Monday, October 06, 2014

திங்கட்கிழமையானா புது துணி எடுக்க கூடாதாயா?



நாளைமறுநாள் தம்பிக்கு பிறந்தநாள். ஆனால் விடுமுறை  இன்றோடு முடிவடைவதால் நாளை  காலை கல்லூரிக்கு அவன் போக வேண்டும். விடுதியில் தங்கி படிப்பதால் பிறந்தநாளுக்கு புது துணி எடுத்து அனுப்ப வீட்டில் முடிவு செஞ்சு எல்லாரும் கடைக்கு போக நேற்று தயார் ஆனார்கள். கடை ரொம்ப தூரம் எல்லாம் இல்லை. வீட்டிலிருந்து ஒரூ 100மீட்டர்தான் தூரம். தடுக்கி விழுந்தா அந்த பெரிய துணிக்கடை. ‘டேய் உங்க வீட்டுக்கு எப்படிடா வரணும்’ யாராவது நன்பர்கள் கேட்டால் அந்த கடை பேரை சொல்லி அங்கு வெயிட் பண்ணுவதாக சொல்லுவேன். எங்க வீட்டுக்கு ஒரு landmark காக அந்த கடை சொல்லலாம். திருப்பதியில் பிரபலமான ஒரு துணிக்கடை.

எல்லாரும் ரெடியான பிறகு "நீயும் வா கடைக்கு போகலாம் எதாவது துணி நீயும் எடுத்துக்கோயேன்" அம்மா சொல்ல அதல்லாம் வேணாம் நா வேணும்னா நாளைக்கு வர்றேன் இப்போ டீவில படம் பார்த்துகிட்டு இருக்கேனு சொன்னேண்.

உடனே #டாடி "திங்கட்கிழமையான புதுதுணி எடுக்க கூடாது" எங்க கூட வான்னு சொன்னார். வேறு எதாவது காரணம்  சொல்லி இருந்தாலும் அவர்களோடு போய் இருப்பேன். ஆனால் திங்கட் கிழமை புது துணி லிங் செஞ்சதுதான் #கோவம். அட திங்கட் கிழமை என்ன பாவம்யா செஞ்சது? அன்னைக்கு புது துணி எடுக்க கூடாது, துணி தைக்க கொடுக்க கூடாதுனு எல்லாம் சொன்னா அந்த கடைகாரங்க எப்படியா பொழைக்கிரது?

ஏற்கனவே பெரும்பாலும் பல கடைகள் ஞாயிறு மூடி இருக்கும். இதுல வேற திங்கட் கிழமை நா புது துணி எல்லாம் எடுக்க மாட்டேன்னு சொன்னா வாரத்தின் முதல் நாள் வியாபாரம் எப்படியா ஆரம்பிக்கும்? இதெல்லாம் வீட்டுல கேட்டா ‘அடங்காதவன், திமிரு பிடிச்சவன், பெரியவர்கள் சொல்லுற பேச்ச கேக்காதவன்னு எங்களுக்கு பட்டம் சூட்டுறது! மை லார்ட் குன்ஹா அவர்களே சொல்லுங்க! எந்த விதத்துல ஞாயம் இது? காலம் காலமாக இப்படி கேடுகெட்ட மூட நம்பிக்கைகளை பின்பற்றி வருவதைதானே நாங்கள் உடைக்க நினைத்து கேள்வி கேட்கிறோம்! ஆனால் இப்படியா எங்களை கவுரவ படுத்துறது!
தொடர்புடைய பதிவுகள் :


2 comments:

  1. திங்கட் கிழமை துணி எடுக்கக் கூடாதா? புதுசா இருக்கே! ஹஹாஹஹ்

    ReplyDelete
  2. ம்ம்ம்ம் எனக்கு இது புது தகவலா இருக்கு! எந்த கிழமையா இருந்தாலும் நம்ம எந்த எண்ணத்தோட எடுக்கப் போறோமோ, எந்த விசயத்துக்கு எடுக்கப் போறோமோ அதெல்லாம்தான் முக்கியம்! அவங்க அந்த தலைமுறை... அப்படி யோசிச்சா விட்டுடு... நம்மளுக்கு மாத்தனும்னா மாத்திக்கலாம்! அவ்வளவுதான்!

    ReplyDelete