Friday, October 17, 2014

கடவுளே! நீ இருந்தால் என் கேள்விக்கு பதில் சொல்லேன்!???பெண்கள் நாட்டின் கண்கள் என்றும், பூமி, நதிகள் மட்டும் அல்லாமல் சொந்த நாட்டைக்கூட பெண்ணாக பாவித்து வணங்கும் நம் நாட்டில், பல போராட்டங்களுக்கு பிறகு தானே சட்டங்கள் எழுதப்பட்டு அவர்களுக்கு சம வாய்ப்புக்கள் கொடுக்க பட்டிருக்கிறது. அதுவரை வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டு மறைந்து போன கோடிக்கனக்காண பெண்களுக்கு என்ன பதில் வைத்திருக்கிறாய் நீ, நீ?

என்னதான் ஆணும் பெண்ணும் சமம் அப்படினு சட்டங்கள் ஏற்றாலும், சம உரிமை கொடுத்து அவர்களை சமூகத்தில் தலை தூக்கி நடக்க செய்தாலும், ஆணுக்கு ஈடாக அனைத்து வாய்ப்புக்கள் அவர்கள் பெற்றாலும், அவள் காலம் காலமாக படும் வலி வேதனைகளில் ஆண்கள் மட்டும் விலக்கப்பட்டிருக்கிறார்களே? ஏன், ஏன்?

அப்பாவி பெண்ணை தன்னுடைய இச்சை தீர்த்துக்கொள்ள, தயங்காமல் தாக்கி செல்லும் ஆண்களுக்கு மட்டும் எதுவும் ஏற்படுவதில்லையே? ஏன், ஏன்?
ஒரு பெண் வயதிற்கு வந்ததில் இருந்து, அவள் ஐம்பதை தொடுவது வரை, மாதத்தில் முப்பது நாட்களில் மூன்று நாட்கள் நடமாடும்போதே நரகம் காட்டுவது ஏன், ஏன்?
குடும்பத்திற்காக ஒரு நொடி ஆணின் சுகத்தால், பத்து மாசம் அவள் மட்டும் வயிற்றை சுமந்து, கஷ்ட்டப்பட்டு பிள்ளை பெறுவது ஏன், ஏன்?

கல்யாணம் முடிஞ்சு, தன்னுடைய புருஷன் குடிகாரன் தெரிஞ்சும், அவனுடன் வாழ விருப்பம் இல்லாமலும், பிள்ளைகளை பெற்று வளர்த்து கடைசியில் மாண்டு போவதுதான் அவளின் வாழ்க்கை லட்சியமாக நீ நிர்ணயித்தது ஏன், என்?

சமீபத்தில் பெண்கள் வாழ பாதுகாப்பற்ற நாடு நம்முடையது என்ற ஆராய்ச்சிகள் படிக்கும்போது, உங்களையே நம்பி தினமும் தவறாமல் பூஜை செய்தவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் பரிசுதான் இது போன்ற சமூகமா? ஏன், என்?

கல்விக்கொரு தெய்வம், செல்வத்திற்கொரு தெய்வம் மற்றும் காவலுக்கொரு தெய்வம் என வணங்கும் நம் பென்களுக்கு இதுவரை என்ன ஞாயம் செய்திருக்குறீர்கள் நீங்கள்?
சொல்லுங்க கடவுளே பதில் சொல்லுங்க! உங்களின் படைப்பில் ஏன் பாரபட்சம் காட்டுகிறீர்கள்? நீங்க ஆணையும் பெண்ணையும் சரிசமமாக படைத்திருக்கலாம் அல்லவா? பெண்ணுக்கு மட்டும் எப்படி மாதவிடாய், கற்பு போன்ற இதர பிற பிரச்சனைகளை அவர்களுக்கு கொடுத்து படைத்தாயோ ஆண்களை மட்டும் சும்மா விட்டதேன்!? எங்களுக்கும் அது போன்று மாத விடாய், கற்பு, எதாவது கொடுத்திருக்கலாம் அல்லவா கடவுளே! உங்களின் பாரபட்சத்தால் படைக்கப்பட்ட பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் அப்போதாவது குறைந்திருக்கும் அல்லவா!?
***
எல்லாக்கொடுமைகளையும் கடந்து, எவ்வளவோ போராட்டத்திற்கு பிறகு அவர்கள், உரிமைகளை பெற்று, இன்று ஆண்களுக்கு சரிசமமாக எல்லா துறைகளிலும் வெற்றி பெற்றாலும் இன்னும் அவர்களின் மீதான தாக்குதலோ இல்லை மன ரீதியான அவர்களுக்கு கொடுக்கும் டார்ச்சர்கள் குறைந்த பாடில்லையே?
இதற்கெல்லாம் யார் காரணம் என்று யோசித்தபோது பெரும்பாலோரால் நம்பப்படும் கடவுள் கான்சேப்ட் நினைவுக்கு வந்தது . அவர்தானே இந்த பூமி, மனுஷங்களை எல்லாம் படைச்சதா நம்புறீங்க, அதனால் அவர் செய்த தவறை சுட்டிக்காட்டி கேள்வி கேட்டிருக்கிறேன் பார்ப்போம் கடவுள் இருந்தால்... இந்த பதிவை படித்தால்... இதுவரை தான் செய்த தவறை... இனி வரும் நாட்களில் திருத்திக்கொள்வார் என்ற நம்பிக்கையில்...

தொடர்புடைய பதிவுகள் :


4 comments:

 1. அழகான, சிந்திக்க வைக்கும் பதிவு நண்பரே!

  ReplyDelete
 2. கடவுள் இருந்தால்........திருத்திக்கொள்வார்!

  ReplyDelete
 3. திடீர்னு என்ன அவங்க மேல ஒரு கரிசனம்? இத்தன நாலல் எங்க போச்சி இதெல்லாம்? சரி விடு பதிவு நல்லா இருந்தது!

  கடவுள் இருந்தால்... இந்த பதிவை படித்தால்... ///அவரு இருக்குரது தெரியாம இருக்குரது எவ்வலவோ நல்லதுடா சாமி! தெரிங்ஜி மட்டும் இருந்தா, அவரும் பேஸ்புக்கலயோ இல்ல ஜிமெயில்லையோ அக்கவுன்ட் வச்சிருந்தா எங்களுக்கு லின்க் அனுப்பி படிச்சியா? படிச்சியா? னு கேட்டு கொல்ராமாதிரி அவரையும் கொலையா கொன்னுருப்ப! ஆனாலும் இவ்வலவு பேராச உணக்கு இருக்க கூடாது!

  நல்ல எழுத்து நடை, மேலும் தொடர வாழ்த்துக்கள்!

  ReplyDelete