Sunday, June 21, 2015

இதெல்லாம் கொஞ்சம் ஓவருங்க


தெலுங்கில் மா டீவீனு ஒரு சேனல் இருக்குதுங்க. தமிழில் சன், விஜய் போல ஒரு முன்னணி தொலைக்காட்சி சேனல்தான் அது. நடிகர் நாகார்ஜுனா குடும்பத்தாரோடதுனு நினைக்கிறேன்.
அதுக்கு என்ன கேக்குறீங்களா, ஒண்ணா ரெண்டா அப்பப்பா சொல்லுறதுக்கு எவ்வளவோ விசயங்கள் கிடக்குதுங்க. பொதுவா ஞாயிற்று கிழமைதான் எல்லா வீடுகளிலும் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் ஒண்ணா உக்காந்து சாப்பிடும் வாய்ப்பு கிடைக்குதுங்க. அந்த சமயத்துல ஒரு நல்ல படத்த போட்டு டீஆர்ப்பி ரேங்க் ஏத்துறத விட்டுட்டு, மாசத்துல குறைஞ்சது ரெண்டு தடவைக்கும் மேல போட்ட ஒரே படத்த போட்டு பார்க்க சொன்னா, யாருதாங்க பார்த்த படத்தையே பார்ப்பாய்ங்க. அவிங்க போடுற படம் என்னவோ அவ்வளவு மொக்கையான படம் ஒண்ணும் இல்லைங்க. நானும் டீவில போடுறப்ப எல்லாம் சும்மா இருந்தேனா பார்க்க உக்காந்திடுவேங்க. ஆமா அது என்ன படம் சொல்ல மறந்துட்டேனே. அது தெலுங்கு படம்தான் ஆனால் தமிழில் இருந்து டப் ஆன படம்.

மவுனராகத்தின் லேடஸ்ட் வர்ஷன், டைரக்டர் அட்லியின் முதல் படம் ராஜா ராணிங்க. தமிழில் வெற்றிபெற்ற அளவிற்கு தெலுங்கு மக்கள் தியேட்டருல ஆதரவு தரலைங்க. ஆனா டீவீல நல்லா இந்த ஸ்கூல் பசங்க ஆதரவு தர்ராய்ங்க.

இதே மாதிரிதாங்க 2004ல சென்னை ரேடியோ மிர்ச்சி எஃப்ஃபெம்ல காதல் வளர்த்தேன் பாட்ட பத்து நிமிசத்துக்கு ஒரு முறை போட்டு ரேடியோ மிர்ச்சி தேசிய கீதமாவே ஆக்கிட்டாய்ங்க அப்போ. எஃப்ஃபெம் ஓட ஓனர் அஜை நினைக்கிறேங்க அவரு சொன்னதால்தான் அந்த பாட்ட தொடர்ந்து சில மாதங்களுக்கு அப்போது ஒலிபரப்பிக் கொண்டிருந்தார்களாம். அது போல மா டீவி டீம்ல யாருக்கோ ராஜா ராணி படம் ரொம்ம்ப பிடிச்சிருக்கும் போல. அதுனாலத்தான் மாசத்துல ரெண்டுதடவை போடுராய்ங்களோ அவ்வ்.

சரி அது போகட்டும்ங்க. தமிழ் டிவி சீரியல்கள் எப்படினு தெரியலீங்க இந்த பெக்ரவுண்ட் ம்யூசிக்ல. தெலுங்கு சீரியல்கள் எல்லாம் ரொம்ப மோசம்ங்க. டைரக்டர் ஜவ்வு போல வளவளனு நாடகத்தை வருசகணக்குல இழுக்குறதால இசையமைப்பாளருக்கும் புதுசா எந்த பேக்ரவுண்ட் பிஜியம் தோணுறது இல்ல போலங்க. அதுனால என்ன பண்ணுராய்ங்கனா எந்தெந்த படத்துல நல்ல டூயூன் கிடைக்குதோ அதையெல்லாம் சுட்டு நாடகத்துக்கு போட்டுக்குறாய்ங்க. பொதுவா நா நாடகங்கள் எல்லாம் பாக்குறது கிடையாதுங்க. வீட்டுல இருக்குறவுங்க பார்க்கும்போது இசை காதுல கேக்கும்போது வருத்தமா இருக்குதுங்க. ஒரு விசயம் சொல்லட்டுமா? இவுங்க சுடுரதெல்லாம் தமிழில் ஹிட் ஆன படத்தோட நல்ல நல்ல பிஜியம்ங்க. படத்தோட பேரு சொல்லனும்னா கத்தி, ஜீவா, எக்செட்ரா எக்செட்ரா பட்டியல் போய்கிட்டே இருக்கும்ங்க. இதுக்கொரு முட்டுக்கட்டை போடணும்ங்க.
சமீபத்துல ராஜா சார் தன்னுடைய பாடல்கள் அனுமதி இல்லாம பயன்படுத்தகூடாதுனு கோர்ட்டுல கேஸ் போட்டாருங்க. அது மாதிரி படத்தோட இசையமைப்பாளர்களும் பண்ணிடனும்ங்க. இது மாதிரி படத்துல இருந்து ட்யூன் சுட்டு போட்டு கூட மக்களை கவர முயற்சிக்குராய்ங்கனு நினைக்கிறேன். எது எப்படியோ பல நாளா ஒரு விசயத்த சொல்லனும் நினைச்சுகிட்டிருந்தேன்ங்க. இன்னைக்கு மதியம் மா டீவி ல ராஜா ராணிய போட்டாய்ங்களா உடனே கிடுகிடுனு வந்து டைப் பண்ணி இந்த பதிவ போட்டேங்க.
தொடர்புடைய பதிவுகள் :


10 comments:

 1. பாடல்களை ரசிக்க வேண்டியது தானே மஹேஷ்...

  ReplyDelete
 2. இப்போது சரியாக தமிழ்மணம் வேலை செய்கிறது மஹேஷ்...

  ReplyDelete
  Replies
  1. ஆமா மிக்க நன்றி சார்.

   Delete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. தமிழ் சேனல்களில் கூட அடிக்கடி ராஜாராணி படம் போட்டுக்கிட்டுத்தான் இருக்காங்க.

  ReplyDelete
 5. தமிழ் சேனல்களில் கூட விஜயில் இப்படி அடிக்கடி போட்ட நிகழ்ச்சியை போடுவதுண்டு.
  த ம 4

  ReplyDelete
 6. எல்லாச் சேனல்களிலும் இதே நிலைதான் சார்.

  ReplyDelete
 7. தமிழ் சீரியல்கள் மட்டும் என்ன வாழ்ந்துச்சு மகேஷ்...ஒண்ணும் சரி கிடையாதுங்க...நாங்களும் சீரியல் பக்கமே போறது இல்லைங்க...நிறைய காப்பி நடக்குதுங்க....காப்பி ரைட் போட்டா நல்லதுதான்...பதிவை ரசித்தோம்...

  ReplyDelete