Friday, October 03, 2014

(நினைவுகளும் சிந்தனைகளும்!) டாக்டர் நம்பள்கி எங்கே?சமீப நாட்களாக தமிழகத்தில் அரங்கேறிவரும் கூத்தை பார்க்கும்போது இந்த சமயத்தில் டாக்டர் நம்பள்கி அவர்கள் இருந்திருந்தால் எப்படி பதிவு எழுதி இருப்பார் என அவ்வப்போது நினைவு வந்து செல்கிறது. டாக்டர் வெளிப்படையாக தனது பதிவில் நக்கல் நையாண்டி எல்லாம் கலந்து அரசியல் பதிவுகள் எழுதி இருப்பார். அதெல்லாம் படிக்கும்போது ஏற்படும் சிரிப்பு அவர் எழுதி நிறுத்திய பிறகு வேறு எவராலும் அவரை போல அரசியல் பதிவுகள் எழுதியதாக எனக்கு தெரியவில்லை. அது மட்டும் இல்லாம வெளிப்படையாக தன்னை ஒரு நாத்திகனாக அறிவித்து அவர் எழுதும் ஒவ்வொரு பதிவும் மூட நம்பிக்கைகளுக்கு ஒரு சவுக்கடி. அப்பேர்பட்ட பதிவர் திடீர் என எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் தனது ப்ளாக்கை மூடி சென்றது அவரின் எழுத்தை ரசிக்கும் எனக்கு மிகப்பெரிய ஏமாற்றம்.

அவர் பதிவுகளை எப்போதிலிருந்து படிக்க ஆரம்பித்தேன் என்பதெல்லாம் சரியாக எனக்கு தெரியாது. ஆனால் படிக்க ஆரம்பித்ததில் இருந்து தினமும் அவரின் பதிவுகளுக்காக காத்திருப்பதும் தவறாமல் தமிழ்மணத்தில் ஓட்டு போடுவதும் செய்வேன். என்னுடைய சின்சியாரிட்டியை பார்த்த அவர் ஒரு முறை maheshswis என்னும் நண்பரை பற்றி தெரிந்தவர்கள் சொல்லவும். ’நான் மறந்தாலும் அவர் மறக்காமல் என்னுடைய பதிவுகளுக்கு தவறாமல் வாக்களிப்பார்’ என்று என்னை கவுரவப்படுத்தி இருப்பார். கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம் அது.
அதுவரை மொத்தமாக ஒரு ஐந்தே ஐந்து பின்னோட்டங்கள்தான் அவரின் பதிவுகளுக்கு போட்டிருப்பேன். அவரின் அறிவிப்பிற்கும் பிறகு பின்னோட்டம் இட்டது கிடையாது. காரணம் அது ஒரு தனி கதை. இங்கு டாக்டரின் பதிவை மட்டுமே நான் எதிர்பார்த்தேன். அவரின் ஒவ்வொரு பதிவும் நிச்சயம் பல முறை படித்திருப்பேன். இப்போதும் பழய பதிவுகள் தேடி சென்று படிக்க ஆசை. ஆனால் எழுதுவதை மட்டும் நிறுத்திவிடாமல் அவரது ப்ளாக்கையே திறக்க முடியாதவாறு செய்திருக்கிறார்.

’எதோ அவர் எழுதிட்டாரு நான் படித்தேன்’ என்பதோடு அவரின் எழுத்தை விட முடியல!. அவரின் எழுத்து எனக்குள் பல மாற்றம் ஏற்படுத்தி இருக்கு!. அவரின் ஒவ்வொரு சிந்தனைகளும் என்னை சிந்திக்கவைத்தது!. மறக்க முடியாத பதிவர்களில் அவரும் ஒருத்தர்!. மிக குறுகிய காலத்தில் தன்னுடைய எழுத்தாலும் சிந்தனைகலாளும் மனதில் நின்றுவிட்டார்.

கடைசியாக அவரது பதிவில் ’சிறிது ஓய்விற்கு பிறகு மீண்டும் தொடர்கிறேன்’ என சொன்னதை படித்திருந்தேன். ஆனால் இவ்வளவு நாட்களாக அவர் எழுத வராமல் இருப்பது ஏனோ கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. ஒரு நாளைக்கு இரண்டு பதிவுகள் கூட எழுதும் அவர் இப்போது அமைதியாக இருப்பதன் காரணம் புரியவில்லை.

எப்போதும் நாத்திக பதிவர்களுக்கு ஏற்படும் பிரச்சனை அவருக்கும் ஏற்பட்டதாக கேள்வி பட்டேன். ஹெக்கர்களிடம் தன்னுடைய ப்ளாக்கை இழந்ததாக படித்தேன். அது எவ்வளவு தூரம் உன்மை என்றெல்லாம் தெரியாது. அதை வந்து அவரே பதிவு போட்டு சொன்னாதான் தெரியும்:-)
மீண்டும் விரைவில் டாக்டர் நம்பள்கி அவர்கள் வருவார் என்ற நம்பிக்கையில் அவரது தீவிர வாசகன் என்னும் உரிமையில் இந்த பதிவை இத்துடன் முடிக்கிறேன்:-)))

பின்குறிப்பு: டாக்டர் பற்றிய தகவல்கள் யாருக்காவது தெரிந்திருந்தால் பின்னோட்டத்தில் சொல்லவும் அல்லது maheshswis@gmail.com என்ற முகவரிக்கு மின் அஞ்சல் அனுப்பவும்.
நன்றி.
தொடர்புடைய பதிவுகள் :


5 comments:

 1. #மீண்டும் விரைவில் டாக்டர் நம்பள்கி அவர்கள் வருவார் என்ற நம்பிக்கை#
  என் ஜோக்காளி தளத்தில் ,ஸ்ரீ தேவி தமிழச்சி தானே 'பதிவுக்கு அவர் செய்த அதகளத்தை என்னால் மறக்க முடியவில்லை !
  சீக்கிரம் அவர் வலை உலகத்திற்கு வர வேண்டுமென்று உங்களைப் போன்றே நானும் காத்திருக்கிறேன் !
  த ம 2

  ReplyDelete
  Replies
  1. பகவான்ஜி, நான் சென்ற தடவை இலங்கை போனபோ ஒரு அனுபவத்தில் உங்க ஸ்ரீ தேவி தமிழச்சி பதிவு தான் உடனே நினைவுக்கு வந்திச்சு :) நேரம் கிடைக்காமையாலும் நம்பள்கி இப்போ வருவதில்லை என்பதாலும் எனக்கு எழுதுவதில் உள்ள சிரமம் காரணமாகவும் வரவில்லை நேரம் கிடைக்கும் போது வருவேன்.

   Delete
 2. நம்பள்கியை நாங்களும் தேடுகின்றோம்! எங்கள் வலைத்தளம் அறிமுகம் ஆன புதிதில் எங்களுக்கு பல யோசனைகள் தானாகவே கொடுத்து ஊக்க்ப்படுத்தியவர். பாராட்டியவர்! "உங்கள் இடுகைகள் அறிவு பூர்வமாக இருக்கின்றன. என் இடுகைகளில் நான் ஜல்லி அடிக்கின்றேன்" என்று சொல்லி எப்படிக் கவர்ச்சிகரமாகத் தலைப்பு கொடுத்து வாசகர்களைக் கவர என்று யோசனைகள் சொன்னவர். எங்கள் தளத்தில் கீதாவின் மகன் கால்நடை மருத்துவன் என்று தெரிந்து, கனடா செல்வதற்கு முயற்சி செய்கிறார் என்று தெரிந்ததும் மருத்துவக் கட்டுரைகள் சுட்டிகள் கொடுத்தவர்.

  நாங்கள் அவரை வலைச்சர ஆசிரியப் பணி செய்த போது கடந்த வாரம் அவரது தளத்தை அறிமுகப்படுத்தி அழைப்பும் விடுக்கலாமே என்று பார்த்தால் அவரது வலைத்தளமே இல்லை! நீக்கிவிட்டார் போலும். எனவே தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரது மின் அஞ்சல் முகவரியும் இல்லாததால். அமெரிக்காவில் இருக்கும் ப்ளாகர் யாராவது சொன்னால் தெரிய வாய்ப்புண்டு.

  அதகளம் பண்ணக் கூடியவர். அரசியல் பதிவிலிருந்து....கில்மா மேட்டர் வரை....அவரது எழுத்தில் அசுர வேகம் இருக்கும். நாங்கள் மிகவும் ரசித்துப் படிப்போம் அவரது இடுகைகளை. ஏனோ திரும்பி வராவில்லை....

  நாங்களும் தேடுகின்றோம்...

  ReplyDelete
 3. ஆமால்ல. ஓய்வெடுக்க விரும்பியிருப்பாரோ? சகோ சார்வாகனும் இப்போ எழுதுவதில்லை :(

  ReplyDelete
 4. இணையத்துல லொள்ளு பண்ற மாதிரி அமெரிக்காரன்கிட்ட லொள்ளு பண்ணி எந்த கலிபோர்னியா ஆஸ்புத்திரி எமர்ஜென்சில கிடக்கறாரோ... தெரியலயேடா சாமி!!!!

  ReplyDelete