Wednesday, November 11, 2015

வலி, வரமா? சாபமா?


வலி என்ற ஒன்று நமக்கு வரமா/சாபமா என்று கேட்டால் நாம் நிச்சயம் சொல்லும் பதில் சாபம் என்பதுதான். (அதை அனுபவிச்சவங்களுக்குத்தானே தெரியும் வலியோட கொடுமை)! ஆனால் அதெல்லாம் வலி என்றால் என்ன என்று அறியாமல் இருப்பவர்கள் சந்திக்கும் ப்ரச்சனைகளை பற்றி நாம் கேள்விப்படாதவரை! அவர்களின் பிரச்சனையை தெரிந்து கொண்டால் நிச்சயம் நமக்கு வலி இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்கிற எண்ணத்தையே மாத்திக்குவோம்! அட உண்மையத்தாங்க சொல்லுறேன்!
சரி, வலி என்றால் என்ன? மூளைக்கும் வலிக்கும் இருக்கும் தொடர்பு என்ன? வலி நம் மூட் மேல் சார்ந்து இருப்பதில் வாஸ்தவம் இருக்கிறதா? உயிரினங்கள் அனைத்திற்கும் வலி என்பது அத்யாவசியமான ஒன்று என்கிறார்கள் அறிவியலாளர்கள்! வலி என்ற ஒன்று இல்லையேல் இந்த உலகம் எப்போதோ அழிந்து போய் இருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை!
எதை வலி என்று சொல்வது என்பதே தெரியாது! பிறக்கலாமா வேண்டாமா என்று தீர்மானிக்கும் ஆற்றல் என்னிடம் இருக்குமாயின், பிறக்க வேண்டாம் என்றுதான் நான் முடிவெடுத்திருப்பேன்என்கிறார் வலியே தெரியாத ஒரு அப்பாவி!
மேற்சொன்னது போல் வலி எல்லா உயிர்களுக்குமே நிச்சயம் அவசியம்தான், அது இல்லாவிடில், ஒரு உயிர் நெருப்பில் விழுந்து சாம்பலாக மாறும் அல்லது ஏதேனும் ஒரு விலங்கிடம் இரையாகிவிடும்! இப்படியே உலகம் அழிந்திருக்கும்! வலி இருக்கிற பட்சத்தில்தான் நாம் ஆபத்தை முன்கூட்டியே கண்டறிந்து அந்த ஆபத்தை எதிர்க்கொள்ள முயல்கின்றோம்!
நம் உடலில் ஏதேனும் கிருமித்தொற்றினால் ஏற்படும் நோய்களின் காரணமாக நமக்கு ஏற்பட்ட வலியின் விளைவாகவே எத்தனையோ மருந்துகளும் மாத்திரைகளும் கண்டறியப்பட்டுள்ளன! அந்த வலி அல்லது ஒரு தாக்குதல் நமக்கு வந்திருக்காவிட்டால், மனித இனம் முற்றிலும் அழிந்து போய் இருக்கும்! அதனாலேயே வலி ஒரு வரம் என்றே கருதலாம்! ஆனால் சில உயிர்களுக்கு இது சாபமாகவும் விளங்குகிறது!
இத்தாலியில் உள்ள டஸ்கனிஸ் என்ற கிராமத்தில் வாழும் மாஸிடிஸ் குடும்பம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் தனிப்பட்டவகையில் அவர்கள் அனைவருக்கும் வெவ்வேறு குண நலன்களோ, திறமைகளோ இருக்கலாம்! ஆனால் அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து வாட்டும் ஒரு விஷயம் ஒன்று இருக்கிறது.
நம் அனைவருக்கும் வலி என்றால் எப்படி இருக்கும் என்பது தெரியும். தினமும் எதோ ஒரு நிகழ்வின் மூலம் அது நமது அனுபவத்தில் வந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அந்த குடும்பத்திற்கு வலி என்றால் என்னவென்று தெரியாது. மூன்று தலைமுறையை சேர்ந்தவர்கள் இதில் இருக்கிறார்கள். ஒவ்வொருத்தருக்கும் ஒரு சிறப்பு மிக்க கதை! சுருக்கமாக--!
முதலில், மொரியா என்ற பெரிய பெண்மணியை பார்ப்போம்! அவர் தனது சிறு வயதில் காலில் அடிபட்டு இருக்குமோ என்று சந்தேகித்து மருத்துவரிடம் சென்றார். மருத்துவர் பரிசோதனை செய்து, இதற்கு முன்பு இரண்டு முறை கால் எலும்பு உடைந்து இருக்கிறது என்றார். ஆனால், அவருக்கு வலி தெரியாததால், மருத்துவர் சொல்லும் வரை அடிபட்ட விஷயமே மொரியாவிற்கு தெரியாமல் இருந்தது!.
அடுத்து நடீஸியா. மொரியாவின் மூத்த மகள். அவருக்கு எவ்வளவு குளிரையும் தாங்கும் சக்தி இருக்கிறது. இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் நடீஸியாவிற்கு துளி கூட குளிரே தெரியாது. எவ்வளவு குளிர்ந்த நீரிலும் இறங்கி நீச்சல் அடிப்பார்.
நடீஸியாவின் தங்கை எலினா கதை இன்னும் சிறப்பானது. அவருக்கு சூடு தெரியாது. முக்கியமாக சாப்பிடும் பண்டங்களின் ருசி தெரியாது. எவ்வளவு சூடான பண்டத்தையும் அப்படியே சாப்பிடுவார். இந்த குடும்பத்தின் மூன்றாம் தலைமுறையான குழந்தைகளிலும் இதே சிறப்புதான் தெரிகிறது.
மாஸிடிஸ் குடும்பத்தை பற்றி தெரிந்து கொண்ட விஞ்ஞானிகள், அவர்களது வீட்டிற்கு வரத் துவங்கினர். ஜான் உட் வலியின் மேல் பல பரிசோதனைகள் செய்து உலகத்தைச் சுற்றிவந்தார். வலியை பற்றிய எந்த ஒரு ஆச்சர்யமான விஷயத்தைக் கேள்விப்பட்டாலும் உடனே அங்கு அவர் சென்றுவிடுவார். டாக்டர் ஜான் உட் ஒரு ஜெனிடிக் விஞ்ஞானி. வலியை ஏற்படுத்தும் ஜீன்ஸ் டிஎன்ஏவில் இருக்கும் என்று சொல்கிறார். ஒரு மனிதனுக்கு வலி ஏற்படவில்லை என்றால் அதற்குக் காரணம், அவர்களுக்கு வலியை எற்படுத்தும் ஜீன்ஸ் இல்லாததே என்கிறார்.
நமது உடலில் இருக்கும் நூற்றுக்கணக்கான ஜீன்ஸ், வலியை ஏற்படுத்தும் ப்ராசசில் முக்கிய பங்கு வகிக்கின்றது. உடலில் இருக்கும் நியூரான்ஸ் நமக்கு அடிபட்டதும் தகவலை முதுகுத்தண்டு [back bone] மூலம் மூளைத்தண்டிற்கும் [brain stem], அங்கு இருந்து மூளையின் ஒரு பகுதியான cortex-க்கும் தெரியப்படுத்தும். அப்போதுதான் வலி என்பதை நாம் உணர்கிறோம்! .
மாஸிடிஸ் குடும்பத்தினருக்கு இந்த வலியை ஏற்படுத்தும் ப்ராசஸ் நடைபெறுவதில்லை. டாக்டர் ஜாண் உட் மூன்று தலைமுறையை சேர்ந்தவர்களிடம் இருந்தும் இரத்தத்தை எடுத்து பரிசோதித்தார். அந்த குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு ஜீன் சீக்வன்ஸினையும் தெரிந்து கொண்டார். sensary neuron வளர்ச்சி அடைவதில் இருப்பதில் உள்ள பிரச்சனையை கண்டுப்பிடித்தார். அந்தக் குறைபாடு காரணமாக, இவர்களுக்கு மூளைக்கு வலி ஏற்படுத்தும் சிக்னல்ஸ் பயணம் செய்யும் பாதை வேலை செய்வது இல்லை. இவர்களோடு மற்றவர்களை ஒப்பிட்டு பார்த்த பொழுது இவர்களுக்கு குறைந்த வலி இருப்பதை அவர் தெரியப்படுத்தினார்.
ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒன்று இரண்டு தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு இப்படி ஒரு குறைபாடு இருப்பதைக் கண்டறிந்தது இதுவே முதல் முறை. அதனாலேயே டாக்டர் ஜான் உட் இவர்களில் கண்டறிந்த அதிசயத்திற்கு அவர்களது குடும்பத்தின் பெயரையும் சேர்த்து மாசிலிஸ் சிண்ட்ரோம் என்று பெயர் வைத்தார்.
மாசிலிஸ் சிண்ட்ரோம் மீது பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வலிக்குக் காரணமாண அடிப்படை மெக்கானிசத்துக்கு சேர்ந்த புதிய விஷயங்களை வெளிக்கொண்டு வர விஞ்ஞானிகள் ஆர்வம் காட்டுகின்றனர். மாசிடிஸ் குடும்பம் கூட தாம் உலகத்துக்கு ஒரு புதிய விசயங்களைக் கொண்டு வர ஒரு காரணமாக இருப்பதற்கு அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். 
 ***
கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக அறிவியல் விஞ்ஞானிகள் குழு ஒரு பெண்ணின் மீது செய்யும் பரிசோதனை சாதாரண மக்களையும் வியப்படையச் செய்தது. லண்டனில் ஒரு கடை நடத்திக் கொண்டு வாழும் பெண்ணீன் பெயர் மேர்லீன் பேங்க். இவருக்கு வலி என்றாலே என்ன என்று தெரியாது. அதுவே அவருக்கு சாபமாக மாறியது.
எனது சின்ன வயதில் ஒரு பெண் பேராசூட்டில் இருந்து குதித்து என்னை வியப்படைய செய்தார். அவருக்கு எந்த ஒரு அடியும் படாததால் நானும் அது போலவே செய்தேன். சராசரியாக இரண்டரை மீட்டர் உயரத்தில் இருந்து குடையினையே பேராசூட்டாக யூகித்து கீழே குதித்தேன்! முதலில் எனது முழங்கால் நிலத்தைத் தாக்கியது! எனக்கு இந்த அனுபவம் மிகவும் ஸ்வாரஸ்யமாகவும், பிடித்தும் இருந்தது. அதனாலேயே மீண்டும் திரும்பத் திரும்ப உயரத்தில் இருந்து குதித்தேன். எனது முழங்காலுக்கு நிறைய காயங்கள் ஏற்பட்டது! ஆனால், எனக்கு வலி தெரியாததால் கண்டுபிடிக்க முடியவில்லை. சில வாரங்கள் கடந்தன, அடிபட்ட முழங்காலில் கிறுமித்தொற்று [infection] ஆரம்பிக்க துவங்கியது’. இது போல எவ்வளவோ சம்பவங்கள் மேர்லீன் வாழ்க்கையில் நடந்துள்ளது.
ஒரு முறை சமயலறையில் சுடும் ரேடியேட்டர் மீது உட்கார்ந்து ஜன்னல் மூலம் சாலையில் வந்து போகும் மக்களைப் பார்த்துக் கொண்டு இருந்தார். மற்றொரு அறையில் இருந்த அவரது தாய் எதோ கருகிய வாசனை வருவதைப் பார்த்து சமையல் அறைக்கு வந்து பார்த்தார். அதற்குள்ளாகவே ரேடியேட்டர் மீது இருக்கும் தனது மகளின் சதை சுட்டு நரம்புகள் வெளிவருவதைப் பார்த்த அந்த தாய்க்கு ஒரு நிமிடம் இதயம் நின்று போனது போல ஆனது. உடனே குழந்தை மேர்லீனை ரேடியேட்டர் மீது இருந்து இறக்கினார். உடல் சுட்டு வலி பிறக்காமல் இருப்பதால் அவருக்கு இருக்கும் நோய் என்னவென்று யாருக்கும் தெரியவில்லை. மருத்துவர்கள் அவருக்கு ஆன காயத்திற்கு மருந்துகளைக் கொடுக்கிறார்களே தவிர, அவருக்கு ஏற்பட்ட நோய் இன்னதென்று சொல்ல முடியவில்லையாம்!
உலக அளவில் மேர்லீன் போன்று வலி தெரியாதவர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு வலி ஏன் தெரிவதில்லை என்பது விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்திய ஒரு கேள்வி. ஒரு வேளை அவர்களது ஜீன்ஸில் இருக்கும் குறையின் காரணமாக இப்படி நடக்கலாம் என்று நம்புகின்றனர். அவர்களது ஜீன்ஸைப் பரிசோதித்து தங்களது சந்தேகத்தைத் தீர்த்து கொண்டனரும் கூட!.
அவர்களது DNA- வை பரிசோதித்து பிறருடன் ஒப்பிட்டு வித்யாசத்தை கண்டுபிடித்தனர். s e n 9 a. என்ற ஜீன்ஸில் ஏற்பட்ட குறையின் காரணமாக அவர்களுக்கு வலி ஏற்படுவதில்லை என்று விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்தனர்.
இது வரையிலும் தனது நிலமை என்னவென்று தெரியாத மேர்லீன், இப்போது இதுதான் தனது நிலமை என்று சொல்லப்படுவதில் சற்று ஆறுதலடைகிறார்.
வலி தெரியாதவர்கள் படும் கஷ்டத்தைப் பார்த்து வலி நல்லதுனுதான் நினைத்திருப்பீர்கள் இல்லையா? ? ஆனால் வலியினால் நரக வேதனையை அனுபவித்தவர்களின் கதைகளையும் படித்துவிட்டு வலி வரமா? சாபமா? என்கிற முடிவிற்கு வரலாம்!
ரேபகா என்ற 33 வயது பெண்மணி, நாள்பட்ட வலியினால் நரக வேதனையை அனுபவித்து வருகிறார்! இந்த நாள்பட்ட வலிக்கு chronic pain என்று பெயர்! இவருடைய வலி இவரை ஒவ்வொரு நொடியும் நோகடித்துக் கொண்டு இருக்கிறதாம்! மருத்துவர்களால் இந்த வலிக்கு சரியான சிகிச்சை அளிக்க முடியவில்லையாம்! இவரைப் போன்றே பலர் நாள்பட்ட வலியினால் அவதிப்பட்டு வருகின்றனர்!
ஆனால் இந்த நாள்பட்ட வலிக்கு எவ்வித சிகிச்சையையும் மருத்துவ உலகு கண்டுபிடிக்கவில்லை. ஒரு விஞ்ஞானி மட்டும், இந்த வலிக்கு தீர்வு கண்டுபிடித்தார்! அந்தத் தீர்வு பலரது வாழ்வில் மகிழ்ச்சிக்கு வித்திட்டது என்றால் அது மிகையாகாது! அதன் விவரங்கள் பின்வருமாறு!
வலி ஏற்படுத்தும் ப்ராசஸில் பல நூற்றுக்கணக்கான ஜீன்ஸ் செயலாற்றிக் கொண்டுதான் இருக்கிறது! ஒவ்வொரு ஜீனுக்கும் ஒவ்வொரு வகையான வேலையில் தனது பங்களிப்பை வழங்கிக் கொண்டுதான் இருக்கிறது! இந்த ஜீன்ஸில் ஏற்படும் மாற்றங்களும் நாம் அனுபவிக்கும் வலியின் அளவை நிர்ணயிக்கிறது! இதைத் தவிர்க்கவும் நம் வாழ்க்கையில் நடக்கும் சில சம்பவங்களுக்கும் இவ்வித வலிகளுக்கும் நேரடித் தொடர்புண்டு!
ரெஜன் என்ற பள்ளி இறுதி ஆண்டு பயிலும் மாணவி தனது சாதாரண வாழ்க்கையை வாழவே மிகவும் போராடுகிறாள்! காரணம், அவளுக்கு இருக்கும் நாள்பட்ட வலிதான்! அவளுக்கு 12 வயது இருக்கும் போது, பிள்ளைகளுடன் சேர்ந்து மட்டைப் பந்து [cricket] விளையாடிக் கொண்டு இருந்த போது பந்தை வீசி எறிந்து பௌவுல் செய்த உடனே முழங்கையில் மட்என்ற சப்தம் வந்தது! ஆனால், அதன் பின் அந்த நிகழ்ச்சியை மறந்துவிட்டு இயல்பாக வேலைகளைச் செய்யத் தொடங்கினாள்! சில வாரங்களுக்குப் பிறகு, மீண்டும் அந்த முழங்கையில் வலி தெரிந்தது!
சாதாரணமாக நமக்கு அடிபட்டால் வலிப்பதும், அந்த வலி சிறிது நேரத்துக்குள்ளாகவே மறைந்துவிடுவதும் இயல்பான ஒன்றுதானே? அடிபட்ட இடத்தில் மீண்டும் வலி ஏற்படுவது மிகவும் அறிதானதே ஆகுமல்லவா? ஆனால் ரேஜன் விசயத்தில் நடப்பதோ ஆச்சர்யமானது. அடிக்கடி வலி ஏற்படுவதும் மறைவதும் வழக்கமாக நடக்கிறது.
அடிபட்ட முழங்கை மட்டுமல்ல, தலை, கால், முதுகு என்று உடலில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் கடுமையான தாங்க முடியாத வலி வருவதும், போவதுமாய் இருக்கிறது.
இப்படி உடலில் பல்வேறு இடங்களில் வரும் வலியை மருத்துவர்கள் ‘complex regional pain syndrome' என்பார்கள்! எப்போதோ சிறிய வயதில் ஏற்பட்ட காயங்கள் நாள்பட்ட வலியை உண்டாக்க என்ன காரணம்? சிறிய வயதில் ஏற்பட்ட காயங்கள் பின்னர் வாழ்வில் ஏதோ ஒரு இக்கட்டான தருணங்களில் தீராத வலியை ஏற்படுத்தும் என்கிறார்கள் proffessor மரியா போன்றவர்கள்!
சிறு வயதில் நாம் சந்திக்கும் சம்பவங்களின் தாக்கம், நாம் எடுக்கும் நிர்ணயங்கள், வளரும் சூழல் ஆகியவை pain system உருவாவதற்கு முக்கியமான காரணம் என்று மரியா ஆராய்ச்சி மூலம் கண்டறிந்துள்ளார்! இதே கருத்தையே ஜாக்கிக்லிச் கூட சொல்கிறார். சிறிய வயதில் ஏற்பட்ட மனக்காயங்கள், அவமானங்கள் ஆகியவை எற்படுத்திய வலியும் அதன் தாக்கமும் பெரியவரானதும் கூட இவ்வகை நாள்பட்ட வலிகளாகக் கூட உருவெடுக்கும் என்று கூறுகிறார்!
பல வித மனிதர்களுக்கு பல விதமான வலிகள் ஏற்படுவதன் காரணத்தை ஆராய்ந்த போது, அதன் பின்னனியை அறிவதில் விஞ்ஞானிகள் முன்னேற்றம் கண்டனர்!
ஜின்ஸும், சிறு வயது அனுபவங்களும், இவற்றிற்குத் துணையாக நாம் அடிபடும் சூழலில் எவ்வாறு சிக்குகிறோம் என்பதும், வலி ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்!
இதற்கு ஜோனாதன் மாத்ஸ் என்ற இளம் வாலிபனின் கதையே சிறந்த உதாரணம்.
ஒருநாள் பேஸ்மெண்டில் இறங்கி வீட்டிற்கு சுடுநீர் தரும் பாயிலரை சுத்தம் செய்து கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக கை ஒன்று மாட்டிக் கொண்டது. காப்பாற்றக் கோரி உரக்க கத்திப் பார்த்தும் யாரும் உதவிக்கு வரவில்லை! இப்படியே மாட்டிக்கொண்ட போது, உணவு, தூக்கம் இல்லாமலும், கை வலியாலும் மயக்கம் வர ஆரம்பித்தது! அப்போது அவன் ஒரு முடிவு எடுத்தான். கையைத் துண்டித்தால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என்பதே அந்த முடிவு! முடிவு எடுத்ததுதான் தாமதம், அதை உடனே செயல்படுத்த ஆரம்பித்தான். தன் கண்களாலேயே பார்த்துக் கொண்டு தன் கைகளை வெட்டத் துவங்கினான். இந்த அனுபவம் அவனை மன அழுத்தத்திற்குத் தள்ளியது! எப்படியாவது உயிர் பிழைத்துவிட வேண்டும் என்பதே அவர் மனதில் இருந்த ஒரே லட்சியம்!
உயிர் பிழைக்க வேண்டும் என்ற லட்சியமே கைகளை வெட்டும் போது ஏற்பட்ட கொடுமையான வலியைத் தாங்கிக் கொள்ளும் ஆற்றலைக் கொடுத்தது!
பல முறை வலியால் அவதிப்படுபவர்களை ஸ்கேன் செய்ததனாலேயே, வலியின் மூலம் மூளையில்தான் இருக்கும் என்று ப்ரொஃபசர் ஐரின் ட்ரேசி சுயமாக அனுமானத்தில் தெரிவித்தார்! வலி என்பது இவரைப் பொறுத்த வரை ஒரு சப்ஜெக்ட்தான்!
உணர்வுகளுக்கும் வலியை ஏற்படுத்துவதில் பங்கு உண்டு என்று பார்த்தோமல்லவா? ஜோனாதன் மாத்ஸ் விசயத்திலும் கூட அதுதான் நடந்தது! அவர் மூளை ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கவும், அந்த முடிவை முன்னிட்டு ஏற்பட்ட பரபரப்பும் டென்சனும் மூளைக்கு பல தகவல்களை அனுப்பியது! அதனோடு ரசாயான மாற்றங்கள் பலவும் ஏற்படவே, அந்த கையை வெட்டும் வலி கூட சாதாரண வலி போல் உடல் ஏற்றுக் கொள்ள ஆரம்பித்து அவன் உயிர் பிழைக்கக் காரணமாக இருந்தது!
நமது உணர்ச்சியின் அதாவது மூடின் தீவிரத்தைப் பொறுத்தே வலியின் தீவிரமும் அமையும் என்பதே விஞ்ஞானிகள் ஆணித்தரமாகக் கூறுகின்றனர்!
தீக்காயம் ஏற்பட்டவர்களுக்கு கட்டு மாற்றும் போதும், அடிபட்டவருக்கு ஃபிசியோதரபி செய்யும் போதும் வலி அதிகமாக இருக்கும்! அதனால் மருத்துவர்கள் மனதைத் திசை திருப்ப ஏதாவது பேச்சுக் கொடுத்துக் கொண்டே சிகிச்சையை மேற்கொள்வார்கள்!
33 வயது ரெபேகாவிற்கு முகத்தின் இடது பக்கத்தில் போலியோ ஏற்பட்டது! நோய் குணமாகி சாதாரணமடைந்தாலும் உடலின் இடது பாகங்களில் வலி மட்டும் தொடர்ந்து கொண்டே இருந்தது இவருக்கு! இந்த வாழ்க்கை முழுமையும் தொடர்ந்து கொண்டிருக்கும் chronic pain-னைப் போக்க எவ்வளவு முயன்றும் மருத்துவர்களால் முடியவில்லை! அதனால் இன்னும் வெளியிடப்படாத ஆராய்ச்சி முடிவு ஒன்றை இவர் மேல் பரிசோதித்தனர்!
உடலின் இடது பாகங்களில் வலி ஏற்படுத்தும் மூளையின் பகுதியை motor cortex-ஆக குறிப்பிட்டனர்! magnetic pulses-ஐ மீண்டும் மீண்டும் motor cortex-கு அனுப்புவதன் மூலம் தற்காலிகமாக வலியை முற்றிலும் மருத்துவர்களால் குறைக்க முடிந்தது! முதுகு வலியால் அவதிப்படும் பலருக்கு இந்த சிகிச்சை ஒரு வரப்பிரசாதமாகவே கருதப்படுகிறது! கடந்த 20 ஆண்டுகளாக வலியின் காரணமாக பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன! பல்வேறு வலி நிவாரணம் தரும் சிகிச்சைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன! மேலும் பல ஆராய்ச்சிகள் வலியின் மீது செய்யப்பட்டு வருகின்றன! அவை மனித இனத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதே விஞ்ஞானிகளின் நம்பிக்கை!
வலியின் மூலங்கள் மூளையில் இருப்பதனால், வலிக்குக் காரணமான மூளையின் அந்தக் குறிப்பிட்ட பகுதியின் மீது ஏற்படுத்தும் சிகிச்சையை அல்லது imfluence மூலம் வலிக்கு தீர்வு கண்டறிய முடியும் என்பதே விஞ்ஞானிகளின் முடிவானது!
மேலும் உணர்ச்சியைச் சார்ந்தும் வலி இருக்கிறது என்பதும் நாம் கவனிக்க வேண்டியது! அதைவிட சிறு வயது சம்பவங்களுக்கும் வலிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால், அந்த சம்பவங்களால் ஏற்பட்ட வலி chronic pain-ஆக மாறும் வாய்ப்பு அதிகம் என்பதால் குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றோரும் ஆசிரியர்களும் சிறப்புக் கவனம் எடுப்பது மிக அவசியமாகிறது!
---
பின்குறிப்பு: டீவி9 தெலுங்கு தொலைக்காட்சியில் ரகசியம் என்னும் தொடரில் ஒலிபரப்பிய ஒரு எபிசோட் இது. இது ஒரு மொழிபெயர்ப்பு அறிவியல் கட்டுரை!


தொடர்புடைய பதிவுகள் :


14 comments:

 1. Replies
  1. வருகைக்கு மிக்க நன்றி சார்.

   Delete
 2. மகேஷ்,
  இது ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியாளர்களின் அலசல் என்றாலும் உங்களின் மிக மிக தெளிவான, Justifiable translation and the adorable way of presentation அபாரம். Very very well-done.

  வலி கண்டிப்பாக வரேமே எனும் முடிவுதான் உங்களின் பதிவை படித்து முடிக்கும்போது தோன்றுகின்றது, ஆனால் தேவை இல்லாத வலியை ஏற்படுத்தும் சில சடங்குகளும் சம்பிரதாயங்களும் கண்டிப்பாக சாபமே எனும் கருத்து எல்லோர் மனதிலும் கண்டிப்பாக தோன்றும் நம்ம நண்பர் SP செந்தில் குமாரின் நட்சத்திர அந்தஸ்த்துடன் பவனி வரும் FGM தொடர்பான பதிவை வாசிக்கும்போது தோன்றும்.

  மொத்தத்தில், உங்கள் பொன்னான நேரத்தை இந்த அருமையான , informative செய்திகளை கொடுக்க செலவிட்டதை கண்டிப்பாக பாராட்டுகின்றேன்.

  ஒவ்வொரு செய்தியும் மிக தெளிவாக விளக்கமாக மொழி பெயர்த்திருக்கும் பாங்கு வியக்க வைக்கிறது, உங்கள் தமிழ் மொழியின் பாலுள்ள ஆளுமையை.

  Keep it up மகேஷ்,

  வாழ்த்துக்கள்.

  கோ

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், கருத்திற்கும், பாராட்டிற்கும்
   மிக்க நன்றி சார்.
   ஆம் நீங்கள் சொல்லியதுபோல் வலியை ஏற்படுத்தும் சில சடங்குகளும் சம்பிரதாயங்களும் நமது சமூகத்திற்கு
   சாபமே.
   ஒவ்வொருத்தரும் எது சரி-எது தவறு பகுத்தறிந்து சுயமாக யோசித்து செயல்பட்டால் போதும் வாழும்போதே பூமியில் சொர்கம் கானலாம்.
   ஆனால் அதற்கானச் சூழல் தற்போது நாட்டில் இல்லை.
   எனக்கு நம்பிக்கை உண்டு எதிர்காலத்தில் எல்லாம் சரியாகிடும்.
   --
   மொழி பெயர்ப்பை குறிப்பிட்டு பாராட்டியதற்கு மிக்க நன்றி சார்.
   இனையத்தில் அப்லோட் செய்யப்பட்டிருந்த தொலைகாட்சி நிகழ்ச்சியை பதிவிறக்கம் செய்து கேட்டுக்கொண்டு வரிக்கு வரி அப்படியே மொழிப்பெயர்த்தது.

   Delete
 3. அய்யோடா வலி வேணும்போலவே...நல்ல விரிவான ஆழமான தகவல்களைத்தந்தமைக்கு மிக்கநன்றி சார்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு மிக்க நன்றி மேடம்.

   Delete
 4. அற்புதமான பதிவு மகேஷ்,
  மிக விரிவான விளக்கமான தெளிவான மொழிபெயர்ப்பு, அருமை. வலியைப் பற்றி நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள். வலி ஒரு அற்புதம்தான்.
  கடினமாக உழைக்கக்கூடியவர்கள் அதிகம் மது அருந்துவார்கள். அவர்களிடம் கேட்டால் உடல் வலி தெரியாமல் இருப்பதற்காக குடிக்கிறோம் என்பார்கள். குடித்து உடல் வலியை மறைப்பது ஒரு கெடுதலான பழக்கம். குடிக்காமலும் அந்த வலியை போக்க முடியும். ஆனால் அதை யாருமே முயற்சி செய்வதில்லை. அவர்களுக்கு போதை வேண்டும் அதற்கு உடல்வலி ஒரு சாக்கு! அவ்வளவுதான்.
  நண்பர் கோவில் பிள்ளை சொன்னதுபோல் தேவையில்லாத சடங்குகளால் ஏற்படும் செயற்கை வலியை ஒழிக்க வேண்டும்.
  அரிய தகவல் தந்ததற்கு நன்றி மகேஷ்.
  த ம 4

  ReplyDelete
  Replies
  1. பாவம் அவர்கள் என்ன செய்வார்கள் சார்.
   படித்தவனே பக்குவமா நடக்க முடியாதப்போ.
   வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி சார்.

   Delete
 5. மகேஷ்! நல்ல கட்டுரை மொழியாக்கமும் நன்று.

  இன்னும் இதில் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. வலி என்பது தெரியாமல் போவதற்கு வேறு சில உடல் பிரச்சனைகளும் காரணமாக இருக்கலாம். உதாரணமாக சர்க்கரை வியாதி இருப்பவர்களுக்கு இதயவலி தெரியாமல் போவதுண்டு. அதாவது ஹார்ட் அட்டாக். அப்படியே இறந்து விடுவதும் உண்டு. இதயவலி என்றில்லை வேறு சில வலிகளும் தெரியாமல் போவதுண்டு.

  உடல் வலியை விட மிக மிக மோசமானது மனவலி! மனம் அதாவது அந்த மூளைப்பகுதிக்குத் தாங்கும் சக்தி இருந்துவிட்டால் எந்த வலியையும் தாங்கிக் கொண்டுவிடும்.

  பலரும் வலியைத் தாங்கும் சக்தி இல்லாமல் வேறு சில வழிகளை மேற்கொள்ள விழைவார்கள். உதாரணமாக குடி, போதைமருந்துகள், தினமும் பெயின் கில்லர்ஸ் என்று. நாளடைவில் பழக்கமாகிவிடுகின்றது. மரணத்தின் விளிம்பிற்குச் சீக்கிரம் சென்று விடுகின்றார்கள்.

  வலியைத் தெரியாமல் இருப்பது எப்படி + அண்ட் - உள்ளதோ அது போல வலியும் + அண்ட் -தான். இரண்டுமே பல ஆராய்ச்சிகளுக்கு உதவும்.

  ஒரு சில மன வளப் பயிற்சிகளால் வலிகளைப் பொறுத்துக் கொள்ளும் நிலைக்கு நாம் நம்மை எடுத்துச் செல்லலாம். ஆனால் வலியே தெரியாமல் இருப்பவர்களுக்கு இது உதவாது என்பதையும் இங்கு சொல்லிக் கொள்ளலாம்.

  நல்ல கட்டுரை மகேஷ். பாராட்டுகள்

  ReplyDelete
  Replies
  1. மனவலி பற்றி நானும் அடிக்கடி யோசிப்பதுண்டு.
   நமது உடல் மற்றும் அனைத்தையும் கண்கானிக்கும் தலைமை ஆசிரியரான மூளைப்பற்றிய
   விழிப்புணர்வு இன்னும் நமது நாட்டில் 1சதவிகிதம் கூட வரவில்லை என்பது எனது கருத்து.
   வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி மேடம்.

   Delete
 6. Replies
  1. வருகைக்கு மிக்க நன்றி சார்.

   Delete
 7. தம்பி மகேஸு,,
  ச்சும்மா பொளந்து கட்டறே.. மாசத்துக்கு ஒரு பதிவு போட்டாலும்.,, இப்படித்தான் இருக்கனும். வலி பத்தி போட்டு இறுக்குற இந்த பதிவு வலிமை நிறைஞ்சது .. அப்படியே என் மனசும் நிறைஞ்சது..

  என்ன போடு போடு பதிவு போடுன்னு சொல்லி உற்சாகப்படுத்திட்டு

  நீ பதிவு போடாம இருந்ததப்பாத்து எங்க நீயுமென்னமாதி ரி ஆயிட்டியோன்னு நெனைக்கயில இப்படி ஒரு பதிவு. ரொம்ப சந்தோஷம்.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா.
   வாரத்தில் ஒரு பதிவாச்சும் எழுதலாம் இருக்கேன் பார்க்கலாம் சார்.
   நன்றி:)

   Delete