Thursday, January 15, 2015

ஐ பற்றி எதுவுமே எழுதாட்டி எப்படி?
நண்பர்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
நேற்று ஐ முதல்நாள், முதல் காட்சி நானும் தம்பியும் இங்க (திருப்பதியிலே) பார்த்தோம். திருப்பதியில், தமிழில் தியேட்டருக்கு சென்று பார்த்ததில், ஐ தான் முதல் அனுபவம்.

ஐ பாடல்கள் வெளியானதில் இருந்து படத்தின் மீது பயங்கர எதிர்பார்ப்பு ஏற்பட்டது எனக்கு. தினமும் ஐ பாடல்கள் கேட்காமல் அந்த நாள் முடிந்ததே கிடையாது. எங்காவது ஐ பாட்டு கேட்டாலே போதும் என்னை மறந்து அந்த பாட்டை கவனிக்கும் அளவுக்கு ஐ ஆல்பம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. குறிப்பாக நேற்று படம் பார்த்ததில் இருந்து ஐ தாக்கம் இன்னும் என்னுள் அதிகரித்திருக்கிறது.

கோச்சடையான் தான் தமிழில் நான் தியேட்டருக்கு சென்று பார்த்த முதல் படம். அந்த வாய்ப்பு எப்படி வந்தது பற்றி இங்கே
எழுதி இருக்கிறேன் சும்மா படிச்சு பாருங்க. அதன் பிறகு அடுத்த படம் தமிழில் தியேட்டருக்கு சென்று பார்க்கணும்னா அது ஐ தான் என முடிவு செய்திருந்தேன். காரணம் ஷங்கர், விக்ரம் மற்றும் ரஹ்மான் அவர்களோட கூட்டணியில் ஐ தயாரிக்கப் படுகிறது என்பதால். படம் எப்போ ரிலீஸ் ஆகுமோனு காத்திருந்த எனக்கு ஒரு வழியா நேற்று ரிலீஸ் ஆனதில் மகிழ்ச்சி. அதிலும் கடைசி நேரத்தில் சென்ற வாரம் 15 நாட்களுக்கு படம் வெளியிட கூடாதுனு தடை விதித்தபோது ஒரே ஃபீலிங்க்ஸ்:-))) எப்படியோ எல்லா ப்ரச்சனைகளையும் கடந்து நேற்று படம் ரிலீஸ் ஆனதில் ஹேப்பீ:-)

கோச்சடையான் போலவே இந்த படத்தையும் சென்னையில் தியேட்டரில் பார்க்க முடிவு செய்திருந்தாலும் இந்த முறை அதற்கு வாய்ப்பு அமையாமல் போனதால் திருப்பதியிலேதான் பார்க்க வேண்டியதா போச்சு. இங்கு தமிழில் படம் ஒரே ஒரு தியேட்டரில் தான் போடுவார்கள். அந்த தியேட்டர்ல எல்லாம் நா கால் வெச்சதா சரித்திரமே கிடையாது. ரொம்ப பழைய தியேட்டர். மெயிண்டனன்ஸ் சரியிலனு தெரியும். ஆனாலும் வேற வழி இல்லாததால நேற்று ஐ அந்த தியேட்டரில் பார்க்க முடிவு பண்ணி படமும் பார்த்தாச்சு.

படம் ஆரம்பிக்க நேரம் நெருங்க நெருங்க ஒரே பதற்றம் எனக்குள்ள. ’படம் எப்படி இருக்குமோ’, ’இணையத்தில் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கும், விமர்சனம் பெயரில் படத்தை கிழித்து தொங்க விடுவார்களா’ என ஒரே பதற்றம் எனக்கு. ஆனால் படம் முடிந்த பிறகு நம்பிக்கை ஏற்பட்டது. கதையில் மட்டும் சருக்கி இருக்கிறார் ஷங்கர். மற்றதெல்லாம் ஓக்கேதான். ஷங்கரிடம் இருந்து இது போன்றதொரு ரொமாண்டிக் த்ரில்லர் படம் வரும்னு எதிர்பார்க்கல. முதல் பாதி மிகவும் ரசிச்சேன். மீண்டும் அந்த காதல் காட்சிகளுக்காக தியேட்டருக்கு சென்று பார்க்கணும்.
ஷங்கர்னாலே எதாவது சோசியல் மெசெஜ் இருக்கணும்னு எதிர்பார்த்ததில் சற்று ஏமாற்றம். ஆனாலும் மொத்தத்தில் எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் படத்தை எடுத்திருப்பதாக ஃபீல் பண்ணுகிறேன். நிச்சயம் இரண்டு முறை பார்க்கலாம்.
தொடர்புடைய பதிவுகள் :


7 comments:

 1. One time watchable but must watchable!

  ReplyDelete
 2. விமர்சனம் நன்று சங்கர் மீதான எதிபர்ர்ப்புகளை ஈடு செயவில்லையே தவிர பிற படங்களைவிட பரவாயில்லை என்றே பார்த்தவர் கூறுகின்றனர்.

  ReplyDelete
 3. [[மீண்டும் அந்த காதல் காட்சிகளுக்காக தியேட்டருக்கு சென்று பார்க்கணும்.]]
  அவசியம் பாருங்க தம்பி! ஏனென்றால் "காதல் இல்லையேல் சாதல்."
  ஆம்! காதல் காதல் காதல் காதல் இல்லையேல் சாதல்! தம்பிக்கு இ திருமணம் ஆகவில்லை என்றால் அவசியம் பாருங்க! காதல் என்பது உயிர் மூச்சு; அனுபியுங்கள். வாலிபம் கொஞ்ச நாள் தான்! நினைவில் கொள்ளுங்கள்.

  பின்குறிப்பு:
  தம்பி! கீழ் திருப்தியில் இன்றும் "பீமா விலாஸ்" ஹோட்டல் இருக்கா? அங்கு சாம்பார் THE Best; சோத்துல பாத்தி கட்டி அப்போவே நான் மணவாடுகளுக்கு சவாலா சாப்பிடுவேன்.

  நல்ல காரமா அம்சமாக இருக்கும்! பீமா விலாஸ் சாம்பாருடன் ஒப்பிடும் போது..சரவணபவன் சாம்பார் பல்லிளிக்கும்--சுருங்க சொன்னால், சரவணபவன் சாம்பா ஒரு பிஸ்கோத்து !

  ReplyDelete


 4. உங்கள் பார்வையும் சிறப்பாகத்தான் உள்ளது. அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஏமாற்றி விட்டார்களே என்கிற ஆதங்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. இரண்டாவது தடவையாக நாளைக்குப் போகிறேன்.. விக்ரமுக்காக :-)

  ReplyDelete
 5. நன்றி
  Vinoth,
  முரளிதரன் ச்ஆர்
  மற்றும்
  Manimaran சார்!

  ReplyDelete
 6. @வணக்கம் நம்பள்கி சார்!
  உங்க வருகையா மிகவும் மகிழ்ச்சி!

  நான் திருப்பதியில்தான் இருக்கிரேன். வீடு இங்கேதான்!
  நீங்க குரிப்பிட்ட ஹோட்டல் இங்கதான் இருக்கு!

  ReplyDelete
 7. உண்மை என்னனா , படம் ஓகே ரகம் தான் . ஆனா இது இந்தியசினமாவுலயே பெஸ்ட் , அது இதுனு தயாரிப்பாளர்ல இருந்து , பாரின்காரங்க வரைக்கும் ஓவரா இன்டர்வியூ கொடுத்ததுதான் படத்துக்கு நெகட்டிவ் ஆகிடுச்சி . சங்கர் டச்சுனு சொல்லிக்க ஒரே ஒரு சீன் சொல்லலாம் இன்டர்வலுக்கு அடுத்து வரும் ஐ மியூசிக்ல முத்துகள் எல்லாம் சிதறி வரமாதிரியும் த பாலோவ் பண்ணா , அங்க எமி சிரிக்கறமாதிரியும் வச்சிருக்க ஒரு காட்சியைத்தவிர மற்ற காட்சிகளெல்லாம் வறண்ட கற்பனை . திருநங்கைகள இழிவுபடுத்துனது , ஒரு சாதாரண ஹீரோவ அழிக்கறதுகு மாபெரும் கோடீஸ்வரர் கூட்டு சேருரது , அந்த கோடிஸ்வரர தேனீக்கள் தாக்கும்போது ஸ்விம்மிங் பூல்ல குதிக்காம இருக்கறது , படம் முழுக்க விளம்பரம் மாதிரியே ஓடறது போன்றவை எல்லாம் கடுப்பைத்தான் கிளப்பியது . ஒருமுறை பார்க்கலாம் .

  ReplyDelete