Saturday, January 09, 2016

தமிழுக்கு அந்த நிலமை வராதுனு நினைக்கிறேன்!நண்பர்கள், சக பதிவர்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் முதலில் எனதினிய தாமதமான புத்தாண்டு வாழ்த்துக்கள்.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வங்கி தேர்வுக்காக தயாரிப்பில் மூழ்கி இருந்ததால் இங்கு எட்டிப்பார்க்க முடியாமல் போனது. இந்த வாரம் ஞாயிறு அன்று தேர்வை எழுதியாச்சு.
இனி எப்போதும் போல் எனது மொக்கையான கிறுக்கல்கள் எதிர்பார்க்கலாம்:))) அவ்வ்வ்
***
எனக்கு பொதுவாக தமிழ்; தெலுங்கு; என்றெல்லாம் பாகுபாடு கிடையாது. என்னால் இரண்டு மொழிகளிலும் பேச முடியும்; படிக்க முடியும்; எழுதவும் முடியும்! ஆனாலும் 12 ஆண்டுகள் சென்னையில் இருந்ததால் என்னவோ தாய்மொழியையும் தாண்டி தமிழின் மீது அப்படி ஒரு ஈர்ப்பு. (கவனிக்க சென்னையில்தான் தமிழைக் கற்றுக்கொண்டேன்). நான் முதன்முதலாக வலைப்பதிவுகளை வாசிக்க ஆரம்பித்தது தமிழில்தான். ஒரு கட்டத்தில் ’சரி நம்ப மொழியில் யார் எழுதுறா; தமிழைப் போன்று தெலுங்கிலும் பல வலைப்பதிவர்கள் உச்சாகத்தோடு எழுதிக் கொண்டிருப்பார்கள்; கூடிய சீக்கிரம் அங்கும் ஒரு தளத்தை திறந்திடனும்; என்றெல்லாம் நினைத்துக்கொண்டு தெலுங்கு வலைப்பூக்களை தேடியபோது கிடைத்தது என்னவோ ஏமாற்றம்தான்.

ஆம்; நான் முதலில் தெலுங்கில் பிரபலமாக பேசப்படும் ஒரு திரட்டியில் நுழைந்தேன். அந்த திரட்டியைப் பார்த்ததும் நிலமை புரிந்துவிட்டது. முழுவதும் வணிக நோக்கத்தில் பதிவுகள் இருந்தது. அதுவும் திரட்டியின் தரம் புக் மார்க் லச்சனத்தில்தான் இருந்தது. சில பதிவர்களின் பதிவுகளை படிக்க ஆரம்பித்தேன். இது நடந்து இரண்டு வருடத்திற்கும் மேல் ஆகிறது. எழுதிக்கொண்டிருக்கும் ஒன்று இரண்டு பதிவர்கள் கூட விருப்பமின்றி எதோ கடமைக்கு--தங்களின் திருப்த்திற்கு எழுதிக்கொண்டிருந்தார்கள்.

வலைப்பதிவுகள்தான் எழுதுவது கிடையாது ஃபேஸ்புக்கிலாவது--சுத்தம்.
உலக அளவில் தமிழரைக்காட்டிலும் தெலுங்கர் அதிகம்; உலக அளவில் பேசப்படும் மொழிகளிலும் தெலுங்கிற்கு முக்கியமானதொரு இடம்; ஆனாலும் என்னவோ இணையத்தைப் பொருத்தவரை பின்தங்கியே இருக்கிறார்கள்.

கூகுளில் நமக்கு தேவையான தகவல்களை தமிழில் தேடினால் எளிதில் கிடைக்கிறது. இதற்கு ஒரே காரணம்: தமிழ் விக்கியில் இருந்து; தனிநபர்கள் எழுதும் வலைப்பதிவுகள்; இணைய பத்திரிக்கைகள்; இவை எல்லாம் நாளுக்கு நாள் இணையத்தில் தமிழின் வளர்ச்சியை உயர்த்துகிறது. ஆனால் தெலுங்கை எடுத்துக்கொண்டால் நிலமை இதற்கு முற்றிலும் நேர் எதிராகத் தான் இருக்கிறது. சென்ற வாரம் ஒரு தலைப்பில் தெலுங்கில் சில தகவல்கள் தேவைப்பட்டதால் தேடிய போது கிடைத்தது என்னவோ ஏமாற்றம்தான். அதே தகவலைத் தமிழில் தேடினால் தேவையான தகவல்கள் எளிதில் கிடைத்துவிட்டது.
தமிழர்கள் தாய் மொழிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் தெலுங்கர்கள் தெலுங்கிற்கு மட்டும்--கிடையாது; ஆங்கிலத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது. அதனால் ஏற்படும் விளைவுகள் கவனிக்கும்போது வருத்தமாக இருக்கிறது. மொழி என்பது மிகவும் அவசியம். தாய் மொழியிலும் சரி; ஆங்கிலத்திலும் சரி எதோ ஒன்றிலாவது புலமை பெற்றிருந்தால்தான் எளிதில் படிக்கவும்-எழுதவும் வசதியாக இருக்கும்; அதைவிடவும் சிந்திக்கவும் மொழி அவசியம்.

இன்றைய அவசர உலகில் கணிதம்; இயற்பியல் மற்றும் வேதியியலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. பொரியியலையும் தாண்டி பல துறைகளில் வாய்ப்புகள் இருக்கிறது; ஆனால் சரியான விழிப்புணர்வுதான் கிடையாது.

அது போகட்டும். சொல்ல வந்த விஷயம் வேறு.

ஒரு மாதம் பிறகு நேற்று பதிவுகள் வாசிக்க ஆரம்பிக்க  ஞானப் பிரகாசம் அவரது பதிவை வாசிக்கவும் அதில் ஒரு அதிர்ச்சியான  செய்தியை படித்தேன். வரிசையாக செயலற்று போகும் திரட்டிகள் பட்டியலில் இண்ட்லி திரட்டியும் சேர்ந்திருப்பதாக எழுதி இருந்தார். அதனை உறுதி செய்துக்கொள்ள இண்ட்லி தளத்தை தேட இண்ட்லி தளம் திறக்கவில்லை. அதிர்ச்சியாக இருந்தது.

தமிழ் மணம், தமிழ் வேலி மற்றும் இண்ட்லிதான் வாசகர்களை அதிகம் கொண்டு வரும் தமிழ் திரட்டிகள். இதில் ஏற்கனவே தமிழ்வேலி பல மாதங்களுக்கு முன்பே மூடபட்டுவிட்டது இப்போது இண்ட்லியும் அந்த வரிசையில் சேர்ந்துக்கொண்டது.
இப்போது இருக்கும் தமிழ் மணம் கூட சரியாக பராமரிக்க முடியாமல் இருக்கிறது. நிர்வாகத்திற்கு பல சிக்கல்கள் இருந்தாலும் தானியங்கி திரட்டி என்பதால் ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ் மணமும் இண்ட்லி வரிசையில் சேர்ந்துக்கொண்டால் தமிழ் பதிவுகளின் எண்ணிக்கை குறைந்து விடும் என்று நினைக்கிறேன்.
ஆனால் அந்த நிலமை தமிழுக்கு வராதுனு நினைக்கிறேன்.
தமிழ் மணம் மீண்டும் சிறந்து செயலாற்ற விரும்புகிறேன்.
இப்படிக்கு தமிழ்மண திரட்டியால் பலன் பெற்றவன்.
தொடர்புடைய பதிவுகள் :


13 comments:

 1. நண்பருக்கு எனது உளங்கனிந்த புத்தாண்டு – 2016 நல் வாழ்த்துக்கள்!
  தெலுங்கு – தமிழ் வலைப்பதிவுகள் நல்ல ஒப்பீடு. தெலுங்கு, தமிழ் இரண்டும் தெரிந்த உங்களைப் போன்றவர்களால், தெலுங்கு இலக்கியங்களிலிருந்து, (குறிப்பாக நாட்டுப்புற இலக்கியங்களை) நல்ல தமிழாக்கங்களை வலைப்பதிவில் படைக்கலாம். பின்னர் நூல்களாகவும் வெளியிடலாம் (உங்கள் தாய்மொழி தெலுங்குதானே?)
  வலைப்பதிவுகளில் திரட்டிகளின் பணி பற்றிய உங்கள் கருத்துரைகள் அருமை. தமிழ்மணமும் நின்று விட்டால் நிலைமை மோசம்தான். நீங்கள் உங்கள் பதிவுகளை தேன்கூடு, இண்டி ப்ளாக்கர் போன்ற திரட்டிகளிலும் இணைக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. (உங்கள் தாய்மொழி தெலுங்குதானே?)///

   12 ஆண்டுகள் சென்னையில் பார்வையற்றோருக்கான சிறப்பு பள்ளியில் படித்ததால் தமிழ் அறிமுகம். தாய்மொழி தெலுங்குதான்.

   எதோ இங்கு சில பதிவுகள் தெலுங்கில் இருந்து தமிழில் மொழிபெயர்ப்பு செய்திருக்கேன்.
   அவ்வல்வுதான் சார்.

   அடுத்து contemporary தெலுங்கு மற்றும் தமிழ் இலக்கியத்தை ஒப்பீடு செய்து ஒரு பதிவு வரும்.
   வருகைக்கு மிக்க நன்றி சார்.

   Delete
 2. Labels இல் இனையம் > இணையம் என்று மாற்றவும்.

  ReplyDelete
 3. தமிழ் இளங்கோ அண்ணா பார்வையே வித்யாசம் தான். சூப்பர் அண்ணா. இப்போ ஓவர் to மகேஷ். தாய்மொழி தெலுங்கா!!! இத்தனை சுவையாய் தமிழ் எழுதுவதற்காகவே உங்களுக்கு பொக்கே பார்சல்:) கவலையே படாதீங்க மகேஷ், புதுக்கோட்டையில் பதிவகம் எனும் அட்டகாசமான திரட்டி ஒன்று பொங்கல் அன்று தொடங்க இருக்கிறார்கள். எனினும் தமிழ்மணம் மீண்டு(ம்) தழைக்க வேண்டும் என்றே நானும் ஆசைபடுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. பதிவகம் திரட்டி பற்றி புதிய தகவலுக்கு நன்றி மேடம்.

   சுவையாய் தமிழ் எழுதுவதற்கு முக்கிய காரணம் காயத்ரி அக்கா (என்னில் உணர்ந்தவை).

   Delete
 4. வணக்கம். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர்க்கும் எனதினிய புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்.

  தங்கள் ஆதங்கம் நியாயமானதே!

  திரட்டிகளைப் பொருத்தவரை அவை சேவை நோக்கைவிட வணிக நோக்கை மையமாகக் கொண்டு இயங்குவதே இடைமுறிந்து போவதற்குக் காரணமாய் இருக்கலாம் என நினைக்கிறேன்.

  இது பற்றிய அறிவு எனக்குக் குறைவுதான்.

  ஒரு மொழி இன்றைய அறிவியல் விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப தன்னைப் புதுப்பித்துக்கொள்ளாதபோது என்ன ஆகும் என்பதற்குச் சான்றாகத் தெலுங்கு ஆகிவிடக் கூடாது என்ற கவலை தங்கள் பதிவைப் படித்தவுடன் வருகிறது.

  ஏனெனில்,

  இந்தியாவில் அதிகம் மக்களால் பேசப்படும் மொழி,

  இந்தியல்ல.

  தமிழல்ல

  தெலுங்கே என்பதால்.

  தெலுங்கின் சிறந்த இலக்கியங்களை இலக்கணங்களை திரு. தமிழிளங்கோ ஐயா சொன்னதைப் போல அறிமுகப்படுத்துங்களேன்.

  என்போன்றோருக்குப் பெரிதும் பயன்படும்.

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சார்,

   அவ்வலவாக தெலுங்கு இலக்கியம் எனக்கு அறிமுகம் கிடையாது.
   தெரிந்ததை நிச்சயம் எழுதுவேன்.
   நன்றி.

   Delete
 5. நீங்கள் சொல்வது உண்மைதான். இந்த புத்தாண்டு தினத்தை நான் ஹைதராபாத்தில் ஒரு விருதுடன் கொண்டாடினேன். விருது பற்றிய பதிவு பின்னர் எழுதுகிறேன். அங்கு பல பெரிய மனிதர்கள் வந்திருந்தார்கள். அவர்களிடம் நான் பிளாக் பற்றி கூறியபோது அதை என்னவென்றே அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. உங்களின் பதிவை படித்தப் பின்தான் அதற்கான விளக்கம் கிடைத்தது.

  நான் சென்ற ரயில் ரேணிகுண்டாவில் கிட்டத்தட்ட ஒருமணி நேரம் நின்றது. தங்களை அழைக்கலாம் என்று நினைத்தேன். பிறகு தொந்தரவாக இருக்கும் என்று விட்டுவிட்டேன்.

  புத்தாண்டு வாழ்த்துகள்.

  த ம 2

  ReplyDelete
  Replies
  1. விருதுக்கு வாழ்த்துக்கள் சார்.
   அடுத்த முறை இந்த பக்கம் வருவதாக இருந்தால் நிச்சையம் சொல்லவும். சந்திப்போம்.

   Delete
 6. மகேஷ் தமிழ் சாகாது. நிச்சயமாக. புதுக்கோட்டையில் பதிவகம் திரட்டி உருவாகிக் கொண்டு வருகின்றது.

  நாங்கள் ஏற்கனவே சொன்னது போல மகேஷ் தெலுங்கு சிறுகதைகள் கூட நீங்கள் மொழி பெயர்க்கலாமே! இலக்கியம் என்றில்லை. நல்ல நிகழ்வுகள் எதுவாக இருந்தாலும்.

  தமிழ்மணம் மீண்டும் உயிர்பெற்று வர வேண்டும். அதில் பிரச்சனைகள் இருக்கின்றது என்று தெரிகின்றது...

  ReplyDelete
 7. சரியான நேரத்தில் அவசியமான பதிவு திருப்பதி மகேஷ்...தமிழ்மண செயல்பாடுகள் சரிவர செயல்பட உரியவர்கள் மீண்டும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

  ReplyDelete