால அவன் மட்டும் லஞ்ச் கொண்டு வரல.. வீட்டுக்குப் போய் சாப்டுட்டு வந்தான்.. எல்லாரும் சாப்ட்டு முடிஞ்சு பேசிட்டு இருந்தோம்..

திடீர்ன்னு  ஒரு  அக்கா.. கூட இருக்கும் இன்னொரு பையனக் கூப்ட்டு என்னைய டாய்லெட்டுக்கு கூட்டிகிட்டு போயிட்டு வா அப்படின்னு சொன்னாங்க. எதற்கு அப்படி அப்போ சொன்னாங்கன்னு எனக்கு இன்னும் புரியல.. உடனே நானும் வாடா அப்படின்னு சொல்லி அவ்னை வெளியே அழைச்சிக்கிட்டு வந்தேன். அந்த ஸ்கூல் எங்களுக்கு புதுசு என்பதால டாய்லெட்ஸ் எங்க இருக்குன்னு தெர்யல.. 5 நிமிஷம்  சுத்திப் பார்த்தோம் கண்ணுக்கு எட்டிய தூரத்துல எங்கயும் தெரியல. ‘‘சரி இருடா! பையனக் கூப்ட்டுக் கேக்கலாம்’’னுட்டு சொல்லி ஒரு  பையனக் கூப்பிட வாயத் திறந்தேன்.. ‘‘டேய்,  சும்மா  இருடா!  மொதல்ல இங்க  இப்படி நாம சுத்துறதே ஒரு மாதிரியா இருக்கு எல்லாரும் நம்மள மட்டும் வித்யாசமா பார்க்குறாங்க. இதுல பசங்கள வேற கேட்டா? மொதல்ல நாம க்ளாசுக்குப் போவோம்’’ன்னு  சொன்னான்.

எனக்கு புரிஞ்சிடுச்சு... பையன் ரொம்ப பிரஸ்டிஜ் பார்க்குறான்! அந்த நிமிஷம் என்ன பண்ணுறதுன்னு தெரியல.. ஒரு நிமிஷம் யோசிச்சேன்.. ஒரு பையன்கிட்ட டாய்லெட்ஸ் எங்க இருக்குன்னு கேட்டா என்ன தப்பு?  ஒரு சின்ன உதவி பண்ண மனசு இல்லாத நாதாரி எல்லாம் எப்படித் தான் பசங்களுக்கு நல்ல விஷயத்தைச் சொல்லித் தருவான்னு சேர்த்து  வெச்சு எல்லாக் கோவமும் அவன் மேல.. ‘‘சரி வாடா... மீண்டும் நம்மளோட ரூமுக்கே போயிடுவோம்’’னுட்டு அதுக்கு மேல எதுவும் கேட்காம சொல்லி அவன ரூம்க்கு அழைச்சுட்டு  வந்திட்டேன்.

ஆனாலும்  இன்னொரு பக்கம் அந்த  பையன் செஞ்சத நினைச்சு செம கோவம்  எனக்கு.. கொஞம்கூட மனிதாபிமானமே இல்லாத நாயி.. கூட இருக்குறவுங்ககிட்டச்  சொல்லிடலாமான்னு ஒரு பக்கம்.. ஆனா அப்படிச் சொன்னாலும் என்ன நடக்கப் போகுது அனங்க யாராச்சும்  வந்து எனக்கு ஹெல்ப் பண்ணத்தான் முடியுமா  என்ன.. அதனால எல்லாத்தையும் பொறுத்டுதுக்கிட்டேன்..

தினமும் வீட்டுல கிளம்பும்போது ஒரு முறை போயிட்டு வந்திட்டா... அதோட ஈவினிங் வந்துதான் போகணும்.. இப்படி ஒரு நாள் இல்ல, 2 நாள் இல்ல 30 நாள்!  ஒரு நாள் அல்லது இரண்டு நாள் இதுபோல இருந்தாக்க பொறுத்துக்கலாம் ஆனால் தினமும் அடக்கிட்டு... முடியல.! ஆரம்பத்துல சில நாட்கள் கஷ்டமா இருந்திச்சு.. அடிக்கடி தண்ணீர் குடிக்கும் பழக்கமிருப்பதால கஷ்டமா இருந்திச்சு.. அப்புறம் அதையும்  விட்டுட்டேன்..

தினமும் லன்ச் வரை நல்லாத்தான் இருக்கும்.. சாப்ட்டு முடிஞதுமே அந்த நினைப்பு தோண ஆரம்பிக்கும் ஒருமுறை போயிட்டு வந்திட்டா  நிம்மதியா இருக்கலாம்னுட்டு ஒரு எண்ணம். ஆனா முடியாது. இது ஒரு பக்கம்.. மதியம்தான் நான் எடுக்க வெண்டிய வகுப்பு எல்லாம்..

எப்போதான் ஸ்கூல் பெல் அடிப்பாங்களோ வீட்டுக்குப் போனதும் மொதல்ல போகணும்னுட்டே இருக்கும். என்னால ஆரம்பத்துல இரண்டு நாட்கள் முழு அளவுல வகுப்புலகூட கவனம் செலுத்த முடியல.

என்னதான் ஆனாலும் சரி, என் சைட்ல இருந்து எந்த ஒரு சோர்வோ இல்ல... அவசரமோ எதுவுமே காட்டக் கூடாது. வகுப்புக்கள் நல்லா  எடுத்தேன்  எல்லாரிடமும் நல்லா சிரிச்சு பேசினேன்.. முடிந்தவரை  அந்த எண்ணம் வராமல் இருக்கவே முயற்சி எடுத்து வெற்றிகரமாக 30 நாள் முடிச்சிட்டேன்..

---

து  படிக்குறவங்களுக்கு சாதாரணமாக இருக்கலாம் ஆனா... என்னோட நிலையில இருந்து பார்த்தாதான் அதோட வலி தெரியும்.. ஃபைனலா சொல்லிக்குறதே ஒண்ணு தான்.. உங்களால முடிஞ்சவரை நீங்க மாற்றுத்திறனாளிகளை எங்க பார்த்தாலும் அவர்களுக்கு உங்களால் ஆன உதவிகளைச் செய்யுங்க...!
தொடர்புடைய பதிவுகள் :


12 comments:

 1. உண்மைதான் .நான் இதே கஷ்டத்தை பலமுறை அனுபவித்திருக்கிறேன்..எங்கள் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த காரைக்காலில் ஒன்றரை வருடம் பணிபுரிந்தேன்..பாண்டிச்சேரியிலிருந்து காரைக்கால் செல்ல நான்கு மணிநேரம் ஆகும்..வழியில் பேருந்து எங்கும் நிற்காது..யூரின் டேங்கே வெடிப்பது போல் இருக்கும்..

  ReplyDelete
  Replies
  1. உங்கள் அணுபவத்தையும் பகிர்ந்து கொண்டதர்க்கு நன்றி சார்

   Delete
 2. உஸ்ஸ் அப்பா நெனச்சாலே கண்ணக்கட்டுதே....

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கு மிக்க நன்றி சார்

   Delete
 3. மிக மிக கொடுமையான விசயம் மகேஷ்... எனக்கு இது போல் பள்ளிக்காலங்களில் நடந்திருக்கிறது.. ஆசிரியர்களிடம் கேட்டால் விட மாட்டார்கள்.. அப்படி விடாமல் இருந்தால் தான் அவர்கள் ஸ்ட்ரிக்ட் வாத்தியாராம்.. என்ன ஆனாலும் சிறு நீர் கழிப்பதை தள்ளிப்போடாதீர்கள்... வயிற்றில் நிறைய பிரச்சனைகள் வரும்.. இன்னும் கொடுமையான விசயம் பல பள்ளிகளில் முறையான கழிப்பறை வசதிகள் இருப்பதில்லை.. அப்படியே இருந்தாலும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் அளவிற்கு இருப்பதில்லை..
  //கூட இருக்கும் இன்னொரு பையனக் கூப்ட்டு என்னைய டாய்லெட்டுக்கு கூட்டிகிட்டு போயிட்டு வா அப்படின்னு சொன்னாங்க. எதற்கு அப்படி அப்போ சொன்னாங்கன்னு எனக்கு இன்னும் புரியல// புது இடம் உங்களுக்கு தெரியாது என்பதால் சொல்லியிருக்கலாம் மகேஷ்..

  ReplyDelete
  Replies
  1. நன்றி அண்ணா

   Delete
 4. இந்தியாவில் பயணம் செய்யும்போது இந்த ஒரு விஷயத்துக்குப் படாதபாடு படவேண்டி இருக்கு:(

  ஏன் ரெஸ்ட் ரூம்ஸ் முக்கியமுன்னு யாரும் நினைப்பதில்லை:(

  ReplyDelete
  Replies
  1. ஆண்கலை விடவும் பெண்கலுக்குதான் இந்த விசயத்துல கொடுமை மேடம்

   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மேடம்

   Delete
 5. மாற்றுத்திறனாளிகளை எங்க பார்த்தாலும் அவர்களுக்கு உங்களால் ஆன உதவிகளைச் செய்யுங்க...!

  ReplyDelete
 6. இதே பிரச்சனய நானும் அனுபவிச்சிருக்கேன்.

  உனக்காவது கூட ஒரு பய்யன் இருந்தான் ஆனா எனக்கோ இன்டன்ஷிப் போனபோது கூட இருந்தவங்க எல்லாரும் பெண்களே!
  இப்ப நெனச்சாலும் எனக்கே ஆச்சரியமா இருக்கு எப்படி நான் அத வெலி காட்டிக்காம ரென்டு மாசம் தாங்கி கிட்டேன்னு!

  என் கூட இருந்தவங்களும் உன்னோட ப்ரென்ட்ஸ் மாதிரி எல்லாம் மரைமுகமா கூட எதுவும் அத பத்தி கன்டுக்கல...
  நானும் அத வெலிக்காட்டுரதுக்காக எந்த முயர்ச்சியும் எடுக்கல!

  ஒரு மாற்றுத்திரனாலியா பிரந்தா சமுதாயத்துல சில விஷயங்கள அட்ஜஸ் பன்னி போனும்றதெல்லாம் ஓக்கேதான். அதுக்காக இதுபோன்ற இயர்க்கை உபாதைகளை கூடவா நாம் காம்ப்ரமைஸ்
  பன்நிட்டு போகனும்?

  ReplyDelete
 7. முடிஞ்சவரை நீங்க மாற்றுத்திறனாளிகளை எங்க பார்த்தாலும் அவர்களுக்கு உங்களால் ஆன உதவிகளைச் செய்யுங்க...!
  நன்று சொன்னீர். அனைவரும் கட்டாயம் செய்ய வேண்டியது

  ReplyDelete