Friday, October 31, 2014

ஏன் அவ்வளவு தயக்கம்?நேற்று அரக்கோணம் சென்றிருக்க வேண்டும். எங்களுக்கு கல்லூரியில் தேர்வுகள் நடந்துக்கொண்டிருப்பதால் செல்ல முடியாமல் போனது. இங்கிருந்து இரண்டு மணிநேரம் பேருந்தில் அரக்கோணத்தை சென்றடையலாம். எப்படியும் பரிட்சை நான்கு மணிக்கெல்லாம் முடிந்திடும் என்பதால் அதன் பிறகாவது போகலாம் என முடிவு செய்திருந்தேன். ஆனால்
கடைசி நிமிடத்தில் போக முடியாமல் போனது. தெரிந்த ஒரு அண்ணனுக்கு நேற்று மாலை அரக்கோணத்தில் திருமணம் நடந்தது. அதுதான் விஷயம். அவரது பெயர் vinod benjamin. ஹச்.ஆராக அம்பத்தூர் டீசியஸில் பணிப்புரிந்து வருகிறார். ’நா படிச்ச படிப்புக்குதான் வேலை செய்வேன்’ என இல்லாமல் படித்து முடித்ததும் கிடைத்த அனைத்து வேலைகளையும் செய்த பிறகுதான் டீசியஸில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார். அதற்குள்ளயே மூன்று பத்துகளை கடந்துவிட்டார். ஹூம் போகட்டும் இப்போது நல்ல வேலையில் இருக்கிறார் என இருந்தாலும், யாரும் அவருக்கு பெண் கொடுக்க முன்வரவில்லை. அதுதான் கொஞ்சம் தாமதமாக திருமணம் செய்துகொள்கிறார்.

இப்போது அவருக்கு 35 வயதாகிறது. ‘கலரு கொஞ்சம் கம்மியா இருக்கார்’, ‘தொடப்பம் குச்சி போல ரொம்ப ஒல்லியா இருக்கிறார்’, ‘தலையில மூணு முடி இல்ல’ என யாரும் அவரை ரிஜக்ட் செய்ய வாய்ப்பே கிடையாது. பார்க்குறதுக்கு நல்லாதான் இருப்பார் ஆனாலும் யாரும் அவரை கட்டிக்குறேனு முன்வந்து ஏத்துக்கல. அவரின் பெற்றோர் தேடாத இடம் கிடையாது. ‘இருக்குற ஒரு புள்ளைக்கு பொண்ணு கிடைக்கலையேனு’ பல முறை எங்களிடம் அவர் அம்மா சொல்லி இருக்கிறார்.
அவர்களோட அனைத்து சொத்துக்கும் இவரே வாரிசு. ஆனாலும் எந்த பொண்ணும் முன்னுக்கு வந்து இவரை ஏத்துக்கல. எல்லாம் நல்லா இருந்தாலும் அவரால் பார்க்க முடியாது என்பதாலயே பல ஆண்டுகளாக பொண்ணு தேடியும் கிடைக்கல. சமீபத்தில் தஞ்சா ஊர் பக்கம் எதோ ஒரு ஸ்கூல் டீச்சர் இவரை திருமணம் செய்துகொள்ள சம்மதிச்சதா சொன்னார். நேற்று திருமணமும் நடந்து முடிந்தது. சந்தோஷம். இவரை போல் இன்னும் பலரை நான் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். ‘பார்வை கிடையாது என்னும் ஒரே காரணத்திற்காக பலர் ரிஜக்ட் செய்யப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு இருக்கும் தன்னம்பிக்கை, தைரியம், செய்யும் வேலையை ஏன் யாரும் பார்ப்பதில்லை?

இன்னொரு சம்பவம் சொல்கிறேன். அவர் பெயர் ராஜேந்திரன். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் டெலிபோன் ஆப்ரெட்டராக பணிப்புரிந்து வருகிறார். செண்ட்ரல் கொவர்மெண்ட் சேலரி. நாற்பது கிட்ட வாங்குவார். ஆனாலும் இன்னும் ஒரு மூண்றாண்டுகள் முடிந்தால் அவருக்கு நாற்பதை தொட்டுவிடுவார். இன்னும் அவருக்கு பெண் கிடைக்கவில்லை. கல்யாண மாலை, ஹிந்து, இன்னும் பல மேட்ரிமோனியிலும் விளம்பரம் கொடுத்திருந்தார். யாரும் முன்னுக்கு வந்து ‘நா கல்யாணம் பண்ணிக்குறேன்’ தைரியமாக முடிவு எடுத்து வந்தது கிடையாது. ஆனால் ஒரு ஆறு மாதங்களுக்கு முன்பு ‘நா உங்களை கல்யாணம் பண்ணிக்குறேன்’ என ஒரு பெண் இவரிடம் வந்திருக்கிறாராம். ராஜேந்திரன் அவருக்கும் ரொம்ப சந்தோஷம். ‘கட்டுனா பார்வையுள்ள பெண்ணைதான் கட்டிக்குவேனு’ ரொம்ப உறுதியா இருந்ததால் தான் நம்பிய கடவுள் தன்னை கைவிடல என நம்பி அந்த பெண்ணிற்கு ஓக்கே சொல்லி இருந்திருக்கிறார். அவர்கள் சந்திச்ச அதே வாரத்தில் அந்த பெண்ணிற்கு  பிறந்த நாள் வந்ததாம். ’உனக்கு என்ன கிஃப்ட் வேணும் என’ ராஜேந்திரன் கேட்டிருக்கிறார். அந்த பெண்ணும் எதோ கேட்க இவர் நல்ல காஸ்ட்லியான ஒரு சேம்சங் மொபைல் வாங்கி கொடுத்திருக்கிறார். அடுத்ததா வீட்டில் சொல்லி திருமண ஏற்பாடு செய்யலாம் என பேச்சு எடுத்தபோது அவள் எஸ் ஆகிவிட்டாள். அவ்வளவுதான்.
விசாரித்ததில் இவரை ஏமாற்றிவிட்டார். ஹும் பத்தாயிரத்தோட போச்சுனு விட்டார். ஆனால் அந்த சம்பவம் பிறகு திருமணத்தின் மீது இருக்கும் கொஞ்சம் ஆசை கூட போயிடுச்சாம். இப்போது தினமும் வேலைக்கு செல்கிறார். மாத கடைசியில் சம்பளம் வாங்குகிறார். அவ்வளவுதான். அவர் எதிர்பார்த்தது +2 படிச்சிருந்தாலும் போதும். ‘பெருசா வர போறவ படிச்சிருக்கணும் என்றெல்லாம் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை.

இன்னொரு யூத் ஃபுல்லான ஒரு சம்பவத்தையும் சொல்கிறேன். பேரு பாலாஜி. 25வயது தான் ஆகிறது. பார்க்கறதுக்கு சினிமா நடிகன் போல இருப்பான். சிறு வயதில் காரில் குடும்பத்தோடு சென்றுகொண்டிருக்கும்போது, கார் திடீரென விபத்துக்குள்ளானதால், கார் கண்ணாடி உடைந்து சிறிய பகுதி அவனது கண்களில் இறங்கி பார்வை சுத்தமாக போச்சு. பல முறை ஆப்ரேஷன் செய்தும்
பார்த்தார்கள். ஆனாலும் நோ யூஸ். அவன் படித்து இப்போது ஆர்பியை வங்கியின் சென்னை கிளையில் பணி புரிந்துவருகிறான். அவனுக்கு சில வருடங்களாக ஒரு பென்ணுடன் தொடர்பு இருந்திருக்கிறது. வெறும் நட்புரீதியாக மட்டுமே. இரண்டு பேருக்கும் நல்ல புரிதல் இருந்ததால் தைரியமாக ஒருநாள் கேட்டிருக்கிறான் ‘நீ என்னை கல்யானம் பண்ணிக்கிறியா?’ என. அதற்கு அவள் ’பாலாஜி நீ என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட் டா’ உன்னை எப்படி டா... என கேட்டிருந்திருக்கிறார். அவ்வளவுதான் புரிந்துவிட்டது அவனுக்கு. இப்படிதான் நிறைய பெண்கள் பார்வையற்றவர்களுடன் நன்கு பழகினாலும் திருமணத்திற்கு ஒத்துக்குறது கிடையாது. இது ஒருபக்கம் என்றால் பார்வையற்ற பெண்களின் நிலை யோசித்து பாருங்கள். அவர்களின் கதைகளை கேட்டால் இன்னும் பரிதாபமாக இருக்கும்.
தொடர்புடைய பதிவுகள் :


5 comments:

 1. மகேஷ்.. பதிவை படித்தேன், தமக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அமர்ந்து கொண்டு இருக்கின்றேன். வாழ்கையே நம்பிக்கை தானே.. என்றாவது ஓர் நாள் இந்த நிலை மாறும் என்று நம்புவோம்.

  ReplyDelete
 2. You simply reflected my mind Mahesh. Good post. It is a caution for me.

  ReplyDelete
 3. மகேஷ்,

  கண்களில் நீர் சுரக்க , தங்கள் கட்டுரையை படித்து முடித்தேன்.

  வினோத் பெஞ்சமினுக்கு வாழ்த்துக்கள். மணபெண்ணுக்கு hats off - welldone bride.
  .
  உலகத்தின் பார்வை சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டிய ஒன்று என்பது தெள்ளதெளிவு.

  தொடர்ந்து எழுதுங்கள்.

  நன்றி.

  கோ

  ReplyDelete
 4. மகேஷ்! னீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்க்ள் என்று புரிகின்றது! மனம் கனக்கத்தான் செய்கின்றது! ஆனாலும், ஏன் நாம் நெகட்டிவ் சைட் பார்க்க வேண்டும். பாசிட்டிவ் சைட் யோசிக்கலாமே! கொஞ்சம் சிந்த்தித்துப் பாருங்கள்! வேண்டாம் இது போன்றவை. பார்வை உள்ளவர்களின் பார்வைகள் மிகவும் மோசமகி வருகின்றது! எனவே தாங்கள் அகக் கண் மூலம் உலகைப்பாருங்கள்! நிச்சயமக உங்களுக்கு நல்லது நடக்கும்!

  ReplyDelete
 5. Mahesh. God has already created a companion for you whom you will meet at an appropriate time.

  ReplyDelete