Monday, October 27, 2014

படிக்கும் வயதில் படிப்பை மட்டும் காதலி!இன்றைய நாட்களில் இளைஞர்களுக்கு எதெது எந்தெந்த நேரத்தில் செய்யணும் என்பதற்கு ஒரு விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. இதற்கெல்லாம் சோசியல் நெட்வர்க்கை நோக்கி விரலை காட்ட விருப்பம் இல்லை. அது தன்னுடைய வேலையை சரியாகச் செய்துக்கொண்டுதான் இருக்கிறது. நாம் அதனை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில்தான் உண்மையான வெற்றி இருக்கிறது. ‘ஆரம்பிச்சுட்டாண்டா’ ஆரம்பிச்சுட்டான் என யாரும் நினைக்க வேண்டாம். இங்கு நான் சொல்ல இருக்கும் விஷயமே வேறு. அது ராஜேஷ் அண்ணனை பற்றியது. எப்போதும் நான் வகுப்பில் சக மாணவர்களிடம் எதிர்காலத்தை பற்றி பேசும்போது ராஜேஷ் அண்ணனை முன் உதாரணமாக வைத்து மட்டுமே பேசுவேன். அதற்கொரு காரணம் இருக்கிறது. அதை பிறகு சொல்கிறேன். எங்கள் குடும்பத்திலும் எங்களைச் சுற்றி இருப்பவர்களிலும் பல ராஜேஷ் அண்ணன்களைப் பார்த்து வளர்ந்தவன் நான். வீட்டிலோ வறுமை. அன்று கஞ்சியையும் பழைய சோற்றையும் சாப்பிட்டு படித்தவர்கள் இன்று அடைந்திருக்கும் வெற்றியை பார்க்கும்போது, அவர்களின் மீது தனி மதிப்பும் மரியாதையும் ஏற்படுகிறது. அப்படியானவர்கள்தான் ரமேஷ் அண்ணன்,சுரேஷ் அண்ணன், நாகராஜ் அண்ணன். இவர்கள் அனைவரும் நான் நான்கு அல்லது ஐந்தாம் வகுப்பு படிக்கிறதில் இருந்து பழக்கம். இவர்கள் அனைவரும் அப்போது இஞ்சினீரிங் படித்துக்கொண்டிருந்தனர். அதன் பிறகு கேட் தேர்வில் தேர்ச்சி பெற்று சென்னை ஐஐடியில் எம்டெக் முடித்து இப்போது மத்திய மாநில அரசுத்துறையில் நல்ல பதவியில் இருக்கிறார்கள். இவர்களைத்தவிர இன்னும் சிலரை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். வாழ்க்கையில் வறுமையில் வாடினாலும் இப்போது அவர்களின் வளர்ச்சியை கேட்டால் நமக்குள் ஒரு தன்னம்பிக்கையும் தைரியமும் பிறக்கும். அப்படி பலர் எனக்கு அறிமுகமானாலும், மேற்சொன்னது போல என் வகுப்பு சக நண்பர்களிடம் அவர்கள் யாரையும் முன் உதாரணமாக வைத்து நான் பேசியது கிடையாது.

‘உனக்கு தெரியுமா? அந்த அண்ணன் ராப்பகலா கஷ்ட்டபட்டு படிச்சு ஐஐடியில் சீட்டு கிடைத்தது’, ‘அந்த அக்கா அவுங்க அப்பாவுக்கு ஒன்னரை கோடி செலவு மிச்சபடுத்தி நுழைவு தேர்வின் மூலம் ரேடியாலஜி படிப்பு படிக்க சீட்டு கிடைச்சது’ என இப்படி எனக்கு தெரிந்த எவ்வளவோ உதாரணங்களை சொல்லிக்கொண்டு சென்றாலும், எங்கள் வகுப்பு நண்பர்களுக்கு நான் என்ன சொல்கிறேன் என்பதை பற்றி புரிய வாய்ப்பு குறைவு. நாங்கள் படிப்பது ஆட்ஸ் குருப் என்பதால், இஞ்சினீரிங் மற்றும் மெடிசின் துறைகளில் அவர்கள் பட்ட கஷ்ட்டம் என்ன என்பது இவர்களுக்கு தெரியாது. அதற்காகவே எப்போதும் நான் ராஜேஷ் அண்ணனை வைத்தே அவர்களுக்கு ஆலோசனைகளும், ஐடியாக்களும் கொடுப்பேன். காரணம் ராஜேஷ் அண்ணன் 3 ஆண்டுகளுக்கு முன்புதான் நாங்க படித்துக்கொண்டிருக்கும் கல்லூரியில் இருந்து முதுகலை ஆங்கில இலக்கியம் படித்து முடித்திருக்கிறார். நாங்கள் படிக்கும் அதே பாடமும், நாங்கள் பயன்படுத்தும் அதே பென்ஞ்சிலும்தான் உட்காந்து பாடங்களை கவனித்திருக்கிறார். மூன்றாண்டுகளுக்கு பிறகு இப்போது அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக பணிப்புரிந்து வருகிறார். அவர் இந்த நிலை அடைய கிட்ட தட்ட இரண்டு வருடங்கள் பயங்கரமாக உழைத்திருக்கிறார். முதுகலை படிப்பு முடித்ததும் ஒரு பக்கம் பி.எட் சேர்ந்து படித்துக்கொண்டே இன்னொரு பக்கம் தேசிய அளவில் நடத்தப்படும்
National Eligibility Test க்ளியர் செய்திருக்கிறார். இந்த தேர்வு பாஸாவது அவ்வளவு சுலபம் கிடையாது. மிக பிரபலமான ப்ரெஸ்டிஜியஸ் நிருவனங்களில் இளங்கலை மற்றும் முதுகலை படித்த மாணவர்களும் க்ளியர் செய்ய முடியாமல் திணறிக்கொண்டு இருக்க, வெறும் இரண்டாண்டுகள் மட்டுமே ஆங்கில இலக்கியம் படித்து net மற்றும் set எலிஜிபிலிட்டி டெஸ்ட் பாஸ் ஆகி இருக்கிறார். அடுத்ததாக எப்பி கவர்ன்மெண்ட் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் காலியான இடங்களை நிரப்ப நோட்டிஃபிகேஷன் இட்டபோது எப்படியாவது அந்த தேர்வில் தேர்ச்சிபெற மிக கடுமையாக உழைத்து அதில் வெற்றியும் கண்டு இப்போது திருப்பதிக்கு அருகில் ஒரு ஊரில் பணி புரிந்தும் வருகிறார். இதெல்லாம் அவரின் வெற்றியாக ஒரு பக்கம் நாம் பார்த்தாலும், அவரின் இன்னொரு பக்கம் (வறுமை) பற்றி பெரும்பாலும் யாருக்கும் தெரியாது. நான் அவருடன் அதிகம் பழகியது கிடையாது. ஆனாலும் அவரை பற்றி நன்கு நான் அறிவேன்.

ஒரு ஒன்னரை வருஷத்துக்கு முன்பு ’ஹலோ ராஜேஷ் அண்ணா இருக்கிறாரா?’ ஒரு முறை அவரது அப்பா மொபைலிற்கு அவசரமாக ராஜேஷ் அண்ணனுடன் பேச வேண்டி இருந்ததால் கால் செய்திருந்தேன். வயதானவர் போல் குரல் காட்டிக்கொடுத்தது. பேசும்போது கூடவே அவரது குரலில் நடுக்கமும் தெரிந்தது. ‘அவன் இல்ல தம்பி’, சற்று தயக்கத்துடனே அவர் அடுத்ததா ‘தம்பி என் பைய்யன் என்ன படிக்கிறான்?’, ’எப்போ அவனுக்கு வேலை கிடைக்கும்?’ என சில கேல்விகளை கேட்டிருந்தார். அவர் அந்த சமயம் கேட்டதை இப்போ நினைச்சாலும் எனக்கு ஒருமாதிரி இருக்கிறது. ’உங்க பைய்யனுக்கு கூடிய சீக்கிரம் ப்ரோஃபசர் வேலை கிடைக்கப் போகுது என சொல்லி காலை துண்டித்தேன்.
‘நீ படிச்சா இஞ்சினீரிங் தான் படிக்கணும்’, ‘நீ டாக்டருக்குதான் படிக்கணும்’ என கட்டளை போட்டு படிக்க வைக்கும் பெற்றோர்களை நான் பார்த்திருக்கிறேன். தங்களிடம் பணம் இருப்பதால் மட்டுமே லட்சத்திலும் கோடிகளிலும் சீட்டுக்களை வாங்கி படிக்க வைக்கும் பெற்றோர்கள் போல தன்னுடைய மகனை படிக்க வைக்காட்டியும், அவன் என்ன படிக்கிறான் என்பதை கூட தெரிஞ்சுகாட்டியும், தான் நாள் முழுவதும் கூலி செய்து சம்பாரித்து அவரால் முடிந்ததை மட்டுமே தன்னுடைய மகனுக்கு செய்ததை கொண்டு படித்து முன்னேறிய ராஜேஷ் அண்ணன் கதையை எங்கள் வகுப்பு நண்பர்களுக்கு சொல்வேன். எப்போதும் அந்தந்த துறையில் சோதனை கடந்து சாதனை படைத்தவர்களின் உதாரணங்களை சொன்னால் போதும் துளி அளவாவது அவர்களை யோசிக்க வைக்கலாம் என நம்புகிறேன். படிக்கும் வயது மிக முக்கியமான ஒரு கட்டம். அந்தச் சமயத்தில் எப்படி நாம் நடந்து கொள்கிறோமோ அதனை பொறுத்துதான் எதிர்காலமும் அமையும் என நான் உறுதியாக நம்புகிறேன். கஷ்ட்டபடுங்கள். படிக்கும்போதே ஒரு இலக்கை நிர்ணயித்து கொள்ளுங்கள். நிச்சயம் கல்வி உங்களை கைவிடாது. கைகொடுத்து உங்களை அது மேலே தூக்கதான் செய்யும். அதனால் படிக்கும் வயதில் படிப்பை மட்டும் காதலிக்க சொல்கிறேன்.
தொடர்புடைய பதிவுகள் :


4 comments:

 1. வணக்கம்
  உண்மைதான் மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. //அதனால் படிக்கும் வயதில் படிப்பை மட்டும் காதலிக்க சொல்கிறேன்.//

  ஏதோ இந்தக் காலத்தில் தான் நடக்கிறது என்று
  ஒரு கணிப்பில் எழுதி இருக்கிறீர்கள்.

  காலை அரும்பி பகல் எல்லாம் போது ஆகி
  மாலை வரும் இந்நோய்.

  அந்தக் காலத்துலேந்து இருக்குதுங்க.
  பசங்க படிப்பைத் தொலைச்சது புதுசு ஒன்னும் இல்லீக.

  என்ன ஆதாரம் அப்படின்னு கேட்கறீர்க...
  காத பக்கத்திலே கொண்டு வாங்க. சொல்றேன்.

  சுப்பு தாத்தா.
  www.subbuthatha72.blogspot.com

  ReplyDelete
 3. மஹேஷ் மிக நல்ல பதிவு! மிகச் சரியே! படிக்கும் காலத்தில் படிப்பைக் காதலித்தால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும்...இது சரிதான் என்றாலும் சில படிப்பைத் தவிர சில வேறு நல்ல விஷயங்களையும் காதலித்து அதில் வெற்றியும் கண்டிருக்கின்றார்கள். எனவே நாம் என்ன செய்தாலும் (உருப்படியாக) அதைக் காதலித்து, ஆழ்ந்த மனதுடன், உழைத்து, நேர்மையாகச் செயல்பட்டல் வெற்றி நிச்சயம்.

  சுப்புத் தாத்தா சொல்லுவதும் சரிதானே!

  ReplyDelete
 4. ‘நீ படிச்சா இஞ்சினீரிங் தான் படிக்கணும்’, ‘நீ டாக்டருக்குதான் படிக்கணும்’ என கட்டளை போட்டு படிக்க வைக்கும் பெற்றோர்களை நான் பார்த்திருக்கிறேன். தங்களிடம்
  பணம் இருப்பதால் மட்டுமே லட்சத்திலும் கோடிகளிலும் சீட்டுக்களை வாங்கி படிக்க வைக்கும் பெற்றோர்கள் போல தன்னுடைய மகனை படிக்க வைக்காட்டியும், அவன் என்ன படிக்கிறான்
  என்பதை கூட தெரிஞ்சுகாட்டியும், தான் நாள் முழுவதும் கூலி செய்து சம்பாரித்து அவரால் முடிந்ததை மட்டுமே தன்னுடைய மகனுக்கு செய்ததை கொண்டு படித்து முன்னேறிய
  எண்ணற்ற நபர்களை வனங்குகிறேன்

  இளமையில் மனகட்டுப்பாடுடன் இருப்பவர்கள் வாழ்வில் உயர்ந்த இடத்தை அடையளாம் என்பதற்கு ராஜேஷ் அண்ணனின் வாழ்க்கை ஒரு உதாரனம்.
  அனைவரும் படிக்க வேண்டிய ஒரு பதிவு.

  ReplyDelete