Wednesday, September 18, 2013

மாத்தியோசிக்கலாம் வாங்க இலைஞர்களே!



ஒரு செயலைச் செய்யும்போது ஏன் செய்கிறோம், எதற்கு செய்கிறோம் என்று தெரியாமலே மூடத்தனமாக நாமும் பல காரியங்கள் செய்து வருகிறோம்!


சரி நமக்கு சந்தேகம் வந்து யாரிடமாவது நீ ஏன் அதைச் செய்கிறாய் என்று கேட்டுப்பாருங்களேன், என்ன பதில் சொல்வது என்று தெரியாமலே பெரும்பாலானோர் முழிப்பார்கள்!

உனக்குத்தான் அதைப்பற்றி முழுதும் தெரியாது என்கிறாய், அப்போ எதற்கு அதைச் செய்கிறாய் என்று நாம் கேள்வி கேட்டால் தப்பு, விமர்சித்தால் தப்பு, அதற்கும் மேல் இப்படித்தான் இருக்கனும் என்று நமக்கே திருப்பி சொல்வார்கள்!

இப்பேர்ப்பட்ட முட்டாள்கள் மத்தியில் வாழ்கிறோம் என்றால், நாம் எப்பேர்ப்பட்ட சமூகத்தில் வாழ்கிறோம் என்று புரிந்துகொள்ளுங்கள் நன்பர்களே!

அதனால் நம்ம அப்துல் கலாம் சார் சொன்னது போல 2020 க்குள் நமது நாடு வல்லரசு ஆக வேண்டும் என்றால் முதலில் இளைஞர்களாகிய நாம்தான் மாறவேண்டும்!

உங்கள் பார்வையை இன்றே சற்று மாத்தி யோசிக்க ஆரம்பியுங்கள் நண்பர்களே!

பள்ளியிலும் கல்லூரியிலும் நமக்கு ஆசிரியர்கள் சொல்லிக்கொடுப்பது மட்டுமே அறிவு கிடையாது! உங்கள் அனுபவத்தாலும், அடுத்தவரை விமர்சிப்பதாலும், மாற்றுப்பார்வை கொண்ட மனிதர்களின் சிந்தனைகளை பின்பற்றுவதால் மட்டுமே தெளிவான ஒரு அறிவு பெற்று, நாம் ஒரு ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க முடியும்!

இப்போது நமது நாட்டில் நிலவும் மோசமான நிலமை மாறவேண்டும் என்றால், நிச்சயமாக நம்மைப் போன்ற இளைஞர்களால் மட்டுமே முடியும்!

அதனால் வாருங்கள் நண்பர்களே இனி நாம் அனைவரும் மாத்தியோசிப்போம்:-)))
தொடர்புடைய பதிவுகள் :


3 comments:

  1. உண்மைதாங்க. நான் கூட எல்லோரும் சாப்பிடப் போறதுக்கு முன்னால எதுக்கு கையைக் கழுவறாங்கன்னு யோசிப்பதுண்டுங்க. அதுதான் சாப்பிட்டதுக்கப்புறம் கையைக்கழுவப் போறமே, அப்புறம் எதுக்கு இப்படி தண்ணிய வீணாக்குகிறாங்க?

    ReplyDelete
  2. அன்பின் மஹேஷ் ரெட்டி - மாத்தி யோசிக்க வேண்டியது தான் - ஆனால் பல செயல்கள் காலா காலமாக நாம் செய்து கொண்டிருப்பது தான் - காரண காரியங்கள் தேவை இல்லை - மாற்றுச் சிந்தனை தேவையா ? சிந்திப்போம் - தேவையான செயல்களூக்கு பயன் படுத்துவோம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  3. மாற்றி யோசிக்காத காலத்தில் யாரும் பேருந்தில் பெண்ணைப் பேருந்தில் கற்பழித்ததில்லை..ஒருசில விஷயங்களை ஏன் எதற்கு என்று கேட்காமல் இருப்பதே நல்லதுதான்..

    ReplyDelete