Wednesday, September 25, 2013

திருப்பதிக்கு போன எல்லாம் தீர்ந்துவிடுமா பிரச்சனைகள்!:-)இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தை இரண்டாகப் பிரித்து இந்தியாவின் 29ஆவது மாநிலமாக தெலுங்கானா என்ற புதிய மாநிலம் உருவாதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த
 56 நாட்களாக
 தொடர் போராட்டங்கள் இங்கே நடை பெற்று வருகிறது.


இதற்கு மத்தியில் பலர் நண்பர்கள் என்னை தொலைபேசியில் அழைச்சு, திருப்பதிக்கு வரலாம்னு இருக்கோம் அங்க நிலவரம் எப்படி இருக்குனு கேட்க்குறாங்க.
என் கிட்ட அப்படி கேக்குறவுங்கள நா ஒன்னும் சொல்லல. எல்லாம் அவர் அவரோட தனி பட்ட நம்பிக்கை..
ஆனா கடந்த 56 நாட்க்களாக நாங்க படும் அவஸ்தைகள் இருக்கே அதைய பார்த்துகிட்டு சும்மாவா இருக்குராரு அந்த பெருமாளு?:-)

நண்பர்களை உங்களுக்கு தெரியாது, கடந்த 55 நாட்களாக ஒரு அரசு பேருந்தும் ஓடல இங்க. ஒரு ஊர விட்டு இன்னொரு ஊரு போகனும்னா அது நெடு தூரம் இருந்தால் ட்ரைன நம்பித்தான் போக வேண்டி இருக்கு. எத்தனை பேருக்கு ட்ரைன்ல சரியா பயம் இல்லாம பயனிக்க முடியும்னு தெரியல:-)

பக்கத்துல ஒரு 50 கிமிக்குல இருந்தா ஆட்டோவுலதான் போக வேண்டி இருக்கு. அதுவும் பேருந்து கட்டணத்தை விடவும் 3, 4 மடங்கு அதிகமா கொடுத்து போக வேண்டி இருக்கு. ஆனா எத்தனை பேரால அப்படி போக முடியும்:-)

நான் ஆகஸ்ட் 1 அன்று M.A. join பண்ண வேண்டி இருந்தது, ஆனால் இன்னும் கல்லூரி திறக்காததால் பாவம் சில நாட்க்களாக பதிவு எழுதி உங்கள எல்லாம் போர் அடிக்க வெச்சு இருப்பேன். அதை எல்லாம் பார்த்துகிட்டு சும்மாவ இருக்குறார் அந்த பெருமாளு?

அரசு ஊழியர்கள் போராட்டத்தில் இருப்பதால் சம்பளம் கிடையாதுன்னு சொல்லுறாங்க.
இங்க என்ன வீட்டுக்கு ஒருத்தர் அரசு வேலையில இருக்குறாங்க?

இப்படி எவ்வளவோ இருக்கு.. சொல்லிக்கொண்டே போகலாம்...
சும்மா எதோ சொல்லனும்னு தோனுச்சு அதுதான் சிலது சொன்னேன்...

நம்மலோட பிரச்சனைகள அந்த கடவுள் ஒன்னும் வந்து தீர்த்து வைக்க போறது இல்ல என்பதை மட்டும் புரிந்து கொண்டு
அவரு மேல இருகும் நம்பிக்கைய கொஞ்சம் குறைச்சு கிட்டு
சக மனிதரை மனிதராக மதிக்க கத்துக்குவோம்:-)))

***
பெருமாளுக்கே ஆப்பு அடிச்சுட்டாய்ங்கயா

இன்று கால் நடை பாதையும், சாலை வழி தடமும் மூடப்பட்டது..

Wednesday, September 18, 2013

மாத்தியோசிக்கலாம் வாங்க இலைஞர்களே!ஒரு செயலைச் செய்யும்போது ஏன் செய்கிறோம், எதற்கு செய்கிறோம் என்று தெரியாமலே மூடத்தனமாக நாமும் பல காரியங்கள் செய்து வருகிறோம்!

Monday, September 16, 2013

ஆடு வெட்டி, கோழி வெட்டி, குழந்தைகளுக்கு மொட்டை அடித்தல் அவசியம்தானா?


வணக்கம் நண்பர்களே, அனைவரும் நலம்தானே!

எங்க வீட்டு பக்கத்துல ஒரு அக்கா இருக்காங்க, அவுங்களுக்கு ஒரு வயசுல குழந்தை ஒண்ணு இருக்கு! அந்த குழந்தைக்கு நேத்து மொட்டை அடிச்சாங்க! சரி அடிச்சது அவுங்களோட தனிப்பட்ட விஷயம்னு விட்டு விடலாம்! ஆனா எங்களை மதியம் சாப்பாட்டுக்கு வரச்சொல்லி  2 மணிநேரம் காக்க வெச்சதுதான்  தப்போ தப்பு!:-) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். எப்பவும் 1 மணிக்கெல்லாம் சாப்பிடும் நல்ல பழக்கம் கொண்ட எனக்கு மூன்று மனிக்கு சாப்பிட்டதுதான் ஒரு வருத்தமான, கோவமான விஷயம்! அந்த ரெண்டு மணி நேர கேப்புல நான் பட்ட அவஸ்தை இருக்கே, அதை இங்க கொட்டி தீர்த்தாலும் எனக்குள் இருக்கும் கோவம் போகாதப்பா!


டேய் உனக்கு கோவம் எது மேல அந்த குழந்தைக்கு மொட்டை அடிச்சதுல இருக்கா, இல்ல உன்னை ரெண்டு மணிநேரம் காக்க வெச்சதுல இருக்கா ஒண்ணுமே புரியலனு புலம்பும் அன்பர்களே, நண்பர்களே! ஒரு குழந்தை பிறந்து 9 அல்லது 11ஆம் மாதத்தில் கட்டாயம் முதன்முறையாக மொட்டை அடிக்கணுமாம்! முதல் மொட்டை தங்களின் குலதெய்வத்திற்கு அடிச்சிட்டு, அதைத் தொடர்ந்து இருக்கிற மத்த சாமிக்கு அடிக்கனுமாம்! அதில பெருமாள் திருப்பதியாம், முருகன் ஆறுபடை வீடுகளில் எங்கேயாச்சுமாம், இப்படி பட்டியல் போய்கிட்டே இருக்கு! இது ஏரியாவுக்கு ஏரியா மாறுபடலாம்!:-)))

முதல் மொட்டை அடிக்கும்போது ஒரு விழாவைப்போல ஆடு வெட்டி, கோழி அறுத்து நாலு சொந்தங்களைக் கூப்பிட்டு, சோறு போட்டு அனுப்பனுமாம்! கொய்யால இப்படி தேவை இல்லாத ஒரு செயலை செய்யணும்னா குறைந்த பட்சம் பத்தாயிரம் ரூபாய் இல்லாம பண்ண முடியாது. இதே  சதுரம் கொஞ்சம் பெருசா இருந்தா போதும் செலவு இருபதாயிரம் கூட ஆகலாம்! பணம் இருக்குறவன் கொண்டாடுறான், பணம் இல்லாதவன் திண்டாடுறான்! இப்படி கொண்டாடினால்தான் அந்தக் குழந்தை பிற்காலத்தில் ஆரோக்கியமாகவும் எந்த நோய் நொடி தாக்காமலும் இருக்குமாம்! எந்த முட்டாள் சொல்லிட்டு போயிட்டான் தெரியலை, கம்ப்யூட்டர் காலத்திலும் எல்லாம் இப்படி கொண்டாடுறது! போங்கடா டேய், போங்க! மொதல நீங்க உங்க புள்ளைக்கு என்ன தேவைன்னு பாருங்க! அந்த வயசுல கொடுக்க வேண்டிய சத்தான உணவை கொடுங்க, அப்புறம் அடுத்தவனுக்கு சோறு போட்டு கொண்டாடலாம்!

சரி நானும் இப்படி எல்லாம் ஏன் நீங்க கொண்டாடணும், சீக்கிரம் சோறுபோட்டு அனுப்பிட்டேனு கெஞ்சாத குறையா அந்த அக்காவைக் கேட்டேன்! அது எல்லாம் தெரியாதுடா கொண்டாடணும் அப்படின்னு சொன்னாங்க! சரி நமக்கு தெரிஞ்ச அக்காவாச்சே சண்டை வேணாம்னு  மூணு மணிக்கு சாப்பிட்டு வந்திட்டேன்! இப்படி நம்ம வீட்டில் இருக்கும் பெருசுங்க இளைஞர்களாகிய நமக்கு எல்லாம் தப்புத்தப்பாதான் சொல்லித்தர்றாங்க! சரி நான் வீட்டுக்கு வந்து உண்மையான காரணம் கண்டுபிடிக்க கூகுல் ஆத்தா கிட்டே கேட்டேன்! ஆத்தா தந்த பதிலை நீங்களும் படிச்சுக்கோங்க!
***

மொட்டை அடித்தல்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மொட்டை அடிப்பது எதற்கு?
ஆன்மீகம் - தலையான பொருள் முடி. எனவே அதைத் தருகிறோம்.
அறிவியல் - வெட்டப்படும் முடிகளே அதிகம் வளரும். வியர்வை மற்றும் அழுக்கு காரணமாக மயிர்க்கால்கள் இடையில் அழுக்கு சேரும். மொட்டை அடிக்கும் போது இதை பெரும்பாலும் கண்டிருக்கலாம். தொடர்ச்சியாக இதை நீக்குவதால் தலை சார்ந்த வியாதிகள் வரும் வாய்ப்பு குறையும்..
***

பின் குறிப்பு:

1. எடுத்த அந்த தகவல் எந்த தளம் முதலில் பதிவிட்டது தெரியல ஒரே தகவலை 3 தளத்திலும் பார்த்தேன் யார் முதலில் எழுதியது தெர்யாது என்பதால் குறிப்பிடவில்லை!

2. வீட்டுக்கு வந்த பிறகு அம்மா சொன்ன விஷயம் அந்த கோயில் பட்டியல் எல்ளாம்!

3. ஒரு செயல செய்றோம்னா அதுக்கு சரியான காரணத்தோடு செய்யணும், அவன் பண்றான், இவன் பண்றான்னு நாம முட்டாள்தனமாக செய்யக்கூடாது:-)))

Saturday, September 14, 2013

3. கண்களை விடவும், காதுகள்தான் அதற்கு பெஸ்ட் தெரியுமா!வணக்கம் நண்பர்களே, பதிவுலக மகிழ்ச்சி தொடர் தொடர்கிறது.
 நான் பதிவுலகில் படிக்க ஆரம்பித்த முதல் பதிவர், ஐடியா மணி அவர்கள்தான். 2012 ஜனவரி மாதம் பொங்கல் முன்பு இருக்கும், அவரது tamilaathi.com முகநூலில் திசைகாட்டி என்னும் குருப்பின் முலம் படிக்க ஆரம்பித்தேன். ஆளு ரொம்ப நாளா லிங்க் ஷேர் பண்ணிகிட்டு இருந்து இருப்பார் போல, நான் தான் கவனிக்கல. படித்த முதல் பதிவு தலைப்பு கொஞ்சம் மங்களகரமாக இருந்ததால் மட்டுமே கிளிக் செஞ்சேன், அது வரை நான் தட்ஸ் தமிழ் செய்தி தளம் மட்டுமே படிப்பவன்!
படித்த முதல் பதிவே அவரது பக்கம் என்னை ஈர்த்தது. நான் விரும்பி படிக்க ஆரம்பித்த சில மாதங்களில், ஐடியா மணி மாத்தியோசி மணியாக மாற வேண்டிய சூழ்நிலை வந்தது. பிறகு சில பல மொக்கையான பதிவுகள் எழுதினார், சமீபத்தில் வேஷம் கலைத்த பிறகு முகநூலில் கலக்குகிறார்! நீ கலக்கு அண்ணே! ப்ளாக்கை விடவும் நாளுக்கு நாள் அங்கே பாப்புலர் ஆகிறே. இப்போ எல்லாம் நோ ஃபீலிங்க்ஸ் நீ ப்ளாக்ல எழுதலனு:-)))
ஐடியா மணிக்கு அடுத்து அவரைப் போன்று ஆணித்தரமாக அழகாக எழுதும் பதிவர்கள் இது வரை நான் பார்த்ததில்லை! அவரின் எழுத்துக்கு அப்படி ஒரு அடிமை நான்! என்னடா இவன் ரொம்ப அசிங்கமா எழுதும் ஐடியாமணியை புகழுறானே என உங்களில் அவரைப் பிடிக்காதவர்கள் நினைக்கலாம். அசிங்கம் அப்படிங்குறது எல்லாம், அவரவர் மனதில் இருக்கும் அழுக்கைப் பொறுத்தது!
அவரைப்பற்றி சொல்லவேண்டும் என்றால் தனியாக ஒரு பதிவு போட்டு சொல்லும் அளவுக்கு எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும்! ரசனை மிக்க ஒரு மனிதர்! அவர் பதிவின் துவக்கத்தில் சொல்லும் (வணக்கம் நண்பர்களே! அனைவருக்கும் இனிய --- க்கிழமை வாழ்த்துக்கள்! கும்புடுறேனுங்கோ!) அச்சச்சோ அதை நான் காதுகளால் கேட்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி இருக்கே அதற்காகவே நான் அவரது வாசகர் சொல்லிவிடலாம்! அதிலும் சில குறிகளை வைத்து அவர் எழுதுவது இருக்கே அவருக்கு அவரே அழகு!:-)))
 ஆமாம், என்னதான் நீங்க பதிவுகளை கண்களால் படிப்பதைக் காட்டிலும், நான் காதுகளால் படிப்பது அப்படி ஒரு சுகம் எனக்கு!
2012 ஃபெப்ரவரி மாதத்தில் அவரை முகநூலில் இணைத்து பேச ஆரம்பித்தேன், பிறகு நாற்று குழுமத்தில் அவர் என்னை இணைத்ததால் நண்பர்கள் ராஜ் அண்ணா, தமிழ் நாற்று நிரூபன் அண்ணா மற்றும் குட்டிஸ்வர்க்கம் ஆமினா அக்கா இவர்களது வலைப்பூக்களை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது! ஒவ்வொரு பதிவரும் ஒரு வித எழுத்து நடை! அவர்களது பதிவுகள் படிக்கப் படிக்க இன்னும் எதிர்பார்ப்பு என்னுள் தூண்டியது! ஆனால் நமது அபிமான பதிவர்களால் தொடர்ந்து எழுத முடியாமல் போவதுதான் என்னைப்போன்ற தீவிரமான வாசகருக்கு மிகப்பெரிய ஏமாற்றம்!:-)))
ரசனை என்பது மனிதருக்கு மனிதர் மாறுபடலாம், ஆனால் ஐடியா மணி போன்ற கில்மா எழுத்து பதிவர் மட்டும் நான் ரசிப்பதாக யாராவது முடிவு பண்ணிட்டா ஐயாம் வெரி சாரி. ஆரம்பத்தில் நண்பர்கள் ராஜ் அண்ணாவின் எழுத்தும் எனக்கு பிடிக்கும்! அவரது எழுத்தை படித்ததால் என்னவோ எனக்கும் எழுதணும் என்ற ஒரு சின்ன தாக்கம் மனதில் தோன்றியது! 2012 ஏப்ரல் பிறகு சில பிரச்சனைகள் நாற்று குழுமத்தில் வந்ததால், நாற்று குழுமமே அமைதியாக மாறியது! அதன் பிறகு பதிவர்களுக்கும் எனக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டது! அடுத்து நான் எப்படி இன்னும் பல வலைப்பூக்களைத் தேடிச்சென்று படித்தேன் என்றும், இங்கு எப்படி எழுத வந்தேன் என்ற கதையும் நீங்க அடுத்த பகுதியில் எதிர்பார்க்கலாம்!
பின்னூட்டம் என்பது புதிய பதிவர்களுக்கு ஒரு ஊக்க மாத்திரை. அதை தவறாமல் இந்த தொடர் ஆரம்பம் முதல் கொடுத்து என்னை உச்சாகப்படுத்தி மேலும் நான் தொடர்ந்து எழுத ஊக்குவித்த அனைத்து சக பதிவர்களுக்கும் நன்றிகள்.
 பதிவுலகம் அப்படிங்குறது ரொம்ப அதிசயமான ஒன்று, அதிலும் வெறும் பின்னோட்டத்தாலும் பதிவர்களின் பதிவுகள் படிப்பதாலும் அவர்களின் மீது நமது கவனம் செல்கிறது என்றால் எழுத்தின் உயிர் ஓட்டத்தை உணருங்களேன்!
பின் குறிப்பு:
நான் கணினியில் திரையை வாசித்துக்காட்டும் சிறப்பு மென்பொருள் நிறுவி இருப்பதால், திரையில் தோன்றும் அனைத்தையும் அது வாசித்து காட்டுவதால் நான் படிக்க வேண்டிய அனைத்தையும் காதுகள் வழியாகத்தான் கேட்பது.
 ***
 கண்களால் பதிவுகளைப் படிப்பதைக் காட்டிலும் எனக்கு செவிகளால் பதிவுகள் படிப்பதுதான் சுகம்!
--
தொடரும்.

Thursday, September 12, 2013

2. அதெல்லாம் சொன்னா புரியாதப்பா, அனுபவிச்சாத்தான் தெரியும்:-)வணக்கம் நண்பர்களே, பதிவுலக மகிழ்ச்சி தொடர் தொடர்கிறது.

 நேற்று நான் எழுதிய பதிவில், நமக்கு மட்டும்தான் அது போன்ற ஆசை எல்லாம் இருக்குமோனு நினைத்து கொஞ்சம் பயத்தோடு எழுதியது, பரவால நம்ம டவுட்டு க்ளியர் ஆயிடுச்சு:-))) சரி டைம் வேஸ்ட் பண்ணாம, இன்றைய பதிவுக்கு போகலாம் வாங்க!

பிறவியிலேயே எனக்கு பார்வை குறைபாடு இருப்பதால் என்னால் சுயமாக புத்தகம், செய்திதாள், எதையுமே கண்களால் பார்த்து படிக்க முடியாது, எழுதவும் முடியாது. இன்றளவிலும் யாராவது படித்து காட்டினால்தான் சரி. ஐயோ நாம இப்படி பிறந்திட்டோமேன்னு ஆரம்பத்தில் வீட்டிலும் எனக்கும் வருத்தமாகத்தான் இருந்தது. அந்த குறை ரொம்ப வருத்தத்தை ஏற்படுத்தியது. ஆனால் போகப்போக எல்லாம் சரி ஆயிடுச்சு. (எந்த ஒரு பிரச்சனைக்கும் சரியான முடிவு இருக்கும். ஆனால் அதை நாம் அடையும் வரை சரியாக போராடனும்) அப்படீங்கிறத நான் நம்புறவன்!

குறைகள் இல்லாத மனுஷன் இங்கே யாரடா,
 சிலருக்கு உடலில் குறை.
 சிலருக்கு மனதில் குறை!
 மொத்தத்தில் எல்லாரும் இங்கே குறைகளுடனே வாழ்கிறோமடா!
நம் எல்லாருக்குள்ளும் எதோ ஒரு குறை இருக்கத்தான் செய்யும். அதை எல்லாம் நாம் பெருசு படுத்திக்கிட்டே இருந்தா லைஃப்ல முன்னுக்கே வர முடியாது என்பதை நான் புரிந்து கொண்ட பிறகு வாழ்க்கையை எனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டு வாழ்க்கையை சந்தோஷமா வாழ்ந்துகிட்டு வர்றேன்.:-)))

2012 ஜனவரி மாதம். ஒரு பதிவரின் மூலம் கிடைத்தது பதிவுலக அறிமுகம். அதைத் தொடர்ந்து பல பதிவர்களின் பதிவுகளை தேடிச் சென்று படிக்க ஆரம்பித்தேன். ஆனால் என்னை பதிவுகள் எழுதுற அளவுக்கு அது கொண்டு வரும் என்று சத்தியமா நான் ஆரம்பத்துல எதிர்ப்பார்க்கல:-)))

 அந்த பதிவரிடம் இருந்து ஒரு நாளைக்கு ஒரு பதிவை எதிர்பார்க்குறதே பெரிய விசயம். அதனால அவரோட பழைய பதிவுகள் எல்லாம் படிக்க ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில் அவர் எழுதிய மொத்த பதிவுகளும் படித்து முடித்த பிறகு அவரது எழுத்தின் மீது இன்னும் எதிர்பார்ப்பு அதிகரித்தது.
அதன் பிறகு அறிமுகம் ஆன மற்ற பதிவர்களது பதிவுகள் படிக்க ஆரம்பித்தேன். படிக்க படிக்க எல்லோரது பதிவுகளுமே எனக்குப் பிடித்துப் போனது. ஒவ்வொரு பதிவருக்கும் ஒரு எழுத்து நடை,

சிலர் எமோஷனலாக எழுதுவார்கள்,
 சிலர் புத்திசாலியாக எழுதுவார்கள்!
 சிலர் காமடியாக எழுதுவார்கள்,
 சிலர் எப்பவும் கவிதையாகவே எழுதுவார்கள்!

 இப்படி பலர் பல விதத்தில் எழுதினாலும் ரசிக்கும் ரசனை ஒவ்வொருத்தருக்கும் வேறுபட்டது என்பதால் எனக்கு பிடித்த பதிவர்களைப் பற்றி நான் எழுத ஆரம்பித்தால், ஒவ்வொரு பதிவரும் தனக்கென ஒர் தனி எழுத்து நடை. அதை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். அதெல்லாம் அடுத்தடுத்த பதிவில் விரைவில்.

 எனது அபிமான பதிவர்களின் பதிவுகளை படிக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி இருக்கே அதை என்னால் இங்கே சொல்லிப் புரிய வைக்க முடியாது. அவ்வளவு மகிழ்ச்சி எனக்குள், உண்மையில் என்னை போன்று தீவிரமான வாசகர்களை ஒரு பதிவர் பெற்றுவிட்டால் அவர்தான் பதிவுலக சூப்பர் ஸ்டார் சொல்லிவிடலாம்:-)))

என்னிடம் யாராவது ’நீ பதிவராக இருக்க ஆசை படுகிறாயா அல்லது, வாசகராக இருக்க விரும்புகிறாயா’ என்று கேட்டால் நிச்சயமாக வாசகராகவே இருக்க விரும்புவேன்! பதிவுகளைப் படிப்பதில் அப்படி ஒரு சுகம் இருக்கிறது!

***

 கண்களால் பதிவுகளைப் படிப்பதைக் காட்டிலும்,
 எனக்கு செவிகளால் பதிவுகள் படிப்பதுதான் சுகம்!
 ---
 தொடரும்.

Tuesday, September 10, 2013

1. பதிவுலக மகிழ்ச்சி, மொக்கை கவிதை:-)


பதிவுகள் எழுதி,
பப்லிஷ் செய்து,
பின்னோட்டம் வந்திருக்கிறதா என்று
அடிக்கடி எட்டி பார்ப்பதும் மகிழ்ச்சிதான்!