Thursday, November 12, 2015

முகப்புத்தகம்-குறும் படம்



முக புத்தகத்தில் முன்-பின் அறிமுகம் இல்லாத இருவர் காதலிக்கிறார்கள். அடுத்த கட்டத்திற்கு தங்களது காதலை நகர்த்தும் ஒரு பகுதியாக இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்கிறார்கள். திட்டத்தின்படி காதலன் முதலில் இருவரும் பேசிவைத்த இடத்திற்கு வந்து தனது காதலிக்கு போன் செய்கிறான். ஐயாம் ஆந்திவேன்னு சொல்கிறார். அவன் காத்திருக்கும் இடம் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு அமைதியான இடம் என்பதால் ஒரு வித பதற்றத்துடன் சிறிது நேரத்தில் மீண்டும் ஒரு முறை காதலிக்கு போன் செய்கிறான்.ஏங்க எங்க இருக்குறீங்க?’ அவன் கேக்க.தோ உங்க பின்னாலதான் இருக்கேன்ன்னு அந்த காதலி சொல்ல அவனோ- திரும்பி பார்க்க. 
 ***
படத்துல-5 நண்பர்கள். அதுல #சிவகார்த்திகேயன்தான் ஹீரோ. நட்புக்குத் தெரியாமலே அவரும் ஒரு பெண்ணோடு முக புத்தகத்தில் பார்க்காமலே ஒரு லவ். ஒரு கட்டத்தில் நண்பர்களுக்குத் தெரிய வர. இம்முறை சிவகார்த்திகேயன் காதலி நேரில் பார்க்க ஆசைப்பட்டதால் இருவரும் சந்திக்க முடிவு செய்கிறார்கள். எந்த இடத்தில் முகம் பார்க்காமல் காதலித்த முதல் காதல் ஜோடி துவக்கத்தில் சந்திக்க திட்டமிட்டார்களோ அதே இடத்தில்தான். அதற்கான நாளும் வந்துவிட்டது. இங்கயும் காதலன் தான் முதலில் வந்துவிட-அவர் காதலிக்கு போன் செய்ய. இன்னும் இரண்டு நிமிடங்களில் அங்கு இருப்பேன்சொல்ல. யாரும் அந்த இடத்தில் இல்லாததால் பதற்றத்தில் மீண்டும் போன் செய்து ஏங்க எங்க இருக்குறீங்க கேக்கதோ உங்க பின்னாடிதான் இருக்கேன்சொல்ல
***
டைரக்டர் அட்லி என்றால் ராஜா ராணிதான் தெரியும். ஆனால் அதற்கு முன்பே அட்டகாசமானதொரு குரும்படத்தை இயக்கி இருப்பதாகச் சமீபத்தில்தான் தெரிந்தது. சஸ்பென்சான ஒரு திரைக்கதை. அதிலும் கடைசியில் வைத்திருக்கும் ட்விஸ்ட் சான்சே இல்ல. மக்கள் இப்படி எல்லாம்கூட யோசித்து படம் எடுப்பார்களா என வியந்து போனேன். டைரக்டர் அட்லிக்கு எனது வாழ்துகள். படத்தின் பின்னணி இசையும் நன்றாக இருந்தது. நண்பர்கள் அடிக்கும் கூத்தும்-கதைக் கொண்டு போன விதம் எல்லாம் அருமை.
படத்தைப் பற்றி வேற என்ன சொல்லுறதுனு தெரியல. ஜஸ்ட் ஒரு இருபது நிமிடம்தான். நீங்களே பார்த்துச் சொல்லுங்க உங்களுக்கு பிடிச்சிருக்கானு:)முக புத்தகம் குறும்படம் பார்க்க இங்கே சொடுக்கவும்.
நன்றி.

தொடர்புடைய பதிவுகள் :


8 comments:

  1. பார்க்கிறேன் சகோ..

    ReplyDelete
  2. குரும்படத்தை விவரித்த விதம் நன்று நண்பரே பார்க்கிறேன்
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  3. முகப்புத்தகம் - குறும்படம் பத்தி அழகா சொல்லிட்டீங்களே மகேஷ்! கேள்விப்பட்டிருக்கோம் அந்தப் படம் பற்றி பார்க்கவில்லை. பார்த்துடறோம்...

    ReplyDelete
  4. இந்த குறும்படம் ஏற்கனவே என் தம்பி பார்க்கச்சொன்ன படங்களில் ஒன்று. ஆனால் எப்படியோ இது நாள் வரை இந்த படத்தை மட்டும் பார்க்கவில்லை. இப்போ பார்த்துட்டேன் மகேஷ்! அட்டகாசமான படம். உங்க பரிந்துரைக்கு நன்றி. அவன் பார்க்கசொல்லி நான் பார்த்த மற்றொரு அட்டகாசமான படம் நீங்கள் பார்த்திருக்க கூடும்"ஜீரோ கிலோமீட்டர்"

    ReplyDelete
  5. பார்த்து விடுகிறேன் தம்பி... நன்றி...

    ReplyDelete
  6. @ m.geetha madam
    @ KILLERGEE sir
    @ dd sir
    வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  7. @ Thulasidharan V Thillaiakathu sir/madam,
    @ Mythily kasthuri rengan madam
    வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete