Sunday, June 07, 2015

புத்தக வெளியீடும், பதிவர் சந்திப்பும்


வலைப்பதிவர் விசு சார் அவர்களின் “விசுவாசமின் சகவாசம்” புத்தக வெளியீடு வேலூரில் வூரிஸ் கல்லூரியில் நேற்று 06-06-2015 அன்று மிக பிரமாண்டமாக நடந்து முடிந்தது.

அதனைத் தொடர்ந்து மதியம் புத்தக விழாவிற்கு வந்திருந்த பதிவர்களோடு சிறிய சந்திப்பும் நடைபெற்றது.

காலை பத்தரை மணிக்கு அரங்கில் நுழையும்போது கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது. அரங்கில் ஐந்து தலைகளுக்கு மேல் இல்லை. புத்தக வெளியீட்டிற்கெல்லாம் யார் வரப்போகிறார்கள்
என்று நான் நினைத்துக்கொண்டிருக்க ஒவ்வொருவராக அரங்கிற்குள் வந்துகொண்டிருந்தார்கள். அதுவரையில் நேரில் பதிவர்களை சந்திக்காத காரணத்தால் அவர்களை எனக்கும் -
என்னை அவர்களுக்கும் தெரிய வாய்ப்பு கிடையாது. விழா ஆரம்பிக்கும் வரையில் யாருடனும் பேசவில்லை. முதலாவதாக வலைப்பதிவர்கள் தில்லையகத்து துளசிதரன் - கீதா அவர்கள்
அறிமுகப்படுத்திக்கொண்டு பேசினார்கள். அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் தனபாலன் சார் பேசினார். புத்தக வெளியீட்டு விழா முடிந்த பிறகுதான் தெரிந்தது பல பதிவர்கள்
வேலூரை நோக்கிப்  படையெடுத்து வந்திருப்பதாக. பதிவுகளை வாசிப்பதன் வாயிலாக மட்டுமே அறிமுகமான பல பதிவர்களை நேரில் பார்த்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. எண்ட்
ஆஃப் த டே விடை பெறும்போது உள்ளம் எங்கும் ஒரே மகிழ்ச்சி. இந்த விழாவை அமைத்து பதிவர்களை சந்திக்கும் வாய்ப்பைக் கொடுத்த விசு சார் அவர்களுக்கு முதலில் நன்றிகளை
தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பித்த விழா 2 மணி நேரம் சீரும் சிறப்புமாக நடைபெற்று தேசிய கீதத்துடன் முடிந்தது. விழாவைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் எதிர்பார்த்திருந்ததை
விடவும் அட்டகாசமாக நடந்து முடிந்தது. குறிப்பாக மதியம் உணவு சூப்பர். அவ்வ்.... விழாவில் பல நெகிழ்ச்சியான தருணங்கள் நடந்தது. விசு சார் அவர்களின் தாயாரைப்
பற்றி ஏற்கனவே அவர் மூலம் தெரிந்திருந்தாலும் விழாவிற்கு வந்திருந்தவர்கள் அவரைப் பற்றி  பேசியபோது அவரது மகனது புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டது கூடுதல்
சந்தோஷத்தைக் கொடுத்தது.

இங்கிலாந்தில் வசிக்கும் வலைப்பதிவர் கோயில் பிள்ளை சார் சார்பாக அவரது நண்பர் சத்திய பிரசாத் அவர்கள் என்னிடம் கொடுத்த அன்பளிப்பு எதிர்பாராத ஒரு இன்ப அதிர்ச்சி.
கோ சாருடன் பதிவுகள் மூலம் மட்டுமே தொடர்பில் இருந்தாலும் எதிர்பாராத அந்தச் சம்பவம் என்னைத் திக்குமுக்காடச் செய்தது. இந்த சமயத்தில் கோ சார் அவருக்கும் அவர்
சொன்னதும் என்னை சந்தித்து அன்பளிப்பை சேர்த்த சத்திய பிரசாத் சார் அவருக்கும் நன்றிகள்.

புத்தக வெளியீட்டு விழா முடிந்ததும் ‘நான் யாருனு சொல்லு பார்க்கலாம்னு’  பேச ஆரம்பித்த மின்னல் வரிகள் பால கணேஷ் சார் உடன் நேரில் பேசியதும் சந்தோஷம். 2013-இல்
பதிவுகள் எழுத ஆரம்பித்தபோது இவரும் தனபாலன் சாரும் எழுத்துப் பிழைகளைத் திருத்திக் கொடுப்பதில் முக்கியமான நபர்கள். மதுரைத்தமிழன், கடல் கடந்து விழாவிற்கு
வந்திருந்தது ஆச்சர்யமாக இருந்தது. ஆரம்பத்தில் ‘உண்மையாகவே அவர் மதுரைத்தமிழன் தானா என்று மூளை ஒரு நொடி குறுக்கு கணக்கு  போட ஆரம்பித்தது. மூங்கில் காற்று
முரளிதரன் சார், வளரும் கவிதை முத்து நிலவன் சார், கோவை ஆவி சார் அவர்களை சந்தித்ததும் எதிர்பார்க்காத ஒன்று அதை விடவும் வேலூர் என்றால் நினைவுக்கு வந்தவர்
S.Raman அவர்கள். அவரது அரசியல் தொடர்புடைய பதிவுகள் தினமும் தொடர்ந்து வாசித்து வருபவன் அவரும் விழாவிற்கு வந்ததும் அவருடன் பேசியது எதிர்பார்க்காத ஒன்று.

வாசிப்பதுதான் எனக்கு மிகவும் பிடித்த ஒரு செயல்.  குறிப்பாக நான் விரும்பி வாசிக்கும் ஜோனரில் மூத்த பதிவரான தருமி சார் அவர்களுடன் பேசியது மன நிறைவைத் தந்தது.

இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த விழா நாயகனை பற்றி நான் சொல்வதை விடவும் புத்தகம் வாங்கி படித்து பாருங்கள். தமிழ் பதிவுலகத்திற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்.
பன்முகத் திறமைசாலி. எழுத்தை கடந்து நல்ல பேச்சாளரும் கூட.

2012 முதல் எனக்கு தமிழ் பதிவுலகத்துடன் தொடர்பிருந்தாலும் பதிவுகளை வாசிப்பதோடு மட்டும் நிறுத்திக்கொண்டேன். எழுத ஆரம்பித்த பிறகு 2014 மதுரை பதிவர் சந்திப்பில்
கலந்துகொள்ள ஏற்பாடு செய்துகொண்டாலும் கடைசி நேரத்தில் செல்ல முடியாமல் போனது. ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் போல புத்தக வெளியீடும், பல பதிவர்களை சந்திக்கும்
வாய்ப்பை ஏர்படுத்தித் தந்த வகையில் மீண்டும் விசு சார் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிரேன்.  நேற்றைய நாள் வாழ்வில் மறக்க முடியாத ஒரு முக்கியமான நாளாக
நின்றுவிடும். -- தொடரும்.

பின் குறிப்பு:

சில பதிவர்களை சந்தித்திருந்தாலும் இதற்கு முன்பு அறிமுகம் இல்லாததால் அவர்களது பெயரை விட்டிருப்பின் மன்னிக்கவும். நன்றி.
தொடர்புடைய பதிவுகள் :


13 comments:

 1. விழாவில் கலந்து கொள்ளாத குறையை நீக்கியது உங்கள் பதிவு !
  இன்னும் சில மாதங்களில் புதுக்கோட்டையில் நடக்கவிருக்கும் பதிவர்கள் சந்திப்பில் சந்திப்போம்,மகேஷ் ஜி :)

  ReplyDelete
 2. நீங்கள் வந்தது தான் சிறப்பு மகேஷ்... நன்றி... தருமி ஐயா தங்களைப் பற்றி மிகவும் பெருமையாக என்னிடம் பேசினார்... வாழ்த்துகள்..

  ReplyDelete
 3. அன்புள்ள மகேஷ்: நேற்று நடந்த வேலூர் புத்தக வெளியீட்டுவிழாவைப் பற்றி இவ்வளவு விரைவில் பதிவிடுவீர்கள் என்று நான் நம்பவேயில்லை! வாழ்த்துக்கள். உங்களையும் உங்களுக்குத் துணையாக வந்த சாய்குமாரையும் சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி. - இராய செல்லப்பா, சென்னை

  ReplyDelete
 4. அருமை நண்பரே,
  தங்கள் பதிவின் மூலம் பதிவர் சந்திப்பின் நிகழ்வுகளை அறிந்து கொள்ள முடிந்தது.
  த ம 4

  ReplyDelete
 5. இறை அருள் எங்கும் நிறைக
  வாழ்த்துகள்

  ReplyDelete
 6. அருமையாக தொகுத்தளித்தமைக்கு நன்றி நண்பரே
  தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

  ReplyDelete
 7. மற்றவர்களை எல்லாம் சந்தித்தது மகிழ்ச்சி என்றால் உங்களைச் சந்தித்ததே எனக்கு நெகிழ்ச்சி மகேஷ! (என் பதிவு பற்றிய தலைப்பில் பாதியே நீங்கள்தான்.. பார்த்தீர்களா?) அருமையாகத் தொகுத்துஎழுதிய உங்கள் ஆற்றலுக்கு என் வணக்கம். தொடர்ந்து தொடர்பில் இருப்போம். புதுக்கோட்டைக்கும் வர அழைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. த ம கூடுதல் ஒன்று

   Delete
 8. மகேஷ்
  நன்கு தொகுத்துள்ளீர்கள். உங்களோடு பேசியது சிறிது தான். உ;ங்கள் ஆர்வம் என்னை ஆச்சரியப் பட வைத்தது.

  ஆங்கிலப் பதிவுகளுக்கு ஒரு aggregator ஒன்று சேர்ந்து தேடுவோமா...?

  ReplyDelete
 9. அன்பார்ந்த மகேஷ்! தங்களைச் சந்தித்ததில் மிகவும்மகிழ்ச்சி! மனம் நெகிழ்ந்தது! உங்களை நினைத்துப் பெருமைப் பட வைத்தது!

  மிக அழகானத் தொகுப்பு! தங்களையும் தங்கள் தம்பியையும் சந்தித்ததில் மிக மிக மகிழ்ச்சி! தம்பிக்கு எங்கள் வாழ்த்துகள் அவர் தங்களை அழைத்து வந்தது அவரது அன்பை வெளிப்படுத்தியது. தாங்கள் இன்னும் மேன் மேலும் வளர்ந்து பல படைப்புகள் படைத்திடவும், வாழ்வு இனிதாக அமையவும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்! தொடர்கின்றோம். திருப்பதியில் உங்களை நிச்சயமாகச் சந்திக்கின்றோம்.

  தங்களின் கை பேசி எண்ணை எங்களுக்கு (கீதாவின் நம்பருக்கு அனுப்ப முடியுமா? கீதா அதை சேமிக்காமல் விட்டுவிட்டார்....மறக்காமல் மெசேஜ் சசெய்கின்றீர்களா தயவாய்....நன்றி)

  ReplyDelete