Monday, September 21, 2015

நேரம் வந்துவிட்டது



இப்போதெல்லாம் எங்காவது பேச வாய் திறந்தால் போதும். ‘என்ன ஹார்திக் பட்டேல்னு நெனப்போ’ ஒரு கேள்வி வந்து விழுகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு அப்படியானதொரு கேள்வியை சந்திக்க நேர்ந்தது. பல்லைக் கடித்துக்கொண்டு பதில் எதுவும் சொல்லாமல் பேச்சை திசை திருப்பிவிட்டேன். 22 வயதான ஹார்திக் பட்டேல் குஜராத்தில் நடத்தும் போராட்டத்தைப் பற்றி கேள்விபட்டிருப்பீர்கள். முதல் வாரத்தில் அனைத்து ஊடகங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டவர். பின்னர் அந்த இடத்தை இந்திரானி ஆக்கிரமித்துவிட்டார். மக்களும் குஜராத்தில் வெடித்த போராட்டம் பற்றிய எண்ணம் மறந்திருப்பார்கள். உண்மை யாதெனில் இன்னும் குஜராத்தில் ஹார்திக் பட்டேல் தலைமையில் பட்டேல் சமூகத்தினர் தமது உரிமைக்காக தினமும் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

குஜராத்தில் ஆரம்பித்த போராட்டம் தற்போது இந்தியாவில் சில மாநிலங்களில் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் குரல் எழுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். எல்லாம் #ஹார்திக் புண்ணியம்தான்.
ஆனால் அரசாங்கமோ திட்டமிட்டு அந்தச் செய்தியை நசுக்க முயற்சிக்கிறது. இன்னொரு பக்கம்: ’அவர்கள் கேட்பதில் ஞாயம் இருக்கிறது; அரசாங்கம் கொஞ்சம் காது கொடுத்து கேட்கலாம்  என்றெல்லாம் பேசினால் அவ்வளவுதான். சுக்கு நூறு ஆக்கி விடுவார்கள்.

இன்று இட ஒதிக்கீடு பலனாக பலரும் அடிமட்டத்தில் இருந்து நல்ல நிலமையை அடைந்திருக்கிறார்கள். நல்ல விஷயம்தான். ஆனால் தற்போது அதே சலுகைகளை தங்களது வாரிசுகளுக்கு சாதகமாக கொண்டு பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்டவர்கள் இட ஒதிக்கீடு என்னும் வாய்ப்பைக் கொண்டு மேலும் வலுப்பெறுகிரார்கள். இதனை கவனித்தால் தெரியும். பக்கா சுரண்டல்.
இதற்கு என்னால் பல உதாரணங்கள் சொல்ல முடியும்; நீங்களும் கொஞ்சம் கவனித்தால் உண்மை புரியும். இட ஒதுக்கீடு ஏற்படுத்தியதன் உன்மையான நோக்கமே விளிம்பு நிலை மனிதர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் சம வாய்ப்பு கொடுத்து நல்ல நிலமைக்கு வந்தவர்கள் தங்களது சமூகத்திற்கு உதவ வேண்டும் என்கிற பரந்த நோக்கத்தோடு திட்டமிட்டு அன்னல் அம்பேத்கர் அவர்கள் இட ஒதிக்கீடு சட்டத்தை ஏற்றி இருக்க வேண்டும். ஆனால் நடப்பது வேறு.
தற்போதைய சூழலில் இட ஒதிக்கீட்டுச் சட்டத்தில் சீர்திருத்தம் அரசாங்கம் கொண்டுவர வேண்டும் என்று பலரும் பேச துவங்கி இருப்பதை கவனிக்க முடிகிறது. நானும் அதற்கு 100%ஆதரவை தெரிவிக்கிறேன். அரசாங்கமும் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கையும் எடுக்க வேண்டும். அன்று இட ஒதுக்கீட்டு சட்டம் கொண்டுவந்தபோது நாட்டு நிலமை வேறு. தற்போதைய சூழல் வேறு. எனது ஆதங்கம் எல்லாம் உண்மையான தேவை இருப்பவர்களுக்குச் சலுகைகள் சென்று சேர வேண்டும் என்பது மட்டுமே.
***
 சமீபத்தில் ஃபேஸ்புக்கில் படித்த ஒரு தகவலை இங்கு பதிவிட விரும்புகிறேன். இந்த பதிவிற்கும், எனது சிந்தனைக்கும் நெருக்கமாக இருப்பதால் கீழே கொடுத்திருக்கிறேன். நன்றி.
 ***

We are aware of Reservation fight happening in Gujarat. As we stand with Right to equality I have one flawless plan for Reservation policy
1. Remove the caste based system entirely and use of the word caste should be prohibited and should not be asked in any application form.
2. Divide entire Indians into 3 groups.First group A category contain creamy layer with high annual income / Educated parents/ Residing in a Metro city / High in property Second group B category consists of middle class people whose parents are under educated and their annual income is just self sufficient to maintain their needs. They don't have any property. Third group C category consists poor people who cannot afford to send their children to schools. Their parents are not educated, they don't have any property , They are unable make ends meet.
3. There will not be any reserved seats for any category but people belonging to B and C category will receive financial benefit. For children belonging to class 6 to 12 financial benefit will be applicable.
4. Parents are free to chose the school which they want admission for their child among the list of schools recognized by government of India. Category B parents will be given 50 % reimbursement on educational fee and Category C will be given 90 % reimbursement on educational fee from class 6 to 12.
5. All those parents will be given Debit card and entire transaction should be done through card to avoid scams.
6. New branch in class 11,12 is added which includes detailed course on farming, all labor works like plumbing, bike mechanic, industry workers etc. This course in class 11, 12 is mandatory even for labor.
7. All those A category people who lose their property or job and eligible for B or C category have to apply and government can decide if they are eligible. This way we can see 100 % quality Education and everyone will be happy with this procedure.
தொடர்புடைய பதிவுகள் :


1 comment:

  1. மிக மிக கவனமாக கையாள வேண்டிய விஷயம்.. ஆனால் நம் அரை சியல் வியாதிகளுக்கு அதைப்பற்றியெல்லாம். கவலையில்லை. ஏழைகள் தங்களை ஏழை என்று கான்பித்துக்கொள்ள விரும்ப மாட்டார்கள். அதே போல் அரசியல் வாதிகள் ஏழ்மை என்பது ஒ(ளி)ழிந்து விட்டாலும் அதை காட்டி உலகெல்லாம் நிதியுதவி,கடன், மற்றும் பல வகைகளில் பிச்சை எடுப்பதில் காட்டும் ஆர்வத்தில் 10ல் 1பங்கு கூட ஏழ்மை மற்றும் இன்னபிற கொடுமைகளை ஒழிக்க முன் வரமாட்டார்கள் காரணம் சொல்லித்தான் தெரியுமா? நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைகளுக்காக போராட முன் வர மறுக்கும் தனி மனித பலவீனமே இவர்களின் பலம். அற்பத்தனமான சலுகைகளுக்காக ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் தம்மை அடமானம் நம் சமூகம் சுயநல சிந்தனையை விட்டொழிக்கும் நாளே நம் நாட்டுக்கு நல்ல நாள் எனலாம்...

    ReplyDelete