Tuesday, June 03, 2014

பிரிந்தோம், சந்திப்போம். ஒரு மொக்கை கவிதை:-)

by Mahesh
இவ்வளவு நாட்களாக
 குரல் -மூலமாகவும்
 எழுத்து -மூலமாவும்
 சந்திச்சுகிட்டு இருந்த நாம

நேர்ல -சந்திச்சா
 அதுல நிச்சயமா
நம்ம 2 பேருக்குமே
 ஒரு ஆத்ம திருப்தி இருக்கும்னு
 எப்படி- நம்புற
பெண்ணே!

இங்க யாருக்கு வேணும் உன்னை சந்திப்பதால் கிடைக்கும்
 ஆத்ம திருப்தி
 கண்ணே!

அதெல்லாம்..
 கொஞ்சமாச்சும்
மனசாட்சி இருக்குரவுங்க கேக்குறதுலதான்’
 ஒரு அர்த்தம் இருக்கும் பெண்ணே!

உனக்கெல்லாம் கேக்குறதுக்கு
 அருகதையே
 இல்ல -கண்ணே!

உள்ளுக்குள் எதையும் வைத்து எழுதவில்லை
 நான் பெண்ணே.
 கால ஓட்டத்தில்
 இணையம் என்னும் மைதானத்தில்,
 2 ஆண்டுகள்
 உன்னுடன் ஓடிப்பார்த்ததில்,. இறுதியில்
 ஆறுதல் -பரிசாக
 கிடைத்தது என்னவோ
 வலியும் அனுபவமும்தான்.

ஓர் ஆண்டு பிறகு
 நேற்று இரவு
 அந்த பெருமாளை தரிசிக்க
 நீ திருப்பதிக்கு வர்ரேன்னு சொன்னதும்
 உன்னை நேரில்
 எந்த நம்பிக்கையில்
 சந்திக்க வருவேனு
 எப்படி எதிர்பார்த்தாயோ தெரியவில்லை பெண்ணே!

துளி -அளவு நம்பிக்கை
உன் மீது -எனக்குள்
 நீ மட்டும்
 விதைத்து இருந்தால் துள்ளி குதித்து சந்தோஷமாக
 வந்து இருப்பேன்
 நேரில் சந்திக்க. உன்னை-பெண்ணே!

சரி போனது போகட்டும்
 இனி
உண்மையாக- சொல்கிறேன் உத்திரவாதமும் தருகிறேன்
 நம் கடந்த காலம் பற்றி
இனி நாம்
 பேசவோ -நினைத்து பார்க்கவோ வேண்டாம்.

நிகழ் காலமும்,, எதிர்காலமும்
 நம் கையில் இருக்கும் வரை:-)
 ***
 ஹஹஹ எப்படி இருந்திச்சு ஃப்ரென்ட்ஸ் மொக்கை கவித உங்கள் பதில் சொல்லிட்டு போங்களேன்:-)

அடுத்து வர இருக்கும் பதிவு ஸ்கூல் பைய்யனும், சூப்பர் ஸ்டாரின் கோச்சடையானும்!
தொடர்புடைய பதிவுகள் :


11 comments:

 1. இனி உண்மையான உத்தரவாதம் தானே...?

  ReplyDelete
 2. அட, அடுத்தது நானா? ஓரளவு யூகிக்க முடிகிறது..

  ReplyDelete
 3. அருமையான கவிதை மகேஷ்... உள்ளக் குமுறலைக் கொட்டியதுபோல இருக்கு.. கற்பனையோ நிஜமோ.. படிக்கையில் மனம் கொஞ்சம் வலிக்கிறது.... மகேஷும் ஒரு கவிஞர்தான்.. ஒத்துக்கறேன்ன்!!!.

  ReplyDelete
 4. ஏன் இவ்வளவு ஃபீலிங்க்ஸ்? தலைவர் சொன்னது போல் “எதுவும் கொஞ்ச காலம் தான்”னு ஜாலியா இருங்க.. காதலுக்கு இவ்வளவு முக்கியத்துவம் வேண்டாம்..

  ReplyDelete
 5. ஆஹா.... கவிதை மொக்கைன்னு நீயே சொல்லிக்ட்டாலும் நல்லாத்தான் இருக்கு. அதைவிட... அடுத்த பதிவுல எப்படி கோச்சடையானையும் ஸ்கூல் பையனையும் லிங்க் பண்ணப் போறேங்கள இன்ட்ரஸ்ட் தான் அதிகமா இருக்கு வெய்ட்டிங்....

  ReplyDelete
 6. நிச்சயமா மொக்கை இல்லை.
  ஏதோ உண்மையும் கலந்த மாதிரி தெரியுது.
  கடந்த காலத்தில் நல்லதை மட்டும் நினைச்சு பாத்துக்குவோம் மத்ததை விட்டுத் தள்ளுவோம்
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. வாவ்..... சூப்பர் சூப்பர்.... பாத்தியா ஆறுதல் பரிசா கெடச்ச வலியும் அனுபவமும் எப்படி சாதாரண பதிவரா இருந்த உன்ன ஒரு கவிதை எழுதர அளவுக்கு முன்னேத்தி இருக்கு.... எல்லாமே வாழ்க்கை நமக்குக் கத்துக் குடுக்கும் பாடமா எடுத்துக்கிட்டா நல்லதுதான்... எப்படியோ.... யாரோ ஒருத்தரோட மூலமா உனக்குக் கிடைச்ச வலி மறுபடியும் உன்ன பதிவு எழுத வச்சதுல எனக்கு ரொம்ப சந்தோசம்... இதே புத்துணர்வோட பதிவு எழுதிகிட்டே இருந்தா ரொம்ம்ப ரொம்ப மகிழ்ச்சி....

  ReplyDelete
 8. உங்களின் உள்ளக் குமுறலைக் இதன் மூலம் அறிய முடிந்தது அதை அழகாக கொட்டியதுபோல இருக்கு..

  ReplyDelete