Monday, October 13, 2014

அம்மாவுக்கு அடுத்ததா இந்த அம்மா பகவானையும் ஜெயில்ல போடலாமே!?கடந்த சில நாட்களாக எங்கு பார்த்தாலும் அம்மாவை பற்றிய பேச்சுதான். தமிழகத்தின் புரட்சி தலைவி என மக்களால் கொண்டாடப்பட்ட ஜெயலலிதா அவர்கள், வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் குற்றம் நிரூபிக்க பட்டு சிறையில் இருக்கின்றார்.
இந்த தண்டனை இவர் செய்த தவறுக்காக கொடுத்தார்கள் என்றால், தன்னை ஒரு கடவுளின் அவதாரமாக சுயபிரகடனம் செய்துகொண்டு மக்களை ஏமாற்றிப் பணம், பொன், பொருள், நிலம் எல்லாம் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்திருக்கும் அம்மா பகவானை எப்போது சிறையில் தள்ளுவது?

’நீங்க யாராவது கடவுளை பார்த்திருக்குறீங்களா? அவர் எப்படி இருப்பார்னு யாருக்காச்சும் தெரியுமா?’ என யார் இடமும் கேட்டாலும் கூறும் பதில் ஒன்னுதான். ஆனால் அம்மா பகவான் சீடர்களிடம் கேட்டு பாருங்கள் கதை கதையா எடுத்து விடுவார்கள். பெரும்பாலும் படிச்சவங்க தான் இது மாதிரி ஊர ஏமாத்தும் கள்ளச் சாமியார்கள் குட்டையில் போய் விழுறது. இவர்கள் வெறும் அப்பாவிகளா என்று பார்த்தால் அதுவும் இல்லை. நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களில் படித்தவர்களும், பெரிய பெரிய பணக்காரர்களும்தான்  இவர்களிடம் சிக்கி ஏமாந்து வாழ்க்கையை தொலைக்கிறார்கள்.

அம்மா பகவான் தங்களின் பேச்சுத்திறனால், வாழ்க்கையில் அடிமேல் அடிவாங்கி நொந்துபோன படித்த மேதாவிகளை  தங்கள்  வசம் இழுத்துக்கொண்டு அவர்களுக்கு தீட்சை தந்து மோட்சம் தருவதாகச் சொல்லி ஆசிரமத்தில் பல வக்கிர செயல்களை அரங்கேற்றுகிறார்கள். இதை பற்றியெல்லாம் செய்திகள் அவ்வப்போது மீடியாக்களில் வந்தாலும் இன்னும் ஆட்டு மந்தை போல் மக்கள் நம்புவதை பார்த்தால் பாவமாகதான் இருக்கிறது. அதிலும் ஒரு பரிதாபமாண விஷயம் என்னவெனில் இந்த அம்மா பகவான் அவர்கள் யூத் கோர்ஸ் என்னும் பெயரில் இலைஞர்களை வைத்து ஒரு கூட்டம் நான்கு நாட்களுக்கு நடத்தி, அவர்களின் மூளையை நன்கு சலவை செய்து தங்களின் வலைக்குள் விழவைக்கிறார்கள்.

ஒரு மாதம் முன்பு அம்மா பகவான் ஆசிரமம் அமைந்துள்ள வரதபாளையத்தின் வழியாக பயணம் செய்யவேண்டி இருந்தது. அப்போதுதான் பார்த்தோம் மிக ப்ரம்மாண்டமாக பளிங்கு  கற்களால் பல கோடி செலவில் கட்டபட்டிருந்த அந்த ஆஸ்ரமம். இவர்களுக்கு 1990 களில் வெறும் 43,000 ரூபாய் மட்டுமே வருட வருமானம். ஆனால் இன்று 1,200 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் அவர்களின் பேரிலும் பினாமிக்கள் பெயரில் இருக்கிறதாம். மேலும் அம்மா பகவான் ஆஸ்ரமம் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் எங்களுக்கு நன்கு பரிச்சையமான அரசு துறையில் மிக பெரிய பதவியில் இருக்கும் ஒரு அண்ணனிடம் கேட்டபோது பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்திருந்தார்.

வரதபாளையத்தில் உள்ள  அவர்களது ஆஸ்ரமத்தை சுற்றிலும் பல ஏக்கர் புன்சை நிலங்களை  அப்பாவி மக்களை  ஏமாற்றி அடிமட்ட விலைக்கு வாங்கி இருக்கிரார்கள். யாராவது தர மறுத்தால் அவர்களின் கதைகளையும் முடித்த சம்பவங்கள்  உண்டாம். கோடி கணக்கில் கையில் பணம்  புழங்குவதால் அரசியல்வாதிகளையும் கையில் போட்டுக்கொண்டு தங்களின் வக்கிர செயல்களை  அமைதியாக மறைமுகமாக செய்துவருகிரார்களாம்.

அவர்களுக்கு ஆந்திரா தவிர தமிழ்நாடு, கர்நாடகா என அத்தனை மாநிலங்களிலும் பல ஆயிரம் கோடிக் கணக்கில் சொத்துக்கள்  சம்பாரித்து இருக்கிரார்கள். வெறும் 25ஆண்டுகளில் எப்படி இது சாத்தியம் ஆனது? இவர்களை எல்லாம் அரசு கண்காணிக்காதா?

விஜயகுமார்... கல்கி பகவான் ஆன கதை!
தமிழ்நாட்டில் உள்ள குடியாத்தத்தை அடுத்த நத்தம் கிராமத்தில் மார்ச் 7 1949 ஆம் வருடம் பிறந்தவர்தான் விஜய குமார் அலியாஸ் கல்கி பகவான். ஆரம்பத்தில் ஜிட்டு கிருஷ்ண மூர்த்தி ஆஸ்ரமத்தில் சேர்ந்து அங்கு நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் நன்கு கவனித்து வந்தார். பிறகு கொஞ்சம் நாட்கள் கழித்து அவரின் மீது சில குற்றசாட்டுகள்  வந்ததும் அங்கிருந்து வெளியேறி ஜீவாஸ்ரம் பெயரில் ஒரு கிராமத்து குருகுல பாட சாலையை துவக்கினார். அந்த ஆஸ்ரமத்திக்கு தலைமை வகித்து ஏழை எளிய மாணவர்களை தன்னுடன் சேர்த்துக்கொண்டார். இதெல்லாம் அவரின் மாஸ்ட்டர் ப்ளானில் ஒரு பகுதி என்று எவராலும் அப்போது கண்டு பிடிக்க முடியவில்லை.

ஜிட்டு கிருஷ்ண மூர்த்தி ஆஸ்ரமத்தில் பணியாற்றிய அனுபவத்தால் எளிதில் மாணவர்களின் எண்ணங்களின்  மீது தனது ஆதிக்கத்தை செலுத்த துவங்கினார். ஆன்மிகம் பெயரில் பக்தி  படங்களை  காட்டுவதும், ஆன்மிக சொற்பொழிவுகள் கொடுப்பதுமாக அவர்களின் மைண்ட் செட் மாற்ற துவங்கிவிட்டார். அதன் தாக்கம் எவ்வளவு தூரம் வந்ததென்றால் மாணவர்கள் தங்கள் வீட்டிற்கு போகவும் விருப்ப படவில்லை. அங்கு சென்றாலும் குடிகார அப்பாக்களாலும், வசதிகள் இல்லாத வீட்டில் இருக்க விருப்பப்படாத மாணவர்கள் ஜீவ ஆஸ்ரமத்தில் சேர்ந்த மாணவர்கள் விஜய குமார் காட்டிய அந்த பாசம் அவர்களை  வெகுவாக ஈர்த்தது. தொடர்ந்து ஆன்மீக சொற்பொழிவுகள் கேட்பதும், வருடங்கள் அங்கு ஓட சில வருடங்களுக்கு பிறகு அங்கு படித்த மாணவர்களை வைத்து விஜய குமார் தனது ஆன்மீக சாம்ராஜியத்தை உருவாக்க பயன்படுத்திக்கொண்டார். அதில் தன்னுடைய ஆஸ்ரமத்தில் இருந்து ஆறு  பேரை தேர்ந்தெடுத்தார். அவர்கள்தான் சமதர்சினி, மைத்ரேயா, அக்‌ஷைய மதி, அனந்தகிரி, விமலகீர்த்தி மற்றும் கவ்ஷிக், இது எல்லாம் அவர்களின் உண்மையான பெயர்களும் கிடையாதாம். இவர்களை  வைத்து உலகம் முழுவதும் அம்மா பகவானும் கல்கி பகவானும் தங்களின் ஆன்மிக சாம்ராஜியத்தை ஏற்படுத்திக்கொண்டனர்.

விஜய குமார் ஆரம்பத்தில் ஒரு சாதாரண எல்.ஐ.சி ஏஜண்டாக ஆரம்பித்த தனது வாழ்க்கை இப்போது அவதார புருஷனாக கல்கி பகவானாக தன்னை அறிவித்து செய்துவரும் அட்டுழியங்களை  எல்லாம் பார்க்கும்போது, நித்தியானந்தா விவகாரம் குறித்த விசாரணை நடத்துபவர்கள், கல்கி பகவான், அம்மா பகவானை மட்டும் கண்டும் காணாமல் இருப்பதை பார்த்தால் ரொம்ம்ம்ப பெரிய அளவில் இவங்களுக்கு  சப்போர்ட் கிடைப்பதாக சந்தேகம் ஏற்படுகிறது.

நான் கடவுளை  நம்புறவன் இல்லை. அவர் இருக்கிறாரோ இல்லையோ எனக்கு தெரியாது, ஆனால் இது மாதிரியான  போலிசாமியார்களை  மக்கள்  யாரும் நம்பி ஏமாறாமல் இருக்க வேண்டும் என்பதுதான் நம் விருப்பம்! மேலும் இந்த அம்மா பகவான் கல்கி பகவான் பற்றி தெலுங்கு சேனல்களில் வந்த வீடியோக்கள் பாருங்கள்  அப்போது புரியும் இவங்க பண்ணும் அட்டூழியங்கள் எல்லாம்.


தொடர்புடைய பதிவுகள் :


10 comments:

 1. seekirame thangal viruppam nivraiverattum. Thathasthu.

  ReplyDelete
 2. கல்கிக்கு துணையா ஜக்கியையும் அனுப்பலாமே.

  ReplyDelete
 3. வணக்கம்
  எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும்... விரைவில்....

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 4. கடவுளே இல்லை என்பவனைக்கூட நம்பலாம். ஆனால் தன்னையே கடவுளென ப்ரகடன படுத்திக்கொள்ளும் அயோகியர்களை மட்டும் மண்ணிக்கவே கூடாது.

  ReplyDelete
 5. ஏங் அம்மா பகவான்னு ஆரம்பிச்சு கல்கி பகவான் பத்தி சொல்றீங்க? அப்ப ரெண்டு பேரும் ஒண்ணா? ஆமா கல்கிங்கற பேர ஏன் மாத்தி வச்சுகிட்டாரு? கல்கி பத்திரிகை போர்ஜரி கேஸ் போட்டுட்டாங்களா?

  ReplyDelete
 6. இவன் கல்கி என்று சொன்னாலும் நம்புவதற்கு பெரிய கூட்டமே இருக்கு, அதில் பலர் உயர்கல்வி கற்றவர்கள் என்பதுதான் வியப்பாக இருக்கிறது.

  ReplyDelete
 7. உயர்கல்வி படிச்சவனுக்கு சுவாமிஜி வெள்ள தோல் உள்ளவணா, ஆங்கிலம் பேச தெரிஞ்சவனா, பளிங்கு மாதிரி ஆஶ்ரம் வச்சிருக்காவன் வேணும். எவ்வளவு காசு கேட்டாலும் கொடுப்பானுங்க.

  ReplyDelete
 8. இந்தாளு பின்னால அலையறதுக்கு, சமூகத்துல பெரியாளுன்னு சொல்லிக்கற கூட்டமும், படிச்ச கூட்டமே இருக்கும் போது.....என்னத்த சொல்றது? மனிதன் ஆறறிவு படைத்தவனா என்ற சந்தேகம் வருது! மட்டுமல்ல விலங்குகள் மனிதனை விட புத்திசாலி என்பது நிரூபணம் ஆகின்றது!!!

  ReplyDelete
 9. எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்ற மன நிலையில் உள்ளவர்களை தன வசப்படுத்தி ஏமாற்றிக் கொண்டிருக்கும் இந்த போலிகளை மக்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பது வேதனை. இதில் நன்கு படித்தவர்களும் இருப்பதுதான் ஆச்சர்யம்.

  ReplyDelete