Thursday, September 12, 2013

2. அதெல்லாம் சொன்னா புரியாதப்பா, அனுபவிச்சாத்தான் தெரியும்:-)வணக்கம் நண்பர்களே, பதிவுலக மகிழ்ச்சி தொடர் தொடர்கிறது.

 நேற்று நான் எழுதிய பதிவில், நமக்கு மட்டும்தான் அது போன்ற ஆசை எல்லாம் இருக்குமோனு நினைத்து கொஞ்சம் பயத்தோடு எழுதியது, பரவால நம்ம டவுட்டு க்ளியர் ஆயிடுச்சு:-))) சரி டைம் வேஸ்ட் பண்ணாம, இன்றைய பதிவுக்கு போகலாம் வாங்க!

பிறவியிலேயே எனக்கு பார்வை குறைபாடு இருப்பதால் என்னால் சுயமாக புத்தகம், செய்திதாள், எதையுமே கண்களால் பார்த்து படிக்க முடியாது, எழுதவும் முடியாது. இன்றளவிலும் யாராவது படித்து காட்டினால்தான் சரி. ஐயோ நாம இப்படி பிறந்திட்டோமேன்னு ஆரம்பத்தில் வீட்டிலும் எனக்கும் வருத்தமாகத்தான் இருந்தது. அந்த குறை ரொம்ப வருத்தத்தை ஏற்படுத்தியது. ஆனால் போகப்போக எல்லாம் சரி ஆயிடுச்சு. (எந்த ஒரு பிரச்சனைக்கும் சரியான முடிவு இருக்கும். ஆனால் அதை நாம் அடையும் வரை சரியாக போராடனும்) அப்படீங்கிறத நான் நம்புறவன்!

குறைகள் இல்லாத மனுஷன் இங்கே யாரடா,
 சிலருக்கு உடலில் குறை.
 சிலருக்கு மனதில் குறை!
 மொத்தத்தில் எல்லாரும் இங்கே குறைகளுடனே வாழ்கிறோமடா!
நம் எல்லாருக்குள்ளும் எதோ ஒரு குறை இருக்கத்தான் செய்யும். அதை எல்லாம் நாம் பெருசு படுத்திக்கிட்டே இருந்தா லைஃப்ல முன்னுக்கே வர முடியாது என்பதை நான் புரிந்து கொண்ட பிறகு வாழ்க்கையை எனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டு வாழ்க்கையை சந்தோஷமா வாழ்ந்துகிட்டு வர்றேன்.:-)))

2012 ஜனவரி மாதம். ஒரு பதிவரின் மூலம் கிடைத்தது பதிவுலக அறிமுகம். அதைத் தொடர்ந்து பல பதிவர்களின் பதிவுகளை தேடிச் சென்று படிக்க ஆரம்பித்தேன். ஆனால் என்னை பதிவுகள் எழுதுற அளவுக்கு அது கொண்டு வரும் என்று சத்தியமா நான் ஆரம்பத்துல எதிர்ப்பார்க்கல:-)))

 அந்த பதிவரிடம் இருந்து ஒரு நாளைக்கு ஒரு பதிவை எதிர்பார்க்குறதே பெரிய விசயம். அதனால அவரோட பழைய பதிவுகள் எல்லாம் படிக்க ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில் அவர் எழுதிய மொத்த பதிவுகளும் படித்து முடித்த பிறகு அவரது எழுத்தின் மீது இன்னும் எதிர்பார்ப்பு அதிகரித்தது.
அதன் பிறகு அறிமுகம் ஆன மற்ற பதிவர்களது பதிவுகள் படிக்க ஆரம்பித்தேன். படிக்க படிக்க எல்லோரது பதிவுகளுமே எனக்குப் பிடித்துப் போனது. ஒவ்வொரு பதிவருக்கும் ஒரு எழுத்து நடை,

சிலர் எமோஷனலாக எழுதுவார்கள்,
 சிலர் புத்திசாலியாக எழுதுவார்கள்!
 சிலர் காமடியாக எழுதுவார்கள்,
 சிலர் எப்பவும் கவிதையாகவே எழுதுவார்கள்!

 இப்படி பலர் பல விதத்தில் எழுதினாலும் ரசிக்கும் ரசனை ஒவ்வொருத்தருக்கும் வேறுபட்டது என்பதால் எனக்கு பிடித்த பதிவர்களைப் பற்றி நான் எழுத ஆரம்பித்தால், ஒவ்வொரு பதிவரும் தனக்கென ஒர் தனி எழுத்து நடை. அதை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். அதெல்லாம் அடுத்தடுத்த பதிவில் விரைவில்.

 எனது அபிமான பதிவர்களின் பதிவுகளை படிக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி இருக்கே அதை என்னால் இங்கே சொல்லிப் புரிய வைக்க முடியாது. அவ்வளவு மகிழ்ச்சி எனக்குள், உண்மையில் என்னை போன்று தீவிரமான வாசகர்களை ஒரு பதிவர் பெற்றுவிட்டால் அவர்தான் பதிவுலக சூப்பர் ஸ்டார் சொல்லிவிடலாம்:-)))

என்னிடம் யாராவது ’நீ பதிவராக இருக்க ஆசை படுகிறாயா அல்லது, வாசகராக இருக்க விரும்புகிறாயா’ என்று கேட்டால் நிச்சயமாக வாசகராகவே இருக்க விரும்புவேன்! பதிவுகளைப் படிப்பதில் அப்படி ஒரு சுகம் இருக்கிறது!

***

 கண்களால் பதிவுகளைப் படிப்பதைக் காட்டிலும்,
 எனக்கு செவிகளால் பதிவுகள் படிப்பதுதான் சுகம்!
 ---
 தொடரும்.
தொடர்புடைய பதிவுகள் :


5 comments:

 1. முந்தைய பதிவும் படித்தேன் இந்த பதிவும் படித்தேன் இனிமேல் வரும் பதிவையும் படிக்க ஆவலாக உள்ளேன்

  ReplyDelete
 2. சரிங்க நீங்களே சொல்லீட்டீங்க. பதிவரா இருப்பதை விட வாசகனாய் இருப்பது நல்லதுன்னு!! இனி, நானும் உங்க வாசகிதான்

  ReplyDelete
 3. அன்பின் மகேஷ் - முதல் பதிவும் படித்து மறுமொழி இட்டிருக்கிறேன். இப்பதிவும் படித்தேன் - அருமை அருமை - வாசகராக இருப்பதே விருப்பமென அறிவித்திருப்பது நன்று. இனி வரும் அனைத்துப் பதிவுகளையும் படிக்கிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 4. சரியாக சொன்னீர்கள். பதிவுகளை படிப்பதில் அலாதி சுகம் உண்டு. பதிவெழுத உட்கார்ந்து இடையில் கொஞ்சம் பதிவுகளை படிக்கலாம் என்று ஆரம்பித்தால் அது தொடர்ந்து கொண்டே போகும் பதிவெழுதுவதே மறந்து போகும்.
  உங்கள் தன்னம்பிக்கையும் ஆர்வமும் நாங்கள் உங்கலாம் கற்றுக்கொள்ளவேண்டிய ஒன்று மகேஷ்.
  அடுத்ததையும் ரசிக்க வே காத்திருக்கிறோம்.

  நீங்கள் குறிப்பிட்ட பதிவர் திண்டுக்கல் தனபாலனா?

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் பல நேரம் இப்படித்தான் சார் :)

   Delete