Tuesday, August 04, 2015

ஹாட் அட்டாக் மற்றும் டென்ஷன் ரொம்ப டேஞ்சர்!

நிரந்தரம் அற்ற மனிதன் இந்த பூமியில் நான் கவனித்த வரையிலும் சமீபத்திய மரணங்கள் பெரும்பாலானவைக்கு காரணமாக இருந்தது இதய கோளாரு பிரச்சனைகள்தான். இதயம் சம்பந்த பட்ட நோய் நாளுக்கு நாள் சிறியவர்/பெரியவர் என வயது வித்யாசமின்றி இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நமது சுற்றுவட்டம்/நட்பு வட்டத்தில் இருக்கும் ஒருத்தர் எப்போதும் போல்
சகஜமாக நம்முடன் அன்று பேசி இருப்பார். துரதிஷ்ட்டமாக அடுத்த நாள் அவரது மரண செய்தியை நாம் கேட்க வேண்டி இருந்திருக்கும். அது போன்ற அனுபவம் சிலருக்கு ஏற்பட்டிருக்கலாம்.
இன்னும் சிலர் அலுவலகத்தில் இருக்கும்போதே இறந்து போனதாகவும், அதற்கும் ஒரு படி மேல சிலர் வாகனத்தை ஓட்டிச் சென்றுக்கொண்டிருக்கும்போது தீவிர நெஞ்சுவலி காரணமாக துடித்து
இறந்ததாக கேள்விபட்டிருக்கலாம். இதெல்லாம் பார்க்கும்போது நமக்கு தானாகவே பயம் ஏற்படுவதை கவனிக்கலாம். அது மரண பயத்தை விடவும் பலருக்கும் தனது குடும்பத்தை நினைத்து
ஏற்படும் பயமாகத்தான் இருக்கும். இதற்கெல்லாம் ஒரே காரணம் ஹாட் அட்டாக் என்னும் மாரடைப்பு பிரச்சனைதான்.
மாரடைப்பு வருவதற்கான மிக முக்கிய காரணங்கள் என தேடிப் பார்த்ததில் முதலாவது இடத்தை பிடித்திருப்பது குடி, புகை மற்றும் புகையிலைப் பழக்கம் இருப்பவருக்கு அதிக சதவீதம்
மாரடைப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் நான் கவனித்த வரையிலும் அது போன்ற பழக்கம் இல்லாதவர்கள் தான் சமீபத்திய நாட்களில் அதிக பேர் மரணித்திருப்பதாக
தெரிகிறது. இரண்டாவதாக உயர் ரத்த அழுத்தம், கட்டுப்பாட்டில் இல்லாத நீரிழிவு, அளவுக்கதிக கொலஸ்ட்ரால், உடல் பருமன் போன்ற காரணங்களால் அவதி படுபவர்கள்க்கு
 மாரடைப்பு வர வாய்ப்பிருக்கிறதென ஆய்வுகள் தெரிவிக்கிறது. இது உண்மையும் கூட. சமீபத்தில் மரணித்த மனிதர்களைப் பற்றி விசாரித்து பார்த்ததில் எவ்வளவு தூரம் உண்மையென உணர
முடிந்தது. அதனால் மேற்குறிப்பிட்ட நோய்களில் எதாவது ஒன்று இருப்பினும் அல்லது அனைத்தும் ஒருவருக்கே இருந்தால் மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாக உணர்ந்து அலர்ட்டாக
இருக்க வேண்டும். முடிந்தால் ஒருமுறை கார்டியாலஜிஸ்டிடம் சென்று பரிசோதிப்பதும் நமது நல்லதுக்குதான். இதில் ஆண்/பெண் பாகுபாடு எல்லாம் கிடையாது.
ஆனால் தற்போதைய மேற்குறிப்பிட்ட அனைத்தையும் தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு முக்கிய காரணமாக இருக்கிறது ஒன்று. அதற்கு சிரியவர்/பெரியவர் என வயது வித்யாசம் எல்லாம் பார்க்க
தெரியாது. ’எனக்கு தான் எந்த நோயுமே இல்லை’னு மார்பு தட்டுபவருக்கும் தற்போதையச் சூழலில் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதாம்.
 ***
 டென்ஷன்-ரொம்ப டேஞ்சர்!
நாம் ஒவ்வொருத்தரும் கட்டாயம் தெரிஞ்சுக்கனும். இன்றைக்கு நமக்கு வரும் பெரும்பாலான நோய்களுக்கு இந்த டென்ஷன்தான் ஆரம்ப புள்ளியாம். இதற்கு சிறுவர்கள் பெரியவர்கள் என வயது
வித்யாசம் எல்லாம் கிடையாது. அதனால் டென்ஷனுக்கு இடமே தரக் கூடாதுனு சொல்லுராங்க மருத்துவர்கள். அதேபோல சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் டென்ஷன் ஆவது, உணர்ச்சி
வசப்படுவது, கோபம் போன்றவையும் மாரடைப்பு ஏற்படுவதற்கு வழிவகுக்குமாம்.
சரி டென்ஷன் தவிர்த்தால் பல நோய் பிரச்சனைகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் சொல்லுறாங்க ஆனால் அது அவ்வளவு ஈசியா என்ன? இப்போதெல்லாம் ஒரு வயசு குழந்தைக்குமே
மன இருக்கம் இருப்பதாக ஆய்வுகளில் தெரிய வருகிறது. பிறகு பெரியவர்களுக்கு சொல்லவா வேண்டும். மாறிவரும் காலச் சூழலில் நமது சவகுழிக்கு நாமே பள்ளம் தோண்டிக்கொண்டிருக்கிறோம்.
நம்மைச் சுற்றிலும் எதோ ஒரு பிரச்சனை அதனால் ஏற்படும் டென்ஷன் இப்படி..
 ஒவ்வொருத்தரும் எதோ ஒரு காரணத்தால் நோயில் விழுகிறார்கள். முதலில் டென்ஷன் காரணமாக சாதாரணமாக ரத்த அழுத்த மாற்றத்தில் ஆரம்பித்து அது நீரிழிவு நோய்க்கு வழிவகுத்து
சிறுநீரகம் மற்றும் இதயத்தை பாதித்து கடைசியில் இறக்க வேண்டி இருக்கும். அதனால் இனி அடிக்கடி டென்ஷன் ஆவதை தவிர்ப்போம். அதே போல ரத்த அழுத்தம், உடல் பருமன்,
கொலஸ்ட்ரால், நீரிழிவு போன்ற நோயால் அவதிப்படுபவர் பீ அலெட்.
 ’எனக்குதான் மேல சொன்ன லிஸ்ட்ல எந்த நோயும் கிடையாதே, அதனால் எனக்கு ஹார்ட் அட்டாக் வர வாய்ப்பே இல்லை’னு யாராவது நினைத்தால், வெறும் அது அல்ப சந்தோஷம்
என்றுதான் சொல்லனும். உலகத்தில் இதுவரை மாரடைப்புக்கான மிகச் சரியான துல்லியமான காரணம் இன்னும் கண்டரியவில்லையாம். அதனால்தான் என்னவோ ஆரோக்கியமாக இருப்பவரும்
கூட தூக்கத்தில் பட்டுனு போறாங்க. ( எனக்கும் அது போல கடைசி காலத்தில் யாருக்கும் தொந்தரவு இல்லாம/சாகுறப்போ வலி எதுவும் தெரியாம பட்டுனு போயிடனும்னு ஒரு ஆசை:-)
 ***
எதோ எனக்கு தெரிந்த சிலவற்றை இங்கு பகிர்ந்து கொண்டேன். இந்த பதிவின் மூலம் சொல்ல வருவது டென்ஷன் ரொம்ப டேஞ்சர்:-)

Sunday, August 02, 2015

கடவுள் இருக்கிறாரா...? தேடலின் பயணம்-1

’ இந்த பிரபஞ்சத்தை படைத்தது யார்? பூமி தன்னைத்தான் சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருவதற்கு காரணம் என்ன? பூமியில் மட்டும் ஜீவராசிகளை தோற்றுவித்தது யார்? இதற்கெல்லாம் பெரும்பாலானவர்கள் நம்புவது போல் கடவுள் தான் காரணமா? அப்படி ஒருத்தர் உண்மையில் இருக்கிறாரா?’ என்கிற கேள்வி எனக்குள்  பள்ளி  பருவத்தில் இருந்தே மனதில் அவ்வப்போது எட்டிப்பார்க்கும். ஆனால் அதை கண்டுக்கல. காரணம் எனக்கு ஒரு கடவுள்  தேவைப்பட்டார். அவரிடம் வேண்டினால் நாம் நினைத்ததெல்லாம் நடக்கும் என்கிற நம்பிக்கை எனது ஆழ் மனதில் பதிந்திருந்தது. ஒரு இந்து குடும்பத்தில் பிறந்திருந்தாலும் பன்னிரெண்டு ஆண்டுகள் கத்தோலிக்க பள்ளியில் படித்ததால் அவர்களது தாக்கம் சிறுவயதில் என்மீது சற்று அதிகமாகவே இருந்ததாக தெரிகிறது. பிறகு உயர் வகுப்புகளுக்கு வந்ததும் படிப்படியாக அது இந்து கடவுள்கள் பக்கம் திரும்பியது. தேர்வு சமயத்தில் பக்திமானாக ஆகிவிடுவேன். ‘நா நினைச்சது போல நடந்திச்சுனா மலை ஏறி  உன்னை தரிசிப்பேன்’ என்றெல்லாம் பெருமாள் கிட்ட உடன்படிக்கை போட்ட நாட்கள் எல்லாம் உண்டு. அதன் பிறகு கல்லூரி சேர்ந்த சில நாட்களில் கூட படிக்கும் சக மாணவர்களில் சிலரது வாழ்க்கையை பார்த்தபோது ’ஏன் அவர்களது வாழ்வில் அத்தனை துன்பங்கள், துயரங்கள் நிறைஞ்சிருக்கு?’ என்று கோவம். எனக்கு வீட்டில் எல்லா வசதிகள் இருந்தாலும் சக வகுப்பு தோழர்கள் படும் கஷ்ட்டங்கள், அது தவிர எனது சுற்றத்தில் இருக்கும் பலரது கதைகள் செவிக்கு எட்டியதிலும் ஏற்பட்ட கோவத்தாலும்/வருத்தத்தாலும் கடவுளின்மீது எனக்கு இருக்கும் நம்பிக்கை முழுமையாக  குறையாட்டியும்,இளங்கலை முடிவில் கடவுள் ஒருத்தர் இருந்தால் அவர் கண்ணுக்கு புலப்படாத ஒரு சக்தியாக (இயற்கை வடிவில்) இருப்பார் என முடிவுக்கு வந்திருந்தேன்.

 பிறகு பிஎட் சேர்ந்தபோது வகுப்பில் கல்கி பகவானை வணங்கும் ஒரு நண்பரைச் சந்தித்தேன். தெலுங்கு தொலைகாட்சியில் கல்கி பகவான் ஆஷ்ரமத்தில் அரங்கேறும் அக்கிரமங்களை அம்பல படுத்திய வீடியோக்க்ளை பார்த்ததால் எனக்கு எழும் சந்தேகங்கள் /விமர்சனங்களை  அந்த நண்பர் முன்பு வைத்தேன். சரியான பதில் வராததால் மேற்கொண்டு அதைப் பற்றி விவாதிப்பதால் ஒரு புரயோஜனம்  இருக்காததால் விட்டுட்டேன். அதன் பிறகு பிஎட் முடிவில் நான் புரிந்துக்கொண்ட விஷயம் கடவுளின் அவதாரமாக தங்களை பிரகடனம் செய்துக்கொண்டு சிலர் திட்டமிட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள் என புரிந்து கொண்டேன்.

அதே போல நான் கவனித்ததில் வேறு எந்த நூற்றாண்டிலும் இல்லாத அளவிற்கு குறிப்பாக இந்தியாவில் இருபதாம் நூற்றாண்டில் பல போலி சாமியார்கள் அவதார புருஷர்களாக அவதரிப்பதையும் பார்க்க முடிந்தது. அவர்கள் கதை ஆதாரங்களுடன் சிக்கி இருப்பதால் என்னதான் மகிமைகள் செய்தாலும், தீட்சை தருவதாகச் சொல்லி ஏமாற்றினாலும் அதில் சந்தேகம் இல்லாததால் அந்த அத்யாயம் அதோடு மூடிவிட்டேன்.

***

 என்னுடைய ஒட்டுமொத்த கடவுள் நம்பிக்கை திசை திரும்பியது முதுகலையின் போதுதான்.

 கல்லூரியில் எனக்கொரு நண்பனிருந்தான். வைணவ சம்ப்ரதாயத்தைச் சேர்ந்தவன். பெருமாளுக்காகவே; கோயம்பத்தூரில் இருந்து இங்கு வந்து படித்தான். நல்ல திறமை மிக்க பையன் என்பதால் அவனுக்கு பாண்டிச்சேரி செண்ட்ரல் யூனிவர்சிடியிலும் இடம் கிடைத்தும் இங்கு வந்து சேர்ந்ததால் பலரும் அவனைப் பார்த்து ஆரம்பத்தில் வருத்தப்பட்டார்கள். அவனுக்கோ தெலுங்கு தெரியாது; வகுப்பில் என்னைத் தவிர வேறு யாருக்கும் தமிழ் தெரியாது.

 இருவரும் பல விஷயங்களை விவாதிப்போம். கடவுள் பற்றி பேச்சு எடுத்தால் இன்னும் சூடு பிடிக்கும். அவன் எதற்கெடுத்தாலும் பெருமாள் என்பான்; நானோ போடா என்பேன். ஒருமுறை சென்னையில் இருந்து என்னுடைய நண்பர்கள் ஏழுமலையானை தரிசிக்க திருப்பதிக்கு வந்திருந்தார்கள். அவர்களது திட்டம் பெருமாளை தரிசித்து விட்டு அப்படியே திருப்பதிக்கு 35 கிமி தூரத்தில் இருக்கும் சைவர்கள் புனித தலத்தை தரிசித்துவிட்டு அங்கிருந்து சென்னைக்கு திருப்பதிக்கு வராமல் தடா வழியாக திரும்புவது அவர்களது திட்டம்.
’ ஊருக்கு புதுசு நீ; சென்னையில் இருந்து நண்பர்கள் வந்திருக்கிறார்கள்; திருப்பதியில் இருக்கும் கோவில்கள் எல்லாவற்றையும் நீ பார்த்தாச்சு; அப்படியே சைவர்களின் புனித தலமான   காளஹஸ்தியையும் சுற்றிக்காட்டச் செல்கிறேன் வருவியா’ என கேட்டிருந்தேன். காரணம் அவன் கல்லூரியில் சேர்ந்ததில் இருந்து திருப்பதியை தவிர அருகில் எங்கும் செல்லாததால் சிவன் கோவிலை காட்ட கேட்டிருந்தேன். எங்களோடு வர மறுத்தான். அவனைப் பற்றிதான் தெரியுமே. அவர்களைப்பொருத்தவரை; விஷ்ணுதான் எல்லாம் ; அதே போல சைவர்களும் அதேதான். ஒரு படி கீழேதான் பெருமாள் அவர்களுக்கு. தன் சாமி மட்டும்தான் உண்மை என்று நினைப்பதில் தவறு கிடையாது; மற்ற சமய சாமீங்க பொம்மைனு நினைப்பதுதான் தவறு.
அப்போதுதான் ஒரு விஷயம் எனக்கு புரிய ஆரம்பித்தது. இந்துச் சமயத்தில் இருக்கும் இரண்டு பெரிய சமய கிளைகள் எவ்வளவு தீவிரமாக தத்தம் சமய நம்பிக்கைகளில் இருக்கிறார்கள் என்று.

ஒரு சராசரி ஹிந்துக்கு ஏன் எனக்கும் இதெல்லாம் அதுவரையிலும் தெரியாது. அதன் பிறகு எப்போதெல்லாம் அவன் விஷ்ணுவை முன்வைத்து பேசுவானோ அவனுக்கு பதில் அடி கொடுக்கவே நான் எடுத்த ஆயுதம் நாத்திகம் மற்றும்  பகுத்தறிவு. அது வரையிலும் ஒரு குறிப்பிட்ட சாமியையோ அல்லது கடவுள் நம்பிக்கையோ எனக்கு கிடையாது என்பதால் தைரியமாக அவனோடு விவாதம் பண்ண ஆரம்பித்தேன். அதற்காக எனது தேடல் ஆரம்பித்தேன். அதனால் எனக்கு கிடைத்த பலன் தெரியாத பல விஷயங்களை தெரிஞ்சுக்க முடிஞ்சது.

  பயணம் தொடரும்.