Wednesday, June 11, 2014

ஸ்கூல் பைய்யனும், சூப்பர் ஸ்டாரின் கோச்சடையானும்! நிறைவு-பகுதி!

முதல் பகுதிஇரண்டாம் பகுதி
மே 23ஆம் தேதி காலை நானும் சித்தி பைய்யனும் ஐந்தேகால் மணிக்கு ட்ரைன் ஏறிட்டோம். அந்த ட்ரைன் பத்து மணிக்குத்தான் செண்ட்ரலை அடையும். எப்படியும் படம் 11 மணிக்கு
என்பதால மெதுவாவே போவோம் அவசரம் எல்லாம் ஒண்ணும் இல்லைனு
இருந்திட்டேன். ட்ரைன் அரக்கோணம் நெருங்கிக்கொண்டே இருந்தது. அப்போதான் எனக்குள்ள லைட்டா பயம் வர துவங்கியது. எனக்கு ட்ரைன் வேகமா போனாத்தான் பிடிக்கும் எங்கயாச்சும்
நிறுத்திட்டாலோ, இல்ல நின்னு நின்னு போனாலோ கடுப்பாயிடுவேன்.


என்னோட பயத்துக்கு காரணம் அரக்கோணத்துல இருந்து சென்னைக்கு 60 கிமி 30க்கும் மேற்பட்ட ஸ்டாப்பிங்க் இருக்கும். நாங்க பயணம் செய்து கொண்டு இருக்கும் ட்ரைனோ passenger train எல்லா ஸ்டாபிங்கிலும் நின்னு நின்னுதான் போகும்.அதை நினைச்சு கிட்டே இருந்த போது அரக்கோணம் ஸ்டாபிங்கும் வந்திடுச்சு. அப்போதான் அந்த announcement வந்து காதுல விழுந்தது!

’மேட்டு பாளையம்ல இருந்து சென்னைக்கு போகும் நீலகிரி எக்ஸ்ப்ரெஸ் 3ஆவது ஃப்ளாட்ஃபார்முக்கு வரும்னு காதுல விழுந்தது. உடனே அந்த ட்ரைனை விட்டு இறங்கி 3ஆம் ஃப்ளாட்ஃபார்ம்
க்கு ஓட துவங்கிட்டோம். ட்ரைன் வந்ததும் உடனே கிளம்பிடுவான். அதுனால வேகமா ஓவர் ப்ரிட்ச் படி ஏறி இறங்கிட்டு இருந்தோம். சரியா நாங்க கீழ இறங்கவும் ட்ரைன் வரவும்
சரியாக இருந்தது!

23 அல்லது 24 பெட்டிகள் இருக்கும் ஒரு ட்ரைனில் வெறும் இஞ்சின் பின்னாடியும் கடைசியிலும்தான் ஜெனரல் கம்பார்ட்மெண்ட் இருக்கும். இருக்குரதுலயே கொடும என்னனா
ஜெனரல்ல தூர ட்ரைன்ல ஏறுவதுதான். ஏற்கனவே ட்ரைன் நிரம்பி வருவதால் ஸீட் கிடைக்க வாய்ப்பு இருக்காது. நாங்கள் கடைசி பெட்டி ஜெனரல் ஏற பின்னோக்கி ஓடினோம். ஏற்கனவே
கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டு இருந்தது. பரவால ஆல்ரெடி இதெல்லாம் பல முறை பார்த்தாச்சு. அதால ஒன்னும் கஷ்ட்டமா தெரியல. சந்தோஷம்தான் இந்த ட்ரைன்ல போனா இன்னும்
ஒரு மனி நேரத்துல சென்னை ரீச் ஆயிடலாம்ல.

ட்ரைன் நாங்க ஏறவும் கிளம்பவும் சரியாக இருந்தது. காலை ஐந்தரை மணிக்கு சென்னைக்கு போக வேண்டிய ட்ரைனாம் 3 மணி நேரம் லேட்டா போறான். நமக்குதான் இந்த சமயம் லக்கோ
லக்கு.

சரியான வேகம். நிறுத்தம் எல்லாம் இந்த ட்ரைன்ல கிடயாது அரக்கோணம் அடுத்து பெரம்பூர்தான். ஹேப்பியா இருந்தது.
அடுத்ததா இன்னொரு யோசனை. எப்படியும் ட்ரைன் எட்டே முக்காலுக்கு செண்ட்ரல் ரீட்ச் ஆயிடுவான். அதுக்கு அப்புரம் என்ன பண்ணுறதுன்னு இருந்தேன்.

‘ஹலோ அண்ணா, நம்ம ப்ளான் எல்லாம் மாறிடுச்சு. எதிர்பார்க்கவே இல்ல அரக்கோணத்துல நீலகிரி பிடிச்சிட்டேன். நாம போட்ட டைம விடவும் சீக்கிரம் வந்திடுவேன். என்ன
பண்றதுன்னு நானு கேட்டேன்.அப்படியா டா சரி அப்போ நேரா வீட்டுக்கு வந்திடுனு சொல்லிட்டார். நானும் ம்ம் சரினு சொல்லிட்டேன்.

ஆமா நா யாரோடு போன்ல பேசினேனு சொல்ல மறந்திட்டேனே. அந்த அண்ணன் பேரு சுப்பிரமணி. தெலுங்குதான் ஆந்திராவுல இருந்து அவரோட அப்பா காலத்துலயே சென்னைக்கு வந்து செட்டில்
ஆயிட்டாங்க. கூட பிறந்தது ஒரு அக்கா 2 பேருக்குமே பார்வை குறைபாடு பிரச்சனை உள்ளவர்கள். இப்போ அப்பா இல்ல
அம்மா மட்டும்தான். 2010ல ஸ்கைப்ல பேச ஆரம்பிச்சோம். இதுவர நேர்ல பார்த்தது கிடையாது. இப்போ ரொம்ப ஆர்வமா போறேன் அவரையும் அவர் கட்டிய புது வீட்டையும் பார்க்க!.

ட்ரைன் சரியா சென்னைக்கு எட்டே முக்காலுக்கெல்லாம் செண்ட்ரலுக்கு ரீட்ச் ஆயிட்டான். அங்க இருந்து தாம்பரம் போற ட்ரைன் பிடிச்சு கிண்டிக்கு ஒன்பது இருபதுக்கெல்லாம்
வந்து சேர்ந்திட்டோம். மொத முறை நாங்க சந்திச்சுகுறதால வீடு அட்ரெஸ் எல்லாம் தெரியாது அதுனால அந்த அண்ணனும் அவரோட அம்மாவும் எங்களை வீட்டுக்கு கூட்டிட்டு போக
ஸ்டேஷனுக்கு வந்தனர். வீடு ஸ்டேஷனுக்கு கிட்டயேதான், ஐந்து நிமிடம் நடந்தால் போதும்.

ஏற்கனவே போனில் வருவதை பற்றி சொல்லியதால் எல்லாம் ரெடியாக இருந்தது. வீட்டுக்கு வந்ததும் மொதல்ல ஃப்ரெஷப் ஆயிட்டு ஆரம்பிச்சிட்டோம். காலை உணவு சாப்பிடுவதுதான்!
சாப்பிட்டு முடிச்சதும் வீட்டில் இருக்கும் எல்லாரோடும் பேசினோம். ’மொத முறையா வந்து இருக்குறீங்க அவசரம் அவசரமா போயித்தான் ஆகணுமானு வீட்டுல இருக்குரவுங்க
எல்லாம் கேக்குறாங்க!
இல்ல மீண்டும் ஒரு நாள் வர்ரோம்னு சொன்னோம். ஒத்துக்கவே இல்ல படம் முடிஞ்ச பிறகாச்சும் வந்து மதிய சாப்பாடு சாப்பிட்டு ஒரு நாள் தங்கிட்டுதான் போகணும்னு சொன்னாங்க.
ஒரு வழியா பேச்சு முடிஞ்சு புது வீட்டை சுத்தி காட்ட ஆரம்பிச்சார்.
’இதோ , இது ஹாலு அது பெட்ரூம்னு எல்லாம் இவ்வளவு நீளம், அவ்வளவு அடி அகலம். அண்ணன் விளக்குவதை பார்க்கும்போது ஒரே ஆச்சர்யமா இருந்திச்சு. அவர் பட்ட கஷ்ட்டம்
எல்லாம் வீண் ஆகல!

எல்லாம் பார்த்து முடிஞ்சதும் கிளம்பிட்டோம்.
அந்த எரியா புதுசு என்பதால அண்ணனும் அவரோட அம்மாவும் வந்து பஸ் ஏத்தி விட்டனர். எப்படியும் நா போட்ட கணக்கு படி சரியா 11 மணிக்குதான்  தியேட்டர் ரீச் ஆக முடியும் என்பதால
அகென் டிக்கெட் வாங்கி வைத்த நண்பருக்கு போன் செஞ்சேன்.
‘ படம் எத்தனை மணிக்கு ஷார்ப்பா ஸ்டார்ட் ஆகும்னு கேட்டேன்.
அவரோ ஷார்ப்பாவானு ஒரு செக்கெண்ட் யோசிச்சு தெரியலனு சொன்னார்.
’சரி தோ இரு கால் பண்ணுறேன்னு சொல்லி கால் கட் செய்திட்டார். அடுத்த ஐந்து நிமிடத்தில் மீண்டும் அவர் கால் செய்து இருந்தார். படம் பனிரெண்டுரை மணிக்குத்தானாம்
நா பனிரெண்டு மணிக்கு வந்திடுவேனு சொன்னார்.
மீண்டும் யோசனை 11 மணிக்கெல்லாம் போயிடுவோம் இன்னும் ஒரு மணி நேரத்துக்கு என்ன பண்ணபோறேன்னு யோசிச்சுகிட்டே பஸ்ஸை விட்டு இறங்க வேண்டிய ஸ்ட்டாப்பிங்க் வந்ததும்
இறங்கினோம்!.
இறங்கிய இடத்துல இருந்து ரோட் க்ராஸ் செஞ்சா தியேட்டர்.
நா வெறும் தியேட்டர்தான் இருக்கும்னு நினைச்சுகிட்டு உள்ள போனேன். உள்ள போய் பார்த்தா அது ஒரு mall.
சின்ன பைய்யனா இருக்கும்போது அண்ணா அக்காவோடு ஸ்பென்சருக்கு போனது உண்டு. அதன் பிறகு இது போன்ற மால்களுக்கு போனது இல்ல.
இது மாதிரியான இடத்துக்கு வர்ரதால நிறைய நல்ல விஷயம் இருக்கும். டைம் நல்லா பாஸ் ஆகும். அங்க இருக்கும் விலைக்கு எதையும் வாங்க முடியாதுனாலும் சும்மா விலை மட்டும்
பார்த்துகிட்டே இருக்கலாம். அங்கு இருந்த எல்லா ஃப்ளோர் ஏறி சுத்தி பார்த்தோம். மணி 12ஐ தொட்டு இருந்தது. டிக்கெட் நண்பர் இடம் இருந்து போன் கால். நா எண்ட்ரன்ஸ்ல
இருக்கேன். நீ எங்க இருக்கனு கேட்டார்!. நாங்க இருக்கும் இடத்தை சொன்னோம்.
அடுத்த 5 நிமிடத்தில் எங்கள் முன் வந்து நின்றார்.

இணையத்தின் மூலம்தான் 2 பேரும் சந்தித்தோம். சொல்லிக்குற அளவு எல்லாம் நாங்க பேசியதெல்லாம் இல்ல. போன வருடம் ஜூலை இருக்லாம் ’திருப்பதிக்கு வந்து இருக்கோம்.
அட்ரஸ் சொல்லு வீட்டுக்கு வர்றோம்னு சொன்னார்.
நா ரூட் சொன்னத கேட்டு வீட்டுக்கு கரெக்ட்டா வந்திட்டார். அதுதான் எங்களின் முதல் சந்திப்பு. அந்த டிக்கெட் நண்பரும் கூடவே அவரின் நண்பரும் வந்து இருந்தார்.
முதல் சந்திப்பிற்கு பிறகு அடுத்து இதோ இந்த கோச்சடையான் பார்க்க இரண்டாவது முறை 2 பேரும் சந்திச்சு இருக்கோம்.

‘சரி என்ன நீங்க மட்டும்தான் வந்து இருக்குறீங்க, நம்ப ஃப்ரென்ட்ஸ் -- எல்லாம் வரலியானு கேட்டேன்.
அதுக்கு அவர் இல்ல நீயும் தம்பி மட்டும்தான் படம் பார்க்க போறீங்கனு சொன்னார். அதை கேட்டதுமே அதிர்ச்சி எனக்கு. அவரே தொடர்ந்து அவர் வர முடியாததற்கான காரணத்தையும்
விளக்கினார்.

அப்படியே கொஞ்சம் நேரம் பேசிட்டு இருந்தோம். பேசிய அந்த ஒவ்வொரு நிமிடமும் ஒரே சந்தோஷம்தான்.
படு வேகமா பேசிகிட்டு இருந்தோம். 2பேரோட கருத்தும் ஒத்து போய்கிட்டு இருந்திச்சு. கடைசியா நேரம் ஆகுது வானு கூட்டிட்டு போய் கைல டிக்கெட் கொடுத்து எங்களை தியேட்டருக்குள்ள
அனுப்பி வெச்சிட்டார்.
கடைசியா ஒரு முறை நன்றி சொல்லலாம் பார்த்தா முடியல அதற்குள்ளாகவே நாங்க உள்ள வந்திட்டோம்.

அப்புரம் என்னோட கவனம் எல்லாம் தியேட்டரை கவனிக்குரதுல போச்சு. சரியா படம் பன்னிரெண்டு நாற்பதுக்கு ஆரம்பிச்சான். இரண்டு ஐம்பதுக்கெல்லாம் படம் முடிச்சிட்டான்.
கோச்சடையான் ரொம்பச்சின்ன படம்தான். ஆனாலும் எனக்கு பிடிச்சு இருந்திச்சு. உள்ள போய் வெளிய வந்தது போலதான் இருந்தது! எப்படியோ இந்த முறை தமிழில் தலைவர் படத்தை அதுவும் முதல் நாள் பார்த்திட்டோமேனு
ஒரே மகிழ்ச்சி!
இதற்கெல்லாம் காரணமாக இருந்த அந்த டிக்கெட் நண்பருக்கு நன்றிய சொல்லிட்டு மீண்டும் திருப்பதிக்கு திருப்தியோடு திரும்பினோம்!
***

 இத்துடன் ஸ்கூல் பைய்யனும், சூப்பர் ஸ்டாரின் கோச்சடையானும்! என்னும் இப்பதிவு முடிகிறது!
 ***
 முற்றும்.

கடைசி வரை படம் பார்க்க காரணமாக இருந்த அந்த டிக்கெட் நண்பரின் பெயரை சொல்லாமலே பதிவை முடிச்சிட்டேனே! அவ்வ்வ்வ்வ்வ்
 கண்டு பிடியுங்கள் பார்க்கலாம் நண்பகளே!
 ***
 சின்ன க்ளூ ஒண்ணு தரட்டுமா
 கோச்சடையான் பார்க்க டிக்கெட் வாங்கி கொடுத்த அந்த நண்பரின் பெயரிலேதான் இந்த தொடர் பதிவின் தலைப்பும் ஆரம்பிக்கும்!:-) அவ்வ்வ்வ்வ்
 ***
டி.என்.முரளிதரன் சார்
 விடை இரண்டாம் பதிவு படித்ததுமே கண்டு பிடிச்சிட்டீங்க.
 வாழ்த்துக்களும், நன்றிகளும் சார்.
 ***
 3 நாட்களாக நான் கேட்டதும் அது எந்த சமயமானாலும் பார்க்காம எழுத்து பிழை திருத்தி கொடுத்த என்னில் உணர்ந்தவை
காயத்ரி அக்காவுக்கும் நன்றிகள் பல!
தொடர்புடைய பதிவுகள் :


6 comments:

 1. யாரந்த ஸ்கூல் பைய்யன்?

  ReplyDelete
 2. ஆஹா உண்மை சம்பவங்களோ மகேஷ்... அருமையா இருக்கு படிக்க.

  ReplyDelete
 3. கோச்சடையன் பார்த்த கதையை சிறப்பாக விவரித்திருக்கிறீர்கள் தலைப்புல ஸ்கூல் பையன்னு குறிப்பிடாம வேறு ஏதாவது குறிப்பு கொடுத்திருந்தா இன்னும் சுவாரசியமா இருக்கும்.

  ReplyDelete
 4. வாவ்.... சான்சே இல்ல.... இப்புடி கூட எழுத முடியுமா? ரொம்ப நல்லா ஒரு கதை படிக்கர போது இருக்கும் ஸ்வாரஸ்யம் இருந்துச்சு பதிவுல.... great going! keep it up!

  ReplyDelete
 5. டேய், போன பதிவுகள விட இந்த பதிவுதான் ரொம்ப பிடிச்சிருந்தது, நான் கூட ஆரம்பத்துல சம்பந்தமே இல்லாம பேரு வச்சிருக்கானேனு நெனச்சேன், ஆனா முழுசா படிச்சதுக்கப்பரம்தான் உண்ம புரிங்ஜிது! அப்பரம்?
  எங்க அடுத்த போஸ்ட்?

  ReplyDelete
 6. இந்த பதிவும் சூப்பர் ஸ்டாரை போலவே fast and stylish ! மிக சுவாரஸ்யமான எழுத்து நடையில், சரளமாக எழுதுகிறீர்கள் நண்பரே !

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr


  ReplyDelete