Friday, April 17, 2015

வாழ்த்துக்கள் வா.மணிகண்டன் சார்

நேற்று தி இந்து பத்திரிக்கையில் வலைப்பதிவுத் தளங்கள், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் சமூக வலைதள பக்கங்களில், தமிழில் தீவிரமாக இயங்கி வருபவர்களை அறிமுகப்படுத்தும் புதிய தொடர் ஒன்றை ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள். அதில் சந்தோஷத்துக்குறிய விஷயம் முதலாவதாக
வா.மணிகண்டன் சாரை அறிமுக படுத்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள் சார். இதுவரை மொத்தமாக கூட்டி கழித்து பார்த்தாலும் பத்து நிமிடத்திற்கும் மேல் அவருடன் பேசியது கிடையாது. ஆனால் தினமும் அவரின் எழுத்துக்காக பத்து நிமிடமாவது  சராசரியாக அவரது இணைய தளத்தில் செலவு செய்கிறேன். தொடர்ந்து அவரது எழுத்தை வாசித்து வந்தாலே போதும் எழுத தெரியாதவர்களையும் எழுத தூண்டக்கூடிய இன்ஸ்பிரேஷனான எழுத்து நடை அவருடையது. இதைத்தான் எழுதவேண்டும் என குறிக்கோள் இல்லாமல் தனக்கு தோன்றுவதை கொஞ்சம் ஸ்வாரஸ்யத்தை கூட்டி தனக்கே உரித்தான பாணியில் எழுதுகிறார். 2012ல் அவரது இணைய தளம் அறிமுகம் ஆனாலும் 2013 கடைசியில் இருந்து தான் தினமும் வாசித்து வருகிறேன். முதன்முதலாக அவரை மசால்தோசை 38ருபாய் புத்தக வெளியிட்டின்போது சந்தித்தேன். அதை தொடர்ந்து ஏப்ரல் 5 டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெற்ற இலக்கிய கூட்டம்/கலந்துரையாடல் நிகழ்ச்சியின்போதும் கலந்து கொண்டேன். மகிழ்ச்சியான தருணம்.
பல முறை மணிகண்டன் சாரை பற்றி எழுத நினைத்திருந்தாலும் எழுதுவதற்கான சரியான மன நிலை அப்போது அமையவில்லை. மிக எளிமையான மனிதர். எப்போதும் அடுத்தவர்களை விடவும் தான் உயர்ந்தவன் என்கிற பிம்பத்தை ஏற்படுத்தாமல் ‘இவரும் நம்மைப்போல ஒருத்தர்’ என்கிற  உணர்வை வரவைக்கிறார். அது எழுத்திலும் சரி அன்றாட வாழ்க்கையிலும் சரி.
சமீபத்தில் தொலை பேசியில் அவருடன் பேசியபோது ‘உங்களுக்கு சென்னைக்கு வந்து போவதால் எதாவது சிரமம் இருக்குமா’ என கேட்டிருந்தார். அதிலெல்லாம் ஒரு பிரச்சனையும் இருக்காது என சொல்லிருந்தேன். உண்மையில் முகம் தெரியாத நிசப்தம் வாசகர்கள் நிசப்தம் அறக்கட்டளைக்குச் செய்துக்கொண்டிருக்கும் உதவியை விடவும் எனது சிரமம் ஒன்றுமே கிடையாது.
அவரை நிசப்தம் வாசகர்கள் நம்புகிறார்கள் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருப்பதே அவரின் வெற்றிக்கு ரகசியம். இதை அவரது பதிவுகளை தொடர்ந்து வாசித்து வருபவர்களுக்கு தெரிந்திருக்கும். வெறும் பொழுதுபோக்குக்காக படிக்க ஆரம்பித்த அவரது இணையதளம் படிப்படியாக எனது ஆளுமையை மேம்படுத்தவும் உதவிக்கொண்டிருக்கிறது. அதேபோல் அவரது எழுத்து, கொள்கை, எல்லாம் பிடித்திருக்கிறது. எனது நண்பர்களுக்கும் நிசப்தம் வாசிக்க பரிந்துரை செய்துக்கொண்டிருக்கிறேன். இதுவரையிலும் பல பார்வைத்திறன் சவாலைச் சந்திக்கும் மாற்றுத்திரனாளி நண்பர்கள் நிசப்தம் வாசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
தொடர்ந்து எழுதவும், அறக்கட்டளை பணிகள் தொடர்ந்து நடை பெறவும் உங்களை வாழ்த்துகிறேன் சார்.தி தமிழ் இந்து பத்திரிக்கையில் வா.மணிகண்டன் சாரைப் பற்றி வந்த கட்டுரை வாசிக்க.
தொடர்புடைய பதிவுகள் :


2 comments:

  1. அருமையான அறிமுகம் தான்.

    ReplyDelete
  2. நாங்களும் வாசித்தோம் மகேஷ்! அருமையான எழுத்தாளர். மிக நன்றாக எழுதி உள்ளீர்கள் அவரைப்பற்றி! நாங்களும் அவரது வலைத்தளம் வாசிப்பவர்கள் அதுவும் விரும்பி! இப்போது வேலைப்பளுவினால் போகவில்லை மீண்டும் வாசிக்கத் தொடங்க வேண்டும்....

    வாழ்த்துகள் உங்களுக்கும், வா மணிகண்டன் அவர்களுக்கும்

    ReplyDelete