Saturday, September 14, 2013

3. கண்களை விடவும், காதுகள்தான் அதற்கு பெஸ்ட் தெரியுமா!வணக்கம் நண்பர்களே, பதிவுலக மகிழ்ச்சி தொடர் தொடர்கிறது.
 நான் பதிவுலகில் படிக்க ஆரம்பித்த முதல் பதிவர், ஐடியா மணி அவர்கள்தான். 2012 ஜனவரி மாதம் பொங்கல் முன்பு இருக்கும், அவரது tamilaathi.com முகநூலில் திசைகாட்டி என்னும் குருப்பின் முலம் படிக்க ஆரம்பித்தேன். ஆளு ரொம்ப நாளா லிங்க் ஷேர் பண்ணிகிட்டு இருந்து இருப்பார் போல, நான் தான் கவனிக்கல. படித்த முதல் பதிவு தலைப்பு கொஞ்சம் மங்களகரமாக இருந்ததால் மட்டுமே கிளிக் செஞ்சேன், அது வரை நான் தட்ஸ் தமிழ் செய்தி தளம் மட்டுமே படிப்பவன்!
படித்த முதல் பதிவே அவரது பக்கம் என்னை ஈர்த்தது. நான் விரும்பி படிக்க ஆரம்பித்த சில மாதங்களில், ஐடியா மணி மாத்தியோசி மணியாக மாற வேண்டிய சூழ்நிலை வந்தது. பிறகு சில பல மொக்கையான பதிவுகள் எழுதினார், சமீபத்தில் வேஷம் கலைத்த பிறகு முகநூலில் கலக்குகிறார்! நீ கலக்கு அண்ணே! ப்ளாக்கை விடவும் நாளுக்கு நாள் அங்கே பாப்புலர் ஆகிறே. இப்போ எல்லாம் நோ ஃபீலிங்க்ஸ் நீ ப்ளாக்ல எழுதலனு:-)))
ஐடியா மணிக்கு அடுத்து அவரைப் போன்று ஆணித்தரமாக அழகாக எழுதும் பதிவர்கள் இது வரை நான் பார்த்ததில்லை! அவரின் எழுத்துக்கு அப்படி ஒரு அடிமை நான்! என்னடா இவன் ரொம்ப அசிங்கமா எழுதும் ஐடியாமணியை புகழுறானே என உங்களில் அவரைப் பிடிக்காதவர்கள் நினைக்கலாம். அசிங்கம் அப்படிங்குறது எல்லாம், அவரவர் மனதில் இருக்கும் அழுக்கைப் பொறுத்தது!
அவரைப்பற்றி சொல்லவேண்டும் என்றால் தனியாக ஒரு பதிவு போட்டு சொல்லும் அளவுக்கு எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும்! ரசனை மிக்க ஒரு மனிதர்! அவர் பதிவின் துவக்கத்தில் சொல்லும் (வணக்கம் நண்பர்களே! அனைவருக்கும் இனிய --- க்கிழமை வாழ்த்துக்கள்! கும்புடுறேனுங்கோ!) அச்சச்சோ அதை நான் காதுகளால் கேட்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி இருக்கே அதற்காகவே நான் அவரது வாசகர் சொல்லிவிடலாம்! அதிலும் சில குறிகளை வைத்து அவர் எழுதுவது இருக்கே அவருக்கு அவரே அழகு!:-)))
 ஆமாம், என்னதான் நீங்க பதிவுகளை கண்களால் படிப்பதைக் காட்டிலும், நான் காதுகளால் படிப்பது அப்படி ஒரு சுகம் எனக்கு!
2012 ஃபெப்ரவரி மாதத்தில் அவரை முகநூலில் இணைத்து பேச ஆரம்பித்தேன், பிறகு நாற்று குழுமத்தில் அவர் என்னை இணைத்ததால் நண்பர்கள் ராஜ் அண்ணா, தமிழ் நாற்று நிரூபன் அண்ணா மற்றும் குட்டிஸ்வர்க்கம் ஆமினா அக்கா இவர்களது வலைப்பூக்களை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது! ஒவ்வொரு பதிவரும் ஒரு வித எழுத்து நடை! அவர்களது பதிவுகள் படிக்கப் படிக்க இன்னும் எதிர்பார்ப்பு என்னுள் தூண்டியது! ஆனால் நமது அபிமான பதிவர்களால் தொடர்ந்து எழுத முடியாமல் போவதுதான் என்னைப்போன்ற தீவிரமான வாசகருக்கு மிகப்பெரிய ஏமாற்றம்!:-)))
ரசனை என்பது மனிதருக்கு மனிதர் மாறுபடலாம், ஆனால் ஐடியா மணி போன்ற கில்மா எழுத்து பதிவர் மட்டும் நான் ரசிப்பதாக யாராவது முடிவு பண்ணிட்டா ஐயாம் வெரி சாரி. ஆரம்பத்தில் நண்பர்கள் ராஜ் அண்ணாவின் எழுத்தும் எனக்கு பிடிக்கும்! அவரது எழுத்தை படித்ததால் என்னவோ எனக்கும் எழுதணும் என்ற ஒரு சின்ன தாக்கம் மனதில் தோன்றியது! 2012 ஏப்ரல் பிறகு சில பிரச்சனைகள் நாற்று குழுமத்தில் வந்ததால், நாற்று குழுமமே அமைதியாக மாறியது! அதன் பிறகு பதிவர்களுக்கும் எனக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டது! அடுத்து நான் எப்படி இன்னும் பல வலைப்பூக்களைத் தேடிச்சென்று படித்தேன் என்றும், இங்கு எப்படி எழுத வந்தேன் என்ற கதையும் நீங்க அடுத்த பகுதியில் எதிர்பார்க்கலாம்!
பின்னூட்டம் என்பது புதிய பதிவர்களுக்கு ஒரு ஊக்க மாத்திரை. அதை தவறாமல் இந்த தொடர் ஆரம்பம் முதல் கொடுத்து என்னை உச்சாகப்படுத்தி மேலும் நான் தொடர்ந்து எழுத ஊக்குவித்த அனைத்து சக பதிவர்களுக்கும் நன்றிகள்.
 பதிவுலகம் அப்படிங்குறது ரொம்ப அதிசயமான ஒன்று, அதிலும் வெறும் பின்னோட்டத்தாலும் பதிவர்களின் பதிவுகள் படிப்பதாலும் அவர்களின் மீது நமது கவனம் செல்கிறது என்றால் எழுத்தின் உயிர் ஓட்டத்தை உணருங்களேன்!
பின் குறிப்பு:
நான் கணினியில் திரையை வாசித்துக்காட்டும் சிறப்பு மென்பொருள் நிறுவி இருப்பதால், திரையில் தோன்றும் அனைத்தையும் அது வாசித்து காட்டுவதால் நான் படிக்க வேண்டிய அனைத்தையும் காதுகள் வழியாகத்தான் கேட்பது.
 ***
 கண்களால் பதிவுகளைப் படிப்பதைக் காட்டிலும் எனக்கு செவிகளால் பதிவுகள் படிப்பதுதான் சுகம்!
--
தொடரும்.
தொடர்புடைய பதிவுகள் :


1 comment:

  1. தன்னம்பிக்கை மேலும் வளரட்டும்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete