Monday, September 07, 2015

விஜய் சித்திரம்சென்ற மாதம் ஒரு நாள் என்னுடைய முதுகலை பேராசிரியை சாரதா மேடம் அவரது வீட்டிற்குச் சென்றிருந்தேன். எங்கள் இருவரின் உரையாடலின் நடுவே அவர் சொன்ன ஒரு விஷயம் என்னை மிகவும் கவர்ந்தது.
‘பிரபல எழுத்தாளர்களின் மிகச் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து, படமாக்கி விஜய் டீவி ஒவ்வொரு சனிக்கிழமையும் மதியம் மூன்று மணிக்கு ஒலிபரப்பு செய்வதாக’ சொல்லி இருந்தாங்க. ‘இது ஒரு வித்யாசமான முயற்சியா இருக்கே?’னு அந்த நொடியே நான் பார்க்க முடிவு செய்திருந்தாலும், முதல் சனிக்கிழமை மதியம் தூங்கி விட்டதால் பார்க்க தவறி விட்டேன். அடுத்த வாரம் அதே தவறு செய்யக்கூடாதுனு விழிப்போடு இருந்தாலும் சனிக்கிழமை வர அன்றும் தூங்கி விட்டேன்.
ஆனால் எப்படியோ அன்று தூக்கத்தின் நடுவே விழிப்பு வர, உடனடியாக டீவி ஆன் செய்து விஜய் டீவி பார்க்க ஆரம்பித்தேன். பதினைந்து நிமிடம் தாமதமாக பார்க்க ஆரம்பித்தாலும் நான் பார்த்த முதல் படம் மிகவும் பிடித்து விட்டது. எத்தனையோ சிறுகதைகள் நாவல்கள் நான் தமிழில் படித்திருந்தாலும், வாசிக்காத சிறந்த இலக்கிய படைப்புக்களை திரையில் பார்ப்பதும் ஒரு புது அனுபவமாக இருக்கும் என நம்பியதில் விஜய் டீவி எனது எதிர்பார்ப்பை 100% சொதப்பாமல் நிறைவேற்றி விட்டார்கள்.
எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் எழுதிய மரி என்கிற ஆட்டுக்குட்டி சிறுகதையை தாய் செல்வம் அவர்களின் இயக்கத்தில் 29.8.2015 (சனிக்கிழமை) விஜய் சித்திரத்தில் ‘மரி’ என்கிற தலைப்பில் இரண்டு மணி நேர படமாக ஒலிபரப்பி இருந்தார்கள். அதனை பார்த்து முடித்ததும் முதலில் மனதில் தோன்றியது ‘இந்த படத்தை அடுத்த வாரம் அதாவது செப்டம்பர் ஐந்து 2015 அன்று ஒலிபரப்பு செய்தால் நல்லா இருக்கும்’னு எனக்கு தோன்றியது. படத்தில் மாணிக்கம் ஆசிரியரின் கதாப்பாத்திரம் மிகவும் பிடித்திருந்தது. அவரைப் போன்ற ஆசிரியர்களைப் பார்ப்பது இக்காலத்தில் மிகவும் அரிது. அதனாலே என்னவோ அந்த பாத்திரம் மனதிற்கு மிகவும் நெருக்கமாக ஒட்டிக்கொண்டது. இக்காலத்தில் வாங்குற காசுக்கு கொஞ்சமாவது நியாயம் செய்தாலே போதும் சமூகத்தில் மாணிக்கம் போன்ற ஆசிரியர்கள் அதிகரிக்க மாணவர்களின் வாழ்வில் கொஞ்சமாவது மாற்றம் ஏற்படலாம். ஆனால் இன்றைய ஆசிரியர்கள்/பேராசிரியர்கள் செய்கிறார்களா?
ஹும்ம் அது போகட்டும். ஒட்டு மொத்தமாக மரி கதையும் எடுத்த விதமும் ஒக்கே. இரண்டு மணி நேரம் என்பது கொஞ்சம் பார்க்க நீளமாக இருந்தாலும் அது அவசியம்தான் என தோன்றுகிறது. அதே போன்று இரண்டு நாட்களுக்கு முன்பு செப்டம்பர் ஐந்து சனிக்கிழமை அன்று விஜய் சித்திரத்தில் இரண்டாம் ஆட்டம் என்னும் தலைப்பில் படம் ஒலிபரப்பி இருந்தார்கள். இந்த முறை முதலில் இருந்து மிஸ் பண்ணாம பார்த்தாச்சு!!! இதுவரை விஜய் சித்திரத்தில் பார்த்த இரண்டு படங்களும் அருமை.
இந்த விஜய் டீவியோட ஒரே பிரச்சனையா போச்சு. முன்பெல்லாம் முக்கியமான எல்லாம் நிகழ்ச்சிகளையும் தொலைகாட்சியில் ஒலிபரப்பி முடித்ததும் அவர்களே முழு நிகழ்ச்சியையும் உடனடியாக யூட்யூபில் அப்லோட் செய்து விடுவார்கள். தற்போது சில மாதங்களாக அதற்கு மாற்றாக என்னவோ hotstar என்கிற ap மொபைலில் இருந்தால் மட்டும் பார்க்கும் படி செய்துவிட்டார்கள். இதனால் பலரும் ஏமாற்றம் அடைவதாக பார்க்க முடியுது. அது போகட்டும். அதனால் இனி தவறாமல் சனிக்கிழமை மூன்று மணிக்கு விஜய் சித்திரம் பார்க்க வேண்டும் முடிவு செய்திருக்கிறேன். நண்பர்களே நீங்களும் சமயம் கிடைத்தால் மிஸ் பண்ணாம விஜய் சித்திரம் பாருங்க. ஒரு புது அனுபவமாக இருக்கலாம்.
 ***
அருமையானதொரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை அறிமுக படுத்திய பேராசிரியை சாரதா மேடம் அவர்களுக்கு நன்றிகள்.
தொடர்புடைய பதிவுகள் :


4 comments:

 1. பார்க்கின்றோம் மகேஷ்! நிச்சயமா...அட யுட்யூப்ல இல்லையா...நாங்க மிஸ் பண்ணினத பார்க்கலாம்னா முடியாது போலருக்குதே...அந்த அப் இவங்க ஏன் ப்ரொமோ பண்ணுறாங்க? உடன்படிக்கை ஏதாவது இருக்குமோ...ம்ம்ம்

  ReplyDelete
 2. Thagalin moolam ithu pondra nikalichaiai tharpodhu than kelvi padukeran thagavaluku nandri vaalthukal.

  ReplyDelete
 3. nice to meet u Gentleman
  will follow ...
  vote +

  ReplyDelete