Thursday, April 18, 2013

எனக்கொரு கேர்ள்ஃப்ரெண்ட் வேணுமடா...by Mahesh
 வணக்கம் பதிவுலக நண்பர்களே! வாசக மக்களே!அனைவருக்கும் வளமான வியாழக்கிழமை வாழ்த்துக்கள்!

எனது நண்பனின் கதையை
வாங்கோ அனைவரும் படிக்க...!முதலில் நண்பனை பற்றி... ஒரு சிறிய அறிமுகம்...!

அவன் பெயர் வினோத்...! வினோத் என்றால் வினோத் தான்
மத்த படி வினோத் குமாரா, வினோத் பெஞ்சமினா, இல்லே வினோத் பாண்டியனா எல்லாம் கேட்கப்பட கூடாது...!
நானே சொல்லிடுறேன்...!
அவன் பேரு வினோத்
பிறந்தது ஹாஸ்பிடல்ல...
வளர்ந்தது...
வீட்டுல, ஸ்கூல்ல,

அப்புறம் ஆறடிக்கு மேலே அவன் வளரவே இல்லே! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

வினோத்தை நாங்க எல்லாம்
வினோத் சுப்ரமண்யம் என்றே அழைப்போம்...!
அப்பா பேரு சுப்ரமண்யம்... பையன் பேரு வினோத்...
இரண்டையும் சேர்த்து
வினோத் சுப்ரமண்யம் அப்படின்னு செல்லமாக அழைப்போம்...!
நீங்க எல்லாம் சந்தோஷ் சுப்ரமண்யம் ஓட தாக்கம் அப்படின்னு நினைச்சா...
உங்களுக்கு படம் பார்க்குறதுலே நல்ல "ஜீ.கே." இருக்குன்னு அர்த்தம்...!

2008 ஆம் ஆண்டு
 வெளி வந்த சந்தோஷ் சுப்ரமண்யம் படத்தை பார்த்துட்டு
பையன் மேலே அந்த படம் ஒரு தாகத்தையும், அவனுள் ஒரு தாகத்தையும் தூண்டிவிட்டது...!
ஹிஹிஹி... அது தாகமா இல்லை தாக்கமா நீங்கதான் சொல்லனும்...!
---
அது 2010 ஆம் ஆண்டு மே மாதம் இருக்கும்...!
அடிச்ச வெயிலுக்கு
பையன் ரொம்ப காஞ்சி போய் கிடந்தான்...!
பதினெட்டு வயசு ஆச்சு
பருவபெண் பக்கத்துல இல்லையே - பையனுக்கு ஒரே ஏக்கம்...!
பின்னே என்னங்க பண்ணுறது ?
18 வயசுல
எனக்கோரு "கேர்ள்ஃப்ரெண்ட் வேணுமடா" பாடாம
81 வயசுலையா பாட முடியும்...!

எப்படியோ தவமாய் தவம் இருந்தததற்கு பையனுக்கு
ஒரு பக்கி சிக்கிட்டா...!
அவ சிக்கிட்டாளா இல்லே...
இவனே போய் வலையில சிக்கிட்டானா
படிக்குற உங்களுக்கு போக போக தெரியும்...!
---
கம்பியூட்டர் கிளாசுக்கு போய் கம்பியூட்டர் கத்துகிட்டு வர சொன்னா...
கம்னாட்டி கல்பனாவை கரெக்ட் பண்ண ஆரம்பித்தான்...!

காஞ்சி போன தன்னோட லைஃப்ல
இந்த கல்பனா வந்து கலகலப்பை ஏற்படுத்துவான்னு
கான்ஃபிடெண்ட்டா இருந்தான்...!

அதுக்காகவே காலையும் மாலையும் கம்பியூட்டர் கிளாசுக்கு கரெக்டா போவான்...!
கல்பனா தான்
உயிரு மத்தது எல்லாம் ... ... ... வேஸ்ட்...
அந்த ரேன்சுக்கு போயிட்டான்...!
சின்சியர் ஒன்ஸைட் லவ்வாம்...!

ஒரு நாள் மாலை
கம்பியூட்டர் கிளாசு முடிஞ்சதுமே கல்பனாவை தேடி போனான்...!
அன்று எப்படியாச்சும் ஆவலுடன் பேச முடிவு பண்ணினான்...!

ஹலோ கல்பனா..
நான் உன் கிட்டே கொஞ்சம் பேசணும்... என்னோட காபி ஷாப் வரியான்னு கேட்டுட்டான்...!
எதுக்கு வினோத்
கொஞ்ச நாளா உன்னை கவனிச்சிட்டு தான் வந்தேன்...!
கிளாசுலே அத்தனை பொண்ணுங்க இருந்தாலும் நீ
என்னையை மட்டும் அடிக்கடி பார்க்குறத நான் கண்டு பிடிச்சிட்டேன்...!
ஆனாலும் நான் கண்டுக்கல...!
கடைசியா
இன்னைக்கு காபி ஷாப் சொல்லுவே... நாளைக்கு காதல் கடிதத்தை நீட்டுவே...!
இதெல்லாம் வேண்டாம் வினோத்...
ஆள்ரெடி நானும் ஒரு பையனை லவ் பண்ணிகிட்டு இருக்கேன்...!
பெட்டர் நீ வேறே யாரையாச்சும் ட்ரை பண்ணு 'பெஸ்ட் ஆஃப் லக்'ன் னு சொல்லிட்டு போயிட்டா...!
கொஞ்சம் கூட கல்பனாவின் பதில்
எதிர்ப்பாக்காதவன்...
அது வரை இருந்த கான்ஃபிடெண்ட் எல்லாம் காணாம போச்சு...!

வீட்டுக்கு வந்ததுமே போன் போட்டு
மொக்கை போட ஆரம்பிச்சான்...!
நடந்தது எல்லாம் கூறினான்
நண்பன் கிட்ட எல்லாம் நடந்து முடிந்த பிறகு...!

இதுதான் கிடைச்ச சாக்குனு
அங்க இங்க படிச்ச தத்துவங்களை எல்லாம் எடுத்து விட்டேன்...!
எதுவும் பைய புள்ளே கேட்குற மாதிரி இல்லே...!

அடுத்த நாளே கம்பியூட்டர் கிளாசுக்கு
போகிறதை நிறுத்திட்டு
இனி வர போற காதல் ஆச்சும் ஜெயிக்க சொல்லி
கருணை இல்லா கடவுள் கிட்டே
கதறிக் கதறி வேண்ட
கோயில் கோவிலா சுத்தினான்...!

முதல் காதலையும் காதலியையும்
மறக்க ஆரம்பிச்சான்...!
ஒரு வாரம் லவ் என்பதால்
ஒரே வாரத்தில் மறந்து விட்டான்...!
--
வினோத் அப்பா ஒரு
பில்டிங் காண்ட்டிரக்ட்டர்...!
பொறுப்பான அப்பா, பொறுமையான அம்மா...!
எல்லாம் அப்பாவே நாலு கடையில ஏறி எது பெஸ்ட்டோ அதையே தன்னோட பையனுக்கு வாங்கி கொடுப்பார்...!
எல்லாமே அப்பாவோட செலக்‌ஷன் தான்
தனக்கு வரப் போகிற லைஃப் பாட்னரும்
அப்பா செலக்ட் பண்ணிட்டா...
நான் எங்க போவேன்னு என் கிட்டே நிறைய முறை புழம்பி தள்ளி இருக்கான்...!
எல்லாத்திலும் பெஸ்ட் கொடுக்கும் அப்பா
அவருக்கு எது பெஸ்ட்டா தோணுதோ
அவளை என்னோட தலையில கட்டுவார்...!
அது என்னால ஏத்துக்க முடியாது...!
அதுனால லைஃப்ல
1 விசயம் மட்டும் அவனோட விருப்பத்தில் நடக்கனும்ன்னு முடிவு பன்னினான்...!

தான் ஒரு பெண்ணை காதலிச்சுதான் கல்யாணம் பண்ணனும்ன்னு ஒத்தக்கால்லே நின்னான்...!
குறை ஒன்னும் வைக்கலை பெத்தவுங்க...
ஆனா இந்த கம்னாடிக்கு காதல்தான் பெருசா தெரிஞ்சது...!

கல்பனா போன பிறகு...
காவியா இல்ல கவிதா யாராச்சும்
வருவாங்கன்னு கான்ஃபிடெண்ட்டா இருந்தான்...!

நல்ல வேலை கல்பனா
நல்லவளா இருந்தாளா
தான் இன்னொருத்தற காதலிச்சுட்டு இருப்பதை சொல்லிட்டு விலகி போயிட்டா...!
இனி அடுத்து என்ன நடந்தது எல்லாம் சுருக்கமா..


எவளவோ சாதிகாவாம் நாலு நாள் நல்லா பழகினாளாம்...
பழகியதில் இவனை பிடித்து விட்டதாம்
கல்பனாவின் கதைக்கு பிறகு அது வரை வாழ்க்கையே ரொம்ப மெதுவா போகுது... ஒரு ஸ்வாரஸ்யமும் இல்ல... அப்படின்னு புழம்பிகிட்டே இருந்தவன்
இந்த சாதிகாவின் தொடர்புக்கு அப்புறம் திடீர்னு ரொம்ப activeவா மாறிட்டான்...!
அது வரை அப்பாவியா இருந்தவன்
அன்னியனா மாறிட்டான்...!

பத்து ரூபாய் ரிசார்ஜ் பண்ணிகிட்டு பத்து மாசம் வெச்சி ஓட்டும் கப்பாசிட்டி கொண்டவன்...
ஒரு நாளைக்கு பத்துமுறை ஆச்சும் பத்துரூபாய் ரிசார்ஜ் பண்ணி மனச விட்டு நல்லா பேசினானாம்...!

இப்படி பத்து மாசம் போக...
பக்காவா ஒரு நாள் ப்லான் பண்ணி...
சாதிகா சாதிக்க இனி அசத்த
சாதிச்சிட்டு போயிட்டா...!

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
---

சரி பாவம் இதுக்கு மேலே மொக்கை போட விரும்பலை...
அவனோட நிஜ பேர் வினோத்...
அப்பா பேரு சுப்ரமண்யம்...

12 வருசம் ஒன்றாக படிச்சோம்...
பள்ளி படிப்பு முடிஞ்சதும்...
வெவ்வேறு திசையில
போயிட்டோம்..

கிட்ட தட்ட
2 பேரும் ஒரே மாதிரி யோசிப்போம்...
ஆனா இப்போ நான் மாறி விட்டதாவும் நினைச்சிட்டான்...

நான் எழுதிய
இந்த
முட்டாளாக இருந்த வாலிபன் புத்திசாலி ஆன கதை!
படிச்சிட்டு
நண்பன் அந்த கதை முழுக்க முழுக்க எனக்கு நடந்ததா நம்பிட்டான்...!

ஃபைனல் டச்:
நான் கற்பனையும் சில அனுபவமும் வெச்சு எழுதியதை சொன்னாலும் கேட்டானா...
ஹி ஹி ஹி
அதனால் ஃப்ரெண்டோட பேருலே இந்த கதைய கற்பனையா எழுதி இருக்கென்...!

அப்போ  எல்லாம் கற்பனையா???   அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
--ஒகே  பதிவு     சிலருக்கு பிடிச்சும் இருக்கும் பலருக்கு பிடிக்காமலும் இருக்கலாம்...
பதிவை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க...? கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன... நன்றி...
தொடர்புடைய பதிவுகள் :


7 comments:

 1. கலக்கல் தொடரட்டும் மகேஷ்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஸார்...

   Delete
 2. ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னா நர்சு பொண்ண காதலி ..கட்சித்தாவல் இங்கே தர்மமடா..

  ReplyDelete
  Replies
  1. த்ரிஷா இல்லாட்டி திவ்யா..
   அனிதா இல்லாட்டி வனிதா...


   ஊருல பொண்ணுங்கலுக்கா பஞ்சம் சார்!
   நாணும் உங்க கட்சிதான்...
   ஹி ஹி ஹி

   Delete
 3. காதல் காதல் காதல்... காதல் போயின் இன்னொரு காதல்-அப்படின்னு பாரதியார் சொல்லாத மொழிகளையும் நீங்க சொல்றீங்க மஹேஷ்! படிக்க சுவாரஸ்யமா இருந்துச்சு!

  ReplyDelete
 4. கதைகளில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.. மிகவும் மேலோட்டமாக எழுதாதீர்கள்.. நேரம் எடுத்துக்கொண்டு, நீங்கள் ஒரு வாசகனாக இருந்தால் இந்த கதை எப்படி படைக்கப்பட வேண்டும் என எதிர்பார்ப்பீர்களோ அந்த மாதிரி எழுதுங்கள்.. வாழ்த்துக்கள்.. உங்களுக்கு நகைச்சுவை நன்றாக வருகிறது.. தொடருங்கள்..

  ReplyDelete
 5. வணக்கம் நண்பரே... தங்களது இந்தப்பதிவு "நண்பர்கள்" ராஜ் என்பவரால் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு கீழுள்ள முகவரிக்குச் சென்று காணவும்... வாழ்த்துக்கள், நன்றி...


  http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_23.html

  ReplyDelete