Sunday, June 14, 2015

வெட்கக்கேடு



பெரும்பாலான உலக பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் இந்தியாவிலிருந்து
எந்த ஒரு பல்கலைக்கழகமும் 200க்கு கீழ் வரமுடியாத நிலை. பார்த்தால்
ஆசிய பல்கலைக்கழக தரவரிசை பட்டியலிலும் நிலைமை மோசமாக இருக்கிறது. சமீபத்தில்
டைம்ஸ் ஹையர் எஜூகேஷன் வெளியிட்ட சிறந்த ஆசிய பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் முதல் பத்து இடங்களில் இந்தியாவிலிருந்து எந்த ஒரு பல்கலைகழகமும் இடம் பெறவில்லை.
ஜப்பானின் டோகியோ பல்கலை கழகம் முதல் இடத்திலும், நேஷனல் யூனிவர்சிட்டி
ஆஃப் சிங்கப்பூர் இரண்டாவது இடத்திலும், மூன்றாவது இடத்தில் தி யூனிவர்சிட்டி ஆஃப் ஹாங்காங் இருக்கிறது. முதல் பத்து இடங்களில் 2 சீன பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன.
சிறிய நாடுகளின் பல்கலைகழகங்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றிருக்கின்றன. உலக மக்கள்தொகையில் 18 சதவீத மக்களை கொண்ட ஒரு நாட்டிலிருந்து உலக அளவிலும், ஆசிய
அளவிலும் தரமான ஒரு பல்கலைக்கழகம் தரவரிசை பட்டியல்களில் இடம் பெறாதது வெட்கக்கேடு.

நாளை கோடை விடுமுறைக்குப் பிறகு ஆந்திராவில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படவுள்ளன. ஒரு பக்கம் தனியார் பள்ளிக்கூடங்கள் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கிறார்கள் என
ஆங்காங்கு போராட்டம் வெடிக்கிறது. தொடர்ந்து இதுமாதிரியான போராட்டங்கள் கல்வியாண்டு துவக்கத்தில் பார்த்து பார்த்து சலித்து போனது. இதனால் பல அரசு பள்ளிக்கூடங்கள்
மூடும் அவலத்தில் இருப்பதாக ஆந்திர கல்வி அமைச்சர் அறிவித்திருக்கிறார். வெட்கக்கேடு. பல நாடுகளில் இலவசமாக கொடுக்கும் கல்விக்கு இங்குதான் பல பெற்றோர்கள் இலட்சங்களில்
செலவு செய்து கொண்டிருக்கிறார்கள், இதை பார்த்து ஏழை எளியவர்கள் கூட எப்படியாவது தம் பிள்ளைகளும் கார்ப்பரேட் பள்ளியில் படிக்க வைக்கவேண்டும் ஆசைப்படுகிறார்கள்.
இதனால் அவர்கள் வருடம் முழுவதும் கஷ்டப்பட்டு சம்பாதித்த காசையெல்லாம் ஏதோ ஒரு தனியார் கல்விக் கொள்ளையனுக்கு கொட்டியதுதான் மிச்சம். இது போன்று பெற்றோரைப்
பார்க்கும்போது கஷ்டமாக இருக்கிறது.

எங்கள் குடும்பத்தில் இதுவரையிலும் மொத்தம் நான்கு அரசு ஆசிரியர்கள் இருக்கிறார்கள். படித்ததெல்லாம் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் இறுதியில்
பணிபுரிவதும் அரசு பள்ளிகலில்தான். ஆனால் அவர்களது பிள்ளைகள் அனைவருமே தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கிறார்கள். இது போன்றுதான் 99 சதவிகித ஆசிரியர்களும் செய்கிறார்கள்.
சொந்த உறவு பார்க்காமல் பல முறை சொல்லி இருக்கிறேன் ‘கட்டாயம் அரசு பள்ளியில் பணிபுரிவோரின் பிள்ளைகளை அரசு
பள்ளியில் தான் படிக்க வைக்க வேண்டும் என்கிர  சட்டம் கொண்டு வரவேண்டும்’
அப்போதுதான் அரசு பள்ளிகளில் கற்பிக்கும்  முறை மேம்படும், சமுதாயத்தில் பெற்றோருக்கும் நம்பிக்கை ஏற்பட்டு தம் பிள்ளைகளை அரசு பள்ளிக்கூடங்களில் சேர்ப்பார்கள்.
இந்த கனவு எப்போது நனவாகுமோ. சரி அது இருக்கட்டும்.

ஆந்திராவிலும் ஒரு பன்னீர்செல்வம் வரப்போவதாக பேச்சு அடிபட்டுக்கொண்டிருக்கிறது.
சமீபத்தில் ஓட்டுக்கு நோட்டு மற்றும் தொலைபேசி ஆடியோ டேப் விவகாரத்தில்
ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு சிக்கி இருக்கிறார். இந்த விவகாரம் இங்கு
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் தெலுங்கு நடிகரும், தெலுங்குதேச கட்சியை செர்ந்த  எம்.எல்.ஏ.வான பாலகிருஷ்ணாவை பாபு இடத்தில் வைக்க போவதாக பேச்சு
அடிபட்டிருக்கிறது.

‘என் கை சுத்தம், காந்தியின் வாரிசு’ என சொல்லிக்கொண்டு திரிந்த சந்திரபாபு நாயுடுவுக்கு மிகப்பெரிய அடி இது. என்ன நடக்குமோ - பொறுத்திருந்து  பார்ப்போம்.
தொடர்புடைய பதிவுகள் :


6 comments:

  1. நானும் அரசுப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்துவிட்டுத்தான் வங்கி அதிகாரியானேன். எனது இளைய சகோதரியும் அரசுப் பள்ளியில்தான் படித்தார். ஆனால் எனது பிள்ளைகள், படிக்கும் வயதை அடைந்தபோது, நிலைமை மாறிவிட்டது. தனியார் பள்ளிகளில் ஆங்கில மீடியத்தில் படிக்கவைப்பதே கௌரவம் என்றாகிவிட்டது. இந்த நிலைமை இனி மாறுமா என்று தெரியவில்லை.... - இராய செல்லப்பா

    ReplyDelete
  2. நனவாகுவது சிரமம் தான் தம்பி...

    ReplyDelete
  3. நல்லதொரு அலசல் நண்பரே மாறும் என்று காத்திருப்போம்
    தமிழ் மணம் 3
    கில்லர்ஜி

    ReplyDelete
  4. வெட்கக்கேடுதான் நண்பரே!

    ReplyDelete
  5. ‘கட்டாயம் அரசு பள்ளியில் பணிபுரிவோரின் பிள்ளைகளை அரசு
    பள்ளியில் தான் படிக்க வைக்க வேண்டும் என்கிர சட்டம் கொண்டு வரவேண்டும்’
    அப்போதுதான் அரசு பள்ளிகளில் கற்பிக்கும் முறை மேம்படும், சமுதாயத்தில் பெற்றோருக்கும் நம்பிக்கை ஏற்பட்டு தம் பிள்ளைகளை அரசு பள்ளிக்கூடங்களில் சேர்ப்பார்கள்.//

    ஆம் மிகச் சரியே! வெட்கக் கேடு, வெட்கக் கேடு...வெட்கக் கேடு...இந்தியக் கல்வியின் தரம் உலக அளவில் தலை குனிய வைக்கிறது.....ம்ம்ம்

    ReplyDelete