Thursday, July 16, 2015

வருத்தமாக இருக்கிறது

நண்பர்களே,
 செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். ஆந்திராவில், 140 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் கோதாவரி மகாபுஷ்கர விழா முதல்நாள் ஆண்டு கூட்ட நெரிசலில் சிக்கி முப்பது பேர் இறந்ததாகவும், இருபதற்கும் மேற்பட்டவர்கள் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும். மிகவும் வருத்தமான நிகழ்வு. இறந்து போனவர்கள் புஷ்கரணிக்கு செல்லாமல் இருந்திருந்தால் இன்னேரம் தங்கள் குடும்பத்தாரோடு இன்னும் சில காலங்கள் இந்த பூமியில் வாழ்ந்திருக்கலாம். கூட்ட நெரிசல் ஏற்படும் எந்த ஒரு விழாவிலும் அவ்வப்போது இது போன்ற செய்தியை கேட்பது சகஜமாகி விட்டது. நேற்று முந்தினம் அந்த சம்பவம் நடந்த பிறகு பலர் தங்களது பயண திட்டத்தை ரத்துசெய்துக் கொண்டனர். அங்கு செல்ல திட்டமிட்டவர்களும் அந்த எண்ணத்தை கைவிட்டனர்.
ஆனால் நேற்று கூட்ட நெரிசல் இன்றி சீராக பாதுகாப்பாக நடப்பதை பார்த்ததும் மீண்டும் அங்கு சென்று கோதாவரியில் ஸ்னானம் ஆட ஏற்பாடுகள் செய்துக்கொண்டிருக்கிறார்கள். உண்மையிலே ஒரு விஷயம் புரியவில்லை. முப்பது பேர் இறந்திருக்கிரார்கள். பலரது நிலைமை மோசமாக இருக்கிறது. இதை பற்றி எல்லாம் யோசிக்கிறதுக்கு மக்களுக்கு நேரம் இல்லை போலும். புனித கோதாவரியில் குளித்து தங்களது பாவங்களை கழுவிட துடிக்கிறார்கள். கொஞ்சமாவது யோசிக்கிறார்களா ஹும். யாராவது எதாவது சொன்னால் உடனே நம்பிவிடுவது.
அரசாங்கம் முன்வந்து இது போன்ற மூட நம்பிக்கையை ஆதரிப்பதை தடை செய்ய வேண்டும். ஆனால் இன்று அவர்களே பிரச்சாரதிற்கென கோடிக்கணக்கில் செலவு செய்து மக்களை திரட்டி முப்பது பேர் இறப்பதற்கு காரணமாக இருந்திருக்கிறார்கள்.

வீட்டில் இருந்து நாளை கோதாவரி நதியில் நீர் ஆட செல்கிறார்கள். என்னையும் அழைத்தார்கள். நான் அவர்களோடு போக மறுத்துவிட்டேன். ஒருவேளை அந்த அசம்பாவம் நடக்காமல் இருந்திருந்தால் ஜாலியாக ஒரு அனுபவதிற்காக வருவதாக சொல்லி இருப்பேன். ஆனால் இப்போது மகாபுஷ்கர விழா நினைத்தாலே வருத்தமாக இருக்கிறது.
தொடர்புடைய பதிவுகள் :


7 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Yathuvum nam kail illai. vaaipu kedikum pothu paian paduthi kolugal.

    ReplyDelete
  3. உண்மைதான்... ஆனால் விதி வந்தால் எங்கிருந்தாலும் நடப்பது நடந்துதானே ஆகும். முப்பது பேருக்கும் விதி முடிந்துவிட்டது. அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

    ReplyDelete
  4. மிகவும் வேதனை தரும் சம்பவம் மஹேஷ்....

    ReplyDelete
  5. மிகவும் வேதனை...இது போன்றவை மூட நம்பிக்கைகள் என்று சொல்லப்பட்டாலும், நதிகள், மலைகள், விலங்குகள் எல்லாம் மத சம்பந்தப்பட்டதாகவும், இறை சம்பந்தப்பட்டதாகவும் சொல்லப்படுவது முன்பு வாழ்ந்த மக்கள் நதி சார்ந்தும், மலை சார்ந்து வாழ்ந்து அந்தப்பழக்கவழக்கங்களில் வந்ததுனாலும். இவை எல்லாம் தெய்வீகமானது என்றால் மக்கள் அதன் தூய்மையை பாதுகாப்பார்கள் என்று ஆனால் நம் மக்கள் அதைத் தவறாகப் புரிந்து கொண்டு நாளடைவில் அதன் தூய்மையைக் கெடுக்க ஆரம்பித்து விட்டார்கள். ம்ம் என்ன செய்ய...

    ReplyDelete
  6. What to do Mahesh? somehow we have to die right? Death must be different from each other. Let their soul rest in peace.

    ReplyDelete