Wednesday, January 21, 2015

இன்று நீங்கள், நாளை நாங்கள் மேடம்!

நேற்று (செவ்வாய்கிழமை) காலை  ஒரு பதினோரு மணி  இருக்கும். வகுப்பில் என்னுடன் படிக்கும் ஒரு பையன் கால் செய்திருந்தான். ‘ஹரி ப்ரசன்னா மேடம் இறந்துவிட்டாராம். உனக்கு தெரியுமா?’ என கேட்டான். அவன் எனக்கு கால் செய்யும்வரை எனக்கு அந்த சம்பவம் பற்றி எதுவும் தெரியாது.
அதன் பிறகு செய்தி உறுதிபடுத்தும் வரையிலும் வருத்தமும், பதற்றமும் எனக்கு!. காரணம் ஒருத்தரோட மரணச் செய்தி கேட்டதும் நான் வருத்த படுறது இதுதான் முதல்தடவை! ஏன்னா நான் சந்தித்த நல்ல மனிதர்கள் பட்டியலில் மேடம் அவர்கள் இருப்பதாலும், இதற்கு முன்பு எனக்கு சம்பந்தபட்ட மனிதர்களின் மரண செய்தியை கேட்டதும் இல்லை, இறுதிச்சடங்குகளில் கலந்து கொண்ட அனுபவமும் இல்லை. அதனால் பெரிதும் பாதித்த முதல் மரண செய்தி டாக்டர் ஹரி ப்ரசன்னா மேடம் அவர்களோடது!

பொங்கல் விடுமுறை எல்லாம் முடிந்த நிலையில் இன்று முதல் வகுப்புகளுக்கு செல்லலாம் என இருந்தவனுக்கு, மேடம் இனி இல்லை என்ற மரண செய்தி கேட்டதும் என்னால் இன்னும் மூன்று மாதங்கள் அவர்கள் இல்லாமல் அவரது வகுப்பில் வேறு ஒருத்தரை நினைத்து கூட பார்க்கமுடியவில்லை என்னால்! கடந்த மூன்று செமஸ்ட்டர்களிலும் அவரது மாணவனாக இருந்த ஒரே உறவுதான் எனக்கு!. மேடம் அவர்களோடது (elt) ஸ்பெஷலைசேஷன் என்பதால் அதற்கு தொடர்பான வகுப்புக்கள் மட்டும் எடுப்பார்கள். நானும் அந்த வகுப்புக்களையே தேர்ந்தெடுத்து தொடர்ந்து மூன்று செமஸ்ட்டர்களிலும் அவரது மாணவனாக இருந்து வந்தேன்!.

மேடம் அவர்களிடம் பிடித்த குணம் நான் கவனித்ததில் மிகவும் அமைதியானவர்கள், மாணவரிடம் தேவை இல்லாமல் கோவ பட மாட்டார், தனது மாணவர்கள் மாற்றுதிறனாளியாக இருந்தால் தனி கவனம் செலுத்துவார். அதுக்கும் மேல மானசீகமாக எனக்கு அவர்கள் மிகவும் பிடித்தவர்!

இந்த சமயத்தில் மேடம்   குடும்பத்தாருக்கு  எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து கொள்கிறேன்.

நீங்கல் மரணிக்கவில்லை மேடம் உங்கள் உயிர்தான் உடலை விட்டு பிரிந்ததே தவிர, நீங்கள் எங்கள் அனைவரது மனதிலும் இன்றும் என்றும் உங்களது நினைவுகளுடன் இருப்பீர்கள். உங்களை போன்ற ஒரு பேராசிரியரிடம் படித்ததினால் மிகவும் பெருமை படுகிறேன்!
தொடர்புடைய பதிவுகள் :


2 comments:

  1. பிலேட்டட் அஞ்சலி! அவர்களது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்....நல்ல உள்ளங்களுக்கு அழிவு என்பதே இல்லை...

    ReplyDelete