Friday, June 06, 2014

1. ஸ்கூல் பைய்யனும், சூப்பர் ஸ்டாரின் கோச்சடையானும்!

by Mahesh

எனக்கு பிடித்த முதல் நடிகர்னு பாத்தா, அது அன்றும் இன்றும் என்றும் தலை ரஜினிகாந்த் அவர்கள்தான்! அதற்கு அப்புறம்தான் மத்த நடிகர்கள் எல்லாம்!

சின்ன வயசுல இருந்தே எனக்கு அவரை ரொம்பப் பிடிக்கும்!
ஏன் பிடிக்கும், எதற்கு பிடிக்கும் எல்லாம் காரணம் தெரியாது! ஆனால் பிடிக்கும் அவ்வளவுதான்!

தலைவர எனக்கு மட்டும் இல்லாம எங்க வீட்ல எங்க தம்பிங்களுக்கும் பிடிக்கும்! தமிழ் அவர்களுக்குப் புரியாட்டியும் தலைவர் படம் போட்டா பார்ப்பாங்க! அவ்வளவு பற்று
அவர்களுக்கு தலைவர் மீது!

அவர் நடிச்ச பாட்ஷா, அருணாச்சலம், முத்து, படையப்பா, சிவாஜி, சந்திரமுகி, எந்திரன் படங்கள் எல்லாம் தமிழ், தெலுங்கு 2 மொழிகளிலும் சளைக்காம பார்த்து இருக்கேன்!
இப்பவும் போரடிச்சா தலைவர் படத்த போட்டுப் பார்ப்பேன்!அப்படி ஒரு சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகன் நான்!

அது 2007 ஆம் ஆண்டு, அது வரை டீவியில் மட்டுமே தலைவரின் படத்தை பார்த்து ரசிச்ச நான், சிவாஜி வெளி வரும்போது முதல் நால், முதல் காட்சி எப்படியாச்சும் தியேட்டருக்கு
சென்று பார்க்கணும்னு ஒரு முடிவோடதான் இருந்தேன்!
ஆனா... ஆனா... நடந்ததுதான் என்ன... தொடர்ந்து படியுங்கோ புரியும்.


படம் ரிலிஸ்க்கு முந்தைய நாள், அப்பாவிடம் போய் என்னையும் தம்பியையும் படத்துக்குகூட்டிட்டு போப்பா சொன்னேன். அவர் வெளியூர் செல்ல இருப்பதால் நாளைக்கு முடியாது
நா திரும்பி வந்ததும் அழைச்சிட்டு போறேன்னு சொல்லிட்டார்!
எனக்கு ஒரே ஏமாற்றம், என்ன பண்ணுறதுன்னே தெரியல அந்த சமயம். எப்படியாச்சும் சிவாஜிய முதல் நால் காட்சி பார்க்கணும்னு இருந்தேன். சரி நீ இல்லைனா பரவால அம்மாவை
நாங்க கூட்டிட்டு போறோம்னு சொன்னோம். அதற்கு அப்பா ஒத்துக்கல. உங்க ரெண்டு பேரையும் (என்னையும், தம்பியையும்) கூட்டிட்டு அதுவும் முதல் நாள் வேற கூட்டத்துல
போய் டிக்கெட் வாங்கி படம் பார்க்குறது எல்லாம் நடக்காத காரியம் போய் வேலைய பாருங்கனு சொல்லிட்டார்!

அந்த சமயம், அப்போதான் நா பத்தாவது முடிச்சு இருந்தேன். தம்பியோ ஆறாவதுதான் முடித்து இருந்தான். சின்ன பசங்க என்பதால் வீட்டுல 2 பேரையும் தனியா எங்கையும் போக
விட மாட்டாங்க. அதன் பிறகு என்ன சிவாஜி பாட்ட டீவிடி ப்ளேயர்ல திரும்ப திரும்ப கேக்குறதும். சென்னை தனியார் ரேடியோ சேனல்ஸ் ஆன மிர்ச்சி, சூரியன் எஃப் எம் எல்லாம்
அப்போ திருப்பதிக்கு வரும். அதைகேக்க வீட்டு மொட்டை மாடிக்கு போய் உட்காந்து கிட்டு படத்தை பற்றிய பேச்சு எப்படி இருக்குனு கேட்டுகிட்டே மூன்று நாட்களையும்
ஓட்டினேன்!

ஒரு வழியா அப்பா ஊருல இருந்து திரும்பியதும், ஒரு முறை நாங்க நியாபகம் படுத்தினோம். அன்னைக்கு ஈவனிங்கே குடும்பத்தோடு எல்லாரும் படம் பார்க்க போனோம்!
படம் எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்திச்சு. மீண்டும் அடுத்த முறை எப்போ தியேட்டருக்கு வந்து பார்ப்போம்னு யோசிச்சு கிட்டே படம் முடிந்ததும் வெளிய வந்தேன். அதற்கு
சரியான ஒரு வாய்ப்பு சீக்கிரம் வரும்னு நா எதிர்பார்க்கல.

பெரியப்பா பைய்யன் (அண்ணாவும் அண்ணியும்) எங்க வீட்டுக்கு வந்து இருந்தனர். அவர்கள் சிவாஜி பார்க்காததால படம் பார்க்க போறதாவும் என்னையும் வர்றியானும் கேட்டாங்க.
கேட்டதுதான் தாமதம் உடனே அவர்களோடு கிளம்பி படம் பார்க்க போயாச்சு!
***
அப்படி இரண்டு முறை தலைவரின் படத்தை பார்த்து உற்சாகமா இருந்தேன், பிறகு +1 சேர மீண்டும் ஸ்கூலுக்கு திரும்பினேன்!
பெருசா க்ளாஸ் எதுவும் நடக்கல அட்மிஷன் நடப்பதால ஸோ எங்கள் வகுப்பில் சிவாஜி பற்றிய பேச்சு தான் ஒரு வாரத்துக்கு.
ஃப்ரென்ட்ஸ் எல்லாம் தமிழ்லதான் படத்தை பார்த்து இருக்குறாங்க, ஆனா நானோ தெலுங்குலதான் பார்த்து இருக்கேன். அதுனால சின்னதா ஒரு வருத்தம் எனக்குள்ள. எப்படியாவது
அடுத்து வர போகும் தலைவர் படத்தையாச்சும் தமிழ்ல முதல்ல பார்க்கனும்னு முடிவு பண்ணிட்டேன்!

நான் தமிழ் நாட்டில் இருக்கும் வரை தலைவர் படம் வரவில்லை. (2008ல் வந்த குசேலன் படத்தில் மட்டும் guest appearance ஆக நடித்து இருப்பார். அந்த படத்தை பார்த்தது தனி கதை). ஒரு வழியா +2 தேர்வு எல்லாம் முடிச்சிட்டு மீண்டும் எங்க ஊருக்கு
திரும்பி விட்டேன். பி.ஏ இரண்டாம் ஆண்டு படிக்கும்போது எந்திரன் வெளிவரப்போகிறது என தெரிந்ததும் ஒரே குஷி ஆகிவிட்டேன். படம் வெளி வருவதற்கு 2 மாதங்களுக்கு முன்னரே பாட்டை வெளியிட்டனர்.
தமிழிலும், தெலுங்கிலும் மீண்டும் மீண்டும் எந்திரன் பாடல்கள் தான். இதுக்கு நடுவுல ஹிந்தியில வேற டவுன்லோட் பண்ணி கேட்டேன்.

இப்போ எந்திரன் படத்தை முதல் நாள் பார்க்கணும் அதுவும், தமிழில் பார்க்கணும், இதற்கு நான் சென்னைக்கு வரணுமே.
என்ன பண்ண ஒன்னுமே புரியல. சென்னைக்கு வருவது எல்லாம் பிரச்ச்னையே இல்ல. +1 வந்தது பிறகு ஸ்கூலுக்கு தனியாத்தான் நா போயிகிட்டு இருந்தேன். பிரச்சனையே டிக்கெட்
கிடைப்பதுதான்.

’டேய் ஒரு 2 டிக்கெட் வாங்கி கொடுடா’னு யார கேட்டாலும் ரஜினி படமா அதெல்லாம் ஆன்லைன்க்கு வந்த உடனே வித்து தீர்ந்திடும்னு எல்லாம் சொல்லிட்டாங்க! பெருசா அப்போ
எனக்கு சென்னையில ஃப்ரென்ட்ஸ் இல்லாததுனால அவ்வளவுதான்
நம்மளோட தலை எழுத்துனு இங்கயே தெலுங்குல பார்க்க முடிவு பண்ணிட்டேன்.

இப்போ படம் பார்க்க பெரியவர்கள் தேவ இல்ல. நாங்களே எந்திரன் தெலுங்குல பார்க்க நானும் தம்பியும் முதல் நாள் காட்சி பார்க்கணும்னு முடிவு பண்ணி இருந்தோம். அப்போதான்
தம்பி ஒரு குண்டை தூக்கி போட்டான். அவனுக்கு அன்னைக்கு பரிட்சை இருப்பதாகச்சொன்னான். கோடர்லி எக்சாம்ஸ் நடக்கிறதாம். அவன் வர முடியாது சொல்லிட்டான். முடிந்தால்
அன்னைக்கு ஈவனிங்க் போகலாம்னு சொன்னான். ஆனால் எனக்கு எப்படியாச்சும் படம் முதல் காட்சி பார்த்திடணுமேனு இருந்தேன். அவ்வளவு தான் வேற எப்படி போகலாம்னு யோசிச்சுகிட்டே
இருந்தேன்.

என் க்ளாஸ்ல ஒரு பைய்யன் இருந்தான் பேரு வம்ஸி க்ரிஷ்ணா. அவனுக்கும் எனக்கும் செட்டே ஆகாது எல்லாத்துலயும் போட்டிதான் (படிப்ப தவிர மற்ற எல்லா வற்றிலுமே)
அவன் எந்த படம் வந்தாலும் லீவ் போட்டு போய் படம் பார்ப்பான். பேசாம அவனோடு போனா படம் பார்த்த மாதிரி இருக்குமேனு முடிவுபண்ணி ரெண்டு நாளுக்கு முன்னாடியே அவன்
காதுல போட்டு வெச்சிட்டேன்.

க்ளாஸ்ல இருக்கும் மற்ற பசங்களோட வெளிய போறது வேற, இவனோட போறது வேற. ஒருத்தன் கூட வர்ரானே அவனை பத்திரமா கூட்டிட்டு போவோம்னு எல்லாம் கவல இல்ல. மறந்திடுவான்.
அவன் பாட்டுக்கு நடப்பான். அதுக்குன்னு அவன் ஒரு மாதிரி எல்லாம் இல்ல.. ரொம்ப இண்டலிஜெண்ட் +2 வர கேந்திர வித்யாலயாவுல படிச்சு இருந்தான். பி.டெக் சேர வேண்டியது.
ips ஆகணும்ன்னு ஒரே லட்சியத்தால எங்க கூட ஹிஸ்ட்ரி எடுத்து படித்தான்.

அதுனாலயே பெரும்பாலும் அவனோடு எங்கயும் போவது கிடையாது அப்படி போனா என்னோட கவனத்தை அதிகரிச்சுக்குவேன்.

எதிர்பார்த்த அந்த நாளும் வந்திடுச்சு.

அக்டோபர் 1 அன்னைக்கு காலை எழுந்ததும் ஒரு முறை போன் பண்ணி நியாபகம் செய்தேன். சீக்கிரம் குளிச்சு, சாப்பிட்டு ரெடியா இருக்க சொன்னான். எல்லாம் ரெடியா இருந்தேன்.
பைக் கொண்டு வந்தான். சொல்ல மறந்திட்டேன். இங்க திருப்பதில எல்லாம் டிக்கட் ஆன்லைன் புக்கிங்க் எல்லாம் கிடையாது. கூட்ட நெரிசலில் காத்திருந்து, கவுண்டர்லதான்
போய் வாங்கணும். அதுனால காலை 7 மணிக்கெல்லாம் வீட்டை விட்டு கிளம்பிட்டோம்.
ஷோ எப்படியும் பத்து மணிக்கு தான் இருக்கும் என்பதால். படம் ரிலிஸ் ஆக இருக்கும் ஒவ்வொரு தியேட்டராக ஏறி இறங்கிட்டு இருந்தோம். எங்கு கூட்டம் இல்லையோ அங்க க்யூவ்ல
நின்னு டிக்கெட் வாங்கலாம்னு.

அப்போ ஒரு தியேட்டர விட்டு வெளிய வரும்போது படிகட்டில் இறங்கிட்டு இருந்தோம். கால் வளுக்குறது மாதிரி வழ வழப்பா இருந்தது. என்னது இதுனு கேட்டேன். பால்னு சொன்னான்.
அப்பொதான் நியாபகத்துக்கு வந்தது ரசிகர்கள் பால் அபிஷேகம் முடித்து இருக்கிறார்கள் என்று. பெருமையாக இருந்தது அந்த நொடி. முட்டாள்தனம்தான். தெரியும் ஆனாலும்
மகிழ்ச்சி. அது வரை செய்திகளில் மட்டும் பார்த்தது ரஜினி படத்தின் ரிலிஸ் அன்னைக்கு ரசிகர்கள் பாலபிஷேகம் செய்வார்கள் என்று. அது போல ஒரு கூட்டத்தில் சேர்ந்து
என் தலைவருக்கு பால் அபிஷேகம் செய்யும் கூட்டத்தில் நானும் பங்கு பெற முடியாட்டியும் இன்றைக்கு அந்த பாலையாவது மிதித்தேனே எனக்கு அதில் ஒரு திருப்தி

ஒரு வழியா ஒருதியேட்டர்ல நுழைந்து கஷ்ட்டப்பட்டு டிக்கெட்டும் வாங்கியாச்சு. என்னோட ஆசை நிறைவேற போகுது. படம் பத்து மணிக்கு சரியாக ஆரம்பித்தனர். ரசிகர்கள்
கத்த ஆரம்பித்து விட்டனர். அவர்கள் நிறுத்துவதாக தெரியல. வசனம் சரியா காதுல வந்து விழல. ஆனாலும் பரவால எற்கனவே முதல் காட்சி பார்த்தவர்களின் அனுபவம் கேட்டுஇருக்கேன்
. அதற்கு எல்லாம் என்னை தயர் செய்து கொண்டுதான்
போய் இருந்தேன். படம் ஆரம்பித்த ஒரு அரை மணி நேரத்துக்குள் எல்லாரும் அடங்கிட்டாங்க அவ்வப்போது மட்டும் ரசிகர்கள் விசில் அடித்து கொண்டு இருந்தனர்.

இடவெளியும் முடிந்து, படமும் பார்த்தாச்சு.
தலைவரின் படம் சூப்பர்தான். இந்த முறை ஐஷ்வர்யா ராயும் நடித்து இருப்பதால் இரட்டை மகிழ்ச்சி. 2 பேருக்கும் இடையே கெமிஸ்ட்ரி நல்லாவே செட் ஆச்சு.
படத்தில் எந்த குறையும் இல்லை. அப்புரம் ஃப்ரெண்டே என்னை வீட்டில் வந்து விட்டுட்டு போனான்.
மதியம் சாப்பிட கூட இல்ல. ஒரே மகிழ்ச்சி தலைவர் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்துதான். ஃப்ரென்ட்ஸ் எல்லாருக்கும் போன் போட்டு என்னோட விமர்சனத்த சொந்த
காசுல சொன்னேன். நிறைய பேர் எப்படிடா பார்த்தேன்னு கேட்டாங்க சிலரோ, அங்க எல்லாம் முதல் நாள் காட்சி பார்க்குறது பெரிய விசயம் இல்ல நீ தமிழ் நாட்டுல வந்து பார்த்திட்டு
பேசுப்பா சொன்னாங்க. உடனே மண்டைக்குள் சுரில்னு ஒரு கோவம். அடுத்து வரும் படத்தை
நிச்சயமா தமிழ் நாட்டுலதாண்டா பார்க்கணும்னு முடிவு பண்ணிட்டேன்.

இன்னொரு பக்கம் வீட்டுல அம்மா வேற திட்டு.
ஏன்னா டிக்கெட் வாங்கும் அவசரத்துல கூட்ட நெரிசல்ல என்னோட ஒரு செருப்ப தொலைச்சிட்டேன்
ஒண்ணு போன பிறகு எதுக்கு இன்னொன்னுன்னு அதையும் தூக்கி போட்டிட்டேன்.

அப்புறம் தம்பி ஸ்கூல்ல இருந்து வந்ததும் அவனுக்கு நடந்தது எல்லாம் சொல்லிட்டு, அவனோட எக்சாம் எல்லாம் முடிஞச பிறகு எல்லாரும் குடும்பத்தோடு பார்க்க போனோம்.
அது எனக்கு இரண்டாவது முறை. மூன்றாவது முறையாக (யாரும் கண்ணு வச்சிடாதீங்கப்பா) கிளாஸ்ல இருக்கும் ஃப்ரென்ட்ஸ் எல்லாரோடும் சேர்ந்து போய் படம் பார்த்தேன்.

இப்போ 2014 கோச்சடையானுக்கு வருவோம்...
முடிவு எடுத்தது போல இந்த முறை கண்டிப்பா தலைவர் படத்தை முதல் நாள் முதல் காட்சி தமிழில் பார்க்கனும் இல்லையா..
நா பார்த்தேனா... இல்லையா என்பதை அடுத்த பகுதியில் படிக்கலாம்..
அடுத்த பகுதி நாளை தொடரும்:-)
தொடர்புடைய பதிவுகள் :


5 comments:

 1. வணக்கம்
  உங்களின் தலைன் மீது வைத்துள்ள அன்பு புரிகிறது.... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. என்னவொரு பிரியம்...! வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. சூப்பர் ஸ்டார் மேல அவ்வளவு இஷ்டமா...? கோச்சடையான் பார்த்த கதையத் தெரிஞ்சுக்க ஆவலோட வெய்ட்டிங். ஸ்கூல் பைய்ன்னதும் நான் நினைச்ச ஆள் வேற... நீ சொல்லிருக்கறது உன்னைப் பத்தியே... அவ்வ்வ்வ்வ்.

  ReplyDelete
 4. எழுதின விதம் எல்லாம் சரிதான் ஆனா இந்த பதிவு ஹீரோ வர்ஷிப் அப்படின்னு சொல்லுவாங்கல்ல? அந்த ரகத்த சார்ந்தா மாதிரி இருக்கு.
  இது இந்த பதிவ கொர சொல்ரதுக்காக இல்ல, இந்த பதிவோட நடை, கருத்துக்கள சொல்லுர விதம், வார்த்தைகள பயன்படுத்திருக்குர விதம் இத எல்லாத்தையும் ஓரங்கட்டிட்டு பாத்தா இது நான் மேல சொன்னாமாதிரிதான் இருக்கு!

  உன்னோட ரஜினி அபிப்பிராயத்த கொங்ஜம் மெருகூட்டி சொல்லிருக்கலாமோனுதான் தோனுது!

  சொல்ல வந்த விஷயத்த தவிர்த்து பாக்கும்போது பதிவு சூப்பர்!

  ReplyDelete
 5. நம்ம மின்னல் சார் நெனச்சது போலவேதான் நானும் நெனச்சு பல்பு வாங்கீட்டேன்... ஹும்... இப்டி ஒரு பல்பா? அவ்வ்வ்வ்வ்வ்வ்

  சரி ஏதோ அண்ணனும் அண்ணியும் படத்துக்குப் போராங்களேனு சும்மா அவங்கள ஃப்ரீயா விடாம நடுவுல நந்தி மாதிரியா போகனும்? : ))).... அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்... பதிவு எழுதரதுல நல்ல இம்ப்ரூமெண்ட்... சபாஷ்....

  ReplyDelete