Saturday, September 26, 2015

உஷார் மக்களே உஷார்! நியூமராலஜி என்னும் பித்தலாட்டம்!நேரடியாகவே விஷயத்திற்கு வந்துவிடுகிறேன். “உங்கள் கஷ்ட்டங்கள் அனைத்தும் முடிவிற்கு வரவும், நீண்ட நாட்களாக அனுபவித்து வரும் பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்கள் பெயரில் இருக்கும் எழுத்தை சரியான எண்ணுக்கு மாற்றுவதன் மூலம் அல்லது உங்கள் பிறந்த தினம்/நேரத்திற்கு ஏற்ப ஜோசியத்தை துணை கொண்டு பொருத்தமான பெயர் வைத்தால் இனி உங்களுக்கு வரும் ஒவ்வொரு நாளும் நல்ல காலம்” என்கிற விளம்பரங்கள்/டீவி நிகழ்ச்சிகள் பார்த்திருப்பீர்கள்.

பொதுவாக நான் அதுமாதிரியான நிகழ்ச்சிகளை மதிப்பதே கிடையாது. ஆனால் நேற்று டீவி பார்க்கும்போது சேனல் மாற்றிக்கொண்டிருக்க திடீரென ஒரு நிகழ்ச்சி எனது கவனத்தை ஈர்த்தது. சரி என்னதான் அந்த நிகழ்ச்சி பார்த்திடுவோம்னு பார்க்கத் துவங்கினேன். சந்தேகமே கிடையாது. 100% மூளைச் சலவை. விட்டால் தெளிவானவர்களும் அவர்கள் வலையில் விழும் அபாயம் அப்படியானதொரு பக்கா ப்ரெசண்டேஷன். அறிவியல் முன்னேற்றத்திற்கு பிறகுதான் பூமி சூரியனைச் சுற்றிவருகிறது; சூரிய குடும்பத்தில் இருக்கும் கோள்கள் பற்றிய தகவல்கள் எல்லாம் செயற்கை கோள் உதவியோடு தெரிந்து கொள்கிறோம்; ஆனால் கேக்குறதுக்கு எவனும் வரப்போறதில்ல என்கிற தைரியத்தில், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னாடியாம், பூமியாம், சூரியனாம் கிரகங்களாம் ஏதேதோ தொடர்புபடுத்தி சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

பெயரில் இருக்கும் நெகடீவ் வைப்ரேஷன். இதுதான் அவர்களோட ஒரே மந்திரச் சொல். அடிக்கடி அந்த வார்த்தையை திட்டமிட்டு எப்படி பயன்படுத்தினால் மக்கள் நம்புவார்கள் என்கிற கோணத்தில் பயன்படுத்தி வந்தார்கள். ரஜினி, ரஹ்மான், நயந்தாரா இப்படி பல பிரபலங்களை உதாரணமாகச் சொல்லி அவர்கள் பெயரை மாற்றிக்கொண்டதன் மூலம்தான் தாங்கள் எட்ட நினைத்த சிகரத்தை தொட்டிருக்கிறார்கள் என சொல்லிக்கொண்டு வந்தார்கள். ஆமாம் நான் தெரியாமத்தான் கேக்குறேன் அவர்கள் எந்த கட்டத்தில், அதெல்லாம் பார்த்துதான் பெயரை மாற்றினார்களா என்பதெல்லாம் நமக்கு தெரியாது. அவர்கள் அனுமதி இல்லாமல் இந்த மோசடி கூட்டத்தினர் எப்படி பயன்படுத்தலாம்?

சரி எனது செல்லம் நயன் விஷயத்திற்கு வருகிரேன். கோலிவுட்டில் கொடிகட்டி பறந்த காலம் கடந்து எத்தனை வருடங்கள் ஆச்சு. ஜோ வேற ரீ எண்ட்ரி கொடுத்தாச்சு. இன்னும் நயன் சரியான வரன் செட்டே ஆகல. அவரோட ஒரிஜினல் பெயர்தான் மாற்றியாச்சே பிறகு ஏன் அவர்களுக்கு அத்தனை காதல்/தோல்விகள்? இதெல்லாம் யாரை உதாரணமாக காட்டினார்களோ அவுங்களோட வாழ்க்கைதானே? ஒரு கட்டத்தில் பயங்கர மன அழுத்தத்திற்குச் சென்றுவிட்டார். நல்ல வேள டிப்ரெஷன்ல எந்த சாமியார் கிட்டையும் சிக்காம மீண்டும் படங்களில் நடிச்சிகிட்டு வர்றாங்க. சரி இப்போ இந்த மோசடி கூட்டம் சொல்லுறது மாதிரி நயந்தாரா இந்த பெயரையும் மாற்றிவிட்டா எல்லாம் சரிஆகிடுமா? பொய் சொல்லுரதுனு முடிவு செஞ்சாச்சு கொஞ்சமாச்சும் பொருந்துற மாதிரிச் சொல்லணும். இவர்களுக்கெல்லாம் மக்கள் எங்க யோசிக்க போறாங்க என்கிற ஒரே தைரியம்தான். ஹும் அவர்கள் யோசிக்க ஆரம்பித்தால் நாடு எப்போதோ உருப்பட்டிருக்கும்.

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை இப்படி தங்கள் வசிகரிப்பான பேச்சுத் திறனால் அப்பாவி/இல்ல இல்ல படித்து புத்தி வேலை செய்யாத ஒவ்வொருத்தரையும் தங்கள் வலையில் விழவைத்து
கல்லாக்கட்டுகிறார்கள். அவர்களைப் பார்த்து சாமானியவர்களும் நம்பிவிடுகிறார்கள். நம் பெற்றோர் வைத்த பெயரை மாற்றுவதன் மூலம் நம் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்று எவனோ சொன்னால் நம்பும் மக்களைப் பார்த்தால் கோவம்தான் ஏற்படுகிறது. எதை தின்றால் பித்தம் தெளியும் என்று அலையும் கூட்டத்தினருக்கு நம் ஊரில் பஞ்சமே கிடையாது. சரியாக அவர்களது கையாலாகாத்தனத்தை பார்த்த அதி புத்திசாலி கூட்டத்தினரான கார்ப்பரேட் சாமிஜில இருந்து, லோக்கல் பாபாக்கள், ஜோதிடர்கள் , எண் ஜோசியர்கள் வரை தினம் தினம் புதுசு புதுசாக அவதரித்து தங்கள் மார்க்கம்தான் உண்மை என நிருபிக்க முயல்கிறார்கள். அதெல்லாம் போய், பித்தலாட்டம் என்றெல்லாம் சொன்னால் யார் நம்ப போகிறார்கள்?
 இதற்கு ஒரே வழி அரசாங்கமே முன்னுக்கு வந்து இது போன்ற போலிச் சமாச்சாரங்களை தடை செய்ய வேண்டும். செய்வார்களா?

பின்குறிப்பு:
 பெயர் என்ன பெயர்; நாம் என்பது இந்த உடலோ, உயிரோ, பெயரோ கிடையவே கிடையாது; நாம் என்பது செயல். ஆம் நமது செயல்தான் நமது பெயர் என்று நம்புரவன் நான். நீங்க எப்படி?

Monday, September 21, 2015

நேரம் வந்துவிட்டதுஇப்போதெல்லாம் எங்காவது பேச வாய் திறந்தால் போதும். ‘என்ன ஹார்திக் பட்டேல்னு நெனப்போ’ ஒரு கேள்வி வந்து விழுகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு அப்படியானதொரு கேள்வியை சந்திக்க நேர்ந்தது. பல்லைக் கடித்துக்கொண்டு பதில் எதுவும் சொல்லாமல் பேச்சை திசை திருப்பிவிட்டேன். 22 வயதான ஹார்திக் பட்டேல் குஜராத்தில் நடத்தும் போராட்டத்தைப் பற்றி கேள்விபட்டிருப்பீர்கள். முதல் வாரத்தில் அனைத்து ஊடகங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டவர். பின்னர் அந்த இடத்தை இந்திரானி ஆக்கிரமித்துவிட்டார். மக்களும் குஜராத்தில் வெடித்த போராட்டம் பற்றிய எண்ணம் மறந்திருப்பார்கள். உண்மை யாதெனில் இன்னும் குஜராத்தில் ஹார்திக் பட்டேல் தலைமையில் பட்டேல் சமூகத்தினர் தமது உரிமைக்காக தினமும் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

குஜராத்தில் ஆரம்பித்த போராட்டம் தற்போது இந்தியாவில் சில மாநிலங்களில் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் குரல் எழுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். எல்லாம் #ஹார்திக் புண்ணியம்தான்.
ஆனால் அரசாங்கமோ திட்டமிட்டு அந்தச் செய்தியை நசுக்க முயற்சிக்கிறது. இன்னொரு பக்கம்: ’அவர்கள் கேட்பதில் ஞாயம் இருக்கிறது; அரசாங்கம் கொஞ்சம் காது கொடுத்து கேட்கலாம்  என்றெல்லாம் பேசினால் அவ்வளவுதான். சுக்கு நூறு ஆக்கி விடுவார்கள்.

இன்று இட ஒதிக்கீடு பலனாக பலரும் அடிமட்டத்தில் இருந்து நல்ல நிலமையை அடைந்திருக்கிறார்கள். நல்ல விஷயம்தான். ஆனால் தற்போது அதே சலுகைகளை தங்களது வாரிசுகளுக்கு சாதகமாக கொண்டு பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்டவர்கள் இட ஒதிக்கீடு என்னும் வாய்ப்பைக் கொண்டு மேலும் வலுப்பெறுகிரார்கள். இதனை கவனித்தால் தெரியும். பக்கா சுரண்டல்.
இதற்கு என்னால் பல உதாரணங்கள் சொல்ல முடியும்; நீங்களும் கொஞ்சம் கவனித்தால் உண்மை புரியும். இட ஒதுக்கீடு ஏற்படுத்தியதன் உன்மையான நோக்கமே விளிம்பு நிலை மனிதர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் சம வாய்ப்பு கொடுத்து நல்ல நிலமைக்கு வந்தவர்கள் தங்களது சமூகத்திற்கு உதவ வேண்டும் என்கிற பரந்த நோக்கத்தோடு திட்டமிட்டு அன்னல் அம்பேத்கர் அவர்கள் இட ஒதிக்கீடு சட்டத்தை ஏற்றி இருக்க வேண்டும். ஆனால் நடப்பது வேறு.
தற்போதைய சூழலில் இட ஒதிக்கீட்டுச் சட்டத்தில் சீர்திருத்தம் அரசாங்கம் கொண்டுவர வேண்டும் என்று பலரும் பேச துவங்கி இருப்பதை கவனிக்க முடிகிறது. நானும் அதற்கு 100%ஆதரவை தெரிவிக்கிறேன். அரசாங்கமும் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கையும் எடுக்க வேண்டும். அன்று இட ஒதுக்கீட்டு சட்டம் கொண்டுவந்தபோது நாட்டு நிலமை வேறு. தற்போதைய சூழல் வேறு. எனது ஆதங்கம் எல்லாம் உண்மையான தேவை இருப்பவர்களுக்குச் சலுகைகள் சென்று சேர வேண்டும் என்பது மட்டுமே.
***
 சமீபத்தில் ஃபேஸ்புக்கில் படித்த ஒரு தகவலை இங்கு பதிவிட விரும்புகிறேன். இந்த பதிவிற்கும், எனது சிந்தனைக்கும் நெருக்கமாக இருப்பதால் கீழே கொடுத்திருக்கிறேன். நன்றி.
 ***

We are aware of Reservation fight happening in Gujarat. As we stand with Right to equality I have one flawless plan for Reservation policy
1. Remove the caste based system entirely and use of the word caste should be prohibited and should not be asked in any application form.
2. Divide entire Indians into 3 groups.First group A category contain creamy layer with high annual income / Educated parents/ Residing in a Metro city / High in property Second group B category consists of middle class people whose parents are under educated and their annual income is just self sufficient to maintain their needs. They don't have any property. Third group C category consists poor people who cannot afford to send their children to schools. Their parents are not educated, they don't have any property , They are unable make ends meet.
3. There will not be any reserved seats for any category but people belonging to B and C category will receive financial benefit. For children belonging to class 6 to 12 financial benefit will be applicable.
4. Parents are free to chose the school which they want admission for their child among the list of schools recognized by government of India. Category B parents will be given 50 % reimbursement on educational fee and Category C will be given 90 % reimbursement on educational fee from class 6 to 12.
5. All those parents will be given Debit card and entire transaction should be done through card to avoid scams.
6. New branch in class 11,12 is added which includes detailed course on farming, all labor works like plumbing, bike mechanic, industry workers etc. This course in class 11, 12 is mandatory even for labor.
7. All those A category people who lose their property or job and eligible for B or C category have to apply and government can decide if they are eligible. This way we can see 100 % quality Education and everyone will be happy with this procedure.

Monday, September 07, 2015

விஜய் சித்திரம்சென்ற மாதம் ஒரு நாள் என்னுடைய முதுகலை பேராசிரியை சாரதா மேடம் அவரது வீட்டிற்குச் சென்றிருந்தேன். எங்கள் இருவரின் உரையாடலின் நடுவே அவர் சொன்ன ஒரு விஷயம் என்னை மிகவும் கவர்ந்தது.

Sunday, September 06, 2015

இஞ்சினீரிங்-சிவில் சர்வீஸ் எக்சாம்மனோஜ் எங்கள் வீட்டிற்கு அருகில்தான் இருக்கிறான். தம்பி வழியாக பழக்கம். தற்போது சென்னையில் ஒரு தனியார் கல்லூரியில் பொறியியல் நான்காம் ஆண்டு படிக்கிறான்.