Monday, June 09, 2014

2. ஸ்கூல் பைய்யனும், சூப்பர் ஸ்டாரின் கோச்சடையானும்!

முந்தைய பகுதியில், நான் சிவாஜி முதல்-எந்திரன் வரை தலைவர் படத்தை எப்படியெல்லாம் பார்த்தேன் என்பதைப்பற்றி எழுதி இருந்தேன். பதிவு கொஞ்சம் பெரிதாக போய்விட்டதால்
தொடரும் போட்டுட்டேன். முதல் பகுதியை படிக்காதோர் இங்கே கிளிக் செய்து படித்து வரவும்.


எந்திரனுக்கு பிறகு, தலைவர் Sultan The Warrior, Rana என்னும் தலைப்புக்களில் நடிக்கிறார் என்றும், 2012ல் அடுத்த படத்தை எதிர்பார்க்கலாம் என்றும் ஊடகங்கள்
வழியே பல தகவல்கள் வந்துகொண்டே இருந்தன.
இன்னொரு பக்கம், வர போகும் படம் பொம்மைப்படமாம் அதுல போய் நடிச்சி இருக்காராம்னு எல்லாம் கேலியும் கிண்டலுமா சிலர் பேசிக்கொண்டு இருந்தனர். அதற்கு ஏற்ப்ப

படம் வர தாமதமும், தலைவருக்கு உடல் நிலை சரி இல்லாம போகவும் சரியாக இருந்தது. ‘இந்தியாவுல முடியலியாம், சிங்கப்பூருக்கு தூக்கிட்டு போய் இருக்குறாங்கனு
தலைவரை பிடிக்காதோர் பேசுவதை எல்லாம் கேக்க வேண்டி இருந்தது.
அதற்கும் மேலே சிலர் அவரு செத்துப்போயிட்டார்னு­ எல்லாம் கிளப்பி விட்டு இருந்தனர். அதை கேட்டதும் முதலில் எனக்கு வருத்தமாகத்தான் இருந்தது. என்ன பண்ண
முடியும், உலகத்துல எந்த ஒரு பிரச்சனையில் இருந்தும் தப்பித்துக்கொள்ளலாம்­. ஆனா சாவில் இருந்து யாரும் இங்கு தப்பித்து சாதனை படைக்கலியே.
ஒரு வருடமோ இல்ல பத்து வருடமோ தான் மருத்துவத்தால மரணத்தை தள்ளி போட முடியுது.
நிச்சயமா அந்த செய்தியை கேட்டதும் கோடிக்கணக்கான ரஜனி ரசிகர்கள் சோகத்தில் மூழ்கி இருப்பார்கள். ஆனால் அதற்குள்ளாகவே அதெல்லாம் புரளி தலைவர் குணம்
அடைந்து விட்டார். விரைவில் சென்னைக்கு தலைவர் திரும்புவார் என்றும் ரஜனி குடும்பத்தாரே அறிவித்து இருந்தனர். அதை கேட்டதும் அப்புரம் என்ன ஒரே சந்தோஷம்
தான்.

ரஜினியின் அடுத்த படம் கோச்சடையான் என்றும், அது இந்தியாவில் முதல் motion capture தொழில் நுட்பம் வரிசையில் எடுக்கும் ஒரு animation படம்னு அறிவித்து
இருந்தனர். முதலில் 2013 கடைசியில் படம் வெளியிடுறதா திட்டம்
இருந்ததாம். படம் வருவதில் தாமதம் ஏற்பட்டுகொண்டே இருந்தது. ஏற்கனவே ட்ரைலரை பார்த்த பலரும் விமர்சனத்தை கொட்டி தீர்த்து விட்டனர்.

‘அது பொம்மைப்படமோ இல்ல ஊமைப்படமோ, எந்த படம் ஆனாலும் நா பார்க்கணும் என்பதுல உறுதியாக இருந்தேன்.
அப்படி இருக்க இந்த வருடம் மார்ச் ல கோச்சடையான் இசை வெளியிட்டனர். அவ்வளவுதான். அந்த சமயம் எனக்கு வேற செமஸ்ட்டர் பரிச்சை நடந்து கொண்டு இருந்தது.
டவுன்லோட் செய்து கிட்டதட்ட ஒரு வாரத்துக்கும் மேல கோச்சடையான் தான்.

பொதுவாக ஏ. ஆர். ரகுமான் பாடல்கள் எல்லாம் கேட்டதும் பிடிச்சிடாது எனக்கு. ஆனா கேக்க கேக்க பிடிச்சிடும். ‘எனக்கு பிடித்த இசையமைப்பாளர்களில் ரகுமானும்
ஒருத்தர்!
கோச்சடையானில் முதலில் கேட்டதுமே பிடித்த பாட்டு, லதா ரஜினிகாந்த் அவர்கள் பாடிய காதல் கணவா உந்தன் கரம் விட மாட்டேன் தான். பாடல் வரிகளும் அவரின் குரலும்
என்னை மீண்டும் மீண்டும் கேக்க தூண்டியது.
அடுத்ததா எனக்கு பிடிச்சது சின்மயி மற்றும் ஸ்ரீநிவாஸ் பாடிய
செந்தீ விழுந்த செம்பொற் பாறையில்
மந்தி உருட்டும் மயிலின் முட்டையாய் ...
இதயம்
நகர்ந்து நகர்ந்து
நகர்ந்து போகுதே
பாடல்!

ஆல்ரெடி நான் சின்மயியின் தீவிர ரசிகன் நான், நண்பன் பாடல் வெளி வந்த போது எனக்கே இப்போ நினைச்சா ஆச்சர்யமா இருக்கு! அந்த சமயம் எப்போ பார்த்தாலும்
அஸ்க்குலக்காத்தான் கேட்டுகிட்டுஇருப்பேன்.
என்னே ஒரு குரல், ச்சோ ஸ்வீட். மிஸ்யூ சின்மயி இப்போதெல்லாம் உங்க பாடல்கள் அதிகம் வருவதில்லை.
படத்தில் இருக்கும் மற்ற எல்லா பாடல்களுமே சூப்பர்தான்.

ஒரு வழியா மே 9 படம் வெளிவருவதா டேட் அறிவித்து விட்டனர். சரியான சமயம். எனக்கும் கோடை விடுமுறை. தம்பியும் ஸ்டடி ஹாலிடேஸ்காக வந்து இருந்தான்!
நாள் நெருங்க நெருங்க ஒரு பதற்றம் எனக்குள்ள. தம்பி கிட்ட நா சொல்லல. நாம சென்னைக்கு படம் பார்க்க போறோம்னு. டிக்கெட் கிடைச்ச பிறகு அவன்கிட்ட சொல்லலாம்ட்டு
விட்டுட்டேன். (அவனுக்கொரு இன்ப அதிர்ச்சி கொடுக்கத்தான்)

2010ல் எந்திரனை பார்க்க முயர்சி எடுத்தபோது, பெருசா ஃப்ரென்ட்ஸ் சர்கிள் இல்லாததால படம் பார்க்க முடியல சென்னைக்கு வந்து! ஆனா இந்த முறை உறுதியாக, நம்பிக்கையோடும்
இருந்தேன். ஏன்னா 4 வருடத்தில் ஏற்பட்ட மாற்றம்! இந்த இடை பட்ட காலத்தில் இணையத்தில்தான் எனக்கு 90% நட்பும் கிடைத்தது!
மே 6.. செவ்வாய் கிழமை.. டிக்கட் வாங்க முயற்சி எடுக்க ஆரம்பிச்சேன்...

‘அவருக்கு போன் பண்ணி கேக்கலாமா, இல்ல இவருக்கு பண்ணுவோமா! ஒரே குழப்பம் எனக்கு..
ஒருவழியா அந்த பேரை யோசிச்சு போன் போட்டுட்டேன். ‘ஹலோனு ஆரம்பிச்சு! 2நிமிடம்தான் பேசி ஓக்கே தேங்க்யூ சார்னு முடிச்சிட்டேன்!
போனை வெச்ச பிறகுதான் சுதாரிச்சு கொண்டு யோசிக்க ஆரம்பிச்சேன்! பெருசா நானும் அவரும் பேசியது எல்லாம் கிடையாது. மொத்தமா இது வரை கூட்டி கழிச்சு பார்த்தா
பத்து நிமிடம்தான் போனில் பேசி இருப்போம்! ஒருத்தர மட்டும் நம்பி இருப்பது சரி இல்லைனு ஒரு பக்கம், இன்னொரு பக்கம் இரு பார்ப்போமேனு.

அன்னைக்கு ஈவனிங்கே கோச்சடையான் அட்வான்ஸ் புக்கிங்... மின்னல் வேகத்தில் விற்பனையான டிக்கெட்டுகள்! நு படிச்சேன்!
அப்போ ஆரம்பிச்சது ‘ஒருத்தர மட்டும் நம்பி சொல்லி இருக்கோம். அவரு டிக்கட் வாங்கிடுவாரானு ஒரே பதற்றம்!
அடுத்த நாள் காலை கன்ஃபார்ம் பண்ணிக்க, ’3 நாட்கள் டிக்கட் விற்று தீர்ந்து விட்டதாம், என்ன ஆச்சு நம்ம டிக்கட்டுனு கேட்டேன்! ‘இல்லை... அவர் சொன்னார்!
ஆனா ஒரே சேட்டில் கண்டிப்பா பார்க்க போவோம்னு சொல்லிட்டார்! அதுக்கு மேல என்ன இருக்கு, நானும் ஹாப்பி ஆயிட்டேன்! நம்பிக்கைதானே வாழ்க்கை! மனதளவில் ரெடி
ஆயிட்டேன்!

மீண்டும் கோச்சடையான் புயல் வீசத்துவங்கியது! அன்று முழுவதும் கோச்சடையான் பாடல்கள் கேட்பதும், கோச்சடையான் பார்த்ததும் என்ன தலைப்பில் பதிவுக்கு தலைப்பு
வைத்து எழுதணும்னு ஒரே ஹேப்பியா யோசிச்சு கிட்டே இருந்தேன்!
அடுத்த நாள் காலை.. மே 8... அப்பா படித்து காட்டுகிறார் ‘கோச்சடையான் மே 9 வெளி வராது என்று! 23ல் வெளியிட முடிவு செய்து இருக்கிறோம் என்று!
அந்த செய்திய கேட்டதுமே ஒரே அதிர்ச்சி எனக்கு! நா அதிர்ச்சி அடைஞ்சாலும் ஒரு வேளை தெலுங்கு வெர்ஷந்தான் போல இருக்கும்னு. மீண்டும் அப்பாவ பேப்பர்ல
என்ன போட்டு இருக்குனு முழுவதும் படிக்க சொன்னேன்!

அப்பா படிச்சு முடிச்சதும் பைத்தியம் பிடித்தது போல ஆச்சு எனக்கு! இன்னும் ஒரு நாள்ல தலைவர் படத்தை பார்க்க போறோம்னு ஒரே ஆசையா இருந்த எனக்கு ஒரே
அதிச்சி!
அந்த நாள் முழுக்க ஒரே சோகம்தான். ஆனால் அடுத்த நாள் அதை விடவும் பெரிய அடி! சோகத்துக்கு மேல சோகம்!
சொன்னது போல மே 9 படம் வந்து இருந்தா அந்த இழப்பை நான் தவிர்த்து இருந்து இருக்கலாம்! ’நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் அப்புறம் என்ன இருக்கு...

மே 9 வெள்ளிக்கிழமை மதியம் ஒரு 12 மணியளவு இருக்கும். நான் தூங்கிட்டு இருந்தேன் தம்பி கம்யூட்டர் யூஸ் பண்ணிக்கிட்டு இருந்தான். வீட்டுல பவர் இல்ல இன்வெர்ட்டர்லதான்
ஓடிகிட்டு இருந்திச்சு. அந்த சமயம் பார்த்து அம்மா மிக்ஸி போட்டு இருந்து இருக்குறாங்க. லோட் தாங்காம கம்யூட்டர் ஷட்டவுன் ஆகி இருக்கு! தம்பி மீண்டும் ஆன் செஞ்சு
பார்த்தா ஹார்டிஸ்க் லோட் ஆகல.
நானும் எழுந்து பார்த்தேன் முடியல. கடைக்கு போனா ஹார்டிஸ்க் டெட் ஆச்சுனு சொன்னான் அப்புரம் என்ன அடுத்த கட்டமா டேட்டா ரிக்கவரி செய்ய முயற்சி எடுத்தோம்
செட் ஆகல. அவ்வளவு தான் போனது போச்சு திரும்ப வர போறது இல்ல.
கிட்டதட்ட 6 வருட டேட்டா. 2009 ல இருந்து சேமிச்ச எல்லா டேட்டாவுமே போச்சு.

ஏற்கனவே இது போல ஒரு ஹார்டிஸ்க் பழுது அடைஞ்சு இருந்தாலும் அப்போ புது ஹார்டிஸ்க் வாங்கி அதுல பழய ஹார்ட் டிஸ்க் ல இருக்கும் டேட்டா எல்லாம்
ரிக்கவரி செஞ்சு ஏத்தியாச்சு. அது நடந்து ஒரு 6 மாதம் தான் ஆகி இருக்கும்
அதற்குள்ளாவே இப்படி ஒரு நிகழ்வு. அடுத்ததா என்ன, கேரண்டி இருப்பதால் ஹார்ட்டிஸ்க் ரிப்லேஸ்மெண்ட்காக அனுப்பி வெச்சிட்டோம்.

கோச்சடையானும் பார்க்க முடியல ஹார்டிஸ்க்கும் போச்சு. ஒரு வேளை கோச்சடையான் சொன்ன தேதிக்கு ரிலிஸ் ஆகி இருந்தா என்னோட ஹார்டிஸ்க் பத்திரமா இருந்து
இருக்கும் போல! கிட்டதட்ட 2 நாளுக்கு ஒரே ஃபீலிங்க்ஸ் தான். அப்புரம் வீட்டுல
தூங்கிட்டு இருந்த லேப்டாப் எடுத்து யூஸ் பண்ண ஆரம்பிச்சேன்! அடுத்து வந்த நாட்கள் எல்லாம் ஒரே பிசியா போச்சு. தேடினால் கூக்குளில் கிடைக்கும் டேட்டாவை
தேடினேன். ஆனா 23ஆம் தேதிக்கு 2 நாள் முன்னாடி தம்பிக்கு ப்ராக்டிக்கல் எக்ஸாம்
இருப்பதால் அவன் காலேஜுக்கு கிளம்பி போயிட்டான்! இப்போ யாருடன் படம் பார்க்க போவதுனு யோசிச்சு கொண்டு இருந்தேன். ஊரில் இருக்கும் சித்தி பைய்யனுக்கு போன்
போட்டு சொன்னேன். அவனும் தம்பி. நான் ரஜினியின் ரசிகன்தான்.கண்டிப்பா­ வர்றேனு சொன்னான். மே 22 ஈவ்னிங் ஆச்சு. தம்பியும் வீட்டுக்கு வந்திட்டான்.

டிக்கட் கன்ஃபார்ம் பண்ணிக்க அந்த ஃப்ரெண்டுக்கு போன் போட்டேன். ‘டிக்கட்... தான் கேட்டேன். இல்ல நா அப்புரம் கால் பண்ணுறேன்னு சொல்லிட்டார். மணி 8 ஆச்சு,
எட்டரை, ஒன்பது தாண்டியாச்சு! ஒரு பக்கம் தூக்கம் இன்னொரு பக்கம் பதற்றம் என்ன நடக்குமோனு! ஏற்கனவே அவர் சொல்லி இருந்தது போல முதல் காட்சி 8 மணிக்கு ஆரம்பிக்கும்னு
சொல்லி இருந்தார். அதனால் இங்கு இருந்து அதி காலை 3 மணிக்கு கிளம்பினால் சரியாக இருக்கும்னு முன்னாடி ப்ளான் போட்டு இருந்தேன். (டிக்கேட் கிடைப்பததற்கு முன்னாடியே)
எத்தனை மணிக்கு ஷோ டிக்கட் பத்தி தெரிஞ்சுக்கலாம்னு பார்த்தா எதோ பிசியா இருக்கிறாரு அவரு.

ஒரு மனுஷன் ஒரு கட்டம் வர தான் போராடுவான் அதற்கு பிறகு சோர்ந்து போய் விடுவான். தூக்கம் வந்தது. கண்ணை மூடிட்டேன் அவ்வளவுதான்.

நைட் ஒரு பத்தரை இருக்கும் அவர் கிட்ட இருந்து போன் கால்
’டிக்கெட் கைல கிடைச்சிடுச்சு. ஆனா ஷோ 11 மணிக்கு தான்னு சொன்னார். ஒரு பத்தரை அளவுல வந்தா போதும்னு சொல்லி வெச்சிட்டார். ஒரு பக்கம் டிக்கெட் கிடச்ச
சந்தோஷம். அது முதல் காட்சி இல்லாட்டியும் என்ன இப்பொ எனக்கு டிக்கெட் கிடைச்சதே பெரிய விசயம்தான்!

நல்லா தூங்கிட்டே 4 மணிக்கு எழுந்தோம். ரெடி ஆகி சென்னைக்கு நானும் சித்தி பைய்யனும் கிளம்பிட்டோம்!
***
அனேகமா அடுத்த பதிவுல இந்த தொடர் முடிஞ்சிடும் நினைக்குறேன்..
தொடர்புடைய பதிவுகள் :


2 comments:

  1. அந்த நண்பர் ஸ்கூல் பையனா?
    நல்ல விர்விருப்பாத்தான் போய்க்கிட்டிருக்கு தொடர்கிறேன்.

    ReplyDelete
  2. டே டே டே! எப்படா முடிப்ப? முடிிிிிிிிிிிிிிிிிிியல!

    ReplyDelete