Friday, October 31, 2014

ஏன் அவ்வளவு தயக்கம்?நேற்று அரக்கோணம் சென்றிருக்க வேண்டும். எங்களுக்கு கல்லூரியில் தேர்வுகள் நடந்துக்கொண்டிருப்பதால் செல்ல முடியாமல் போனது. இங்கிருந்து இரண்டு மணிநேரம் பேருந்தில் அரக்கோணத்தை சென்றடையலாம். எப்படியும் பரிட்சை நான்கு மணிக்கெல்லாம் முடிந்திடும் என்பதால் அதன் பிறகாவது போகலாம் என முடிவு செய்திருந்தேன். ஆனால்

Monday, October 27, 2014

படிக்கும் வயதில் படிப்பை மட்டும் காதலி!இன்றைய நாட்களில் இளைஞர்களுக்கு எதெது எந்தெந்த நேரத்தில் செய்யணும் என்பதற்கு ஒரு விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது.

Thursday, October 23, 2014

மகிழ்ச்சியின் விலை என்ன?இன்று காலையில் தூங்கி எழுந்திரிக்கும்போது எதோ பயங்கர சப்தம். ‘டபடபடப’, ‘டபடபடப’, என ஐந்து நிமிடங்களுக்கு தொடர்ந்து வீடே இடிந்துவிழும் அளவுக்கு சப்தம் காதில் கேட்டுக்கொண்டே இருந்தது
. ’தம்பி வாங்கி வெச்ச பட்டாசு வீட்டுல வெடிச்சிடுச்சா?’ என்னும் பதற்றத்தோடு கண் திறந்து பார்த்தால் பக்கத்துவீட்டுக்காரன் சரவெடிய கொளித்தியிருக்கான். அதுதான் அவ்வளவு சப்தம். அந்த அதிர்ச்சியில் பயந்து தூக்கம் கலைந்த எனக்கு சிறிது நேரம் பிடித்தது மீண்டும் சகஜ நிலை திரும்ப.
‘என்னடா தீபாவளி அதுவுமா இப்படி பயந்திகிட்டே பரபரப்போட எழுந்திருக்கிறோமேன்னு, நினைச்சுகிட்டு இருக்க அடுத்ததா காத்திருந்தது இன்னொரு சம்பவம் மேலும் நான் அதிர்ச்சி அடைய.
இந்த முறை கொஞ்சம் வித்யாசமான ஒரு அனுபவம். பயத்தால் எற்பட்டதல்ல. மாறாக மகிழ்ச்சியால் எற்பட்டது. ஆனாலும் இப்போது சற்று வேகமாக இதயம் துடிக்க ஆரம்பித்ததாக ஒரு உணர்வு. அடிவயிற்றில் இருந்து குபுக் குபுக் எதோ புகை நெஞ்சை நோக்கி கிளம்பியதாகவும் ஒரு உணர்வு. உட்கார்ந்த சேரில் இருந்துக்கொண்டு எதையோ சாதிச்சதா ஒரு உணர்வு. ‘இங்க வாங்கப்பா’, ‘இங்க வாங்கமா’ என கத்தி அவர்களை அழைச்சு காட்ட ஆசைதான் எனக்கு. ஆனால் ஸ்க்ரீன்ல என்னவோ தமிழ்ல எழுதி இருக்கு ‘எங்களுக்கு புரியல’ சொல்லிடுவாங்க என்பதால அவர்களிடமும் நான் எதுவும் சொல்லிக்கல.

என்னத்த சொல்ல, எதை உங்களிடம் பகிர, எதையோ சாதிச்சிட்டதா ஒரு உணர்வு. இதற்குதான் நான் இத்தனை நாட்களாக காத்திருந்தேனா என்பது போல ஒரு உணர்வு. இதற்க்கும் மேல நான் அந்த அதிர்ச்சிக்கான காரணத்தை சொல்லாமல் இருக்க முடியல.
எப்பவும் போல காலைல எழுந்திருச்சு ஃப்ரெஷப் ஆகி கம்ப்யூட்டர் ஆன் செய்வது போலதான் செய்தேன். முதலில் ’மின் அஞ்சல் எதாவது வந்திருக்கிறதா’ என பார்த்தேன். அடுத்ததா பதிவுகள் படிக்க ப்லாகர்.காமில் நுழைந்தேன். அங்கிருந்துதான் ஆரம்பித்தது அந்த மகிழ்ச்சிகரமான அதிர்ச்சி! நேற்று நான் கடைசியாக பார்த்த வரை வெறும் 25 Pageviews மட்டும் நேற்று வந்திருந்த என் ப்ளாகுக்கு, இன்று காலை Pageviews yesterday பார்க்கும் போது அதிர்ச்சி. நம்பவே
முடியல. ‘நைட்டு என்னயா நடந்திச்சு’ பார்த்தா நிசப்தம் தளத்தில் இருந்து வந்து படித்ததாக காட்டியது. அப்பவும் ஒண்ணுமே புரியல எனக்கு. சரி பதிவுகள் படிக்க ஆரம்பித்த போது நிசப்தம் மணிகண்டன் சாரோட பதிவை படித்த பிறகு தான் எல்லாம் புரிந்தது.

கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ஒரு அங்கிகாரம் எனக்கு அது. அதுவும் நான் விரும்பி வாசிக்கும் பதிவரிடம் இருந்து கிடைத்திருப்பதில் ரெட்டிப்பு சந்தோஷம் எனக்கு. எப்போதில் இருந்து அவரின் எழுத்தை வாசிக்க ஆரம்பித்தேன் என்பது சரியாக தெரியல. ஆனால் தொடர்ந்து தினமும் அவரின் பதிவுகளை படித்துதான் என்னை நான் சிற்பி போல் செதுக்கிக்கொண்டு வருகிறேன்.
சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு ‘நீ நல்லா எழுதணும்னா நீ நிறைய புத்தகங்கள் வாசிக்கணும்’ என ஒரு பதிவர் என்னிடம் சொன்னபோது அதன் அர்த்தம் எனக்கு சரியாக புரியவில்லை அப்போது. ஆனாலும் புரிஞ்சிருந்தாலும் எங்க நா போய் தமிழ் புத்தகங்களை எல்லாம் தேடி சென்று படிக்கிறதுக்கு. எதோ எதிர்பாராத சில சம்பவங்களால் எழுத ஆரம்பிச்சிட்டேன். தொடர்ந்து எழுத நிறைய படிக்கணும் அப்போதுதான் நல்லா எழுத முடியும் என்பதை உணர்ந்தேன். என்னால் சுஜாதாவையோ, ராஜேஷ் குமாரையோ, இல்ல ஜெயமோஹனையோ படிக்க முடியாது. அதற்கு பதிலாக என்னால் படிக்க முடிந்தது நிசப்தம் மட்டுமே.

தினமும் மனிகண்டன் சார் பதிவு எழுதுவார். அதுவும் சற்றும் ஸ்வாரஸ்யம் குறையாதவாறு பார்த்துக்கொள்கிறார். அதைவிடவும் அவர் எழுதும் பதிவின் மூலம் எதையாவது புதிதாகவும் தெரிந்து கொள்ளவும் முடிகிறது. அப்பேர்ப்பட்ட மனிதரிடம் இருந்து எனக்கு இன்று கிடைத்த அங்கிகாரத்தை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு.
மிக்க நன்றி சார். இதற்கு மேல என்ன சொல்லுறதுனு தெரியல. தொடர்ந்து எழுதுங்க சார். உங்களிடம் இருந்து நிறைய கற்று கொண்டு வருகிறேன். குறிப்பாக அதில் ஒன்றைச்சொல்ல வேண்டுமென்றால் நீங்கள் தலைப்பு வைக்கும் விதம். ஆரம்பத்தில் நான் தலைப்பு வைத்து பதிவுகள் எழுத ஆரம்பித்ததில் இருந்து படிப்பவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதுவரை ஒரே பதட்டமாகவே இருக்கும். பயங்கரமா மண்ட காயும். சில சமயம் என்ன எழுதலாம்ன்னு யோசிச்சு தலைவலி வந்த சம்பவங்களும் உண்டு. பர்சனலா ஊக்குவிக்க யாரும் எனக்கு இல்லாட்டியும் எனக்கு உதவி செய்ய இணையம் பல நட்புக்களை தேடி தந்தது.
அந்த ஒரு வாய்ப்பை மட்டும் பயன்படுத்திக்கொண்டு நேரம் கிடைக்கும்போது தொடர்ந்து எழுதிவருகிறேன். இந்த சமயத்தில் என்னுடைய பிரச்சனை புரிந்துகொண்டு தொடர்ந்து உதவி செய்து வரும் அந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி சொல்லி கொள்கிறேன். குறிப்பாக காயத்ரி அக்காவுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கேன். என்னுடைய சமீபத்திய அனைத்து பதிவுகளுக்கும் பிழை திருத்தி தருகிறார். ரொம்ப தேங்ஸ் அக்கா.


Monday, October 20, 2014

ஹெப்பி பர்த்டே அக்கா!அது 2008-ஆம் ஆண்டு. நான் ப்ளஸ்-டூ படித்துக் கொண்டிருந்த சமயம். அகிலா அக்கா, ப்ரவின் அண்ணா மற்றும் வேல்ராஜ் அண்ணா எங்களுக்கு அறிமுகம் ஆனார்கள்.

Friday, October 17, 2014

கடவுளே! நீ இருந்தால் என் கேள்விக்கு பதில் சொல்லேன்!???பெண்கள் நாட்டின் கண்கள் என்றும், பூமி, நதிகள் மட்டும் அல்லாமல் சொந்த நாட்டைக்கூட பெண்ணாக பாவித்து வணங்கும் நம் நாட்டில்,

Monday, October 13, 2014

அம்மாவுக்கு அடுத்ததா இந்த அம்மா பகவானையும் ஜெயில்ல போடலாமே!?கடந்த சில நாட்களாக எங்கு பார்த்தாலும் அம்மாவை பற்றிய பேச்சுதான். தமிழகத்தின் புரட்சி தலைவி என மக்களால் கொண்டாடப்பட்ட ஜெயலலிதா அவர்கள், வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் குற்றம் நிரூபிக்க பட்டு சிறையில் இருக்கின்றார்.

Tuesday, October 07, 2014

ஜீவா, வினோத் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டி

சமீபமாகப் பார்த்த திரைப்படங்கள் பற்றி நானும் நண்பன் வினோத்தும் பேசிக்கொண்டிருக்கும்போது, தான் எழுதி இருந்த ஜீவா படம் விமர்சனம் பற்றி என்னிடம் கூறி இருந்தான்.

Monday, October 06, 2014

திங்கட்கிழமையானா புது துணி எடுக்க கூடாதாயா?நாளைமறுநாள் தம்பிக்கு பிறந்தநாள். ஆனால் விடுமுறை  இன்றோடு முடிவடைவதால் நாளை  காலை கல்லூரிக்கு அவன் போக வேண்டும்.

Sunday, October 05, 2014

சும்மா இருங்கப்பா # வாயக்கிளராம!:-)

நேற்று  புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையாம். அதை முன்னிட்டு கும்பிட போறேன்னு எங்கள் வீட்டில் நேற்று நடந்த கூத்தும் நான் செய்த அட்டூழியமும்தான் இந்த பதிவு!

Friday, October 03, 2014

(நினைவுகளும் சிந்தனைகளும்!) டாக்டர் நம்பள்கி எங்கே?சமீப நாட்களாக தமிழகத்தில் அரங்கேறிவரும் கூத்தை பார்க்கும்போது இந்த சமயத்தில் டாக்டர் நம்பள்கி அவர்கள் இருந்திருந்தால் எப்படி பதிவு எழுதி இருப்பார் என அவ்வப்போது நினைவு வந்து செல்கிறது.