Monday, October 12, 2015

ஆச்சர்யமாக இருக்கு


ஜூலை இறுதியில் அல்லது ஆகஸ்ட் துவக்கத்தில் இருக்கலாம். ’புதுக்கோட்டையில் பதிவர் சந்திப்பு நடத்த நாள் முடிவாகிடுச்சு’னு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருவதற்கு ஓர் இரு நாட்களுக்கு முன்னதாகவே ஒரு பதிவர் வழியாக அலைபேசியில் எனக்கு தகவல் வந்தது. அவரோடு பேசிக்கொண்டிருக்கும்போது கொஞ்சம் கூட யோசிக்காமல் உடனே நான் ’உம் அப்படியா,நான் கலந்துக்க போறதில்ல’ சொல்லி இருந்தேன். காரணம் விழா அன்று சூழ்நிலை எப்படி இருக்குமோ--திருப்பதியில் இருந்து புதுக்கோட்டைக்கு நேரடி போக்குவரத்து வசதியும் இருக்காது; அதை விடவும் விழாவிற்கு என்னோடு யார் வருவார் என்று பொதுவான பல தடைகள் இருப்பதால் நான் ஆர்வம் காட்டல. அதனால் எப்படியும் இருக்கவே இருக்கு இணையத்தில் ’நேரடி ஒளிபரப்பு’ என்பதால் எப்போதும் போல் இருந்துவிட்டேன்.

அதன் பிறகு ஓர் இரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வந்தது. இம்முறை துவக்கத்தில் இருந்து தொடர்ந்து விழாவைப் பற்றிய பதிவுகள் பதிவர்களும் ஆர்வத்தோடு எழுதினார்கள்; வலைப் பதிவர்கள் கையேடு திட்டம்; தமிழ் இணையக் கல்விக்கழகத்தோடு இணைந்து அறிவித்த போட்டிகள்; விழா குழுவினரின் பதிவுகள்; அனைத்தும் நாளுக்கு நாள் விழாவைப் பற்றிய எதிர்பார்ப்பு எனக்குள் அதிகரித்திருந்தது. ஒரு கட்டத்தில் ‘இனி இதுப்போன்றதொரு வலைப்பதிவர் சந்திப்பு எதிர்காலத்தில் நடக்குமோ?’ என பேசும் அளவிற்கு ஏற்பாடுகள் செய்துக்கொண்டிருந்தார்கள்.

எதையும் யோசிக்காமல் விழாவில் எப்படியாவது கலந்துக்கனும் என முடிவு செய்து நானும் பல திட்டங்கள் போட்டு; கடைசியாக நேற்றைய விழாவில் கலந்துக் கொண்டேன்.
ஒரு நிகழ்ச்சியையும் தவற விடக்கூடாது என்று வீட்டில் இருந்து கிளம்பும்போதே முடிவு செய்ததால் காலை முதல் மாலை வரை அனைத்து நிகழ்சிகளையும் பார்த்து மகிழ்ந்தேன். ’எதிர்பார்ப்பை எகிற வைத்தவர்கள் எங்கே சொதப்பிவிட போகிறார்களோ என விழா துவங்கும் முன்வரை பயந்துக்கொண்டிருந்த நான் விழா முடிவில் எதிர்பார்ப்பிற்கும் மேலாக விழா திருப்தியை கொடுத்ததில் ரொம்ப சந்தோஷம் அடைந்தேன். விழா முடிந்ததும் கிளம்பி திருச்சி வந்து இரவு ரயில் ஏற சரியாக இருந்தது. காலை முதல் மாலை வரை நடந்த அனைத்து நிகழ்வுகளையும் அசைப்போட்டுக்கொண்டிருக்க ரயிலும் புறப்பட தயார் நிலையில் இருக்க அப்போது எந்த பதிவரிடம் ஆரம்பத்தில் விழாவில் கலந்துக்க போறதில்லைனு சொல்லி இருந்தேனோ அதே பதிவர் எங்களைப் பார்க்க வந்திருந்தார். அதன் பிறகு கொஞ்சம் நேரத்தில் ரயிலும் புறப்பட்டது.

நினைத்து பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. ஒரு பக்கம் விழாவில் கலந்துக்கொண்ட சந்தோஷம்; இன்னொரு பக்கம் விழாவில் கலந்துக்க நான் போட்ட திட்டம்; அனைத்தும் வெற்றி அடைந்த களிப்பில் இத்துடன் இந்த பதிவை முடித்துவிட்டு நாளைத் தொடர்கிறேன்.

தொடரும்.
தொடர்புடைய பதிவுகள் :


15 comments:

 1. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. மகேஷ் தொடக்கமே அசத்தல். தொடருங்கள். நானும் தொடர்கிறேன்.
  த ம 1

  ReplyDelete
 3. அன்புச் சகோதரா! உங்களை வேலூரில் பார்த்தபோதே தொடர்ந்து பேச முடியாமலும், வலை நட்பைத் தொடர முடியாமலும் போனது குறித்து வருந்தியிருந்தேன். இப்போது உங்களை நமது விழாவில் பார்த்தபோது மகிழ்ச்சியால் மட்டுமல்ல, விழாப்பணிகளாலும் பேச -உங்களைப் பேச அழைத்த நேரமன்றி மற்ற நேரத்தில் - முடியாமல் போய்விட்டது. மன்னியுங்கள். இனித் தொடர்வேன்.
  ’எதிர்பார்ப்பை எகிற வைத்தவர்கள் எங்கே சொதப்பிவிட போகிறார்களோ என விழா துவங்கும் முன்வரை பயந்துக்கொண்டிருந்த நான் விழா முடிவில் எதிர்பார்ப்பிற்கும் மேலாக விழா திருப்தியை கொடுத்ததில் ரொம்ப சந்தோஷம் அடைந்தேன்“ எனும் உ ங்களின் வரிகளால் மிகவும் மகிழந்தேன். தொடர்ந்து தொடர்பில் இருப்போம் நண்பா. நன்றி வணக்கம்.

  ReplyDelete
 4. மகேஷ் அருமை! நீங்கள் வந்த்து மிகவுமே மகிழ்வாக இருக்கிறது மகேஷ்! எங்கள் எல்லோரையும் விட அதில் நீங்கள் ஒரு படி மேலே சென்றுவிட்டீர்கள்! தொடருங்கள் தொடர்கின்றோம்...

  ReplyDelete
 5. இந்த வருட விழாவில் ,உங்களை சந்திக்க முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி ,மகேஷ் :)

  ReplyDelete
 6. அடப்பாவி மக்கா

  நீ இவ்ளோ பெரிய மக்கா

  கோச்சுக்காத மஹேஷ்

  இது நான்
  என்னப்பத்தி நானே
  சொல்லிக்கிட்டது..

  தயவு செஞ்சி அந்த பதிவர்
  யாருன்னு உடனே சொல்ல வேண்டாம்.

  நாமும் நம் பங்குக்கு ஒரு போட்டி அறிவிச்சிடலாம்ல...

  ReplyDelete
 7. வலைப்பதிவர் விழாவுக்கு உண்மையில் பெருமை சேர்த்து விட்டாய் மகேஷ் . வாழ்த்துகள் . உடன் அழைத்து வந்த "அன்பு" நண்பருக்கு நன்றிகள்

  ReplyDelete
  Replies
  1. மன்னிக்கனும் அய்யா
   நானெங்கே அவனை அழைத்து வந்தேன்
   அழைத்தது அவன்
   வந்தது இவன்

   அவன் அழைத்ததுதான் உண்மை

   நான் நினைத்தது அவனுக்கு

   துணைக்கு அழைக்கிறானென்று.

   கடைசியில்தான் தெரி(ளி)ந்தது

   அவன் என்னை வழித்துணையாய்

   அழைக்கவில்லை.

   என்னை வழி நடத்திடத்தான்

   அழைத்தானென்று.

   அவனுக்கு இல்லாவிட்டாலும்

   எனக்கிருக்க்கிறது.. ஆண்டவன் மீது

   நம்பிக்கை

   அந்த நம்பிக்கையில் சொல்கிறேன்.

   அந்த நாட்களில் என்னை ஆண்டவன்

   அவன் தான்

   ஆம் என் ஆண்டவன் அவன் தான்.

   Delete
  2. நெகிழ்ச்சியாக இருக்கிறது.

   Delete
 8. மிகுந்த சிரமத்துக்கிடையிலும் விழாவிற்கு வந்து சிறப்பித்தமைக்கு நன்றி சகோ....

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்
   விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு வாழ்த்துக்கள் த.ம 6
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   Delete
 9. "கலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்" என்று தனி லேபில் உருவாக்கப்பட்டு, தங்களின் இந்தப் பதிவு சேர்க்கப்பட்டு விட்டது...

  இணைப்பு : →கலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்

  நன்றி...

  அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

  ReplyDelete
 10. இனிய சில மணித்துளிகள் தந்தமைக்கு மகிழ்ச்சி, மகேஷ்

  ReplyDelete
 11. விழாவில் தங்களைக் கண்டவுடன் உடனடியாக எனது ஆசிரியர்தான் நினைவுக்கு வந்தார். மாற்றுத்திறனாளியான அவர் காரைக்கால் ஔவையார் மகளிர் அரசு கலைக் கல்லூரியில் ஆங்கிலத்துறை பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவரின் மற்ற தொடர்பு விவரங்கள்தான் கிடைக்கப் பெறாமல் தவிக்கிறேன். அவரைப் பற்றியும் அவரது கணினி அறிவு குறித்தும் பதிவிட திட்டமிருக்கிறது. நேரம்தான் அமையப்பெறவில்லை. அந்த பதிவு எழுத உங்கள் உதவியும் தேவை.

  ReplyDelete