Tuesday, September 10, 2013

1. பதிவுலக மகிழ்ச்சி, மொக்கை கவிதை:-)


பதிவுகள் எழுதி,
பப்லிஷ் செய்து,
பின்னோட்டம் வந்திருக்கிறதா என்று
அடிக்கடி எட்டி பார்ப்பதும் மகிழ்ச்சிதான்!


தமிழ் மணத்தில்
பதிவை இணைத்து,
தனிநபர் ஓட்டுக்கள்
எத்தனை வந்திருக்கிறது என்று
தேடிச் சென்று பார்ப்பதும் ஒரு வித மகிழ்ச்சிதான்!

இண்ட்லியில் பதிவை இணைத்து,
இது வரை எத்தனை பேர்
பதிவை படித்திருக்கிறார்கள்­ என்று
அடிக்கடி எட்டிப்பாப்பதும்
ஒரு வித இண்ட்ரஸ்டிங்தான்!

தினமும் காலை எழுந்து,
தவறாமல் அலெக்சாவை தரிசிப்பதும்
ஒரு வித மகிழ்ச்சிதான்!

ப்ளாக்கிற்கு மொத்தம்
எத்தனை ஹிட்ஸுகள் வந்து இருக்கும் என்று,
முக்கியமான வேலை நேரத்திலும்
ஞாபகம் வருவதும் உண்மைதான்!

போஸ்ட் எழுத தெரியா விட்டாலும்
இப்படி எதையாவது கிறுக்கியாச்சும்
பதிவு தேர்த்திடலாம்னு நம்பிக்கை வந்து
எழுதுறதும் ஒரு வித மகிழ்ச்சிதான் எனக்கு:-)))

பின் குறிப்பு: இன்னும் எனக்கு பதிவுலகில் பிடித்த பல விசயங்கள் நிறையவே இருக்கு, அவை எல்லாம் அடுத்தடுத்த பதிவில்:-)))

தொடர்புடைய பதிவுகள் :


6 comments:

  1. அட அட எல்லோரின் சார்பாகவும் உண்மையை எழுதிவிட்டீர்கள்.

    ReplyDelete
  2. பதிவு சுவைக்கிறது. நன்றி.

    ஒரு வேண்டுகோள். தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

    பதிவை எழுதி முடித்ததும் ஒரு முறை நீங்களே வாசிக்கலாம்; தட்டுப்படும் பிழைகளைத் திருத்தலாம்.

    உதாரணம்:

    வந்திருக்கி’ர’தா, என்’ரு’, சென்’ரு’ பி’ண்ணோ’ட்டம், தமிழ் ம’ன’ம் போன்றவை.

    செய்வீர்களா?

    நன்றி.

    ReplyDelete
  3. பதிவரின் அனைவரின் மன நிலையையும்
    பதிவு செய்த விதம் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அன்பின் மகேஷ் - அனைவரும் செய்யும் செயல்கள் பதிவாக்கப் பட்டமை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  5. பதிவர் மனநிலை அப்படியே புட்டு புட்டு வச்சுட்டீங்க!!

    ReplyDelete