Tuesday, July 14, 2015

வேலூர்-தங்கக்கோவில்-பயண அனுபவம்

சில நாட்களுக்கு முன்பு இந்த நூற்றாண்டில் கட்டப்பட்ட பிரம்மாண்ட பொற்கோவிலைச் சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. முதலில் இதற்கு நண்பர் ஜோசப் ரீகனுக்கு நன்றி சொல்லி விடவேண்டும். பிறப்பால் ஒரு கிறுஸ்துவனாக இருந்தாலும்; மதத்தைக் கடந்து பிற மதத்தில் என்ன இருக்கிறது என தெரிந்துக்கொள்ளும் அவனது ஆர்வம் என்னையும் அவனோடு சுற்றிப்பார்க்க அழைத்துச் சென்றது. ராஜ பாளயத்தில் இருக்கும் ஜோசப் ரீகன், சமீபத்தில் திருப்பதிக்கு வந்தபோது ஏழுமலையான் தரிசனத்திற்கு பிறகு வேலூர் தங்கக்கோவில் சுற்றிப்பார்க்க அழைத்தபோது முதலில் மறுத்துவிட்டேன். ‘நம்பிக்கை இல்லாட்டி என்ன; ஒரு முறை சென்று வந்தால் தான் என்ன இருக்குதுனு தெரிஞ்சுக்கலாம்ல’ சொன்னதும் ரீகனுடன் புறப்பட்டேன்.

திருப்பதியில் இருந்து காலை ஆரறை மணிக்கு ரயிலில் புறப்பட்ட நாங்கள் காட்பாடி ரயில் நிலையத்தை மூன்று மணி நேர பயணத்திற்கு பிறகு அடைந்தோம். முதலில் வேலூர் கோட்டை சுற்றிப்பார்த்துவிட்டு பிறகு ஸ்ரீபுரத்தில் இருக்கும் தங்கக் கோவிலை பார்க்க செல்வதுதான் எங்களது திட்டம். எதிர்பார்த்த அளவிற்கு வேலூர் கோட்டை ஸ்வாரஸ்யமாக இல்லை. ஆனால் இந்திய சுதந்திர போராட்டத்தில் முதல் முழக்கம் எழுப்பப்பட்ட இடத்தை சுற்றிப்பார்த்த திருப்தி இருந்தது.

கோட்டையை சுற்றிப்பார்க்கும்போது இங்கிலாந்து பெண்மணியை சந்தித்து சில நிமிடங்கள் உரையாடியதும் நல்ல அனுபவம். பிறகு அங்கிருந்து புறப்பட்டு சரியாக மதியம் 12 மணிக்கு ஸ்ரீபுரம் அடைந்தோம். கோவில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு காரணமாக காலனிகள், கைப்பேசி மற்றும் உடன் கொண்டுவரும் பைகள் கோவிலுக்குள் நுழையும் முன்பு அதற்கான பிரத்யேக இடத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பதால் அந்த சடங்குகள் எல்லாம் முடித்துவிட்டு கோயிலைச் சுற்றிப் பார்க்க நுழைந்தோம்.

சுமார் நூறு எக்கர் பரப்பளவில் அறுனூரு கோடி ருபாய் பொருட்செலவில் நட்சத்திர வடிவில் கட்டப்பட்ட கோவிலுக்கு நடுவில் அமைந்துள்ள பகுதிதான் தங்கக்கோவில். அந்த பகுதியை தங்கத்தால் ஆன தகடுகளைக் கொண்டு கட்டுவதற்கு ஒன்னரை டன் தங்கம் பயன்படுத்தி இருக்கிறார்கள். அதைச் சுற்றிலும் மூன்று புறம் செயர்க்கையான நீர்வீழ்ச்சி அமைத்தது, கூடுதல் அழகு.

பக்தர்கள் அதில் காசுகளை எறிவதை கவனிக்க முடிந்தது. நானும் ஒரு த்ரில்லுக்காக ஒரு ருபாய் நாணயம் தண்ணீருக்குள் எறிந்தேன்.

சாமி தரிசிக்க செல்லும் ஒன்னரை கிமி தொலைவு நடந்து செல்லும் வழியெங்கும் பல்வேறு மொழிகளில் எழுதப்பட்டிருக்கும் ஆன்மிக தத்துவங்களை படித்துச் செல்லும் அனுபவம் புதிதாக இருந்தது. லட்சுமிநாராயணி அம்மனை தரிசித்த பிறகு வெளியே வரும் வழியில் அன்னதானத்திற்கென ஒரு ப்ரத்யேக இடம் இருக்கிறது. அங்குச் சென்று சுவை பார்த்துவிட்டு கோவிலை விட்டு வெளியே வந்துவிட்டோம். மொத்தமாக கோவில் முழுவதும் சுற்றி வருவதற்கு குறைந்தது ஒரு மணி நேரம் போதும் என நினைக்கிறேன். தினசரி ஒரு நாளைக்கு சராசரியாக இருபது முதல் இருபத்தைந்தாயிரம் பேர் தங்கக்கோவிலுக்கு வருகிறார்களாம்.
**
ஆன்மீக விடயங்களில் நம்பிக்கை இல்லாத எனக்கு,
 தங்கக்கோவிலை சுற்றிப்பார்த்த  அனுபவம் மனதிற்கு திருப்தியாக இருந்தாலும்
 பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்ததில் ஆச்சர்யம் எதும் இல்லை.
தொடர்புடைய பதிவுகள் :


7 comments:

 1. ஒரு முறை சென்று வந்துள்ளோம் மஹேஷ்...

  ReplyDelete
 2. இன்னும் பார்க்கவில்லை... அடுத்த முறை ஊருக்குப் போகும்போது சென்று வரவேண்டும்.

  ReplyDelete
 3. என்ன ... அடிக்கடி வேலூர் பக்கம் போறீங்க.. இந்த விசாரணையில் பல திடுக்கிடும் செய்திகள் வரும் போல இருக்கே..

  ReplyDelete
 4. உங்கள் அனுபவ விவரணம் அருமை! ஆனால் சாரி மகேஷ்! ம்ம் தங்கக் கோவில் உடன்பாடு கிடையாது. எங்களுக்கும் இறை உணர்வு உண்டு. ஆனால் இது போன்ற கோயில்களில் அல்ல. எத்தனையோ பழமையான கோயில்கள் அழியும் நிலையில் உள்ளன. அதுவும் பல சிற்பக் கலைகளை அரிய கலைகள், அவற்றைச் செம்மைப் படுத்தாமல், இத்தனைத் தங்கம் கொண்டு இழைத்தலில் எத்தனை ஏழை எளியவர்களைப் படிக்க வைத்திருக்கலாம் என்பது எங்கள் ஆதங்கம். கோயிலில் ஆர்வம் இல்லை.

  ReplyDelete
 5. ஐந்துவருட முந்தைய அனுபவம் மீண்டும் கிடைக்கப்பெற்றதாக உனர்கிரேன் அன்னா.

  ReplyDelete
 6. I think I have gone thrice. it's good Mahesh. I am telling about the experience. but long back.

  ReplyDelete
 7. மகேஷ்,

  ஆன்மீக சிந்தை இல்லாமலே பல கோவில்களுக்கு சென்று வரும் உங்களை போலவே நானும் சம்பந்தமில்லாத பல கோவில்களுக்கு சென்று வந்திருக்கின்றேன், நீங்கள் குறிப்பிட்ட அந்த பொற் கோவிலையும் சேர்த்து. (பெயரில் மட்டும் கோயிலை வைத்திருந்தால் போதுமா?)

  நல்ல பதிவு - உங்கள் கால்கள் பதித்தது வேலூர் கோட்டையிலும், அந்த கோவிலிலும்.

  அடுத்த பயணம் எங்கே?

  வாழ்த்துக்கள்.

  கோ

  ReplyDelete