Wednesday, April 15, 2015

கொஞ்சம் யோசிக்கலாமே ப்ளீஸ்

ஹப்பா எத்தனை நாட்கள் ஆகிறது இங்கு மழை பெய்ததை பார்த்து. இரண்டு நாட்களாக திருப்பதியில் சற்று வானிலை குளிர்ச்சியாகவும் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழையும் பெய்துக்கொண்டிருக்கிறது. ’அவ்வளவுதான் கோடைகாலத்தில் செத்தோம்டா சாமி’ பயந்துக்கொண்டிருக்க இந்த மாற்றம் சற்று ஆறுதல் தருகிறது. ஆனாலும் இந்த மழையெல்லாம் ஒரு மூலைக்கும் போதாது. வருடம் முழுவதும் கோடைகாலம் போல் வெயில் கொளுத்துகிறது. அதன் தாக்கம் ஏப்ரல், மே மற்றும் ஜூன் போன்ற கோடை காலத்தில் இன்னும் அதிகமாக இருக்கிறது. வருட மொத்தத்தில் சில செண்டி மீட்டர் மழைதான் பதிவாகிறது. ஆனால் அதற்கு  மாறாக ஒவ்வொரு வருடமும் வெயிலின் தீவிரம் அதிகரித்துக்கொண்டே போகிறது. ‘இதெல்லாம் நல்லதுக்கான அரிகுறி இல்லனு’ யாராவது சொன்னாலும் யாரும் கேட்கும் நிலையில் இல்லை. எனக்கு நன்றாக-நினைவிருக்கிறது சிறுவனாக இருந்தபோது மாதம் முழுவதும் மழை பெய்வதை பார்த்திருக்கிறேன். நிலத்தடி நீர் மட்டம் சராசரியாக 150 அடியில் இருக்கும். இப்போது இருப்பது போல் தண்ணீர் பிரச்சனை அப்போது கிடையாது. வீட்டுக்கு வீடு ஆழ்துளை போர் கிடையாது. தெருக்களில் இருக்கும் கை பம்புகளில் தண்ணீர் அடித்துச்செல்லும் மக்களை பார்க்கலாம். ஆனால் ஒரு பதினைந்து ஆண்டுகளில் நாம் கண்ட வளர்ச்சி இலவசமாக கிடைக்கும் நீரை காசு கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலையை அடைந்திருக்கிறோம். இப்போதாவது விழித்துக்கொள்வார்களா என்று  பார்த்தாலும் ஹும்... வீட்டுக்கு வீடு போர் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். ‘அவன் போர் போட்டதால் எனக்கு தண்ணி அளவு குறைஞ்சிடுச்சு’ வருத்தப் படுகிறார்கள். ஆனால் பூமியை நாம் கொஞ்சம் கொஞ்சமாக நாசமாக்கிக்கொண்டிருக்கிறோம் என்றெல்லாம் கவலை இல்லை. சரி இதெல்லாம் மக்கள் தொகை வளர்ச்சியால் ஏற்பட்ட விளைவுகள்ன்னு பார்த்தால் எத்தனை பேருக்கு தெரியும் என தெரியவில்லை இன்றைக்கு பெரும்பாலான விவசாயிகள் விவசாயம் செய்யாமல் தங்கள் நிலத்தை ஃப்ளாட் போட்டு விற்கும் நிலைக்கு வர காரணம் தண்ணீர் பிரச்சனை தான் என்று. சமீபத்தில் தூரத்து உறவினர் ஒருத்தர் தனது வயல்வெளியில் போருக்காகவே பல லட்சங்கள் செலவு செய்து தண்ணீ கிடைக்குமா என்று முயன்றிருக்கிறார். வந்தது கண்ணீர்தான். அவருக்கு அதெல்லாம் பெரிய பிரச்சனையில்லை. பசங்க பெங்களூரிலும் ஹைதராபாத்திலும் இருப்பதால் சமாளித்துவிடுகிறார். பணத்தை கடனுக்கு வாங்கி முதலீடு செய்யும் பல லச்ச விவசாயிகள் நிலை என்ன யோசிக்கவே முடியவில்லை. மண்வளம் குறைந்துவிட்டது. கிணறுகள் வற்றிவிட்டது இந்தச் சூழல் விவசாயத்திற்கு உகந்ததல்ல என்ற முடிவிற்கு வந்த பிறகு அவர்களும் நகரத்திற்கு எதோ ஒரு வேலையை தேடி வந்துக்கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் நீர் வளம் குறைந்ததால் ஏற்பட்ட பிரச்சனைகள் என்று பார்த்தால் இன்னும் கொஞ்சம் நாட்களில் சுத்தமான காற்று சுவாசிக்க கிடைக்குமா என்பது சந்தேகம். நகரத்தில் இருக்கும் ஒன்னு ரெண்டு மரத்தையும் வெட்டி விடுகிறார்கள். எங்கு திரும்பினாலும் 3 அல்லது 4 மாடி கட்டிடங்கள். மக்கள் பணம் சம்பாதிப்பதுதான் பிரதான நோக்கமாக கொண்டிருக்கிறார்கள். தவறு கிடையாது. அந்த பணம் அவர்களது தனிபட்ட வாழ்க்கையை மேம்படுத்த உதவினாலும் எப்படியெல்லாம் அவர்கள் பாதிக்க படுகிறார்கள் என்பதையும் சற்று கவனித்தார்கள் என்றால் நிலமை கொஞ்சமாவது கட்டுக்குள் இருக்கும் என நம்பலாம். ஒவ்வொரு பெற்றோரும் தங்களது வாரிசுகளுக்கு ஆரோக்கியமான ஒரு சூழலை ஏற்படுத்தி தருவோம் என முடிவெடுத்து இயற்கையை மேலும் அழிக்காமல் இருந்தாலே போதும். இல்லை என்றால் இப்போது பணத்தால் தண்ணீர் வாங்குகிறோம் இன்னும் சில வருடங்களில் சுவாசிக்க காற்றை வாங்கும் சூழல் ஏற்படும்.
தொடர்புடைய பதிவுகள் :


3 comments:

 1. namathan china vayasulaye rain rain go away nu solli kuduthu valakkiromey engirunthu mazha varum?

  ReplyDelete
 2. ம்ம்ம் நல்ல பதிவு....திருப்பதியும் முன்னொரு காலத்தில் மரம் செடி காடுகள் நிறைய இருக்க இப்போது திருப்பதி கோயில் மிகவும் ஃபேமஸ் ஆக அதற்காக பல கட்டிடங்கள், வளர்ச்சி என்று காங்க்ரீட் காடுகள் ஆகிப் போனால் வெயில் தகிக்காமல் என்ன செய்யும் சொல்லுங்கள்? திருப்பதி மட்டுமல்ல எல்லா ஊர்களுமே, நகரங்கள் இன்னும் மோசம்....

  வினோத் சொன்னது போல் மழையை விரட்டிப் பாடிவிட்டு இன்று மழை இல்லையே என்று புலம்புவதில் என்ன பயன்? நாங்கள் குழந்தைகளுக்கு நேர்மறை தரும் ரைம்ஸ் தான் சொல்லிக் கொடுப்பது....

  வாழ்த்துகள் !

  ReplyDelete
 3. உங்கள் மொபைல் நம்பரை உங்கள் தளத்திலிருந்து குறித்துக் கொண்டோம் மகேஷ்.....நன்றி!

  ReplyDelete