Monday, August 26, 2013

மனித உறவுகள், மொக்கை கவிதை:-)

இது வரை,  நாம் வாழ்ந்த வாழ்க்கையில்
பலர்  நம்முடன் நேரடியாகவோ பழகி இருக்கலாம்,
சிலர்  மறைமுகமாகவோ நம்முடன்  பழகி இருக்கலாம்!



பழகியவர்கள் எல்லாம்
நண்பர்களும் அல்ல

பழகாதவர்கள் எல்லாம்
எதிரியும் அல்ல!

நம்முடன்  பழகியதில்
நமக்கு பலர் பிடிக்காமலும் இருக்கலாம்,
சிலர் பிடித்தும் இருக்கலாம்!

பிடித்தவர்  நம்மை விட்டு பிரிந்தும் இருக்கலாம்,
பிடிக்காத ஒருத்தரிடம் நாம் பழகிக்கொண்டும் இருக்கலாம்!

நம்மை பிடித்த ஒருத்தர்
தனக்கு, பிடிக்காத ஒருத்தர்  இடம் கட்டாயம் பழக
வேண்டிய சூழலும் இருக்கலாம்,

நம்ம மனசுக்குப் பிடிச்ச ஒருத்தர்,
நம்ம கிட்ட பழகாமலும் இருக்கலாம்!

சில உறவுகள்
நம்மிடம் தேவைக்காக  பழகலாம்,
தேவை முடிந்ததும் நகரலாம்!

அதுபோல  நாமும்
சில  தேவைக்காக பிறர் இடம் பழகியும் இருக்கலாம்
தேவை முடிந்ததும்  அவர்களை  மறந்தும் இருக்கலாம்!

எது எப்படியோ
இன்னார்தான் வந்து
நம்மிடம் வந்து பழக வெண்டும் என்பது
எழுதி வைக்காத ஒரு உண்மை:-)

அதனால்,   நம்மை,
தேடிவரும் உறவுக்கு ஆதரவு கொடுப்போம்,
ஆரோக்கியமான ஒரு  நட்பு  வட்டத்தை உருவாக்க்குவோம்!

மனித உறவுகள் இடையே மனஸ்தாபங்கள் இருந்தாலும்,
மறந்து விட்டு பழகுவோம்!

சண்டைகள் தவிர்ப்போம்,
சந்தோஷமாய் இருப்போம்!

எதிர்பார்ப்பைக் குறைத்துக்கொல்வோம்
ஏமாற்றங்களைத் துரத்திடுவோம்!

அன்பை  அதிகரிப்போம்,
ஆசைகளை  ஒலித்திடுவோம்!

அப்படியே   இறுதி வரை.
ஒற்றுமையாய்  இருந்துவிடுவோம்:-)))


***

அவ்வளவு தாங்க... கவிதை முடிஞ்சிடுச்சு:-) கவிதை எப்பூடி?

என்னது... இம்புட்டு நேரம் நீங்க  படிச்சது கவிதை போல இல்லையா! அதுதான் தலைப்புலையே சொல்லிட்டேனே  மொக்கை  கவிதை அப்படினு... பார்க்கலியா!  அப்போ  நீங்க பாவம்தான். அவ்வ்வ்வ்வ்வ்

சரி சரி இன்னைக்கு ஒரு முக்கியமான நாள்

இன்று தனது பிறந்தநாள் கொண்டாடும் அன்புக்குரிய அக்கா சாமுண்டீஷ்வரி (சுடர்விழி) அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்தைத்  தெரிவிக்கலாம் வாங்க!
                   
அக்கா! வாழ்வில் நீங்கள் நினைக்கும் காரியங்கள்  அனைத்தும்  நிறைவேற,.இன்று போல் என்றும் நீங்கள் நல்ல ஆரோகியத்துடனும் மகிழ்ச்சியுடனும் நூறாண்டு வாழ மற்றும் இதர அனைத்து நலன்களும் பெற்றிட அந்த ஏழும‌லைப் பெருமாளிடம் வேண்டிக்கொள்கிரேன் அக்கா!

இனிய  பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா!
தொடர்புடைய பதிவுகள் :


12 comments:

  1. பிறந்த நாள் வாழ்த்துக்கள்,,,

    ReplyDelete
  2. நட்பு குறித்த ஆழமான அலசலுடன் கூடிய கவிதை
    மிக மிக அருமை.இதை மொக்கை எனச் சொல்ல இயலவில்லை
    சகோதரி சுடர்விழிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. மொக்கை கவிதை என்று சொல்ல முடியாது.. உண்மையிலேயே கருத்துமிக்க கவிதை இது...பிறந்த நாள் காணும் சகோதரி சாமுண்டீஸ்வரிக்கு வாழ்த்துகள்.

    இதைப் பகிர்ந்த திரு. மகேஷ் அவர்களுக்கு நன்றி...

    (கவிதை பிரமாதம் மகேஷ்...தொடர்ந்து கலக்குங்க...)

    ReplyDelete
  4. பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
  5. பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  6. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரி :-)

    ReplyDelete
  7. வாழ்த்திய அத்தனை உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பர்கள்எ

    ReplyDelete
  8. சகோதரிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. அன்புச் சகோதரி சாமுவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!! அப்புறம் கவித கவித ஆகா.... உண்மையிலேயே அட்டகாசம்! பின்னீட்டீங்க மகேஷ்!!

    ReplyDelete
  10. எல்லாருக்கும் ரொம்ம்ப லேட்டா நன்றி சொன்னாலும் லேட்டஸ்ட்டா நன்றி சொல்றேன்! இப்பத்தான் இந்தப் பக்கம் வர ஆறம்பிச்சு இருக்கேன்! மஹேஷ்க்கு ஸ்பெசல் தேங்ஸ்

    ReplyDelete