Monday, November 03, 2014

வாயில குத்து வாங்க போற பாரேன்!இரண்டு நாட்களாக ஒரே யோசனை எனக்கு. ‘நம்முடைய வாழ்க்கை நம்ம கர்மாவை பொறுத்துதான் அமைந்திருக்கிறதா’ என்று. திடீரென இப்படி நான் யோசிக்க காரணம் இருக்கிறது. அதை பிறகு சொல்கிறேன். இந்த நிமிடம் வரை நான் புராணங்கள், இதிகாசங்களை நம்பியவன் கிடையாது. அதைவிடவும் அவற்றை பற்றி தெரிந்துக்கொள்ள இதுவரை முயற்சி கூட எடுத்தது கிடையாது. அதனாலயே நான் எதை பற்றி பேசினாலோ இல்ல/ விவாதித்தாலோ என்னை பற்றி தெரிந்தவர்கள் என்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு ‘மொதல்ல நீ புராணங்கள்ல என்ன சொல்லி இருக்கு தெரிஞ்சிகிட்டு வா, மத்தத அப்பரம் பேசலாம்’ என்பதுதான்.
நண்பர்கள் அப்படி சொல்வதிலும் ஒரு ஞாயம் இருக்கிறது. எதை பற்றியும் தெரியாமல் விமர்சிப்பது எற்றுக்கொள்ள முடியாததுதான். ஆனால் கேள்வி கேட்பதில் தவறென்ன இருக்கிறது? ‘நவீன், நம்ம வாழ்க்கை நம்ம பாவம் புண்ணியம் பொறுத்துதான் அமைஞ்சதா’ என என் வகுப்பில் உள்ள சக மாணவனிடம் சும்மா ஒரு ஒரு வாரத்திற்கு முன்பு கேட்டிருந்தேன். அதற்கு அவன் ‘ஆமாம் அதில் சந்தேகமே இல்ல, நிச்சயமா நம்மளோட கர்மாவை பொறுத்துதான் இந்த வாழ்க்கை ஏற்பட்டிருக்கு ‘ சொன்னான்.
அவன் சொன்னதை ஏற்றுக்கொள்ளாட்டியும், சரி நாமளும் மேற்கொண்டு அதை பற்றி அன்று பேசவில்லை. மூன்று நாட்களுக்கு முன்பு நான் கேள்வி கேட்டிருந்த அதே நவீனிடம் எங்கள் வகுப்பில் உள்ள மற்றொரு பையனை பற்றி பேசத்துவங்கினேன். ‘நவீன் உனக்கு தெரியுமா அந்த பையன் குடும்பத்தில் வயது வித்யாசத்தில் மொத்தம் ஐந்து பேருக்கு பார்வை கிடையாதாம்’ என சொல்லிக்கொண்டு தொடர்ந்து நான் சொல்ல நினைத்ததை அவனிடம் சொல்லி முடித்தேன். நான் சொன்னதை கேட்ட பிறகு அவன் ‘போன ஜென்மத்துல என்னென்ன பாவம் செஞ்சிருப்பாங்களோ, இப்போ கண்ணு தெரியாம இந்த ஜன்மத்துல பொறந்து அனுபவிக்குராங்க’ என சொன்னான். அதை கேட்டதும் உடனே நமக்கு உச்சந்தலைல இருந்து உள்ளங்கால் வரை அவன் மீது பயங்கர கோவம். அப்படியே அவன் வாயில பக்குனு குத்தலாமானு தோணிச்சு. அவனை பற்றி நமக்கு நன்கு தெரியும் என்பதால் எதுவும் அதற்கு மேல் அதை பற்றி அவனிடம் விவாதிக்கவில்லை நான்.
ஆனால் அன்று வீட்டிற்கு வந்ததில் இருந்துதான் ஒரே யொசனை எனக்கு. அது எப்படி ஒருத்தரோட பாவ புண்ணியங்களைப் பொறுத்துதான் இந்த வாழ்க்கை அமைந்ததாக நம்புறாங்கனு ஒரே சந்தேகம். சரி நம்பினால்தானே பிரச்சனை நம்பாம இருந்திடலாம்னு பார்த்தா இருக்க முடியல. புராணங்கள், சனார்த்தன தர்மத்தை நாங்க பின்பற்றுகிறோம் என சொல்லிக்கொண்டு நெத்தியில எப்பவும் நாமத்தை போட்டுகிட்டு திரியும் நவீன் மாதிரியான நபர்கள் இப்படி பேசுவதில் என்ன அர்த்தம் இருக்குனு தெரியல. இதுக்கு நாங்க எவ்வளவோ பெட்டராச்சே. சரி அது போகட்டும்.

நேற்று துளசிதரன் சார் வலைபூவில் ஒரு பதிவை படித்தேன். காலம் காலமாக கோயில்களில் சாமிக்கு பூஜை செய்து வந்த சம்ப்ரதாயத்தை மாற்றி, ஒரு கோவிலில், பூஜை முறைகளை முறைப்படிக் கற்ற பிற்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்கள் இந்த வருடம் தீபாவளி அன்று பெண் பூசாரிகள் ஆனார்கள். அதை படித்ததும் ஒரே மகிழ்ச்சி எனக்கு. நீங்களும் படிச்சு பாருங்க.
தொடர்புடைய பதிவுகள் :


3 comments:

 1. மகேஷ்! தயவு செய்து, இந்தக் கர்மா, போன ஜென்மம் பாவம் புண்ணியம் எட்சட்ரா எட்சட்ரா எல்லத்தையும் ஒழித்துக் கட்டுங்கள். நாங்களும் இறை உணர்வு உள்ளவர்கள்தான். ஆனால் மூட நம்பிக்கைகள் கிடையாது. இறைவன் என்ற நம்பிக்கையை நேர்மறை எண்ணத்தைக் கொண்டவர்களே. மகேஷ் தன்னம்பிக்கையும், உழைப்பும், நேர்மையும் இருந்தால் அதுவே மனிதனின் வெற்றிக்கு வழி!

  பதிவை படித்துக் கொண்டே வந்தால் இறுதியில் எங்கள் பீய்ர்...ஆஹா!....எங்கள் வலைத்தளக் கட்டுரையை இங்கு நீங்கள் குறிப்பிட்டதற்கு மிக்க மிக்க நன்றி மகேஷ்!

  ReplyDelete
 2. வணக்கம்
  மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. //‘போன ஜென்மத்துல என்னென்ன பாவம் செஞ்சிருப்பாங்களோ, இப்போ கண்ணு தெரியாம இந்த ஜன்மத்துல பொறந்து அனுபவிக்குராங்க’ என சொன்னான்//
  இப்படில்லாம் சொல்ல எப்படி மனம் வருகிறது கொடூர சிந்தனை. இவர்களது கூற்றை ஒதுக்கித் தள்ளிவிடுவதே நல்லது.

  ReplyDelete