Monday, September 16, 2013

ஆடு வெட்டி, கோழி வெட்டி, குழந்தைகளுக்கு மொட்டை அடித்தல் அவசியம்தானா?


வணக்கம் நண்பர்களே, அனைவரும் நலம்தானே!

எங்க வீட்டு பக்கத்துல ஒரு அக்கா இருக்காங்க, அவுங்களுக்கு ஒரு வயசுல குழந்தை ஒண்ணு இருக்கு! அந்த குழந்தைக்கு நேத்து மொட்டை அடிச்சாங்க! சரி அடிச்சது அவுங்களோட தனிப்பட்ட விஷயம்னு விட்டு விடலாம்! ஆனா எங்களை மதியம் சாப்பாட்டுக்கு வரச்சொல்லி  2 மணிநேரம் காக்க வெச்சதுதான்  தப்போ தப்பு!:-) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். எப்பவும் 1 மணிக்கெல்லாம் சாப்பிடும் நல்ல பழக்கம் கொண்ட எனக்கு மூன்று மனிக்கு சாப்பிட்டதுதான் ஒரு வருத்தமான, கோவமான விஷயம்! அந்த ரெண்டு மணி நேர கேப்புல நான் பட்ட அவஸ்தை இருக்கே, அதை இங்க கொட்டி தீர்த்தாலும் எனக்குள் இருக்கும் கோவம் போகாதப்பா!


டேய் உனக்கு கோவம் எது மேல அந்த குழந்தைக்கு மொட்டை அடிச்சதுல இருக்கா, இல்ல உன்னை ரெண்டு மணிநேரம் காக்க வெச்சதுல இருக்கா ஒண்ணுமே புரியலனு புலம்பும் அன்பர்களே, நண்பர்களே! ஒரு குழந்தை பிறந்து 9 அல்லது 11ஆம் மாதத்தில் கட்டாயம் முதன்முறையாக மொட்டை அடிக்கணுமாம்! முதல் மொட்டை தங்களின் குலதெய்வத்திற்கு அடிச்சிட்டு, அதைத் தொடர்ந்து இருக்கிற மத்த சாமிக்கு அடிக்கனுமாம்! அதில பெருமாள் திருப்பதியாம், முருகன் ஆறுபடை வீடுகளில் எங்கேயாச்சுமாம், இப்படி பட்டியல் போய்கிட்டே இருக்கு! இது ஏரியாவுக்கு ஏரியா மாறுபடலாம்!:-)))

முதல் மொட்டை அடிக்கும்போது ஒரு விழாவைப்போல ஆடு வெட்டி, கோழி அறுத்து நாலு சொந்தங்களைக் கூப்பிட்டு, சோறு போட்டு அனுப்பனுமாம்! கொய்யால இப்படி தேவை இல்லாத ஒரு செயலை செய்யணும்னா குறைந்த பட்சம் பத்தாயிரம் ரூபாய் இல்லாம பண்ண முடியாது. இதே  சதுரம் கொஞ்சம் பெருசா இருந்தா போதும் செலவு இருபதாயிரம் கூட ஆகலாம்! பணம் இருக்குறவன் கொண்டாடுறான், பணம் இல்லாதவன் திண்டாடுறான்! இப்படி கொண்டாடினால்தான் அந்தக் குழந்தை பிற்காலத்தில் ஆரோக்கியமாகவும் எந்த நோய் நொடி தாக்காமலும் இருக்குமாம்! எந்த முட்டாள் சொல்லிட்டு போயிட்டான் தெரியலை, கம்ப்யூட்டர் காலத்திலும் எல்லாம் இப்படி கொண்டாடுறது! போங்கடா டேய், போங்க! மொதல நீங்க உங்க புள்ளைக்கு என்ன தேவைன்னு பாருங்க! அந்த வயசுல கொடுக்க வேண்டிய சத்தான உணவை கொடுங்க, அப்புறம் அடுத்தவனுக்கு சோறு போட்டு கொண்டாடலாம்!

சரி நானும் இப்படி எல்லாம் ஏன் நீங்க கொண்டாடணும், சீக்கிரம் சோறுபோட்டு அனுப்பிட்டேனு கெஞ்சாத குறையா அந்த அக்காவைக் கேட்டேன்! அது எல்லாம் தெரியாதுடா கொண்டாடணும் அப்படின்னு சொன்னாங்க! சரி நமக்கு தெரிஞ்ச அக்காவாச்சே சண்டை வேணாம்னு  மூணு மணிக்கு சாப்பிட்டு வந்திட்டேன்! இப்படி நம்ம வீட்டில் இருக்கும் பெருசுங்க இளைஞர்களாகிய நமக்கு எல்லாம் தப்புத்தப்பாதான் சொல்லித்தர்றாங்க! சரி நான் வீட்டுக்கு வந்து உண்மையான காரணம் கண்டுபிடிக்க கூகுல் ஆத்தா கிட்டே கேட்டேன்! ஆத்தா தந்த பதிலை நீங்களும் படிச்சுக்கோங்க!
***

மொட்டை அடித்தல்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மொட்டை அடிப்பது எதற்கு?
ஆன்மீகம் - தலையான பொருள் முடி. எனவே அதைத் தருகிறோம்.
அறிவியல் - வெட்டப்படும் முடிகளே அதிகம் வளரும். வியர்வை மற்றும் அழுக்கு காரணமாக மயிர்க்கால்கள் இடையில் அழுக்கு சேரும். மொட்டை அடிக்கும் போது இதை பெரும்பாலும் கண்டிருக்கலாம். தொடர்ச்சியாக இதை நீக்குவதால் தலை சார்ந்த வியாதிகள் வரும் வாய்ப்பு குறையும்..
***

பின் குறிப்பு:

1. எடுத்த அந்த தகவல் எந்த தளம் முதலில் பதிவிட்டது தெரியல ஒரே தகவலை 3 தளத்திலும் பார்த்தேன் யார் முதலில் எழுதியது தெர்யாது என்பதால் குறிப்பிடவில்லை!

2. வீட்டுக்கு வந்த பிறகு அம்மா சொன்ன விஷயம் அந்த கோயில் பட்டியல் எல்ளாம்!

3. ஒரு செயல செய்றோம்னா அதுக்கு சரியான காரணத்தோடு செய்யணும், அவன் பண்றான், இவன் பண்றான்னு நாம முட்டாள்தனமாக செய்யக்கூடாது:-)))
தொடர்புடைய பதிவுகள் :


No comments:

Post a Comment