Friday, November 13, 2015

பார்வையற்றவர்கள் கணினி பயன்படுத்துவது எப்படி?நேற்றைய பதிவில் டைரக்டர் அட்லி இயக்கிய குறும்படத்தை பகிர்ந்திருந்தேன். படத்தைப் பற்றி மேலோட்டமாக எழுதி பதிவை முடித்துக்கொண்டேன். கடைசி ட்விஸ்ட் முக்கியம் என்பதால். குறும்படத்தை பார்த்தவர்கள் நன்றாய் இருப்பதாகவும் சொன்னார்கள். நன்றி. பொறுமை/நேரம் இருப்பவர்கள்இங்கேச் சென்று முதலில் அந்த படத்தை பார்த்து வந்தால் இந்த பதிவை புரிந்துக்கொள்வதில் எந்த சந்தேகமும் இருக்காதென நினைக்கிறேன்.
 ஹ்ம்ம் அதுக்கெல்லாம் எங்களுக்கு எங்க டைம் இருக்குன்னு நினைக்குறீங்களா? நோ ப்ராப்ளம். தொடர்ந்து பதிவை வாசிக்கவும்:)
பொதுவாகவே சமூகத்தில் பார்வையற்றவர்கள் என்றால் இப்படிதான் என்று சில வரைமுறைகள் வைத்திருக்கிறார்கள். அதில் ஒன்று அவர்களுக்கு இசையில் இருக்கும் நாட்டம். எங்காவது வெளியேப் போனால் ஒரு பாட்டு பாடுங்களேன்என்று என்னிடம் சிலர் கேட்ட அனுபவம் உண்டு. ஐய்யோ எனக்கு சரிகம கூட வராதுங்க’ ’எனக்கும் அதுக்கும்பங்காளி சண்டைங்கன்னு சொல்லாதக்குறைதான். உண்மைதான். நானும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தேன். ஹார்மோனியம், கித்தார், ட்ரம்ஸ் ஹ்ம்ம்ம் சுத்தம். அதெல்லாம் உனக்கு வராதுடான்னு மண்டையில் உரைக்க சில வருடங்கள் பிடித்தது. ஆனாலும் இப்பவும் சின்ன ஏக்கம் மனசுல இருக்கு :)
பள்ளியில் இசையைத் தவிர வேற எந்த கோ-கரிகுல ஆக்டிவிட்டிசும் எங்களுக்குத் தேவை இல்லைனு நான் படித்த சிறப்பு பள்ளி நினைத்ததன் விளைவால் வேறு எந்த துறையிலும் எங்களை ஊக்குவிக்கவில்லை. எனக்கு சிறுவயதில் இருந்தே கணினி மேல் ஒரு ஈர்ப்பு/காதல் எதோ ஒண்ணு. வீட்டில் கணினி கிடையாது, பள்ளியில் கம்ப்யூட்டர் இருந்தும் சொல்லி தந்தது கிடையாது. பனிரெண்டாவது முடிச்சதும் அப்பாவிடம் எனக்கு கம்யூட்டர் வேனும்ப்பான்னு கேட்டது. அனேகமா அப்பா அந்த ஒரு விசயத்துலதான் ஏன், எதுக்கு எல்லாம் கேக்காம வாங்கி கொடுத்தார் :)
நான் கம்ப்யூட்டர் வாங்கிய தினம் ஜூன்7 2009. வாழ்வில் மிக சந்தோஷமாக உணர்ந்த நாட்களில் அதுவும் ஒன்று. புதிய கம்ப்யூட்டர் என்பதால் அதில் இருந்து வரும் ஒரு வித வாசனை, கம்யூட்டர் ஆன் செஞ்சதும் கீக் என வரும் சப்தம் எல்லாம் மிகவும் ரசித்தேன். கம்ப்யூட்டரில் அப்போது விண்டோஸ் எக்ஸ்பி ஆப்ரேடிங் ஸிஸ்டம் நிறுவி இருந்தார்கள்.
எடுத்ததும் நான் கம்ப்யூட்டரில் எனக்கு தேவையான மென்பொருள் (jaws). நிறுவினேன். அதாவது இந்த (jaws-ஜாஸ்) மென்பொருளோட வேலை என்னனு பார்த்தீங்கனா படிச்சுக்காட்டுறது. அதாவது கம்ப்யூட்டரோட ஸ்க்ரீன்ஐ ரீட் செஞ்சு காட்டுறதைத்தான் அப்படிச் சொன்னேன். இன்னும் விளக்கமாச் சொல்லனும்னா ஜாஸ் அப்படிங்கிறது ஸ்கிரீன் ரீடர் வகை மென்பொருளைச் சேர்ந்தது.
ஸ்கிரீன் ரீடர் என்றால் என்ன?’ உங்களுக்குச் சந்தேகம் வரலாம். அதாவது திரையில் தோன்றும் எழுத்துக்களை படித்துக் காட்டுவதே ஸ்கிரீன் ரீடராகும். ஜாஸ் மென்பொருள் நிறுவிய எந்த கம்ப்யூட்டரிலும் கீபோர்டில் எந்த கீயையும் அழுத்தினால் அதற்கான விடை கம்ப்யூட்டரில் இணைத்திருக்கும் ஸ்பீக்கர்ஸ் வழியே கேட்கலாம். நாங்கள் mouse பயன்படுத்துவதே கிடையாது. முழுவதும் கீபோர்ட் மீதுதான் சார்ந்திருக்கிறோம். இதனால் எதுவும் பெரிதாக இழப்பு கிடையாது. நிறைய ஷாட்கட் கீஸ் யூஸ் செய்வோம். உதாரணத்திற்கு கட், காபி, பேஸ்ட் எக்செட்ரா...
ஆமா ஜாஸ் மென்பொருள் நிறுவினால் எந்த கம்ப்யூட்டரும் ஸ்க்ரீனை படிச்சுக்காட்டும் சரி, என்னென்ன வேலைகள் கம்ப்யூட்டர்ல செய்ய முடியும்ன்னு சந்தேகம் வரலாம்.
  யாருடைய உதவியுமின்றி சுயமாக கணினியை இயக்கிக் கொள்ள முடியும். அதாவது: எல்லா விதமான டாக்குமெண்ட்ஸ் படிப்பது, பாட்டுக் கேட்பது, படம் பார்ப்பது, டைப் பண்ணுவது, இணையத்தில் தகவல்களைப் பெறுவது, மின்னஞ்சல் படிப்பது, அனுப்புவது, செய்தித்தாள் படிப்பது, பதிவுகள் படிப்பது மற்றும் எழுதுவதெல்லாம் கிட்டத்தட்ட 95% வேலைகளைச் செய்ய முடியும்! உபரித்தகவல்: ரெண்டு வருஷமா ஒரு சீனாக்காரியோட ஸ்கைப்ல நட்பு பாராட்டி வந்தேன் . கல்யாணம் ஆகி போயிட்டா :) அவ்வ்வ்
இந்த சாஃப்ட்வேர்ல ஒரு ப்யூட்டி என்னன்னா, இந்த சாஃப்ட்வேர் படிக்கறது ரொம்பவும் இயந்திரத்தனமாக இல்லாமல் மனிதன் படிப்பது போலவே பஞ்ச்சுவேஷன் குறிகளுக்கேற்ப ஏற்ற இறக்கங்களோட வாசிக்கும் :) அதைப் பற்றிய அனுபவம் சிலவற்றைஇங்கே எழுதி இருக்கேன் படிச்சுப்பார்க்கலாம்.
இந்த ஜாஸ் மென்பொருள் இலவசம் கிடையாது. இது ஒரு பெய்ட் சாஃப்ட்வேர். இந்திய ருபாயில் கிட்டதட்ட இருபதாயிரம் வரலாம். ஆனால் ஜாஸ் நிறுவனம் அவர்கள் இலவசமாக கொடுத்திருக்கும் டெமோ வர்ஷன் 40 நிமிடம் வரைதான் பேசும். கம்ப்யூட்டர் ரி-ஸ்டார்ட் செய்து வந்தால்தான் பயன்படுத்த முடியும். இது மாதிரி ஒவ்வொரு 40 நிமிடத்திற்கு ஒரு முறை கம்ப்யூட்டர் ரீ-ஸ்டார்ட் பண்ணிகிட்டே இருக்கணும். இதற்கு ஒரு தீர்வு இருக்கு. க்ராக் செய்யணும். அப்படி க்ராக் செய்துட்டா தொடர்ச்சியாக பயன்படுத்தலாம்.
ஜாஸ் தவிரவும் இன்னொரு மென்பொருள் இருக்கு. அதுவும் திரையை வாசித்துக்காட்ட உதவும். அது ஒரு ஓபன் ஸோர்ஸ் மென்பொருள். பேரு (nvda) என்.வி.டி.ஏ. குறைந்த நேரத்தில் எந்த கம்ப்யூட்டரிலும் நிறுவலாம். எல்லா வேலைகளையும் செய்யலாம். தொடர்ந்து பயன்படுத்தலாம். யாருக்காவது முயன்றுப்பார்க்க ஆசை இருப்பின் இந்தஇணையதிற்குச் சென்று என்விடிஎ மென்பொருள் பதிவிறக்கம் செய்து நிறுவி பார்க்கலாம்.
பி.கு: மூனரை வருஷத்துக்கும் மேல தமிழ் பதிவுகள் வாசிச்சுகிட்டும், இரண்டரை வருஷத்திர்க்கும் மேலாக பதிவுகள் எழுதுவதெல்லாம், மெர்ச்சொன்ன மென்பொருட்க்கள் உதவியால்தான் சாத்தியம்ஆனது:)
வேலூரில் இந்த வருடம் நடந்த குட்டி பதிவர் சந்திப்பின் போதுதான் முதன் முதலாக வெளியே தலைகாட்டினேன்.
அதைத் தொடர்ந்து புதுக்கோட்டை பதிவர்களின் ஏற்பாட்டைப் பார்த்துவிட்டு வலைப்பதிவர்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டேன். அப்போது பலர் என்னிடம் எப்படி கணினி பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்டிருந்தனர். நானும் எழுத சோம்பேறிப்பட்டு எப்படியோ இதோ எழுதி முடிச்சிட்டேன்.
என்ன பதிவர்கள்/வாசகர்களே இந்த பதிவை வாசிச்ச உங்களுக்கு பார்வையற்றவர்கள் எப்படி கம்ப்யூட்டர் பயன்படுத்துறாங்கனு ஓரளவிற்காவது புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். பதிவிற்கு தொடர்பாக எதாவது சந்தேகம்/கேள்விகள் இருக்குமாயின் தாராளமாக  பின்னோட்டப் பெட்டியில் கேட்கலாம்.
நன்றி.

தொடர்புடைய பதிவுகள் :


31 comments:

 1. சுஜாதாவின் கட்டுரையை வாசித்த சந்தோஷம்.
  அசத்து...

  ReplyDelete
 2. ஆஹா இதெல்லாம் ரொம்ம்ம்ப ஓவர்:)

  ReplyDelete
 3. நன்றி மஹேஷ்! உங்கள் ஆர்வத்தினையும் அதற்கான முயற்சியினையும் கண்டு வியந்து போனேன். பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி சார்.

   Delete
 4. மகேஷ்,

  அருமையான் பதிவு, இந்த சந்தேகம் எனக்கு கூட இருந்தது, ஆனால் உங்களின் பிறிதொரு பதிவில் உங்கள் தம்பியின் உதவியுடன் பதிவுகள் எழுதுவதாக குறிப்பிட்டிருந்தீர்கள் என நினைக்கின்றேன், அதன் மூலம் என் சந்தேகம் அப்போது தீர்ர்ந்தது, இன்றுதான் முழுமையாக தெரிந்துகொண்டேன். இதுபோன்ற தன்னிலை விளக்கங்கள் மற்றவரின் பார்வைக்கு தர நினைக்கும் உங்களின் நேர்கொண்ட பார்வை பாராட்டுக்குரியது. இனி நாளொன்றுக்கு ஒரு பதிவு உங்களிடம் இருந்து வந்தாலும் ஆச்சரிய பட ஒன்றுமில்லை.

  வாழ்த்துக்கள் மகேஷ்.

  "ஒரு சீனாக்காரியோட ஸ்கைப்ல நட்பு பாராட்டி வந்தேன் . கல்யாணம் ஆகி போயிட்டா :) அவ்வ்வ்.."

  உலகில் சீனா மட்டுமே நாடல்ல, இன்னும் எத்தனையோ நாடுகள் இருக்கின்றன, நாடுங்கள்(????!!!!) தொடர்ந்து நல்லது நடக்கும், மனம் தளரவேண்டாம்.

  கோ.

  ReplyDelete
  Replies
  1. வாங்'கோ' அண்ணா வளர்ர புள்ளைக்கி இப்படியா?! சொல்லிக் கொ(கெ)டுக்குறது.

   Delete
  2. அன்பே சிவம்,

   பிள்ளை நல்லா வளரனும்னுதானே சொன்னேன்.

   உங்க பாணியில சொல்லனும்னா.... அவன் அதாங்க நம்ம தம்பி மகேஸு சீனா மட்டுமல்ல உலகின் அத்தனை நாட்டு "காரி" களுக்கும் கடுக்கா கொடுப்பான், இப்பத்தைக்கு நமக்கு சொன்னது சீனா காரியை மட்டும்தான், போகப்போக சொல்லுவான் பாருங்க, ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து,, ஆஸ்திரேலியா, அமேரிக்கா, கனடா... என்று பொறுத்திருந்து பாருங்க ..என்னம்மா சிந்திக்கிறான், என்னம்மா எழுதுகிறான்.(இந்த அவன் இவன் என்பது ஏக வசனம் இல்லீங்கோ ... ஏகப்பட்ட பாசம்ங்கோ.)

   எப்படி இருக்கின்றீர்கள்?

   அன்புடன்

   கோ

   Delete
  3. ரொம்ப நல்லா இருக்கேன் அண்ணா. உங்களை போன்றோர் அன்பு மழையில் நனைந்தபடி! உங்கள் அன்பு கட்டளையின்படி பாம்பே ஆனந்த (ஆஹா இங்கேயும் ஆ.ன.ந்.த.ம்.) பவன் பால்கோவாவுடன் ஸ்பெஷல் மிக்ஸரும் வாங்கி பக்கத்தில் வைத்துக்கொண்டே..., உங்கள் அடுத்த கட்டளையை நிறைவேற்ற ஆரம்பிச்சுட்டேன்..

   Delete
  4. ஆரம்ப கட்டத்தில் எனது கம்ப்யூட்டர் அறிவு வளர்ச்சிக்கு தம்பியின் பங்கு மிக முக்கியம் சார்.
   அப்போது அவன் பள்ளி படித்துக்கொண்டிருந்தான்.
   ஹார்ட்வேரில் இருந்து சாஃப்ட்வேர் வரை இருவரும் வீட்டிலே... எக்ஸ்பரிமெண்ட் செய்து அறிவை வளர்த்துகிட்டோம்.
   பதிவு எழுதுவதில் பார்த்தால் நான் பதிவு எழுதுவேன். ஆனால் பிழைகள் இருக்கும். காயத்ரி அக்கா-என்னில் உணர்ந்தவை அவுங்க எழுத்து பிழை திருத்தி-எழுதிக் கொடுப்பாங்க. இதற்கு முன்பும் ஒருமுறை பதிவிலும் எழுதி இருந்தேன்.
   கொசுறுத்தகவல்:
   வீட்டில் என்னைத் தவிரவும் யாருக்கும் தமிழ் பேச-வாசிக்கத் தெரியாது
   தம்பி சென்னையில் பொறியியல் படிப்பதால் ஓரளவிற்கு தமிழ் பேசக் கற்றுக்கொண்டான்:)
   வருகைக்கும், கருத்திற்கும் நன்றி சார்.

   Delete
  5. @அன்பே சிவம்,
   என்னது நான் வளரும் புள்ளையா?
   எங்க, ஒரு வருஷத்துக்கும் மேல 170செமி தாண்டல:)

   Delete
  6. @Koil Pillai sir
   என்னை சரியாக புரிந்து கொண்டீர்கள் சார்:)
   எழுதினால்.. அண்டார்ட்டிக்கா.. அட்லாண்டிக்கா.. பட்டியல் நீளும்:)))

   Delete
 5. மகேஷ் கை கொடுங்க. நான் கேட்கத்தயங்கிய சரியா சொல்லனும்னா சென்ற பதிவின் பின்னூட்டத்தில் சொல்லத் தயங்கிய விஷயத்தை சும்மா தேங்காய் ஒடச்சமாதிரி சொல்லிருக்கீங்க. அந்த பொண்ணு jaws பத்தி பேசும்போது எனக்கு பல்ப் எறிந்தது. முன்பு உங்களை பற்றி நானும் தில்லையகம் கீதாவும் பேசிக்கொண்டிருந்த போது (கண்டிப்பா புறம் பேசலை சகா:)
  ஏற்பட்ட ஐயத்துக்கு விடை கிடைத்தது. இதில் என்ன beauty தெரியுமா? நான் ஏழாம் வகுப்பு ஆங்கிலப்பாடத்தில் இரண்டு வருடமாய் இதை பற்றி நடத்திக் கொண்டிருக்கிறேன். apply செய்து பார்க்காததால் எனக்கு இது முன்பு நினைவு வரவே இல்லை. இன்று நான் அந்த பாடத்தை நடத்தினேன். உங்களை பற்றியும், நீங்கள் jaws மென்பொருளை பயன்படுத்தி அட்டகாசமாய் பதிவுகள் எழுதி வருவதாகவும் என் மாணவர்களுக்கு விளக்கினேன். நட்பின் அனுகூலமாய் உங்கள் அனுமதி பெறவில்லை. என்னை அதற்காக மன்னிப்பீர்கள் என நம்புகிறேன். மேலும் ஒரு விசயம். இந்த பதிவில் உங்க நடை செம துள்ளல். வாழ்த்துகள் சகா!

  ReplyDelete
  Replies
  1. வாங்க மேடம்,
   தயக்கம் எதற்கு?
   விழாவின்போதும் என்னுடைய ப்ளாகைப் பற்றி கேட்டீர்கள் தவிர உங்களைப் பற்றி எதுவும் சொல்லவில்லையே? (நான் கேக்கும் வரை)
   ‘எங்க இவர் #ப்ளாக்கை படிக்கப் போகிறார் என்று நினைத்திருப்பீர்கள் என்னவோ (ஆயிரக்கணக்கான தமிழ் வலைப்பதிவுகளில்:)
   நீங்கதான் பிரபலமான பெண் பதிவர் ஆச்சே உங்களது ப்ளாக்கை படிக்காமலா:)
   அன்று அதிகம் பேச முடியாட்டியும் வலைப்பதிவின் மூலம் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி மேடம்.
   மாணவர்களுக்கு பாடம் எடுத்ததைப் பற்றிச் சொன்னீர்கள்.
   மிக்க சந்தோஷம்.

   Delete
  2. *‘எங்க இவர் #ப்ளாக்கை படிக்கப் போகிறார் என்று நினைத்திருப்பீர்கள் என்னவோ* ச்சே,ச்சே என சகா இப்படி சொல்லிடீங்க?

   ஒரு உண்மையை சொல்லவேண்டும் எனில் உங்களை வருணின் பின்னூட்டங்களால் மட்டுமே தெரிந்த எனக்கு, உங்களை பற்றி வேறெதுவும் தெரியாது. வலைபதிவர் விழா ஓவியக்கண்காட்சிகாக பதிவு செய்தோர் பட்டியலில் எனக்கு ஒதுக்கப்பட்ட வலைப்பூக்களில் கவிதை தேடிகொண்டிருந்தபோது நான் பார்வையற்றவன் என்கிறவரின் வலைப்பூவை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.அதில் மிக அதிகமாக எழுத்துப் பிழைகள் இருந்தது. அதை அவர்க்கு சுட்டிக்காட்ட விரும்பிய நான் அவரென நினைத்து உங்களிடம் அறிமுகப்படுத்திக்கொள்ள, நீங்கள் உங்க பேரை சொன்னவுடன் நான் சற்று திகைத்துப்போனேன். மற்றபடி பீடா, ஐஸ்கிரீம் ஸ்டாலில் நின்றுகொண்டிருந்தபடியாலும் பேசமுடியாமல் போனது. மன்னியுங்கள்:(

   *நீங்கதான் பிரபலமான பெண் பதிவர் ஆச்சே உங்களது ப்ளாக்கை படிக்காமலா:)* அப்டியா!! கலாய்க்கிரீங்களே சகா:))))
   *மாணவர்களுக்கு பாடம் எடுத்ததைப் பற்றிச் சொன்னீர்கள்.
   மிக்க சந்தோஷம்.* அப்படா! ரொம்ப நன்றி சகா.

   Delete
 6. Arumai vaalthukal. movie elam epadi paaka mudiuthu athai pathai konjam soluga.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கேள்விக்கு விரைவில் ஒரு பதிவே விடையாக எழுதுகிறேன்:)
   வருகைக்கு நன்றி..

   Delete
 7. Arumai vaalthukal. movie elam epadi paaka mudiuthu athai pathai konjam soluga.

  ReplyDelete
 8. பயனுள்ள தகவல்கள் நன்றி

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி சார்.

   Delete
 9. அருமை மகேஷ்... சிறுவயதில் இருந்தே நான் நூற்றுகணக்கான பார்வை இழந்தவர்களோடு வளர்ந்தவன். ப்ரைல்லி எழுத்துக்களை நான் கற்றுக்கொள்ள முயன்று தோற்ற நாட்கள் தான் எத்தனை. அதே போல் அந்த கணித குறிகள்.
  இன்று நீங்கள் குறுப்பிட்டு இருக்கும் இந்த மென்பொருள் மிகவும் முக்கியமான ஒன்று.
  இந்தியாவில் இந்த மென் பொருளின் தேவைகள் (Demand and Supply) பற்றி விரிவாக ஒரு கட்டுரை எழுதுங்கள். அதை பெற்றவுடன் இங்கே உள்ள சில நிறுவனங்களிடம் எடுத்து சென்று அதனை இலவசமாக பெற்று தரமுடியுமா என்று முயற்சி செய்கிறேன்.
  நல்ல தகவலுடன் கூடிய பதிவு. தொடர்ந்து எழுதுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. விசு சார் உங்களைப் பற்றிதான் எனக்கு தெரியுமே! ஒரு வருடத்திற்கும் மேலாக பதிவுலகில் நாம் பழகி வருகிறோம்:)
   n.v.d.a மென்பொருள் ஓபன் சோர்ஸ் என்பதால் இலவசமாகவே அவர்களது இணையதளத்தில் இருந்து பதிவிரக்கம் செய்து
   எல்லோரும் பயன்படுத்த முடியும்:)
   எந்த செலவும் இருக்காது.

   Delete
 10. 2003-2006ல் காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் படித்தபோது எங்களது ஆங்கிலப் பாட பேராசிரியர் திரு. தாஜுதீன் அவர்கள் தனது இல்லத்தில் JAWS மென்பொருளை பயன்படுத்தி பார்த்திருக்கிறேன். சிபியுவும் இரண்டு ஸ்பீக்கர் மட்டுமே இயக்கத்தில் இருக்கும். மானிட்டரை அட்டைப் பெட்டியில் ஓரங்கட்டி வைத்துவிட்டு அவர் கம்ப்யூட்டரை லாவாகமாக பயன்படுத்துவதைப் பார்த்த என் சகோதரனக்கு வெலவெலத்து விட்டது. அவர் பயன்படுத்தும் இன்னொரு முக்கியமான மென்பொருள் Kurzweil. அதைப்பற்றி ஒரு பதிவு எழுதுங்கள் என அன்பு கட்டளையிடுகிறேன்.

  புதுக்கோட்டை பதிவர் விழாவிற்கு வந்த இன்னொரு உள்ளொளி பதிவரின் வலைப்பூ http://www.paarvaiyatravan.com (இவர் NVDA மென்பொருள் பயன்படுத்துகிறார்)

  ReplyDelete
  Replies
  1. பேராசிரியர் தாஜுதீன் பற்றி நிறைய சொன்னீர்கள். விழா அன்று காலை நாம் தங்கி இருந்த அறையில். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது!
   அவரை அத்தனை ஆண்டுகள் கடந்தும் நினைவில் வைத்திருந்ததற்கு:)


   Kurzweil ஒரு ஸ்கானிங் மென்பொருள். உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆங்கில புத்தகங்களை வாசிக்க
   எங்களுக்கு ஸ்கேன் செய்து கம்ப்யூட்டர் வழியே படிக்க உதவும் ஒரு மென்பொருள் அது.
   உங்கள் அன்புக் கட்டளை விரைவில் நிரைவேற்ற முயற்சிக்கிறேன்:)
   சக்திவேல் அவரது பெயர் நினைக்கிறேன். நீங்கள்தான் அறிமுக படுத்திய ஞாபகம்.
   சுட்டிக்கு நன்றி:)

   Delete
 11. வாவ்... உங்கள் எழுத்துக்கள் அழகாய் பேசுகின்றன மகேஷ்...
  ஜாஸ் மென்பொருள் பற்றி தெரிந்து கொண்டேன்....
  அருமை... தொடர்ந்து எழுதுங்க...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி சார்.

   Delete
 12. ரெண்டு வருஷமா ஒரு சீனாக்காரியோட ஸ்கைப்ல நட்பு பாராட்டி வந்தேன் . கல்யாணம் ஆகி போயிட்டா :) அவ்வ்வ்/// மிகவும் ரசித்தோம்...

  மகேஷ் இது பற்றித் தெரியும். நான் விசுவிடம் இது பற்றிப் பேச வேண்டும் என்று நினைத்து விடுபட்ட ஒன்று. இப்போது நீங்கள் சொன்னதும் தான் நினைவுக்கு வந்தது. அவரே இங்கு சொல்லிவிட்டார்.

  ஆம் எஸ்தர் அம்மாவுடன் இருந்த போது அவர்களது சிறப்புப் பள்ளியில் இதை நிறுவலாமே என்று. நான் அங்கு பார்த்தவரை இன்னும் இந்த வசதி வரவில்லை. ஏனென்றால் இது கொஞ்சம் காஸ்ட்லி சமாச்சாரம். நீங்கள் சொல்லியிருப்பது போல் க்ராக் செய்யலாம்தான். தனிப்பட்டவர்களுக்கு ஓகே. பெரிய பள்ளிகளுக்கு மென்பொருள் வாங்கிவிடலாம். அமெரிக்காவிலும் பிற மேலை நாடுகளிலும் மென்பொருட்கள் உபயோகப்படுத்தி கணிதப்பாடம் முதல் மிகவும் கடினமான இயற்பியல் வரை கற்றுக் கொடுகின்றார்கள்.

  நம் மாணவர்களுக்கு, குறிப்பாக பின் தங்கிய, கல்வியின் பின்புலம் இல்லாத மாணவர்களுக்கு முதலில் ஆங்கில அறிவும் புகட்டப்பட வேண்டும். ஏனென்றால் இஅவை அனைத்தும் ஆங்கிலத்தில் வருகின்றது. சிறிது சிறிதாக இதைப் பயனபடுத்தச் சொல்லிக்கொடுத்து விட்டால் சாதனைகள் புரிந்துவிடுவார்கள்!!!

  நான் நிறைய இதற்கான சில தளங்களை எடுத்து வைத்துள்ளேன்.

  சமூகத்தில் எல்லோருக்குமே பொதுவான ஒரு கருத்து இருக்கின்றது. ஆனால் சிறப்புக் குழந்தைகள்,நார்மல் குழந்தைகளைவிட நன்றாகச் செய்வார்கள் என்பது புரிய இன்னும் காலம் எடுக்குமோ?

  எனக்கு நீங்கள் என்னுடன் உரையாடும் போது நான் எல்லோரிடமும் உரையாடுவது போலத்தான் உரையாடுவேன். உங்களிடம் என்றில்லை பிறரிடமும்....

  நல்ல பதிவு மகேஷ்....

  ReplyDelete
 13. நான் தங்களிடம் பேசியிருந்தாலும் விபரமாக கேட்கத் தயங்கிய விடயத்தை தாங்களே சொன்னதற்க்கு நன்றி மகேஷ்

  ReplyDelete
  Replies
  1. no தயக்கம்ஸ்.
   வருகைக்கு நன்றி சார்.

   Delete
 14. அருமை மகேஸ்! உங்களைப்போன்ற பல பேருடன் பரிச்சயம் உள்ளவர்கள் எழுதினால் அதன் வீச்சு அதிகமாக இருக்கும்! ராஜ்குமார் அவர்களுக்கு நன்றிகள்! தொடரட்டும் உங்கள் படைப்பு பயனம்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி சக்திவேல்.

   Delete
 15. அன்பே சிவம்,

  இப்பத்தான் நீங்க சமத்து. ஆமாம் பால்கோவா பக்கத்துல மிக்சர்... மிக்சர் பக்கத்துல...... தண்ணீ.... அதாம்பா, பச்சை தண்ணீரை சொல்றேன் இருக்கா? நீங்க சாப்பிடும்போது நான் நினைக்க நேர்ந்தால் புரை ஏறுமே, அப்போ குடிக்க.

  ஊர்ல நல்ல மழையாமே?

  மகேசு அண்டார்டிகால கூட ஒரு ஆளு இருப்பதாக சொல்லி இருக்கின்றார் கொஞ்சம் பக்கத்துல இருந்து பார்த்துக்கோங்க நம்ம தம்பியை.

  கோ

  ReplyDelete