Friday, July 17, 2015

புதிய பதிவர்களை உருவாக்குவோம் வாருங்கள்!
நாளுக்கு நாள் வலைப்பூவில் எழுதுபவர்களின் எண்ணிக்கை குறைந்துக்கொண்டே வருகிறது. பலரும் சொல்வது போல் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்சப் வருகைக்கு பிறகு வாசகர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக சொல்கிரார்கள்.
அது உன்மைதான். இங்கு எழுதுபவர்கள் கூட அங்கு தாவிவிட்டார்கள். இனி அவர்களால் மீண்டும் வந்து வலைப்பதிவில் எழுதுவதெல்லாம் முடியாத காரியம்.

இந்தச் சமயத்தில் அந்த கேப் நிரப்ப ஒரே வழி புதிய பதிவர்களை உருவாக்குவதுதான்.

பொதுவாக ஒரு சராசரி வலைப்பதிவரோட ஆக்ட்டிவ் காலம் வலை உலகில் பார்த்தால் இரண்டு முதல் மூன்றாண்டுகள் இருக்கலாம். (இதில் சிலர் மட்டும் விதிவிலக்கு) அதன் பிறகு தொடர்ந்து எழுத அவர்களுக்கு எதோ ஒன்று தடையாக இருக்கிறது. அது ஒவ்வொருத்தருக்கும் மாறுபடலாம். மீண்டும் அவர்கள் எழுத ஆரம்பித்தாலும் நிச்சயம் அந்த பழய ஈடுபாட்டுடன் எழுதுவதெல்லாம் சாத்திய படாத ஒன்று.

எழுதுவதற்கு எவ்வளவோ சப்ஜெட் இருக்கு. ஆன்மிகம் முதல் அறிவியல் வரை, ஹேர்பின் முதல் எரோப்ளேன் வரை எழுத எத்தனையோ விஷயங்கள் இருக்கு. ஆனால் எழுதத்தான் ஆட்கள் குறைவாக இருக்கிறார்கள். அதனால் இந்தச் சமயத்தில் வலை உலகை நேசிப்பவர்கள் தங்களால் முடிந்த வரை புதிய பதிவர்களை உருவாக்க முயற்சி எடுப்போம் வாருங்கள்.

***

 புதிய பதிவர்களை உருவாக்குவது எப்படி? (எதோ எனக்குத் தெரிந்த சில வழிமுறைகள்)

நான் பதிவுகளை வாசிக்க ஆரம்பித்த காலத்தில் ஒரு தவறான மதிப்பீடு எனக்கு இருந்தது. இங்கு எழுதுவதற்கென ஒரு தனித்திறமை இருக்கனும்னு. ஆனால் சங்கத்தில் ஐக்கியம் ஆன பிறகு புரிந்தது நிறைய வாசிப்பும் அதை விடவும் பொறுமையும் இருந்தால் யாரும் எழுதலாம்னு. ’அதற்கெல்லாம் எங்களுக்கு எங்க நேரம் இருக்கு’னு  கேட்கலாம். மனம் இருந்தால் மார்க்கமுண்டு.

மணிக்கணக்கில் ஃபேஸ்புக் வாட்செப்பில் நேரம் தொலைப்பதற்கு பதிலாக உட்காந்து பதிவு எழுதி பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் ஒரு ஸ்டேடஸ் எழுத குறைந்தது பத்து நிமிடங்கள் எடுத்துக்கொண்டால் இங்கு ஒரு பதிவை தேற்ற குறைந்தது அரைமணிநேரமாவது பிடிக்கும். ஆனால் காலத்துக்கும் அழியாத ஒன்றாக நிற்கும். நமக்கோ அல்லது இல்ல புதிய வாசகருக்கோ பழய பதிவுகள் எப்போது தேவைப் பட்டாலும் பதிவுகளை தேடிச் சென்று வாசிக்கும் வசதி இங்கு மட்டும்தான் இருக்கிறது. அதனால் உழைப்பு நிச்சயம் வீண் ஆவது கிடையாது.

வீட்டில் வளர்ந்த பிள்ளைகள் ஃபேஸ்புக் மற்றும் வாட்சாப் அதிகம் பயன்படுத்துபவராக இருந்தால் அவர்களை திசைதிருப்ப வலைப்பூ ஒரு நல்ல வழி. ஒரு முறை அவர்கள் எழுத ஆரம்பித்த பிறகு இதன் ருசி பார்த்தார்கள் என்றால் நிச்சயம் விடமாட்டார்கள். வெளி நாடுகளில் பள்ளிக்குழந்தைகள் சொந்தமாக வலை பூ எழுதுவார்களாம். அது அவர்களின் கரிகுலத்தின் ஒரு பகுதி என கேள்வி பட்டிருக்கேன். அது போன்றது ஒரு முயற்சி நம் ஊர் பள்ளிகளும் எடுக்கலாம். இதனால் எழுதுவது சிறுவயதில் இருந்தே அவர்களுக்கு பழக்கமாகிவிடும்.

வலைப் பதிவர்களாக இருப்பவர்களும் தங்கள் குடும்பத்தில் தமிழ் வாசிக்க எழுத தெரிந்தவர்களையும் எழுத ஊக்குவிக்கலாம். ஒரு வேளை அவர்களுக்கு பிடித்திருந்தால் தொடரட்டும். இல்லையேல் விட்டுவிடலாம். இப்படி சொல்லிக்கொண்டு செல்ல நிறைய யோசனைகள் இருந்தாலும், முக்கியமாக இங்கு கவனிக்க வேண்டியது வலைப்பூவில் எழுதனும் என்கிற ஆர்வம் எழுதுபவருக்கு இருக்கனும். எழுத தெரியாட்டியும் எழுதனும் என்கிற ஆர்வம் அதுவே அவர்களை சில காலத்துக்கு இங்கு எழுத வெச்சிடும். உதாரணம்:
 சாக்‌ஷாத்து நான் நானேதான்.

***
 பின்குறிப்பு:
 தமிழ் மண காத்திருப்பு பட்டியலில் ஒப்புதலுக்காக காத்திருக்கும் வலைப்பூக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கிட்டதட்ட முன்று மாதங்களுக்கு மேல் எந்த வலைபூவையும் புதிதாக தமிழ் மணம் ஏற்கவில்லை. இதை யாராவது தமிழ் மணம் கவனத்திற்கு எடுத்துச் சென்றால் புதிதாக எழுதுபவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கச் செய்யும் ஒரு வாய்ப்பு அல்லவா.
தொடர்புடைய பதிவுகள் :


7 comments:

 1. நானும் ஒரு புது பதிவர எழுத தூண்டியிருக்கேன்.

  முடிஞ்சா அவங்க blog போய் பாருங்க

  http://poongothainachiyar.blogspot.in

  ReplyDelete
 2. தம்பி, இதற்கென புதுக்கோட்டையில் பயிற்சி வகுப்பு விரைவில் நடக்கப் போகிறது...

  ReplyDelete
 3. நன்றாகச் சொன்னீர்கள். புதிய வலைப்பதிவர்களை உருவாக்குவோம். அவர்களுக்கு நல்ல உற்சாகம் தருவோம். தமிழ்மணம் காத்திருத்தல் குறித்து மூங்கில் காற்று டி.என்.முரளிதரன் அவர்கள் ஒரு பதிவே எழுதி இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

  த.ம.3

  ReplyDelete
 4. என் மனதில் உள்ளதை
  அப்படியே பதிவு செய்ததைப் போலிருக்கிறது
  தங்களின் இந்தப் பதிவு
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. I am new blogger because of you Mahesh. You created me.

  ReplyDelete