Sunday, October 05, 2014

சும்மா இருங்கப்பா # வாயக்கிளராம!:-)

நேற்று  புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையாம். அதை முன்னிட்டு கும்பிட போறேன்னு எங்கள் வீட்டில் நேற்று நடந்த கூத்தும் நான் செய்த அட்டூழியமும்தான் இந்த பதிவு!

 காலைல எழுந்திரிக்கும்போதே காதுல வீட்டுல இருக்குறவங்க பேசுற சப்தம் எல்லாம் ஓடிகிட்டு இருந்திச்சா! சரி நாமளும் அந்த டிஸ்கஷன்ல போய் கலந்துக்கலாம்னு ஹாலுக்கு போனா ‘இன்னைக்கு வீட்டுல டிஃபன் சமைக்க போறதில்ல சாமிய கும்பிட்டு மதியம்தான் சாப்பிடப்போறோம்!ன்னு’ நம்மள பார்த்து அப்பா சொல்லவும் உடனே நா அம்மாவ பார்த்து ‘அதெல்லாம் எனக்கு தெரியாது எனக்கு எதோ ஒண்ணு செய்து தரணும் இல்லாட்டி 5.5 ரிக்டர் ஸ்கேல்ல பூகம்பம் வரும் வீட்டுல!’ நா சொல்லி முடிக்கவும் எதுவும் பேசாம அம்மா சரி குளிச்சிட்டு வா எதோ ஒண்ணு செய்து தர்ரேனு சொன்னாங்க!

எப்பவும் எங்க வீட்டுல இப்படிதாங்க! வீட்டுல இருக்குறவுங்க சாப்பிடாம சாமிய கும்பிடுறேனு மதியம் வகைவகையா சமைச்சு சாப்பிடரத பார்த்தா சிரிப்புதான் வரும்! ஆனால் நான் மட்டும் குறிப்பா இந்த மாதிரியான நாட்களில் தான் #வேலைய காட்டுவேன்!

ஒரு காலத்தில் நான் பசியாலும் பட்டினியாலும் சரியான உணவு இல்லாமலும் அவதி பட்ட நாட்கள் எல்லாம் இருக்கு! பயங்கர பசி ஏற்படும்! ஹாஸ்டலில் சரியாக இருக்காது சாப்பாடு! அந்த சமயத்தில் 3 ரூபா கொடுத்து ஒரு டைகர் பிஸ்கட் சாப்பிட்டு வயிறு முழுக்க தண்ணிய குடிச்சு பசிய போக்கிய நாட்கள் எல்லாம் என் பள்ளி பருவத்தில் இருக்கு! அதுனாலயே நிச்சயம் பசினா என்னனு நான் அறிவேன்! உணவுனா ஒரு மதிப்பு இருக்கு!
வீட்டிற்கு வந்த பிறகு ராஜ வாழ்க்கைதான்! பசினா என்னனு தெரியாமலே காலம் ஓடிகிட்டு இருக்கு! ஆனா இது மாதிரி சாமிய சொல்லி ஆடுற கூத்ததான் #விரும்புரதில்ல!

காலைல இருந்தே வகைவகையா சமைச்சு சாமிக்கு படைக்கிறோம்னு வயிறு நிறையவும் சாப்பிட்டு அந்த பொழுதை கடக்கவா சாமிய கும்பிடுறது! அதிலும் எல்லாம் சாமிக்கு படைச்ச பிறகு கொஞ்சம் நேரம் யாரும் அந்த பக்கம் போகாதீங்கனு எங்க அப்பா வேற கட்டளை! எந்த ஊருலயா சாமி வந்து சாப்பிட்டிருக்கு?! நாம சாப்பிடுரதுக்குதான் இந்த கூத்தெல்லாம்! நாம பேசுனா அதெல்லாம் உனக்கு தெரியாது நீ வாய முடிகிட்டு இருனு எங்க அம்மா  சொல்லுவாங்க! சரி எனக்குதான் தெரியாதுனு ஒத்துக்கிறேன்! உனக்குதான் தெரியும்னா சொல்லேன் கேக்குறேன் சொன்னா அதெல்லாம் அப்படிதான் செய்யனும் சொல்லுவாங்க!

அடுத்ததா எல்லாரும் சாப்பிட உட்காந்தோம் எல்லாம் அம்மா பரிமாறிக்கொண்டு இருந்தார்கள். வரிசையா இலையில் வட, பொரியல், பொங்கல் பல ஐட்டம்கள் சேரும்போது அப்பா திடீரென உருண்ட செய்யலியானு கேட்டார்! அதெல்லாம் இப்போ போய் செய்வாங்களானு அம்மா கேக்கவும் நா இடையே புகுந்து இந்திந்த பண்டிகைகள் வந்தா இது மாதிரியான உணவு பண்டங்களை படைக்கணும்னு எதாவது புத்தகத்துல குறிச்சி வெச்சு போனாரா கடவுள் தெரியல! என்ன மம்மி உன் ஞாயம்! சொல்லேன்னு நா கேட்கவும் ஒரு அமைதி நிலவியது. உடனே இப்படிதான் பெருசானதும் பண்ணப் போறியானு மம்மி கேட்டாங்க! நாம தெளிவா நிச்சயமா அதில் என்ன சந்தேகம் நீதான் பார்க்க போறியேனு சொன்னேன்! உடனே அப்பா நாலு காசு சம்பாரிக்கட்டும் அப்போ பார்க்கலாம்னு சொன்னார்! உடனே நாம பதிலுக்கு சொல்லாட்டி எப்படி! ’அதில் என்ன சந்தேகம் அப்பா! எதோ சமைச்சீங்க சாமிய கும்பிட்டீங்க எல்லாம் சரிதான்! அடுத்ததா செஞ்ச பண்டங்களை பசியாலும் பட்டினியாலும் வாடும் மக்களுக்கு கொடுக்கலாமே! அதை விட்டு இலை முளுக்க பண்டங்களை வெச்சு சாப்பிடுரதுதான் சாமி கும்பிடும் லச்சனமா? நா சம்பாரிக்கும் காசுல கொண்டாடுனா நிச்சயமா பசின்னா தெரியுரவுங்களுக்குதான் கொடுப்பேன்! நீதான் பார்க்க போறியேனு சொல்லி முடிச்சேன்!

இப்படிதான் பண்டிகைகள் வந்தாலே எனக்கும் எங்க வீட்டுல இருப்பவர்களுக்கும் செட்டே ஆகாதுங்க! நாமளும் வாய அடக்கி வைக்கலாம்னு பார்த்தா இருக்க முடியலீங்க! அது என்னவோ கடந்த ஒரு வருடமா இப்படிதாங்க எங்க வீட்டுல நடக்குது!:-)
தொடர்புடைய பதிவுகள் :


6 comments:

 1. Haa haaa good post mahesh. But ippadi viddil vaay kaaddinaal kidaikkirathum kidaikkaamal poyidum sollidden.
  periyavankalai naanka maaththa mudiyaathu, anusarichchuththaan pokonum :).

  ReplyDelete
 2. Rare fasting is good for health... moreover, your mother will share the eatable items with others for sure. the only thing is that they do in the name of the god... please don't forget that your lunch would start with the crow. this fasting also symbolizes the cruel nature of hunger. i believe, god is just a tool. these kinds of function should be celebrated with kith and kin. just think, if there is no festivals like this, how will relationships will sustain?

  ReplyDelete
 3. சும்மா இருங்கப்பா # வாயக்கிளராம!:-)/////இப்ப யாரும் உன்னோட வாய கெலருலயே, நீயேதான் போஸ்ட் போட்டே ஆவேன்னு நேத்து சாப்பிட்ட பொங்கல் வடைக்கெல்லாம்
  ஒரு போஸ்ட் தேத்திட்ட, எங்க வீட்ல அடுத்த வாரம் சனிக்கிழமை கும்பிட்ராங்க, அதுக்கான மெனுலாம் இப்பவே நான் சொல்லிட்டேன், இந்த போஸ்ட் பத்தி அடுத்தவாரம் நானும்
  பொங்கல் வட எல்லாம் திருத்தியா சாப்பிட்டுட்டு வந்து சொல்றேன்!

  ReplyDelete
 4. "உடனே இப்படிதான் பெருசானதும் பண்ணப் போறியானு மம்மி கேட்டாங்க!
  " என்னது?!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! நீ இன்னும் பெரிசாகனுமா????!!!!!!!!!!!!!!!!!!!!!!

  ReplyDelete
 5. அதில் என்ன சந்தேகம் அப்பா! எதோ சமைச்சீங்க சாமிய கும்பிட்டீங்க எல்லாம் சரிதான்! அடுத்ததா செஞ்ச பண்டங்களை பசியாலும் பட்டினியாலும் வாடும் மக்களுக்கு கொடுக்கலாமே! அதை விட்டு இலை முளுக்க பண்டங்களை வெச்சு சாப்பிடுரதுதான் சாமி கும்பிடும் லச்சனமா? நா சம்பாரிக்கும் காசுல கொண்டாடுனா நிச்சயமா பசின்னா தெரியுரவுங்களுக்குதான் கொடுப்பேன்! நீதான் பார்க்க போறியேனு சொல்லி முடிச்சேன்!//

  நல்ல ஒரு கருத்து! நகைச்சுவையோடு பகிர்ந்திருக்கீங்க!!! ரசித்தோம்!

  ReplyDelete
 6. நான் எங்க வீட்டில நேத்துதான் கும்பிட்டேன்! : )))

  ReplyDelete