Sunday, September 06, 2015

இஞ்சினீரிங்-சிவில் சர்வீஸ் எக்சாம்மனோஜ் எங்கள் வீட்டிற்கு அருகில்தான் இருக்கிறான். தம்பி வழியாக பழக்கம். தற்போது சென்னையில் ஒரு தனியார் கல்லூரியில் பொறியியல் நான்காம் ஆண்டு படிக்கிறான்.
மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் வீட்டிற்கு வந்திருந்தான். நேற்று ஒரு வேலையின் காரணமாக அவனை சந்திக்க அவனது வீட்டிற்குச் சென்றிருந்தேன். அவனோடு பேசிக்கொண்டிருக்கும்போது ஃபைனல் இயர்ல இருக்க, ப்லேஸ்மெண்ட்ஸ் எப்படி இருக்கு?அடுத்து என்ன பண்ண போறனு கேட்டிருந்தேன்.சிவில் சர்விஸ் என்று  சொன்னான். அதைக் கேட்டதும் ஒரு நொடி நான் அதிந்து போனேன். காரணம், வெறும் இஞ்சினீரிங் மட்டும் அவனை சென்னையில் படிக்க வைக்க எப்படியும் ஒரு 12லட்சம் தாண்டிவிடும். கொஞ்சம் வசதியான ஃபேமலி என்பதால் ஒருவேளை அவர்களுக்கு அது ஒரு பெரிய  விஷயமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் என்னால்தான் அதை ஏற்றுக்க மனம் மறுத்தது.

இங்கு பல நடுத்தர மற்றும் செல்வந்தர்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை சென்னையில் படிக்க வைக்க விரும்புகிறார்கள்.எவ்வளவு செலவானாலும் பரவாலனு ஆந்திராவில் இருந்து தமிழகத்தை நோக்கி பெற்றோர்கள் படை எடுக்க ஒரே காரணம் இறுதி ஆண்டு முடிவதற்குள் ப்லேஸ்மெண்ட் வழியே ஒரு வேலை கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையில்தான்.

இஞ்சினீரிங் படிப்பை பொறுத்த மட்டில் கேம்பஸ் ப்லேஸ்மெண்ட்ஸ் மிக முக்கியம். கேம்பஸ் இண்டர்வூவில் செலக்ட் செய்யப்பட்டால் பிழைத்துவிடுவார்கள். இல்லையேல் வெளியில் வந்து வேலைத் தேடி சேர்வது மிக மிக கடினம்.

அதே போல் இங்கு ஒரு விஷயத்தையும் தெளிவு படுத்திவிட வேண்டும். வெறும் பணத்தை கொட்டி சீட்டு வாங்கி படிக்க வைத்தால் மட்டும் வேலை நிச்சயம் கிடையாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். மாணவர்களும் தங்களது கடமையை உணர்ந்து செய்தால் மட்டுமே செலக்ட் ஆக முடியும்.

தமிழகத்தில் மொத்தம் 550 சுயநிதி கல்லூரிகள் இருக்க அதில் வெறும் 20சதவிததிற்கு குறைவான (90 கல்லூரிகளில்) மட்டும் இது வரை ப்லேஸ்மெண்ட்ஸ் வந்திருக்கு. ஓரளவுக்கு அந்த கல்லூரிகளில் படித்தவர்கள் பிழைத்துவிடுவார்கள். பாவம் மற்ற கல்லூரிகளில் படித்தவர்கள் நிலைமைதான் என்ன? அதனால்தான் நாளுக்கு நாள் படித்துவிட்டு வேலை அற்ற இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அவர்களும் தங்களது படிப்பிற்கு கொஞ்சம் கூட சம்பந்தமற்ற வேலையை செய்துக்கொண்டிருக்கிறார்கள்.

அது போகட்டும். நான் சொல்ல வந்தது வேறு. மனோஜ் அவ்வளவு செலவு செய்து சென்னையில் படித்து கடைசியில் சிவில் சர்வீஸ்க்குதான் போகனும் முடிவு செய்திருந்தால் அதற்கு சென்னையில் செலவு செய்து படிக்காமல் இருந்திருக்கலாம். இங்கயே எதோ ஒரு கல்லூரியில் படித்து இருந்தால் பணமும் மிச்சமாகி இருக்கும், நான்காண்டுகள் அதிக சமயமும் படிக்க ஒதுக்கி இருந்திருக்கலாம். மேற்கொண்டு நான் எதுவும் சொல்ல முடியாது. அது அவனது தனிபட்ட விருப்பம்.

சிவில் சர்விஸ் தேர்வு பொருத்தவரை நம் மக்கள் இடையே சரியானதொரு விழிப்புணர்வு இல்லை என்றுதான் நினைக்கிறேன். உலகத்திலே மிகவும் கடினமானதொரு தேர்வு என்றால் அது யூபியெஸ்சி நடத்தும் சிவில் சர்விஸ் தேர்வுதான். அதேபோல அந்த தேர்வுக்கான ஆயத்தங்கள் சிறுவயதில் இருந்து ஆரம்பித்து விட்டால் பெரிய விஷயமே கிடையாது. பெரும்பாலும் ஒவ்வொரு வருடமும் நீங்கள் கவனித்திற்களேயானால் வட இந்தியர்கள்தான் அதிக நபர்கள் சிவில் சர்விஸ் தேர்வில் தேர்ச்சி பெறுகிரார்கள். அதற்கு ஒரே காரணம் சிறுவயதில் இருந்தே பள்ளியில் அங்கு மாணவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள். (நமது ஊரில்தான் தெரிந்த கதைதான்).

பெரும்பாலும் இன்றைய சூழலில் மாணவர்கள் எதற்கு படிக்கிறோம் என்பதில் ஒரு தெளிவு இல்லாமலே படிக்கிறார்கள். எதிர்காலத்தில் பணம் சம்பாரிப்பது மிகவும் கடினமானதொரு விஷயமாக இருக்க போகிறது என்று தெரியாமல் படிக்கிறார்கள். அதனை நினைத்துதான் எனது வருத்தம் எல்லாம்.

தொடர்புடைய பதிவுகள் :


5 comments:

 1. வணக்கம் நண்பரே நல்லதொரு அலசல் தங்களின் கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியதே....
  தமிழ் மணம் 1

  ReplyDelete
 2. சிவில் சர்விஸ் தேர்வு பொருத்தவரை நம் மக்கள் இடையே சரியானதொரு விழிப்புணர்வு இல்லை என்றுதான் நினைக்கிறேன். //

  உண்மை மகேஷ்! பொறியியல் படித்த அந்த சீட் வேறு ஒரு மாணவனுக்கோ, மாணவிக்கோ கிடைத்திருக்கலாம்...

  அதே போன்று வட இந்தியாவில் மாணவர்கள், மாணவிகள் மருத்துவப் படிப்பிற்கும் 3 வருடங்கள் ஏன் 4 வருடங்கள் கூட மீண்டும் மீண்டும் முயன்று வருகின்றார்கள். அத்தனை வெறித்தனம். வேறு எதுவும் சேராமல் இதே கனவுடன் 3, 4 வருடங்கள் 12த் முடித்ததும்....

  சிவில் சர்வீஸ் நம் தென்னகத்திலிருந்து இல்லாததற்குக் காரணம் பயிற்சி வகுப்புகள் அவ்வளவாக இல்லை என்பதும் ஒரு காரணம். இந்தத் தேர்வு மிகவும் கடினம், மட்டுமல்ல கிடைப்பதும் மிகவும் கஷ்டம் என்பதால்....இஞ்சினீயரிங்க அப்ப்படி இல்லையே....அதனாலும் இருக்கலாம்...ஆனாலும் சிவில் சர்வீஸ் தேர்வு பற்றி அவ்வளவு அறிவு இல்லை என்பதும், மிகவும் கடினம் என்பதும், ப்யிற்சி வகுப்ப்புகள் இல்லை என்பதும் தான் முக்கியக் காரணம் என்பது எங்கள் சின்ன அறிவுக்கு எட்டியவை

  ReplyDelete
 3. தங்களின் வருத்தம் உண்மைதான்...
  பலர் இப்படித்தான் இருக்கிறார்கள்....

  ReplyDelete
 4. Sorry for typing in English. I don't see anything wrong with Manoj decision to try civil service after engineering. You need people from different backgrounds for civil service job. We don't want all collectors to have arts background. There may be very few with engineering background and Manoj may be good fit. Again to get best education you pay more now, since his parents got money-good for Manoj. There are enough engineering seats for everyone and more in TamilNadu. No one could have been possibly denied a chance because of Manoj.

  ReplyDelete