Tuesday, July 28, 2015

கலாம் சார்- மரணத்தை ஒட்டி- எனது நினைவில் இருந்து-சில-நினைவுகள்நம் அனைவரது மதிப்பிற்கும் மரியாதைக்கும் தகுதியான மாமனிதர் திரு அப்துல் கலாம் அவர்கள் மறைவு நமது நாட்டிற்கு மிகப்பெரிய இழப்பு. சாதி, மதம், மொழி
இன வேறுபாடுகளுக்கு அப்பால் அனைவராலும் போற்ற படும்ப்மனிதர் இறந்துவிட்டார் என்கிற செய்தியை இன்று காலையில் பார்த்ததும் அதிர்ச்சியும்+வருத்தமும் கலந்த உணர்வு ஏற்பட்டது. எந்த தொலைகாட்சி சேனல் பார்த்தாலும் அவரை பற்றீய நிகழ்ச்சிதான். செய்திதாழ்களிலும் அவரைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதி தள்ளி விட்டார்கள். எல்லாவற்றிற்கும் தகுதியான மனிதர்தான் கலாம் அவர்கள் சந்தேகமே கிடையாது. எனது வருத்தமெல்லாம் இன்று ஒரு நாள் மட்டும் அவரது மரணத்தை ஒட்டி மீடியாவில் ஹைப் க்ரியெட் செய்துவிட்டு பத்தோடு பதினொன்றாக கடந்துவிட கூடாது என்பதுதான். அவரது ஆசை லட்சியம் இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். முடிந்தவரை அவர் சொன்னதை சிரிதெனினும் நிறைவேற்ற முயன்று பார்க்கலாம். அதுதான் நாம் அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்.

***
 முதன் முதலாக எனக்கு கலாம் சாரை பற்றி தெரிய வந்தது பத்தாம் வகுப்பில் அவரைப் பற்றி தமிழ் பாடத்தில் வந்ததன் வாயிலாகத்தான் தெரிஞ்சுக்க முடிஞ்சது. அப்போதெல்லாம் நான் பெரிதாக எதிலும் ஆர்வம் செலுத்தாதவன் என்கிற வகையில் கொஞ்சம் தாமதமாகத்தான் கலாம் சார் எனக்கு அறிமுகம் ஆனார். அதே சமயம் இந்தியா 2020 சில பக்கங்கள் வாசித்த நினைவு.

அதே வருடம். அப்போது கலாம் சார் குடியரசு தலைவராக இருந்தார். பள்ளியில் இருந்து டெல்லிக்கு கல்விச் சுற்றுலா சென்றிருந்தோம். அவரை ராஷ்ட்ரபதி பவனில் சந்தித்து சில நிமிடங்கள் உரையாடுவது எங்களது திட்டம். ஆனால் அந்தச் சமயம் அவர் அங்கு இல்லாததால் சந்திக்க முடியாமல் போச்சு. முன்னதாகவே அவரைச் சந்திக்க பள்ளி ஏற்பாடு செய்திருந்தாலும் எதோ கூட்டத்தில் உரையாட திடீர் அழைப்பு வந்ததால் சென்றிருப்பதாக தகவல் வந்தது.

அதே போல அது 2008ஆம் வருடம். அப்போது பனிரெண்டாம் வகுப்பு. எங்கள் பள்ளியை நடத்தும் பாதிரியார் சபைக்கு தொடர்புடைய மற்றோரு பள்ளிக்கு கலாம் சார் வருவதாகவும், அந்த கூட்டத்தில் எங்கள் பள்ளியில் இருந்து ஒருத்தருக்கு மட்டும் அவரிடம் கேள்வி கேட்கும் ஒரு வாய்ப்பு இருப்பதாகவும், வகுப்பு ஆசிரியர் திரு இருதைய ராஜ் அவர்கள் தெரிவித்தார். எங்கள் பள்ளியில் இருந்து மொத்தம் மூண்று பேரை தேர்ந்தெடுத்தார்கள். அதில் நானும் ஒருத்தன். மற்ற இருவர் வினோத் மற்றும் நவரசன். கடும் பயிற்சிக்கு பிறகு நவரசன் மேடையில் கலாம் சாரோடு பேசும் வாய்ப்பை தட்டிச் சென்றான். ஆனால் நாங்க ரெண்டு பேரும் அந்த கூட்டத்திற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் சந்தோசம். அப்பொதெல்லாம் யூட்யூப் எல்லாம் தெரியாது. அவரது குரல் முதன் முதலாக நேரில் கேட்கும் சந்தர்ப்பம் மறக்க முடியாத ஒரு அனுபவம் கூட.

அதே போல் எங்கள் பள்ளி ஆண்டு விழாவிற்கும் சிறப்பு விருந்தினராக கலாம் சாரை அழைக்க எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் முயன்று பார்த்தார். நிரைவேறவில்லை. கல்லூரிக்கு வந்த பிறகு அவரது சுய சரிதையான விங்சாப் ஃபையர் படித்திருக்கிறேன். நிச்சயம் ஒவ்வொரு மாணவனும் தனது பள்ளிப் பருவத்திலே படிக்க வேண்டியதொரு புத்தகம்.

கல்விதான் உண்மையான சொத்தென உணர்ந்து,
 தன்னை முழுவதும் அதில் ஈடு படுத்திக்கொண்டு,
கடைசி வரை  தனக்கென எந்த சொத்து சேர்க்காட்டியும்,
 நம் அனைவரது மனதிலும் இடம் பிடித்த
 “ கலாம் சாருக்கு ஒரு  கண்ணீர் சலாம்”
தொடர்புடைய பதிவுகள் :


3 comments:

  1. ஆழ்ந்த இரங்கல்கள்...

    ReplyDelete
  2. கண்ணீர் சலாம்" ஆம் மகேஷ்..கண்ணீர் சலாம்தான்...

    ReplyDelete