Tuesday, October 07, 2014

ஜீவா, வினோத் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டி

சமீபமாகப் பார்த்த திரைப்படங்கள் பற்றி நானும் நண்பன் வினோத்தும் பேசிக்கொண்டிருக்கும்போது, தான் எழுதி இருந்த ஜீவா படம் விமர்சனம் பற்றி என்னிடம் கூறி இருந்தான். விமர்சனம் படித்து படம் பார்க்கும் பழக்கம் நாம் விட்டதால், அவனுடைய விமர்சனம் படிக்கவில்லை என்றேன். “நான் எப்பவும் விமர்சனம் எழுதினால் அது நல்ல படங்களாகவே இருக்கும்” என சொன்னான். அதன் பிறகு அவனது வார்த்தைகளின் மீது இருக்கும் நம்பிக்கையால் ஜீவா இரண்டு நாட்களுக்கு முன்பு பார்த்தேன். நல்ல படம். எப்படி வேலை இல்லாத பட்டதாரியை கொண்டாடினார்களோ அது போல கொண்டாடப்படவேண்டிய படம். இங்கு ஒரு படம் ஹிட் ஆவதும், ஃப்ளாப் ஆவதும் எல்லாம் நம் கையிலேதான் இருக்கிறது.
ஆனால் நாம் என்ன செய்கிறோம்? சினிமாத்துறையில் பிரபலமான, பெரிய நடிகர்கள்/நடிகைகளின் படங்களையே பார்க்க முன்வருகிறோம். புது முகங்களை வைத்து எடுக்கும் படங்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு இருப்பதில்லை. காரணம் வாரத்தில் சராசரியாக இரண்டு படங்கள் ரிலிஸ் ஆகிறது. அப்படி ரிலிஸ் ஆகும் அனைத்து படங்களையும் தியேட்டருக்கு சென்று பார்க்க நினைத்தால் நம்மை யாரும் பார்க்க மாட்டார்கள். அதனால் நான் சொல்ல வருவது நடுநிலையான விமர்சனம் யார் தருகிறார்கள் என்று விசாரித்து வையுங்கள். அது போன்ற இணையத்தளங்கள், வலைப்பூக்களை தொடர்ந்து ஃபாலோ செய்வதன் மூலம் நிச்சயம் நல்ல படங்களை பார்க்கலாம் என நம்புகிறேன். சரி படத்திற்கு வருவோம்.

ஒரு துறையில் நடக்கும் ஊழலைப் பற்றிப் படம் எடுப்பது என்பது ரொம்ப சென்சிடிவான விஷயம் என கருதுகிறேன். அதை எப்படி எடுக்கிறார்கள் என்பதில் இருந்து ஆரம்பித்து ரிலிஸ் ஆன பிறகு எப்படி அதை அனைவரும் எற்றுக்கொள்கிறார்கள் என்பதுவரை மிக கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில் கிரிக்கெட் செலக்‌ஷன் கமிட்டியில் திறமையானவர்கள் எப்படி சாதி அடிப்படையில் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதை பற்றி அழகான காதல் கதையுடன் ஜீவாவை கொடுத்திருக்கும் இயக்குநர் சுசீந்திரன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

சமீபத்தில் தென் கொரியாவின் இன்ச்சியான் நகரில் நடந்து முடிந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா, (11 தங்கம், 10 வெள்ளி, 36 வெண்கலம்) என மொத்தம் 57 பதக்கங்களை வென்ற நாம் எட்டாவது இடத்தை பிடித்திருக்கிறோம். ஆனால் நம் பக்கத்து நாடான சீனா ஆரம்ப முதலே பதக்க வேட்டையில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய அவர்கள் 151 தங்கம் உள்பட 342 பதக்கங்களுடன் முதல் இடத்தில் நின்றார்கள். ஏன்? சீனாவிற்கும் நமக்கும் என் அவ்வளவு வித்யாசம்? சீனா வென்ற தங்க பதக்கங்கள் எண்ணிக்கையில் கூட நாம் மொத்த பதக்கங்கள் சமமாகவில்லை. நம்மிடம் இல்லாத எது அவர்களிடம் இருக்கிறது?
எந்த ஒரு போட்டியும் எடுத்துக்கொண்டாலும் நம்மை விடவும் சீனாக்காரன் சாதித்துக்கொண்டே செல்கிறான். நம்மால் முடியுறதில்லையே? ஏன்? நம்மை ஆளும் தலைவர்கள் யோசித்தால் நம்மவர்களும் சாதிக்க மாட்டார்களா?

எங்களுக்கு தெரிந்த ஒரு பையன், தூரத்து சொந்தம் சொல்லலாம். படிப்பிலும் சரி, அவன் விரும்பி ஆடும் கிரிக்கெட்டிலும் சரி, எப்போதும் நல்ல பர்ஃபாமென்ஸ் ரிசல்ட்டாக காட்டுவான். அப்போது அவன் ப்ளஸ் டூ படித்துக்கொண்டிருப்பான் நினைக்கிறேன். ஒரு கிரிக்கெட் க்ளப் அவனை தங்களின் அணியில் விளையாட சேர்த்துக்கொள்வதாக சொன்னார்கள். அவனுக்கு ரொம்ப சந்தோஷம். தனக்கு பிடித்த கிரிக்கெட் துறையில் சாதிக்க நினைத்தான்.
ஆனால் நடந்தது என்ன?
அவனை போன்று வேறு சில இளைஞர்களையும் அந்த க்ளப் செலக்ட் செய்திருப்பதாக சொல்லி இருந்தார்கள். கூடவே அவர்கள் சொன்ன பணம் யார் முதலில் கொடுக்கிறார்களோ அவர்களுக்குதான் டீமில் இடம் எனவும் சொல்லி இருந்தார்கள். இந்த பண விஷயம் கொஞ்சம் தாமதமாக அவனுக்கு தெரிந்தது. பணத்தை கட்டி டீமில் இடம் பிடிப்பது பெரிய விஷயமே இல்லை. சொந்தமாக அவர்களுக்கு இரண்டு ரைஸ் மில் எங்கள் ஊரில் இருக்கிறது. பணம் விஷயம் அந்த பையன் அவன் அப்பாவிடம் சொல்ல அவர் ’கிரிக்கெட் எல்லாம் வேண்டாம் அவனுக்கு கொடுக்குற காச உன்னோட படிப்புக்காக செலவு பண்ணு நாளைக்கு உன்னோட லைஃப் நல்லா இருக்கும்’ சொன்னார். ஆரம்பத்தில் அந்த பைய்யனுக்கு வருத்தமாகதான் இருந்திருக்கிறது. பிறகு படிப்படியாக அந்த விஷயத்தை மறந்து படிப்பில் கவனம் செலுத்தி இப்போது அவன் அமேரிக்காவில் எம்மஸ் படித்துக்கொண்டு இருக்கிரான். படிப்பு முடிந்ததும் அங்கயே செட்டில் ஆக போறான். ஆனால் அவன் இடத்தில் ஒரு ஏழை மாணவன் இருந்திருந்தால் பணத்தின்முன் அவனது திறமையை புதைத்திருக்க வேண்டும் அல்லவா? அதுதான் நடக்கிரது நம் நாட்டில். இங்கு திரமை உள்ளவர்களுக்கு சரியான வாய்ப்பு கிடைப்பதில்லை. சாதியின் பெயராலும், பணபலத்தாலும் எல்லாவற்றையும் ஒருசார் மக்களே அனுபவித்து வருகின்றனர். என்று மாறுமோ இந்த நிலைமை?!

பின்குறிப்பு1: நண்பன் வினோத்தை வைத்து ஒரு காமடியான பதிவு இங்கு எழுதி இருக்கிறேன். அந்த வினோத்தும் இவனும் ஒன்னுதான்.
பின்குறிப்பு2: வினோத் சமீபத்தில் ஒரு ஆங்கில வலைப்பூ ஒன்று ஆரம்பித்து எழுதி வருகிறான். ரொம்ப நல்லா எழுதுவான். சும்மா ஒரு முறை சென்று படிச்சுதான் பாருங்களேன்.வினோத் வலைப்பூ செல்ல இங்கே கிளிக்குக
தொடர்புடைய பதிவுகள் :


3 comments:

 1. ம்ம்ம் நிதர்சனமான உண்மையைச் சொல்லி இருக்கின்றீர்கள்! இதெல்லாம் மாறுமா என்ன?!!! பல மங்கள்யான் விட்டு வெற்றி கொண்டாடினாலும், கிராமத்தில் இருப்பவரின் கோமண நிலை மாறப் போவதில்லை!

  ReplyDelete
 2. விளையாட்டை பற்றி குறிப்பிட்டாலும் இந்தியாவின் சகல துறைகளிலும் இதே நிலைதான் !

  ஜாதிமத சலுகைகளும், சுயநல அரசியல்வாதிகளின் ஊழலும் அனைத்து திறமைகளையும் மழுங்கடித்துவிடுகின்றன !

  நினைத்தால் ஆயாசமாக இருக்கிறது !

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  ReplyDelete
 3. நீ என்ன சொல்ல நினைக்கிரையோ, அத ரொம்ப அழகா சொல்ல பழகீ இருக்க! படிக்க நல்லா இருக்கு! தொடர்ந்து எழுது!

  ReplyDelete