Thursday, September 25, 2014

நான் என்ன செய்தேன்?

by mahesh


கிட்டத்தட்ட இரண்டு மூன்று நாட்களாக என் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் கேள்வி தான் இது. ‘நான் என்ன செய்தேன்?’ என்று தான். எவனோ செய்த தப்புக்கு நான் அனுபவிக்க வேண்டி இருக்கிறது. என்னை பற்றி அவளுக்கு நன்கு தெரியும் ரெண்டு பெரும் ஒரே க்ளாஸ் என்பதால். ஆனாலும் எதோ ஒரு தயக்கம் என்னிடம் பேச அவளுக்கு இப்போது.


அந்த பிரச்சனை நடப்பதற்கு முன்பு வரை நாங்க ரெண்டு பெரும் நல்லா தான் பேசிக் கொண்டிருந்தோம். வகுப்பில் லஞ்ச் ஹவரில் மட்டும் தான். வகுப்பு முடிந்தால் அதோடு அடுத்த நாள் லஞ்ச் ஹவரில் தான் மீண்டும் பேசுவது.

‘மேடம் நடத்திய டாபிக் உங்களுக்கு புரிஞ்சுதா?’ எனக்கு பொயட்ரினா கொஞ்சம் வீக்குங்க’ ‘எப்பவும் நான் விரும்புவது ஃபிக்‌ஷந்தான்’னு எப்பவுமே படிப்புக்கு சம்மந்தப் பட்ட பேச்சு தான் நாங்க பேசுவோம். ‘இந்த படம் பாத்தீங்களா?’ ‘ ஐ பாட்டு கேட்டீங்களான்னு எல்லாம் கேக்கணும்னு எனக்கு ஆசை. ஆனா அது மாதிரி எல்லாம் இதுவரை நான் கேட்டது/பேசியது கிடையாது. இப்படி லஞ்ச் ஹவரில் மட்டுமே பேசுவதால் அவளுக்கு என்ன பயன் இருக்கிறதென்று தெரியவில்லை ஆனால் அவள் பேசுவதை நிறுத்திய பிறகு எனக்கு தன கொஞ்சம் வருத்தமா போச்சு.

எங்கள் வகுப்பில் நாற்பத்து ஒன்பது மாணவர்களில் ஏழு மாணவர்கள் டே ஸ்காலர்ஸ். அதில் அஞ்சு பெண்களும், ரெண்டு பசங்களும் இருக்கிறோம். தினமும் லஞ்ச் ஹவர் வந்தால் ஹாஸ்டல் பசங்க எல்லாம் ஹாஸ்டலில் சாப்பிட போய் விடுவார்கள். மீதி இருக்கும் ஏழு பேரில் கூட இருக்கும் அந்த பையனும் வீடு பக்கத்தில் இருப்பதால் மதியம் எங்களுடன் சாப்பிட மாட்டான்.

மதியம் லஞ்ச் பெல் அடிச்சதும் டப்பாவை திறந்து நாங்க சாப்பிட்டு கொண்டே பேச ஆரம்பிப்போம். சரியாக ஒரு மாதம் தான் பேசி இருப்போம், ஷேக்ஸ்பியர், ஷெல்லி பற்றி எல்லாம் பேசுவதை நிறுத்தி விட்டு, சினிமா, சமந்தாவை பற்றி பேச ஆரம்பிக்கலாம் என்று இருந்தேன். ஆனால் அதற்குள்ளயே அந்த வேஸ்ட் ஃபெலோ வந்து எல்லாம் சொதப்பிட்டான்.

நீங்க தமிழ் நல்லா பேசுறீங்க. பேசாம தமிழ் லிட்ரேச்சர் எடுத்துருக்கலாம் இல்லையான்னு கல்லூரி சேர்ந்த ஒரு மாதம் பிறகு என்னிடம் முதல்முறையாக அவள் பேசிய வார்த்தை அது. அதுவரை நாங்க ஒண்ணா வகுப்பில் சாபிட்டாலும் அவள் என்னிடம் பேசியது கிடையாது.

இங்கு அவள் மட்டும் தான் பேசவில்லை என எடுத்துக்கொள்ள வேண்டாம். மத்த பெண்களும் என்னிடம் பேசியது கிடையாது. ஆரம்பத்தில் சாப்பிட பெல் அடிச்சதும் டப்பாவை திறந்து சாப்பிட ஆரம்பிப்பேன் நான். அப்படியே இலவசமாக அவர்கள் பேசுவதையும் காதில் கேட்டுக்கொண்டே கையுக்கும் வாயுக்கும் ஒரு யுத்தம் தினமும் நடத்திக் கொண்டிருப்பேன்.

அப்படியே நாட்கள் நகர, திடீரென்று ஒரு நாள் அந்த கூட்டத்தில் வேறு ஒரு பொண்ணு ‘நீங்க எப்படி படிப்பீங்க, க்ளாஸ்ல எப்படி பதில் சொல்றீங்க’ என கேள்வி கேட்டு என்னிடம் பேச ஆரம்பித்தாள். அதற்கெல்லாம் பொறுமையா பதில் சொன்னேன். அப்படியே நானும் ‘உங்களுக்கு சினிமா பிடிக்குமா, உங்க பொழுதுபோக்கு என்ன’ என சும்மா பேச்சு கொடுத்து அனைவரிடமும் பேசலாம்னு இருந்தேன். ஆனால் இது வரை அப்படியான ஒரு வாய்ப்பு வரவில்லை. எப்பவும் ஒரு லிமிட்டுடனே பேசுவதாக இருக்கிறது. இதனால் எனக்கு வருத்தம் ஏதும் இல்லை. ஆனால் லஞ்ச் ஹவர் ஒரு மணி நேரம் எப்படியாச்சும் தினமும் இப்போது வேகமாக கடந்திட வேண்டும் என்று தான் தோன்றுகிறது.
அதற்கெல்லாம் காரணம் அவன் தான். அவனை பற்றி பிறகு பார்க்கலாம். இப்போதைக்கு அவளை பற்றி சொல்கிறேன்....

கல்லூரி சேர்ந்த போது ஒவ்வொருத்தராக வகுப்பில் அறிமுகம் செய்து கொண்ட போது தான் அவளின் பெயர் முதன்முறையாக கேட்டேன். அந்த நொடியே அவளின் பெயரும், அவளின் குரலும் என்னை வெகுவாக ஈர்த்தது. அதற்கெல்லாம் காரணம் அந்த பெயரில் இருக்கும் பின்னணி பாடகி தான். பெயருக்கேற்ப குரலும் இனிமையாக இருந்தது. ‘இந்த பாட்ட அவ பாடினா எப்படி இருக்கும், அந்த பாட்ட இவ பாடுனா எப்படி இருக்கும்’ என என்னோட மூளை அந்த நொடியே கணக்கு போட ஆரம்பித்தது.

எனக்கு சினிமா பாடல்கள் கேட்பது ரொம்ப பிடிக்கும். அதைவிடவும் யாராவது நேரில் குறிப்பா பெண் பாடினால் மிகவும் பிடிக்கும். இப்போது எனக்கு பிடித்த பின்னணி பாடகியின் பெயரிலேயே ஒரு பொண்ணு வகுப்பில் சேர்ந்திருப்பதாலும் அவளின் குரலால் ஈர்க்கப்பட்டு அவளிடம் கொஞ்சம் கவனம் செலுத்தினேன். இங்க யாரும் ‘குரலுக்கு மயங்கிட்டாண்டா’ என எடுத்துக் கொள்ள வேண்டாம். எனக்கு பைத்தியம் எல்லாம் அந்த பின்னணி பாடகியின் மீது தான்.

அவளின் குரல் பாடகிக்கு மிக கச்சிதமாக இருக்கும். அதற்கு ஏற்ப அவளிடம் பிடித்த இன்னொரு விஷயம் அவளின் அடக்கம். ரொம்ப அமைதியாக இருப்பாள். யாரிடமும் அதிகமாக பேச மாட்டாள். குறிப்பாக என்னிடம் பேசியது போல வேறு எந்த பையனிடமும் பேசியது கிடையாது. மேலே சொன்னது போல ஏதாவது பாடம் பற்றி நான் பேசினால் தான் உண்டு. அவளாக எப்போதாவது தான் பேசுவாள்.

இப்படி போய்கிட்டு இருக்க, சமீபத்தில் வகுப்பில் இருக்கும் ஒரு பையன் அவளிடம் ப்ரொபோஸ் செய்து விட்டான். அங்கிருந்து ஆரம்பித்தது தான் பிரச்சனை.

‘அந்த போயமோட சம்மரி கிடைச்சுதா?’ ‘’நெட் நொடிஃபிகேஷன் வர இன்னும் ஒரு மாதம்தான் இருக்கு’ -  நான் எது சொன்னாலும் அவளிடம் இருந்து ரியாக்சன் ஏதும் இல்லை. ‘நான் எழுதிக்கொண்டிருக்கிறேன், நான் எழுதிக் கொண்டிருக்கிறேன்’ என்பது தான் அவளிடம் இருந்து வந்த வார்த்தை. ஏன் அவள் அப்படி நடந்துக்கொள்கிறாள் என்பதற்கு என்னால் உடனே புரிந்துக் கொள்ள முடிந்தது. நான் தொடர்ந்து அவளிடம் பேச முயற்சிக்கவில்லை. கிட்டத்தட்ட ஒண்ணரை மணி நேரம் இரண்டு பேர் மட்டும் தான் வகுப்பறையில். ‘இரண்டு பேருக்கும் இடையே ஒரு நிசப்தம்.

தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும்அவளின் கோபம் அடங்கியதாக தெரியவில்லை. இப்போது மற்ற தோழிகளும் என்னிடம் பேசுவதையே நிறுத்திவிட்டனர். இதற்கெல்லாம் காரணம் அவன்தான்.

அவன் மீது எனக்கு கோபம் இருந்தாலும் அவனோட விருப்பு வெறுப்பில் எனக்கு தலையிட உரிமை இல்லை. யாரோ செய்த ஒரு காரியத்திற்கு நான் தண்டனை அனுபவிப்பதா? அது தான் எனக்குள்ள இருக்கும் வருத்தம். மீண்டும் அந்த ஆரம்ப நாட்களுக்கு திரும்பியதாக ஒரு உணர்வு.

இப்பொழுதெல்லாம் மதியம் லஞ்ச் பெல் அடித்ததும் என்னுடைய டப்பாவை திறந்து தனியாக சாப்பிட ஆரம்பிப்பேன். எப்பவும் போல அவர்கள் ஜாலியா சிரிச்சு பேசி சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். நான்தான் நொந்து நூடுல்சும் தோசையும், அவ்வபோது இட்லியும் மதியம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்.

ஒரு வாரமாக இந்த கதை தான் வகுப்பறையில். பேசாம அவளிடம்/ அவர்களிடம் ‘நான் என்ன செய்தேன்?’ என கேட்கலாம் என்றிருக்கிறேன்.
தொடர்புடைய பதிவுகள் :


4 comments:

 1. ரொம்ப நாளாச்சு போல இங்க வந்து?..... இன்னுமா லவ் சொன்னா பசங்களையே ஒதுக்கும் எண்ணம் பெண்கள்ட்ட இருக்கு?...ஏன்னா அவன் உணர்வுகளை அவன் சொல்றான் நம் உணர்வை தெளிவு படுத்தும் தைரியம் பெண்களிடம் வர வேண்டும்...

  ReplyDelete
 2. செம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம மொக்கை!
  இதை படிக்க நான் என்ன செய்தேன்? :(

  ReplyDelete
 3. nice post mahesh. since i knew the reason behind, i could understand your problem. relax, relieve and recover. ezhuthunga ejaman ezhuthunga, intha ponnungala ippadithan

  ReplyDelete
 4. Very Good One. Interesting to read. You have that style and words that captivate readers. Continue writing. All the best.
  Leo Joseph

  ReplyDelete